மட்டக்களப்பு மாவட்டத்திலே கடும் வரட்சி நிலை காணப்படுகின்றது. பகல் நேரங்களில் விடுகளுக்குள்ளேயும் இருக்க முடியாத அளவில் வெயிலின் கொடுரம் இருக்கின்றது.
சிறு மழை கூட இல்லாத நிலை காணப்படுகின்றன இதனால் அதிகமாக விவசாயிகளே பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடும் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு மேட்டுநில பயிர்கள் பயிர்கள் மட்டுமல்லாது வேளாண்மையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
மேட்டு நிலப் பயிர்களைப் பொறுத்தவரை அதிகமான விவசாயிகளைக் கொண்ட களுதாவளை, களுஞ்வாசிகுடி, தேற்றாத்தீவு போன்ற பிரதேசங்களிலே இருக்கின்ற விவசாயக் குடும்பங்களே பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கடும் வறட்சியால் பயிர்களுக்குரிய நீரைப் பெருவதிலேயும் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். மழை இல்லாததாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் மரங்கள், புற்கள் போன்றன அளிவடைந்திருப்பதனால் கால்நடைகளுக்குரிய உணவுகளைப் பெறுவதிலும் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
அதிகரிக்கும் வீதிவிபத்துக்கள்
இலங்கையிலே பரவலாக வீதி அபிவிருத்திகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியும் மிக நீண்ட காலத்துக்குப் பின் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு இப்போது இறுதிக்க கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த வீதிகளில் இப்போது அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன. காரணம் வீதிகள் அகலமாகப்பட்டு சிறப்பாக செய்யப்பட்டிருப்பதனால் வாகன சாரதிகள் மிக அதிகமான வேகத்தில் வாகனங்களை ஒட்டி செல்கின்றனர்.
அதேபோன்று தடங்கல்கள் அற்ற முறையிலே நேர்த்தியாக இருப்பதனால் வாகன சாரதிகள் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்றனர். இதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இன்னொரு புரத்திலே பாதசாரிகளைப் பொறுத்தவரை பாதையைக் கடப்பதற்கு இரு பக்கங்களையும் பார்க்கின்றபோது வாகனங்கள் நீண்ட தூரத்தில் வருவதனால் பாதையைக் கடக்க முற்படுகின்றனர். ஆனால் அதிக வேகத்தில் வந்த வாகனம் விரைவாக வந்து வாகனத்தின் வேகத்தை சடுதியாக கட்டுப் படுத்த முடியாமல் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
2 comments: on "போகிற போக்கில்"
நல்ல தகவல்கள்
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
You can add the vote button on you blog:
THANKS
Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com
Post a Comment