தமிழீழப் போராட்டம்
நமது நாட்டில் வாழும் சிறுபான்மை இனமான நாம் தமிழர்கள் எனும் வகையில் தனிநாடொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்து போராடி வந்தோம். இன்று அந்தக் கோரக்கை நம் கண்முன்னேயே பலமிழந்து நிற்கின்றது.
அதுமட்டுமன்றி இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மிக பாரிய அளவிலான படுகொலைகளுக்கும் அழிவுகளுக்கும்இ பொருளாதார நஸ்டங்களுக்கும் வழிவகுத்ததும் இந்த தமிழீழப் போராட்டமே ஆகும்.
அதுமட்டுமன்றி இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மிக பாரிய அளவிலான படுகொலைகளுக்கும் அழிவுகளுக்கும்இ பொருளாதார நஸ்டங்களுக்கும் வழிவகுத்ததும் இந்த தமிழீழப் போராட்டமே ஆகும்.
நமது நாட்டினை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கின்ற இந்த தமிழீழம் எனும் கோரிக்கை எவ்வித சூழ்நிலையில் இருந்து உருவானது என்பதை காய்தல்இ உவத்தல் இன்றி நாம் அசைபோட வேண்டியுள்ளது. இந்தக் கோரிக்கையானது முன்னொருகாலத்தில் மிதவாத அரசியல் கோரிக்கையாக கருக்கொண்டது. பின்னரது தீவிரவாத போராட்டமாக வடிவெடுத்தது. இறுதியில் பயங்கரவாதமாக உருமாறி வந்துள்ளதோடு யாருமே எதிர்பார்க்காத சிக்கலொன்றையும் நம்மிடையே ஏற்படுத்திச் சென்றுள்ளது. அதாவது இன்று அது தமிழ் பேசும் மாகாணங்களுக்கிடையேயானதொரு போராக மீள்வடிவம் பெற்றுள்ளது. கடந்த மூன்று வருடகாலமாக சிறிலங்கா அரசுக்கும் தமிழ் தீவீரவாத தரப்பினரான தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே போர் தணிக்கப்பட்ட நிலையில் கூட தமிழ் பேசும் மாகாணங்களுக்கிடையே ஒரு புதுவித போர் மேகம் களைகட்டி வருகின்றது. சக மாகாணமொன்றின் உரிமைக்குரல்களை காதுகொடுத்து கேட்க முடியாத தமிழீழ விடுதலைப்புலிகளால் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி நிகழ்த்தப்பட்ட படையெடுப்பும்இ ஆக்கிரமிப்பும் கொலைவெறித்தாண்டவமும் நிலைமைகளை மென்மேலும் சிக்கலாக்கி வருகின்றது.
இன்றைய நிலையில் கிழக்கிலங்கை மக்களிடத்தே தமிழீழத்தை தாண்டிதொரு அரசியல் அபிலாசைகளை பிரதிபலிப்கின்ற புதியகருத்தாக்கங்கள் கவனம் கொள்ளத் தொடங்கியியுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இதுவரை காலமும் தமிழர்களாக தம்மை உணர்ந்திருந்த இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் கிழக்கு மாகாணத் தமிழர்கள் மத்தியிலும் இன்நிலை கூடிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. காலப்போக்கில் இலங்கை அரசியலில்பாரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இன்றைய அரசியல் சூழல்கள் பற்றிய காய்நகர்வுகள்தான் இலங்கை மக்களின் எதிர்கால வாழ்வை நிச்சயிக்கப்போகின்றது. ஆகவே தமிழீழ போராட்டத்திற்கு வெளியே வேறு வகையான அரசியல் கோரிக்கைகள் உருவாகிவருவது நிதர்சனமாயுள்ளது. இக்கோட்பாடுகளில் எது சரி எது பிழை என்பதை நோக்கிய எமது பார்வைகளை செலுத்துதல் அவசியமானதாகும்.
குறிப்பாக கிழக்கில் இன்று உருவாகி வருகின்ற பிரதேச அலகை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாருக்கான விடுதலையை நோக்காகக் கொண்டு முன்வைக்கப்டுகின்றது.? அந்த மக்களின் விடுதலை தமிழீழக் கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையா? அப்படி இல்லையாயின் தமிழீழக் கோரிக்கை என்பது யாருக்கான நன்மைகளை கருத்திலே கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தனிநாடு ஒன்றை நோக்கி கிழக்கிலங்கை மக்களை வழிநடத்திய யாழ்ப்பாண அரசியல்வாதிகளின் சுயரூபங்கள் என்ன? அதில் யாழ்ப்பாணத்து நலன்கள் மட்டுமே குறியாய் இருந்ததா? என்பதையிட்டு இன்று எமது கேள்விகள் தொடுக்கப்படவேண்டியுள்ளது. இன்நிலையில்தான் “கடந்தகால தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த 98 சதவீதமான பிரச்சனைகள் வடமாகாணத்துடன் சம்பந்தபப்ட்டவை” (14-மார்ச்-2004 – தினகரன்) என்று பகிரங்கமாக குரலெழுப்பிய கேணல் கருணா அவர்களின் பத்திரிகை செய்தி முக்கியத்துவமாகின்றது.
இந்த குற்றச்சாட்டில் இருந்துதான் ஒரு ஆழமான ஆய்வு நோக்கி நமது கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழீழத்தின் மறுபெயர் யாழ்ப்பாணம் என்று சொல்லும் அளவிற்கு தமிழீழத்தின் பெயரில் உருவாகும் எல்லாவித அமைப்புகளினதும் பிறப்பிடம்; யாழ்ப்பாணமாகவே இருக்கவேண்டும் என்பதும்இ அவற்றின் தலைமைகள் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே இருந்து மட்டுமே உருவாக முடியும் என்கின்ற எழுததாத விதிகளும் மேற்படி குற்றச்சாட்டுக்களை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றது.
ஜனநாயக நீரோட்டத்தில் பங்கெடுத்துவந்த தமிழ் அரசியல் கட்சிகளும் சரி ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இயக்கங்களும் சரி இவ்விடயத்தில் கவனமாகவே இருந்திருக்கின்றன என்பது புலனாகின்றது. ஆகவே யாழ்ப்பாண அடிப்படைவாதம் என்பதில் இருந்தே தமிழீழக்கோரிக்கையின் தார்ப்பரியங்களை எடைபோடவேண்டிய தேவை எழுகின்றது. இந்த யாழ்ப்பாண அடிப்படைவாதம் என்பது யாது? என்பதை புரிந்துகொள்ள இந்த யாழ்ப்பாண சமூகம் கொண்டுள்ள கருத்துநிலை யாது என்பதையும் அதை உருவாக்கித் தந்த வரலாற்றுப்புள்ளிகள் யாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.
தொடரும்...
1 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 6"
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Post a Comment