Sunday, 30 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -7

யாழ்ப்பாணம்


“மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம். அது பின்னாளில் மணற்றிடல் எனவும் வழங்கிற்று.” – (யாழ்ப்பாண சரித்திரம் பக்-1) என ஆ.முத்துத்தம்பிபிள்ளை அவர்கள் கூறுவதில் இருந்து மனித சஞ்சாரமற்று வெறும் தரையாய் உப்புக்கரித்துக் கிடந்த இந்த மணற்றிடரைத்தான் இந்தியாவில் இருந்து தேசாந்திரியாய் வந்து சேர்ந்து யாழ்பாடிய குருடனின் தலையில் கட்டி மகிழ்ந்தான் எல்லாளன் என்பதை புரியமுடிகிறது. “யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்ப்பாணமெனப்படுவதாயிற்று.” (யாழ்ப்பாண சரித்திரம் – பக்-2) என அவர் மேலும் கூறுவதனு}டாக எல்லாளனிடம் பரிசு பெற்ற பாணன் தன் ப10ர்வீகமான தொண்டை நாடு திரும்பி தொண்டமானின் உதவிபெற்று தனது இனசனங்களை இங்கு குடியேற்றியதில் இருந்தே யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடங்கியது என்பது தெளிவு.
“அதன் பின்னர் தொண்டமானுடைய மரக்கலங்களும் வந்தன. உப்பேற்றும் பொருட்டு ஒரு கால்வாயும்இ மரக்கலங்கள் தங்குவதற்கு ஒரு துறையும் அவன் அனுப்பிய சனங்களால் அமைக்கப்பட்டன. அச்சனங்கள் உப்பளத்துக்கு சமீபத்திலேயே குடி கொண்டார்கள். அச்சனங்கள் உப்பெல்லாவற்றையும் திரட்டி காலம் தோறும் அம்மரக்கலங்களில் ஏற்றி அனுப்பி வந்தார்கள். அம்மரக்கலங்கள் மீண்டுவரும் போது நெல்இ கறிசாம்பாரம்இ வஸ்திரம் முதலிய கொண்டுவந்து யாழ்ப்பாணத்து தொண்டமான் சனங்களுக்கு பண்டமாற்றி மீளும்.” (யாழ்பாண சரித்திரம் பக் – 13)

கி.மு 145 ஆம் ஆண்டில் இருந்து குடியேறி உப்பை மட்டுமே நம்பிவாழ நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த யாழ்ப்பாணனின் குடிகள் குடிநீர் பெற்றுக்கொள்ளுதலே பெரும் பாடாய் இருந்தது. சகலவித உணவுப்பண்டங்களும் இந்தியாவில் இருந்தே தருவிக்கப்பட்டிருக்கின்றன.

காலப்போக்கில் உப்புப்பாறைகளை உடைத்து ஆழ்மடுவுகள் தோண்டி தண்ணீர் பெற்றுக்கொண்டனர். இந்த நதிகள் அற்ற யாழ்ப்பாணம் உப்பை விடுத்து காலப்போக்கில் ஆழ்கிணற்று நீரை மூலதனமாக கொள்ளத் தொடங்கியது. கிணற்று நீரூடாக உற்பத்தி செய்யப்படத் தொடங்கிய உப உணவுப்பொருட்கள் யாழ்ப்பாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மெல்ல மெல்ல உருக்கொண்டது. இதுவே 15 ம் நு}ற்றாண்டுவரை அதாவது ஐரோப்பியரின் வருகைவரை யாழ்பாணத்தின் யதார்த்தமாகும். இலங்கையின் இந்த யாழ்ப்பாணம் தவிர்ந்த அனேகமாக எல்லாப் பிரதேசங்களும் நதிகளாலும் ஆறுகளால் நீர்வளமும் நிலவளமும் பெற்றிருந்தன. இயற்கையின் வஞ்சனை காரணமாக இவ்வளங்களை ெற்றிருக்காத யாழ்ப்பாணத்து மக்கள் கிடைக்கக் கூடிய எதையும் வாழ்வின் ஆதாரமாக பற்றிக்கொள்ளும் கருசனை வாய்க்கப் பெற்றமை இதன் பொருட்டேயாகும்.

இந்நிலையில்தான் நாடுபிடித்துவந்த அன்னியரின் வருகை எமது நாட்டினுடைய அரசியலில் மட்டுமல்ல சமூக பொருளாதார கட்டமைப்புகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அவையனைத்தும் முழுஅளவிலான இலங்கையருக்கு பாதகமான அம்சங்களையே பெருமளவில் ஏற்படுத்தியிருந்தாலும் யாழ்ப்பாணத்தவருக்கு இந்த அன்னியரின் வருகை பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தது. காலணித்துவ ஆட்சியாளர்களின் நவீன அரசியல் செயற்பாடுகளும் நீதிஇ நிர்வாக சேவைகளும் பெருந்தோட்டத் துறையினு}டு விரிவடைந்த போக்குவரத்துஇ தபால்சேவை போன்றவைகளும் அறிமுகப்படுத்திய உத்தியோகங்கள் யாழ்ப்பாண மக்களை கவர்ந்தது.

அவ்வுத்தியோகங்களினு}டு வந்த ஆங்கிலத்தின் அறிமுகமும் வெள்ளையரை நோக்கி யாழ்ப்பாணத்தை அதிகம் கவர்ந்திழுத்தது. ஆதிக்க மொழி என்கின்ற எவ்வித கூச்சமும் இன்றி ஆங்கிலத்தைக் கற்று அதனு}டு வெள்ளையனுக்கு தேவையாற்ற ஒரு பெருங்கூட்டத்தையே இந்த யாழ்ப்பாணம் மிக விரைவில் உருவாக்கிக் கொடுத்தது. உப்பில் இருந்து உப உணவுக்கு வளர்ச்சியடைந்திருந்த யாழ்ப்பாணம் தன் வாழ்வின் ஜீவாதாரமாக இந்த ஆங்கிலக் கல்வியை இறுகப்பிடித்துக் கொள்ள தவறவில்லை.


பெருந்தோட்டத் துறையின் மேற்பார்வையார்களாகவும் நீதிநிர்வாகத் துறையின் அடிமட்ட உதவியாளர்களாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு கைகட்டி சேவை புரிந்த இவர்கள் காலப்போக்கில் நிர்வாகத் தேர்ச்சி பெற்ற உத்தியோகத்தர்களாகவும்இ அரச அதிகாரிகளாகவும்இ ஆசிரியர்களாகவும் இலங்கை எங்கும் வியாபித்தனர். இந்த போக்கு ஆட்சியாளர்களிடம் சம்பளம் பெறும் கணிசமான ஒரு கூட்டத்தினராக யாழ்ப்பாணத்தவரை அடையாளம் காட்டியது.

இலங்கையின் மூலை முடுக்குகள் எங்கும் இன்னும் சிங்கப்ப10ர்இ மலேசியாஇ பர்மா போன்ற நாடுகள் வரையும் கூட இவர்கள் வெள்ளையருக்கான சேவை உழைப்பாளர்களாக பரந்துபட்டு வாழ்ந்தனர். இதன் காரணமாக கிணற்று நீருக்குள் இருந்த இவர்களது பொருளாதாரம் மணியோடர் பொருளாதாரமாக மிளிர்ந்தது. கூடவே வெள்ளை சட்டை உத்Nதியோகஸ்தர்கள் என்கின்ற சமூக அந்தஸ்த்தும் கைவரப்பெற்றது.

இந்த உத்தியோகத்தர்களின் சமூக பரம்பலே யாழ்ப்பாணத்தில் ஒரு மத்தியதர வர்க்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டது. வெள்ளை ஆதிக்கத்தின் பாதுகாவலராக தம் வாழ்வைத் தொடங்கிய இவ்வர்க்கத்தினரே படிப்படியாக இலங்கையருக்கான அரசியல் போக்குகளை நிர்ணயிப்பவர்களாகவும் உருவாகினர்.

படிப்பறிவுஇ பணம்இ அந்தஸ்து என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மக்களுக்கான அரசியல் கோபுரத்தை வெள்ளயைர் அத்திவாரம் இட்டனர். ஆகவேதான் இந்த அத்திவாரம் ஆனது யாழ்ப்பாணத்திலேயே கட்டப்பட முடிந்தது. அங்கிருந்து உருவான அரசியல்வாதிகளே இலங்கையின் முதல் தலைமுறை அரசியல் தலைவர்களாகவும் இலங்கை அரசியலில் போக்கை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாகவும் பரிணமித்தனர்.


இலங்கையின் சிங்கள மக்கள் இடத்திலும் இதுபோன்றதொரு மத்தியதரவர்க்கம் உஇருவாகியிருந்தது. அங்கு ராஜ பரம்பரையினர் என தம்மைச் சொல்லிக்கொள்ளும் கொவிகம எனப்படுகின்ற ஒருவித சமூக அந்தஸ்துகொண்ட பிரிவினரே மேற்படி மத்தியதர வர்க்கமாக உருவாகியிருந்தனர். இவர்கள் சிங்களவராய் இருந்தபோமுதும் கராவஇ சாலக என்கின்ற சாதிப்பிரிவினரான சிங்களவரை தம்மிலும் கீழானவர்களாகவே கணித்து வந்தனர்.

இப்போக்கானது இந்தியாவில் இருந்து எண்ணில் அடங்காத சாதிப்பிரிவுகளை யாழ்ப்பாணத்திலும் இறக்குமதி செய்து வைத்திருந்த சமூகத்தினுடைய சூழலுக்கு ஒத்துப்போவதாய் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து மத்தியதர வர்க்கமாக பரிணமித்து இருந்தவர்களும் அச்சமூகத்தில் காணப்பட்ட சாதிப்பிரிவில் உயர் குழாத்தினரான வேளாளர்h சமூகத்தினரே என்பதனால் தமிழ் சிங்கள இனவேறுபாடற்று ஒரு உயர் வர்க்கக் கூட்டுக்கு நல்ல வாய்ப்பினை இச்சூழல் ஏற்படுத்தியிருந்தது.

இந்த வகையில் தமிழ் – சிங்கள உயர்வர்க்க கூட்டின் பிரதிநிதியான சேர்.பொன்.இராமநாதன் எனும் யாழ்ப்பாணத்தவர் வெள்ளையரிடையே பெருமதிப்பைப் பெற்றிருந்தார். ஆங்கிலேயருக்கு மிக நெருங்கிய விசுவாசியான இவர் 1911 ம் ஆண்டு படித்த இலங்கையருக்கான முதல் செனட்சபை உறுப்பினர் ஆகும் வாய்ப்பை பெற்றார். கல்வியறிவு பெற்றவர்களுக்கும் சொத்துரிமை கொண்ட தனவந்தர்களுக்கு மட்டுமே அந்நிலையில் வாக்களிக்கும் தகுதி இருந்தது. ஆதலால் மொத்த சனத்தொகையில் சுமார் 4 வீதம்மான மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றிருந்தனர்.


இவ்வகையில் அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் அதிகாரம் கொண்டவர்கள் தமிழ் – சிங்கள வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. இனவேறுபாடுகளை தாண்டிய உயர்தட்டு வர்க்க ஒற்றுமையே இந்த இரு சமூகங்களின் பிரதிநிதிகளிடம் காணப்பட்டது.


1911ம்ஆண்டு தேர்வில் சேர்.பொன்.இராமநாதன் தெரிவு செய்யப்பட்டமை பற்றி அவ்வேளை கவனர் ஆக இருந்த சேர்.கியு.கிளிபார்ட் கூறுகையில் “படித்த இலங்கையரை தேர்ந்தெடுப்பதில் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாடு இல்லாமல் தமிழர் உயர் சாதியினரும் சிங்கள உயர்சாதியினரும் சேர்ந்த ஓர் உயர்சாதியினரையே தெரிவுதெய்தார்கள்” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு கைமாறாகவே 1915 ல் கொழும்பில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம்கள் கலவரத்தில் பேரினவாதம் செய்யப்பட்டவிதத்தை முழுமையாக மறைத்து லண்டன் வரை சென்று முஸ்லிம்கள் மீது காடைத்தனம் புரிந்த சிங்களவர்களின் விடுதலைக்காக வாதாடினார் சேர்.பொன்.இராமநாதன். அதற்காகவே அவரை தேரில் வைத்து இழுத்து சிங்களவர்கள் குது}கலித்தனர். இவ்விதம் உயர்தட்டு வர்க்க ஒற்றுமையில் சிங்கள தலைமைகளுடன் யாழ்ப்பாண தலைமைகள் விரலும் சதையுமாக இணைந்திருந்தனர்.


1917 ம் ஆண்டு தேர்விலும் இது மேலும் உறுதியானது கரையோர சிங்களவரான மாக்கஸ் பெர்னாண்டோ என்பவரை விடுத்து தமிழராய் ஆனபோதும் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரான சேர்.பொன்.இராமநாதனையே சிங்களவரும் சேர்ந்து தெரிவுசெய்தனர்.


1919 இல் உருவான இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராக யாழ்ப்பாண தமிழரான சேர்.பொன்.அருணாசலம் என்பவர் தெரிவானார். ஆனாலும் இன்னிலையை சுதந்திரத்தை நோக்கிய சீர்திருத்தங்களும்இ மாற்றங்களும் தொடர்ந்து அனுமதிக்கவில்லை. இலங்கை முழுக்க தமது ஆதிக்கத்தை பேணிவந்த யாழ்ப்பாண மத்தியவர்க்கத்தினரின் எதிர்கால அந்தஸ்தை அரசியல் மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியது. அதுவரைகாலமும் இலங்கையின் அரசியல்இ சமூகஇ பொருளாதார கட்டுமானங்களில் நிரம்பியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செல்வாக்குகளை தொடர்ந்துவந்த காலங்களிலும் காப்பாற்றி கொள்ளும் எத்தனிப்போடு அன்றைய அதிகார ருசி கொண்ட தலைமைகள் முன்னெடுத்த நகர்வுகளே யாழ்ப்பாண அடிப்படைவாதத்தின் தோற்றுவாய் ஆகும்.

தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி -7"

ஜோதிஜி said...

நான் படித்தவரையிலும் கேட்ட வரைக்கும் உள்ள விசயங்களை தெளிவாகவே எழுதிக்கொண்டு வருகிறீர்கள். தொடர வேண்டும் உங்கள் பணி. உள்ளே வாழ்ந்தவர் எழுதும் போது இன்னும் கூடுதல் சிறப்பு.

Anonymous said...

Fuck u :-)

Post a Comment