இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்று சொல்கின்றோம். இன்று பல சிறுவர்களின் நிலை கேள்விக்கிடமாகி உள்ளது. ஒரு நேர சாப்பாட்டுக்கு மற்றவர்களிடம் பிச்சை கேட்டு கையேந்தும் சிறுவர்கள். உணவுக்காக, தன் குடும்பத்தை காப்பாற்ற குடும்ப சுமையோடு படிக்கவேண்டிய வயதிலும் தொழில் செய்யும் சிறுவர்கள் பலர்.
இந்த நிலை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் அதிகம். இதற்கு முக்கிய காரணம் நாட்டில் இடம்பெற்ற யுத்தமேயாகும். சிறுவர் உரிமைகள், உரிமைகள் என்று பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இச் சிறுவர்கள் பற்றி சிந்திப்போர் மிக, மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.
இன்று வீதிகளிலே நாம் எத்தனை பிச்சை எடுக்கின்ற சிறுவர்களைப் பார்த்திருக்கின்றோம். அவர்களின் எதிர்காலம்தான் என்ன. அவர்களுக்கும் அபிலாசைகள் இருக்கின்றன. இந்த சிறுவர்களை வைத்து உழைக்கின்றவர்களும் அதிகம்பேர் இருக்கின்றனர். இந்த சிறுவர்களை பிச்சை எடுக்க அனுப்புவது கிடைக்கும் பணத்தை தான் வாங்கி எடுத்துவிட்டு ஒரு நேர சாப்பாட்டுக்கு போதுமான அளவுக்கேனும் பணம் கொடுக்காமல் சிறுவர்களை வைத்து உழைக்கின்றவர்களும் இருக்கின்றனர்.
தாய், தந்தை, சொந்தங்கள், உடமைகளை இழந்து அநாதரவற்று வீதிகளிலும், மரநிழல்களிலும் வாழுகின்ற பல சிறுவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி, அவர்களின் எதிர் காலத்தைப் பற்றி யாராவது சிந்தித்து இருக்கின்றோமா?
இது ஒரு புறமிருக்க சிறுவர்களை வைத்து வேலை வாங்குகின்றவர்களும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்கள். சிறுவர்களை வேலை வாங்கக் கூடாது என்பது தெரிந்திருந்தும் பலர் சிறுவர்களை வேலைக்கு வைத்திருந்து அதிகமாக வேலை வாங்குவதோடு மட்டுமல்லாமல். வேலைகளை செய்ய மறுக்கின்ற சிறுவர்களை சித்திரவதை செய்கின்ற பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இன்னொரு புரத்திலே படிக்க ஆசை, கெட்டித்தனம் இருந்தும் படிக்க முடியாமல் எத்தனையோ சிறுவர்கள் தமது கல்வியை இடை நடுவில் விட்டிருக்கின்றனர்.
தாய், தந்தையரை இழந்த பல சிறுவர்கள் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்றனர் அவர்கள் தொடர்பிலே நாம் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர் காலத்தைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
மொத்தத்தில் எமது சிறுவர்களில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
2 comments: on "கையேந்தும் நாளைய தலைவர்கள்"
நல்ல அக்கறையுள்ள பகிர்வு நன்றி.
இலங்கை பதிவுகளிலேயே மக்களுடைய பிரச்சிணைகளையும், முன்னேற்றத்தையும் பேசும் பதிவுகளில் முண்ணணியில் இப்பதிவு இருக்கிறது.
நல்ல முயற்சி. தொடருங்கள்
Post a Comment