Monday, 24 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 2

2) கிழக்கு மாகாணம்

அ) புவியியல் அமைப்பு

இலங்கையின் கிழக்கு கரையோரமாக அமைந்துள்ளது இந்த மாகாணம். மத்திய மலைப்பகுதியில் ஆரம்பித்து வங்க கடலில் பாயும் இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி கங்கை இம்மாகாணத்தை இரு பகுதிகளாக கூறாக்கி கடலில் கலக்கிறது.

 அதாவது இந்த கங்கை கடலில் பாயும் வெருகல் பகுதிக்கு தெற்கே மட்டக்களப்பு ஆகவும், வடக்கே திருகோணமலை ஆகவும் இரு பெரும் பரப்புகள் இம்மாகாணத்தற்குரியன.

மட்டக்களப்பு பரப்பு ஆனது ஏறக்குறைய 200 கி.மீ நீளமானதாக மகாவலி கங்கைக்கும் இக்கிழக்கு மாகாணத்தின் தெற்கு எல்லையான குமுக்கன் ஆறுக்கும் இடையே விரிந்து கிடக்கிறது.

இதுவே 1960 ஆண்டு முதல் இரண்டாக கூறு போடப்பட்டு இலங்கை அரசினால் புதியதொரு அம்பாறை எனும் மாவட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இம்மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை எனும் மூன்று நிர்வாக பிரிப்புகளாக (மாவட்டங்களாக) அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையின் மத்திய மலைநாட்டில் இருந்து கிழக்கு நோக்கிப் பாயும் மகாவலி கங்கை மட்டும் அன்றி பதுளைக்குண்றுகளில் இருந்து ஓடிவரும் மதுறுஓயாஇ முந்தனையாறு, மகிளவெட்டுவான்ஆறு, கல்லோயாஆறு (பட்டிப்பளை ஆறு), ஹெடஓயா, வில்லோயா என்று குமுக்கன் ஆறுவரை எண்ணெற்ற நீரோடைகள் இக்கிழக்கு மாகாணத்துக்கு வளம் சேர்ப்பவை ஆகும்.

இக்கிழக்கு மாகாணத்தின் கிழக்கு எல்லையாக வங்க கடலும் மேற்கு எல்லையாக இயற்கையாய் அமைந்த மலையடிவாரங்களும் காணப்படுகின்றது. இந்த கிழக்கு கடலை அண்டிய பிரதேசங்களான நெய்தல் நிலம் எழுவான்கரை ஆகவும் மேற்கு மலையடிவாரங்களில் அமைந்துள்ள நெல் வயல்கள் நிரம்பிய மருதநிலம் படுவான்கரையாகவும் சூரியன் எழுவதையும்

படுவதையும் கொண்டமைந்த காரணப்பெயர் பெற்றன.

மட்டக்களப்பில் அமைந்துள்ள சுமார் 45கி.மீ நீளமான நீண்டதொரு வாவியே இந்த எழுவான் கரையையும் படுவான்கரையையும் இயற்கையாக பிரித்து நிற்பதில் முக்கிய பங்கெடுக்கின்றது. இங்குதான் மீன்கள் பாடும் அதிசயம் நிகழ்வதாக ஐதீகம்.

ஆ) சமூக பொருளாதார வாழ்வியல் நோக்குஎழுவான் கரையைப் பொறுத்தவரை திருமலையிலிருந்து தெற்குநோக்கி செல்லும் பிரதான வீதி மூது}ர், வெருகல், வாழைச்சேனை ஏறாவ1ர், மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோயில் போன்ற பட்டினங்களை ஊடறுத்து பாணமை, பொத்துவில், குமணை வரை நீண்டு செல்கிறது. இதன் காரணமாக ஓரளவு நவீன உலகுடன் தொடர்புடையதாக இந்த எழுவான்கரை காணப்படுகிறது.

கல்லு}ரிகள் பஸ்நிலையங்கள், தபால்அலுவலகங்கள்இ வைத்தியசாலைகள்இ வங்கிகள், மற்றும் நீதிமன்றங்கள், பொலிஸ்நிலையங்கள் போன்றவையும் இப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. மக்கள்தொகை பரம்பலிலும் செறிவான கிராமங்களை இந்த எழுவான்கரையே கொண்டுள்ளது. மேற்படி நாளாந்த வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளை கொண்டமைந்தவையால் உயர்கல்வி வாய்ப்புகளிலும் இப்பகுதியே முக்கியத்துவமுடையதாயுள்ளது. இதன்கரணமாக அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் கிடைக்கும் உத்தியோகங்களிலும் இந்த எழுவாங்கரை பிரசைகளே அதிகம் இடம்பெற்று வருகின்றனர்.

நீண்ட கடலையும் அதையொட்டிய மணல் மண்தரையையும் இயற்கைவளங்களாக கொண்டமைந்ததால் பொருளாதார வருமானத்தைப் பொறுத்தவரை கடல் மீன்பிடியும் தென்னை, மரமுந்திரிகை, காய்கறித் தோட்டங்களும் அதுசார்ந்த வணிகமும் அதிகளவில் இப்பகுதி மக்களின் தொழில்களாக உள்ளன.

இதுதவிர திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் சார்ந்த தொழில் வாய்ப்புகளும் பொருளாதார ரீதியாக கிழக்கிலங்கைக்கு மிக முக்கியமாதொன்றாகும். எழுவான்கரை பிரதேசத்தின் அதிக பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசமாக யுத்த காலங்களில் இனங்காணப்பட்டிருந்தது.

படுவான்கரையை பொறுத்தவரை பிரமாண்டமான நெல், தானிய விளைநிலங்களை கொண்டுள்ளது. அகன்று விரிந்த பிரமாண்டமான நிலப்பரப்பை கொண்டது இப்பிரதேசம். சனத்தொகைப் பரம்பல் மிக குறைவானதாகக் காணப்படுகிறது.

இன்றுவரை நவீன வசதிகள் எதனையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பின்றி பிற்படுத்தப்பட்ட பகுதிகளாகவே உள்ளன. ஏழை, உழைக்கும் மக்கள் வாழும் நிலங்கள் கொண்டமைந்த படுவான்கரை வயற்பரப்புகளில் அதிகமானவை போடிமார் என்றழைக்கப்படும் நிலபிரபுக்கள் வசமே உள்ளன.

பெரும்பட்டிகள் என்றழைக்கப்படும் கால் நடை வளர்ப்புகளினதும் உரித்துடையவர்களாக இப்போடிமாரே காணப்படுகின்றனர். இந்த வண்டல் மண்ணின் புதல்வர்களான ஏழை விவசாயிகளின் குழந்தைகள்தான் 1990ற்கு பின் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளணி தொகுதிகளை நிரப்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பிளவுக்கு முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் இந்த படுவான்கரை பகுதியேயாகும். முன்னொரு காலத்தில் வன்னிமைகளாகவும் குறுநிலபிரதானிகளின் அரசிருக்கைகளாகவும் செயற்பட்ட பழம்பெரும் ராசதானிகள் சர்வசாதாரண கிராமங்களாக இந்த படுவாங்கரையிலேயே உறங்கிக் கிடக்கின்றன. அவ்வகையில் போரதீவு, வீரமுனை, பழுகாமம், மண்முனை என்பன ஒருகாலத்தில் அரசோற்றிய இடங்களாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் கிழக்கு பிளவுவரையான காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் கொக்கட்டிசோலை பழுகாமம் போன்ற இடங்களிலும் கரடியனாறு குடும்பிமலை பகுதிகளையொட்டி தேனகம், மீனகம் என்கின்ற பென்னம்பெரிய பயிற்சி முகாம்களும் இந்த படுவான்கரை பகுதிகளிலேயே இருந்தன.

தொடராகும்…..

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 2"

ஜோதிஜி said...

Sorry for not tamil fonts.

100% super. Simple. Neat and Good.

Anonymous said...

Hi Shanthru, sorry I have no tamil font but, this is a super subject... kep it up!

arishthan Ramesh said...

Hi Shathru, sorry I haven't tamil fnt but, this i super story..... keep it up.

Post a Comment