Wednesday, 12 May 2010

பதிவுலக அரசியல்

பதிவுலகம் எனக்கு பல நல்ல நண்பர்களைத் தேடித்தந்திருக்கின்றது. ஏதோ நானும் எழுதுகிறேன் என் எழுத்துக்களையும் மற்றவர்கள் பார்க்கின்றார்களே. நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்களே என்பதை நினைக்கும்போது சந்தோசமடைகின்றேன்.

மறுபுறத்திலே சில விடயங்களைப் பார்க்கின்றபோது என் இந்தப் பதிவுலகத்துக்கு வந்தேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

என் பதிவுகளைப் பொறுத்தவரை தவறுகள் நடக்கின்றபோது சுட்டிக் காட்டுகின்றேன். உண்மைகளை சொல்லவேண்டும் என்பதே எனது நோக்கம்.  என் கருத்துக்களுடன் நீங்கள் உடன்படவில்லையா அதனை சுட்டிக் காட்டுங்கள் சரியானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.

அதனைவிடுத்து அனானியாக வந்து மிரட்டுகின்றபோது நான்பயப்படப் போபவன் அல்ல.  அதிலும் சில பதிவர்களே அனானியாகவந்து தகாத வார்த்தைகளால் கருத்துரையிடுவது கவலைக்குரிய விடயமே. எனக்கு இரண்டு பதிவர்கள் அனானியாக கருத்துரையிட்டு வருகின்றனர்.

அண்மையில் என்னைப் பற்றிய தனிப்பட்ட ஒரு தகவலை ஒரு பதிவரோடு அரட்டையில் பகிர்ந்து கொண்டேன். என்னைப் பற்றிய அந்த விடயம் வேறு எவருக்குமே தெரியாது. நான் அந்த விடயத்தை அரட்டையில் தெரிவித்து சில நிமிடங்களிலே அந்த விடயம் தொடர்பாக மோசமான முறையிலே அனானியாக கருத்துரை இடப்பட்டிருந்தது. இது ஒரு பதிவருக்கு அழகல்ல.

ஒவ்வொருவரது கருத்துக்களும் வேறுபடலாம். உங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வையுங்கள் அதனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். மாற்றுக் கருத்துக்கள் வருகின்றபோதுதான் உண்மைகள் தெரியவரும்.

எனது வலைப் பதிவிலே புலிகளுக்கு சார்பாக நான் ஒருபோதும் எழுதியதில்லை. ஆனால் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்களை அதிகமாகவே எழுதி இருக்கின்றேன். அன்று தமிழர்கள் படுகின்ற அவலங்களை பதிவிட்டபோது. புலிகளின் அடிவருடி என்றும் புலிகளின் எச்ச சொச்சம் என்றும் சொன்னிர்கள்.

ஒருவர் மீது உங்களுக்கு தனிப் பட்ட  கோபங்கள் இருந்தாலும் அவர் செய்கின்ற சேவைகளை நாம் மறைக்கக் கூடாது. உண்மைகளை வெளியிடவேண்டும் என்பதே எனது எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை கிழக்கு மாகாண சபை மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் நடை பெறுகின்றன அவற்றை பதிவிட்டிருக்கிறேன். உண்மைகளை உண்மைகளாக சொல்லுங்கள். அதைவிடுத்து தமிழின துரோகி பட்டம் வழங்கவேண்டாம்.

தமிழர்களின் அவலங்களை எழுதுகின்றபோது புலிகளின் அடிவருடி. உண்மைகளை எழுதுகின்றபோது தமிழினத் துரோகியா? இன்று தமிழன் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் இதுதான்.

யார்தான் என்னதான் சொன்னாலும் தமிழர்களின் அவலங்களை பதிவிடுவேன். உண்மைகளைப் பதிவிடுவேன். எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதற்காக அனானியாக வரவேண்டாம்.

யாழ்தேவியின் கவனத்துக்கு.....
இலங்கை வலைப் பதிவர்களின் திரட்டியாக இருக்கின்ற யாழ்தேவி வாரம்தோறும் ஒருவரை நட்சத்திரப் பதிவராக அறிவித்து அந்தப் பதிவர் பற்றிய விபரங்களை தினக்குரல் பத்திரிகையிலம் பிரசுரித்து வருகின்றது இது பாராட்டப்படவேண்டிய விடயம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என்னையும் நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்திருந்தனர். அந்தக் காலப்பகுதி நான் பதிவெழுதாமல் இருந்த காலப்பகுதி. நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்யப்பட்ட அன்று தங்க முகுந்தன் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார் நீங்கள்தான்  இன்றுமுதல் யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவர் என்று அன்றுதான் எனது மின்னஞ்சலைப் பார்த்தேன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் நான் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

அத்தோடு தினக்குரலில் பிரசுரிப்பதற்கு என்னைப் பற்றிய விபரங்களையும் புகைப்படம் ஒன்றையும் அனுப்பும்படியும் கேட்கப்பட்டிருந்தது. நான் எனது சொந்த இடத்தில் இல்லாத காரணத்தால் ஒரு, சில நாட்கள் தாமதித்தே அனுப்பினேன் ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் தினக்குரலில் பிரசுரிக்கவில்லை.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பதிவர் அறிமுகம் செய்யப்படுகின்றனர். என்னை பற்றிய விடயங்களை பிரசுரிக்காததட்கான காரணம் என்ன?

ஒருவர் நட்சத்திரப் பதிவராக தெரிவு செய்யப்பட்டால் அந்தப் பதிவருக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பது நல்லது அவர் நட்சத்திரப் பதிவராக இருந்து நல்ல பதிவுகளைத் தர தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளமுடியும்.

எல்லாப் பதிவர்களும் எப்பொழுதும் இணையத்தோடு இருக்கப் போவதில்லை அவர்களுக்கு முன்னர் அறிவிப்பதே சிறந்தது.

எனக்கு நடந்த நிலை வேறு எந்தப் பதிவர்களுக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்வது நல்லதே.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "பதிவுலக அரசியல்"

தங்க முகுந்தன் said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்!

//பதிவுலகம் எனக்கு பல நல்ல நண்பர்களைத் தேடித்தந்திருக்கின்றது. ஏதோ நானும் எழுதுகிறேன் என் எழுத்துக்களையும் மற்றவர்கள் பார்க்கின்றார்களே. நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்களே என்பதை நினைக்கும்போது சந்தோசமடைகின்றேன்.

மறுபுறத்திலே சில விடயங்களைப் பார்க்கின்றபோது என் இந்தப் பதிவுலகத்துக்கு வந்தேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

என் பதிவுகளைப் பொறுத்தவரை தவறுகள் நடக்கின்றபோது சுட்டிக் காட்டுகின்றேன். உண்மைகளை சொல்லவேண்டும் என்பதே எனது நோக்கம். என் கருத்துக்களுடன் நீங்கள் உடன்படவில்லையா அதனை சுட்டிக் காட்டுங்கள் சரியானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.//

உண்மைகளை ஒருபோதும் மறைக்க முடியாது! அதுபோல நியாயமும் காலம் சென்றாலும் ஒருநாள் தன்னை வெளிப்படுத்தும்!

இதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது! இந்த விடயத்திற்கு நேரம் செலவழித்து எழுத வேண்டியிருப்பதால் விரைவில் எனது கருத்துரையை விரிவாக பதிவிடுவேன்! தற்போது நேரம் போதவில்லை - தொடருவேன்!

நீர் யாருக்கும் பயப்படாமல் - அல்லது எந்த ஒரு ஊர் பேர் தெரியாத அனானிக்காகவும் உமது கருத்தை தெரிவிப்பதில் தயக்கம் காட்டாமல் - உள்ளதை உரத்துச் சொல்லும் என்பதே எனது வேண்டுகோள்!

ஸ்ரீராம். said...

அனானி கமெண்ட் தாரர்களின் மனநிலை எனக்குப் புரிவதில்லை...சொல்வதைப் பெயர் சொல்லி சொல்ல முடியாதவர்கள், தான்தான் சொன்னோம் என்று கூட சொல்லிக் கொள்ள முடியாதவர்கள் அப்படியாவது எதற்கு கமெண்ட் செய்ய வேண்டும் என்றும் தோன்றும்..என்னமோ போங்க..!

Anonymous said...

//அனானி கமெண்ட் தாரர்களின் மனநிலை எனக்குப் புரிவதில்லை...சொல்வதைப் பெயர் சொல்லி சொல்ல முடியாதவர்கள், தான்தான் சொன்னோம் என்று கூட சொல்லிக் கொள்ள முடியாதவர்கள் அப்படியாவது எதற்கு கமெண்ட் செய்ய வேண்டும் என்றும் தோன்றும்..என்னமோ போங்க..!//

நல்ல கருத்துத்தான். ஆனால், இப்பதிவரைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் கட்சி சாயம் பூசப்படுகிறது. அக்கட்சியின் பிண்ணனிகள், சாதனைகள் நீங்கள் அறியாததுமல்ல... இவர் அக்கட்சிக்கு சாமரம் வீசும்போது எப்படி இவருக்கு எதிராக சொந்தப் பெயருடன் பின்னூட்டமிடமுடியும். மனத்தில் எழுகின்ற குமுறல்களை பின்னூட்டுகின்றோம். அனானியாக. ஏனெனில், அம்மாவுக்கு நான் ஓர் பிள்ளை. :-(

அனானி

VARO said...

யாழ்தேவி குழு நண்பர் ஒருவருடன் ஒருமுறை கதைக்கும் போது குறிப்பிட்டார், ‘தினக்குரல்’ வார வெளியீடு என்பதால் அதற்கான ‘யாழ்தேவி’ நட்சத்திரம் பற்றிய தொகுப்பினை ஒரு வாரகாலத்திற்கு முன்பதாக அனுப்பி விடுவதாக… உங்களுடைய தகவல்கள் பிந்திக்கிடைத்ததால் அதே வாரத்தில் கொடுக்க முடியவில்லை’ என்று. இதுவரை பிரசுரிக்காததிற்கான காரணம் பற்றி அவர்கள் குறிப்பிடட்டும்.

ஜெரி ஈசானந்தன். said...

இங்க உனக்காக "நாங்கெல்லாம் இருக்கோம் சந்ரு"

Post a Comment