இது என்னுடைய 200 வது பதிவு இது என்னுடைய 200௦௦ வது பதிவாக இருந்தாலும் நான் எதனையும் சாதித்து விடவில்லை. வலையுலகுக்கு வந்து நிறையவே படித்திருக்கின்றேன். நல்ல பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். மிக மிக மோசமான வார்த்தைகளால் அனானிகளால் அதிகமாக திட்டு வங்கி இருக்கின்றேன். இவ்வாறு நான் வலையுலகுக்கு வந்து பலவற்றை சம்பாதித்திருக்கின்றேன்.
என்னுடைய கருத்துக்களை வெளியிடுகின்ற ஒரு ஊடகமாகவே நான் வலைப் பதிவைப் பயன்படுத்துகின்றேன். தவறுகளை சுட்டிக்காட்டவும் உண்மைகளை வெளியிடவும் நான் ஒரு போதும் தயங்குவதில்லை.
என் கருத்துக்கள் தவறானவைகளாக இருந்தால் சுட்டிக்காட்டுகின்றபோது திருத்திக் கொள்ளும் மனப் பான்மையும் கொண்டவன் நான்.
நான் வலையுலகில் ஏதோ கிறுக்கியிருக்கிறேன். எனக்கு உற்சாகமூட்டிய வலையுலக நண்பர்கள், அனானிகள் ( என்னை அதிகம் எழுதத் தூண்டியவர்கள்) திரட்டிகள் குறிப்பாக தமிழிஷ், தமிழ்மணம், தமிழ் 10 போன்ற திரட்டிகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சில நாட்களாக என் இடுகைகளை இணைத்து என் வலைப்பதிவுக்கு அதிகமான பார்வையாளர்களை அனுப்பியிறுக்கின்ர தினமணிக்கும் எனது நன்றிகள் தொடர்ந்தும் பல பதிவுகளோடு உங்களை சந்திப்பேன் உங்கள் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு.
குறும்படம் தயாரிக்க நாம் தயார். நீங்கள் தயாரா?
என்னுடைய நீண்டநாள் ஆசை எமது கலைஞர்களைக் கொண்டு ஒரு குறும் படம் தயாரிக்க வேண்டும் என்பதே.. பல கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்காமல் இருக்கின்றனர் அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை.
ஆனால் பல துறை சார்ந்த கலைஞர்கள் இருந்தும் ஒரு குறும்படம் தயாரிக்க வேண்டுமாக இருந்தால் முக்கியமாக தேவைப்படுகின்ற நிதி, தொழிநுட்பம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல்தான் கலைஞர்கள் பின் வாங்குகின்றனர்.
அது ஒரு புறமிருக்க என்னுடைய நண்பர்கள் சிலர் தடைகளையும் தாண்டி நாம் குறும்படம் ஒன்றினை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர்.
இதற்காக இலங்கை மற்றும் வெளிநாட்டுகளில் இருக்கின்ற ஆர்வமுடைய பல துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
தொடர்புகளுக்கு shanthruslbc@gmail.com
25 comments: on "கலையுலக, திரையுலக, பதிவுலக நண்பர்களே கொஞ்சம் நில்லுங்கள்"
வாழ்த்துக்கள் அண்ணா டபுள் செஞ்சுரிக்கு..:)
குறும்பட முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...:)
வாழ்த்துக்கள் சந்ரு
உங்கள் சேவை மேலும் தொடரட்டும்
உங்கள் குறும் பட முயற்ச்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்
மேலும் பல் பதிவுகள் படைக்க் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சந்த்ரு.. எதற்கும் அஞ்சாமல் அசராமல் அடித்தாடுகிறீர்கள்..
தொடர்ந்து கலக்குங்கள்
அருமை வாழ்த்துகள்
வாழ்த்துகள்!அருமை...அருமை...
Gud Luck
Go Ahead..........!
Ur Idea also Nice bro, waiting 4 the next
ஐம்பது தாண்டவே நாக்குத் தள்ளுது.. இருநூறா..?? உங்கள் எழுத்துக்களில் தெரியும் உறுதி தொடரட்டும்..
டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் அண்ணா ..:)
உங்கள் முயற்சி வெற்றியடைய... வாழ்த்துக்கள்...
சந்ரு வாழ்த்துகள்,வாழ்த்துகள்.
உங்கள் துடிப்பும்,ஆர்வமும்,ஊக்கமும்.
குன்றாமல் உயர என் நல்வாழ்த்துகள்.
குறும்படமும் வெற்றியுடன் அரங்கேற
என் ஆசையும்,வாழ்த்தும் சந்ரு
வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்த்துகள்
congrats on ur 2nd century!!
vazhthukkal
வாழ்த்துகள் சந்த்ரு.
தொடரட்டும் வெற்றிகள்.
வாழ்த்துக்கள் அண்ணா...
200 எப்பது விரைவில் 20000 ஆக எதிர்பார்க்கிறோம்..
Hi Shanthru! Wishes for your double entury in Blog. I am one of your fan in Blog, includng Political issues. Keep it up...
இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் தல!
மேலும் பல உயரங்கள் தொடுவீர்கள்!
வாழ்த்துக்கள் சந்ரு....
இரட்டை சதத்துக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html
இருநூறாவது இடுகைக்கும், குறும்படம் எடுக்கும் ஆசை நிறைவேறவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்,
நானும் குறும்படம் எடுக்க ஒரு குறும்பட இயக்குனரிடம் சிறிது காலம் பயிற்சி பெற்றேன். இறுதியில் என்ன நடந்தது என்பதை ஒரு சுவாரசியமான பதிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் தரலாம்...
வாழ்த்த்துக்கள் தெரிவித்து உற்சாகப் படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள். உங்கள் வாழ்த்துக்களும் உற்சாகப் படுத்தலுமே என்னை 200௦௦ வது இடுகை வரை கொண்டு வந்திருக்கின்றது தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
Post a Comment