Wednesday 21 July 2010

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற செம்மொழி விழாவும் சில விமர்சனங்களும்.



கிழக்கு  மாகாண  செம்மொழி விழா முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் சிரார்த்த தினமான நேற்று (20 .07 .2010 ) சுவாமி விபுலானந்தர் பிறந்த இடமான காரைதீவிலே இடம்பெற்றது.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியிலே இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டிருந்ததோடு.  பல கல்வியாளர்களும், புத்திஜீவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பல கலை, கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததோடு.  இவ்விழா சிறப்பாக இடம்பெற்றதை இட்டு பலரும்  ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். உண்மையாகவே இவ்விழா மிகவும் சிறப்பான முறையிலே இடம்பெற்றது.


இவ்விழாவுக்கு வருகை தந்திருந்த பிரமுகர்களை நீலாவணையில் இருந்து தமிழர் கலை, கலாசார, பாரம்பரியங்கள் சார்ந்த நிகழ்வுகளோடு அலங்கார ஊர்த்திகள்சகிதம் காரைதீவு மத்திய கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காலைமுதல் இரவுவரை இடம்பெற்ற இவ்விழாவிலே எல்லோராலும் பாராட்டப்படவேண்டிய விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன என்று இதில் கலந்து கொண்டவர்கள் பாராட்டுகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இவ்விழா தொடர்பிலே பல குற்றச்சாட்டுக்களை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

 அவர் தன்னுடைய கருத்திலே இவ்விழாவிற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை ஆனால் இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டவர் எந்த விதத்திலும் இவ்விழாவிற்கு தகுதி அற்றவர் என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றார். தாங்கள் இவ்விழாவிற்கு அழைக்கப்படாதது திட்டமிட்ட சதி என்றும் மக்கள் மத்தியிலே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்பதனை எடுத்துக்காட்டும் நோக்கோடு ஏற்பாட்டாளர்கள் செய்த சதி என்றும் தெரிவித்திருக்கின்றார்.

இவரது குற்ற சாட்டுக்கள் நியாயமற்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஊடகப்பிரிவு ஒரு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது அதனை அப்படியே தருகின்றேன்.


கிழக்கு மாகாணத்தில் மிக விமர்சையாக நடைபெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு ஏற்பாடாக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழ் செம்மொழி தினவிழா குறித்து அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பியசேன அவர்கள் இன்றைய (20.07.2010) சுடர்ஒளி பத்திரிகையில் தெரிவித்திருக்கும் விமர்சனமானது அவரது அரசியல் சமூகம் சார்ந்த அறிவு குறித்த மந்தப் போக்கினையே வெளிக்காட்டுகின்றது.

உரிய முறையில் அறியப்படாமல் நிகழ்வின் நோக்கம் எற்பாட்டாளர்கள் குறித்த பொதிய தெளிவில்லாமல் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் விமர்சனம் அமைந்திருப்பது கவலை தரும் விடயமாகும். தமிழ் மொழி நிகழ்வானது முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவாக தமிழ் மொழியின் பெருமையினையும் அதன் தொன்மையினையும் வெளிப்படுத்தும் நோக்கில் எற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் சாரா நிகழ்வாகும். தமிழ் மொழியின் சீரும் சிறபபும்தான் இவ் விழாவின் மையமாக அமைந்திருந்தது. எனவே தமிழ் மொழி குறித்த பற்றுக் கொண்டவர்களும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுமே இதில் பங்காற்ற முடியும். தமிழ் மொழி அறிவு குறித்த போதிய அறிவில்லாத அதன் தொன்மை பாரம்பரியம் வரலாறு சிறப்பு குறித்த பூரண விளக்கமில்லாத ஒரு நபர் அம் மாநாடு குறித்தும் அதில் கலந்துகொண்டோர் குறித்தும் விமர்சிக்க தகுதியற்றவர்.

தமிழ் மொழி தினமானது தமிழ் மொழியின் பெருமையினை இலங்கையில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் சுவாமி விபுலானந்தர் கல்விக்கு ஆற்றிய செவையினை மெச்சும் முகமாகவும் கிழக்க மாகாண முதலமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்வி மொழி தொடர்பான நிகழ்வில் பக்கச் கார்பில்லாமல் அதற்குரிய மகத்துவத்துடன் நடைபெற வேண்டும் என்பதே ஏற்பாட்டுக் குழுவினரது நோக்கமாக இருந்தது. அதற்கிணங்கவே புத்திஜீவிகளும் தமிழ் ஆர்வலர்களும் கல்விமான்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் நிருவாகங்களுக்கு பொறுப்பாக உள்ள கெளரவ முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் இத் தமிழ் செம்மொழியானது வீரியத்துடன் இடம்பெற வேண்டுமாக இருந்தால் முதலமைச்சரின் பிரசன்னமானது தலையாயதாகும். எனவேதான் ஏற்பாட்டுக் குழுவினரால் முதலமைச்சரின் தலைமையில் பத்திஜிவிகளையும் தமிழ் ஆர்வலர்களையும் கொண்டு அவ்விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. தமிழில் பற்றுக் கொண்டவர்கள் தமிழ் தாய்மீது வற்றா அன்பு கொண்டவர்களும் இதற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர இதனை விமர்சிப்பதானது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கானதே ஆகும். அதை விமர்சிப்பதன் மூலம் இவர்கள் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்டுள்ள வண்மம் நன்கு வெளிப்படுகின்றது.

இந் நிகழ்வில் மதலமைச்சரின் பிரசன்னத்துடன் கலந்து கொண்ட கல்வியாளர்கள் புத்திஜீவிகள் தமிழ் பற்றுக் கொண்டவர்களை ஏற்பாட்டுக் குழுவினர் மனதார ஏற்று பெருமிதம் அடைந்தார்கள். இந் நிலையில் இவ் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டதனை விமர்சிப்பதன் மூலம் தமிழையும் தமிழ் மொழிமீது பற்றுக் கொண்டவர்களையும் கலந்து கொண்ட அறிஞர்களையும் ஏற்பாட்டாளர்களான மாகாண கல்வித் திணைக்களத்தினையும் அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறான விமர்சனங்களை தெரிவிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பியசேன அவர்கள் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எந்தளவு சேவையினை ஆற்றியிருக்கின்றார். என்பதனை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 என்னைப் பொறுத்தவரை வீண் குற்ற சாட்டுக்களை  தவிர்த்து தமிழ் மொழியில் பற்றுள்ள எவரும் இவ்விழாவில் கலந்திருக்கலாம்.


















Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற செம்மொழி விழாவும் சில விமர்சனங்களும்."

செல்வா said...

பயனுள்ள பதிவு ..!!

Jana master said...

உண்மையிலேயே தழிழராகிய ஒவ்வாருவரும் பெருமைப்படவேண்டிய விடயமிது. கிழக்குமாகாணத்திலே இது இடம்பெற்றது சிலருக்கு பொறுக்கமுடியாமல் இருக்கும் என்பதை நீங்களும் மக்களும் நன்றாகவே உணர்வீர்கள். பதவி, தன்னலம் என்பவற்றுக்காக தமிழன், உரிமை என்று மக்களை உசுப்பேற்றி சூடுகாயும் கூட்டத்திற்கு செம்மொழி என்றால் என்னவென்றா தெரியப்போகிறது. முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதால் தங்கள் வாக்குவங்கிக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தினால்தான் பியசேன பிதற்றியுள்ளார் என நினைக்கின்றேன். சந்ரு, மக்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் "வாய்ச்சொல்லில் சொல்லி சொல்லி காலம்கடத்துபவனைவிட சொல்லாமல் காரியத்தை முடிப்பவனே வீரனும் கெட்டிக்காரனும்

Anonymous said...

தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி.

Post a Comment