தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி 17
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைப் பகுதியில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரராக மட்டுமல்ல மலையகத்திலும் பெரும் எஸ்டேட்டுகளின் சொந்ததக்காறராகவும் இருந்தார் இந்த செல்வநாயகம். அதேவேளை 1947 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரன் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இந்த செல்வநாயகமே இருந்தார்.
இதுபோன்ற இவருடைய நிலச் சுவாந்தர் பாராம்பரியமே தமிழரசுக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளின் போக்கை நிர்ணயித்தது. இப்போது நெற்காணிச்சட்டம் தமது மடியில் கையை வைத்துவிடும் என்கின்ற ஒரே காரணத்துக்கா “தந்தை செல்வா” தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தார் என்பது புலப்படுகிறது அல்லவா? 1957 இல் நெற்காணிச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது எந்த சுயநலத்தில் இருந்து அதை எதிர்த்தாரோ அதே சுயநலமே அவர் தமிழ் காங்கிரசில் இருந்து வெளியேறியபோதும் இ;ருந்துள்ளது. மலையக மக்களுக்காக அவர்களது வாக்குகள் பறிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மலையக மக்களின் ஆதரவாளனாக தன்னைக் காட்டிக்கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்த செல்வநாயகம் அப்போதும் தனது தனிப்பட்ட நலன்களையே கணித்து செயற்பட்டிருக்கின்றார்.

மலையகத்தில் பெரிய பெரிய எஸ்டேட்டுக்களை தன்வசம் வைத்திருந்த தொண்டமான் பரம்பரை மலையக மக்களுக்கு அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு குரல் கொடுப்பதன் ஊடாக எப்படி தமது நிலச்சுவாந்தர் அந்தஸ்துகளுக்கு பக்கபலமாக அவர்களைப் பயன்படுத்த முனைகிறார்களோ அதே பாணியில் இந்த செல்வநாயகமும் செயற்பட்டதைக் காணலாம். இதன் காரணமாகவே 1949 இல் மலையக மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதை செல்வநாயகம் எதிர்த்தார். அதுதவிர இன்றுவரை தமிழரசுக்கட்சியின் வாரிசுகள் பீற்றிக் கொள்வதுபோல் “தந்தைசெல்வா” மலையக மக்களின் பிரச்சனைகளில் உண்மையான அனுதாபமோ, அக்கறையோ கொண்டிருக்கவில்லை.
அப்படி அவர் மலையக மக்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டபோது அவர் கொடுத்த எதிர் குரல் உண்மையானால் அதையிட்டு ஏன் தீவிர கொள்கைகளை வரித்துக்கொள்ளவில்லை. 1952 தேர்தலில் தான் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்கள் எங்கோ இருந்த மலையக மக்களின் பிரச்சனையையிட்டு அக்கறை கொள்ளாமையினால் யாழ்ப்பாணத்தில் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள அடுத்துவந்த தேர்தலில் மலையக மக்களின் பிரச்சனைகளைக் கைவிட்டார். அதுமட்டுமல்ல 26-ஜுலை – 1957 இல் நடைபெற்ற பண்டா – செல்வா பேச்சுவார்தையின்போது அதுவரை மலையகத் தமிழர்களின் குடியுரிமையை கோரிவந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பண்டாரநாயக்காவின் வற்புறுத்தலின் பேரில் அக்கோரிக்கைகளைக் கைவிட்டார். அதன் பின்னரே பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டது.

கீழ்வரும் விடயங்களே பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்துகள் ஆகும்.
1) பிரதேச சபைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசங்கள் வரையறுக்கப்படும்.
2)குடியேற்றத்திட்டங்கள் மீதான தமிழ் பகுதிகளின் இறைமை வரையறுக்கப்படும்.
3) பிராந்திய மொழி அந்தஸ்தும் அதற்கான உத்தரவாதங்களும் வரையறுக்கப்படும்.
இதிலிருந்து தமக்கான ஆட்சிப் பிரசேங்களை வடகிழக்கில் வரையறுத்துக் கொண்டு அங்கே தமது தலைமை ஸ்தானங்களைத் தக்கவைப்பதற்;காக (மலையக மக்களின் பிரச்சனைகளில் மையங்கொண்டு முகிழ்த்ததாக சொல்லிக்கொள்ளும்) தமிழரசுக் கட்சி மலையக மக்களை அம்போ எனக் கைவிட்டது. யாழ்ப்பாணத்தின் மேல்தட்டு விருப்புகளுக்காக மேற்படி ஒப்பந்தம் உத்தரவாதத்தை வழங்கியது. இதைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியினரின் தமிழ் பிரதேசம் எங்கும் நடந்த சத்தியாக்கிரகங்கள் முடிவுக்கு வந்தன.
மலையக தோட்டத் தொழிலாளர் பிரசாவுரிமைப் பறிப்பையும், வாக்குரிமைப் பறிப்பையும் நிறைவேற்றிய யு.என்.பி. அரசினது நடவடிக்கைகளை கேவலம் இரண்டு அமைச்சுப் பதவிகளுக்காக ஆதரித்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தினது காட்டிக்கொடுப்புக்கும் இந்த தமிழரசுக்கட்சியின் காட்டிக் கொடுப்புக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. அப்பட்டமான யாழ்ப்பாணத்து நலன்களுக்கு பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் மூலம் உத்தரவாதம் கிடைத்ததும் மலையக மக்களை நாடற்றவர்களாகவே தொடர்ந்து வைத்திருக்க அவர்களுக்கான தமது கோரிக்கைகளைக் கைவிட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் தந்தை செல்வநாயகம்.
இத்தகைய விட்டுக்கொடுப்புகளுடன் கைச்சாத்தான பண்டா-செல்வா ஒப்பந்தம்கூட யு.என்.பி இல் இருந்த சிங்கள இனவாதிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக நேர்ந்தது. அவர்களுக்கு தலைமை வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தெற்கில் இருந்து இனவெறியர்களுடன் சேர்ந்துகொண்டு இவ்வொப்பந்தத்தை கிழித்தெறியக் கோரி கண்டிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். சிங்கள மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக பண்டாரநாயக்கா இவ்வொப்பந்தத்தினை கிழித்தெறிய வேண்டிய நிலைக்கு உள்ளானார். நாட்டு மக்களுக்குhக அவர் ஆற்றிய உரையில் இந்த ஒப்பந்தமானது கிழித்தெறியப் படுவதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல. என சுயநிலை விளக்கம் கூறினார்.
தொடரும்...
1 comments: on "எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது...."
இது உங்களை திட்டி லோசன் இட்ட பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம். இதுவரை பிரசுரமாகவில்லை. உங்களுக்கும் தெரியவேண்டும் என்று பின்னூட்டமிடுகிறென்.
//அந்தப் பதிவுகள் ஆரம்ப முதலே யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளும்,தமிழரும், கிழக்கிலங்கைத் தமிழரை அடிமைப்படுத்தி வருவது போலவும் ஏமாற்றி வருவது போலவும் உருவகப்படுத்தியே காட்டுகின்றன.//
யாழ்ப்பாணத்தவர்களும் சிங்களர்களும் வரலாற்றைத்திரிபு படுத்த கிழக்கு மாகாணத்தான் தொடர்ந்தும் நீங்கள் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் போடவேண்டும் என்பதற்காகவே சந்ருவின் பதிவை எதிர்க்கிறீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் வாழாவிட்டாலும் அந்த யாழ்ப்பாணத்து புத்தி போகவில்லை. யாழ்ப்பாணத்தானின் சுய நல பிரச்சினைகளையெல்லாம் தமிழன் பிரச்சினை என்று உருவகப்படுத்தி நீங்கள் எல்லாம் குளிர்காய்ந்தது போதும். போதும் இந்த பார்ப்பான் மனப்பான்மை.
//எதற்கு தேவையில்லாமல் பிளவுபட்டு வலிமைகளைக் குறுக்கிக் கொள்கிறோம்??//
உண்மைகளை உலகுக்கு சொல்வது உன்களுக்கு தேவையற்றதாக இருக்கலாம்.
நீங்கள் கிழக்கு மாகாணத்து மக்கள் யுத்தத்தில் கஷ்ட்டப்பட்டபோது என்ன செய்தீர்கள்? ஒரு தடவையாவது வந்து போனதுண்டா? உங்களுக்கு வன்னி மக்கள் முகாமுக்குள் இருக்கும்வரை எதுவும் தெரியவில்லையே
Post a Comment