Friday, 31 July 2009

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. , மற்றும் தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.. எனும் இரு இடுகைகள் மூலமாகவும் பல காத்திரமான கருத்துக்கள் வந்திருந்தன. அந்த இரு இடுகைகளின் பின்னூட்டங்களிலே என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியவனாக இருக்கின்றேன். பின்னூட்டத்திலே எனது விளக்கங்களை வழங்கினால் எல்லோரையும்...
read more...

Wednesday, 29 July 2009

தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது மனங்களிலே இருந்த உள்ளக் குமுறல்களை கருத்துக்களாக வெளியிட்டு இருந்தனர். காத்திரமான பல கருத்துக்கள் வந்திருந்தன. அந்தக்கருத்துக்களை பார்த்தபோது இந்த விடயம் தொடர்பாக இன்னுமோர் இடுகையின்...
read more...

நண்பர்களை மறக்கலாமா.....

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. என்ற இடுகை பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களோடு ஊடகங்களும் தமிழும் என்ற ரீதியிலே நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இருக்கின்றார்கள். அதன் தொடர் பதிவாகவே எனது அடுத்த பதிவு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால்...
read more...

Monday, 27 July 2009

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..

பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.இதனை நண்பர் ஆ.ஞானசேகரன் தனது அம்மா அப்பா வலைப்பதிவிலே மிகவும் சிறப்பாகக் சொல்லி இருக்கின்றார். அந்த இடுகையை...
read more...

Saturday, 25 July 2009

பதிவர்கள் தங்களுக்குள்ளே விருது வழங்குவது சரியா?

இன்று பதிவுலகிலே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் விருதுகள் பற்றித்தான். பதிவர்களே தங்களுக்குள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கருத்து மோதல்களால் கிடைக்கின்ற இலாபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை. இக கருத்து மோதல்கள் மூலம் விருது வழங்குதல்,...
read more...

தமிழர் நம் கலைஞர்கள் தொடர் பதிவு 02

இலங்கை கலைஞர்கள் பற்றிய தொடர்பதிவிலே முதலாவது பதிவிலே கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை பற்றி சொல்லி இருந்தேன். அதன் தொடர் பதிவாகவே இந்தப்பதிவு. முதலாவது பதிவுக்கு செல்ல இங்கே கிளிக் பண்ணவும். இவர் அண்மையில் தனது பத்தாவது புத்தகத்தினை வெளியிட்டதோடு.இப்பொழுது ஒரு பக்திப்பாடல் இறுவட்டினை வெளியிடுவதட்குரிய ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறார்....
read more...

Friday, 24 July 2009

நம் தமிழினம் இன்று............

சதைக் குவியலான தமிழினம் சாதிகெட்டு நாதியற்று - இன்றுநயவஞ்சகர்கள் காலடியில்கால் கஞ்சிக் கோப்பைக்குகையேந்திக் காணும் காட்சிகண்னீரை நெருப்புத் துளியாகஉதிர்க்கின்றதே... பெற்ற பிள்ளை எங்கே?உற்ற அன்னை எங்கே?பூமி தொடாத குழந்தையின்ரீங்கார ஒலி எங்கே?எதை எடுப்பது,...
read more...

பெயர் கொண்ட காதல்....

சுவை நயம்பட சுரந்துசெந்தமிழால் உனக்கொருகவி பாடவா?.............இயற்கையை அழகாக்கி வர்ணங்களைக் கொண்டுஉனக்கொருபடம் தீட்டவா?...............மனித இனம்இதுவரை கண்டிராதபளிங்குக் கற்களை கொண்டுஉனக்கொரு சிலை வடிக்கவா.........சொல் அன்பே சொல்.....இல்லை அன்பே இல்லை......
read more...

Wednesday, 22 July 2009

நம் சிறுவர்களின் எதிர்காலம் என்ன படங்கள் சொல்லும் கதைகள்....

நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்.......
read more...

Tuesday, 21 July 2009

கடந்து வந்த பாதையை மறக்கலாமா... 50 வது பதிவு...

இன்று நாம் என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையினையும், நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு உதவியவர்களையும் அடுத்த கணமே எம்மில் பலர் மறந்து விடுகின்றனர். நாம் எந்த நிலையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையினை மறந்து விடக்கூடாது....நான்...
read more...

Sunday, 19 July 2009

தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு... .

தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை நேற்று அறிந்து கொள்ள முடிந்தது. எனது இகிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி...
read more...

Saturday, 18 July 2009

தமிழர் நம் கலைஞர்கள் தொடர் 1

எனது நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறுகின்றது. எமது கலை, கலாச்சாரங்கள் இன்று பல்வேறு பட்ட காரணங்களினால் மறைந்துகொண்டு வரும் இந்த நிலையில் இன்றும் எமது கலைகளை வளர்ப்பதிலே பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பல கலைஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சிலரே வெளி உலகிற்கு அறிமுகமாகி அல்லது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். பலர் இலைமறை காயாகவே இன்றும் எமது...
read more...

Friday, 17 July 2009

இரட்டிப்பு மகிழ்ச்சி

நான் எனது ஐம்பதாவது பதிவினை எட்டிப்பிடிக்கலாம் என்று பதிவுகளை இட்டு வருகின்றேன். விரைவில் எனது ஐம்பதாவது பதிவினை சந்திக்கக் காத்திருக்கும் வேளையிலே ஒரு சந்தோசமான செய்தி கிடைத்தது. அது வேறு ஒன்றுமில்லை. எனக்கும் பட்டாம் பூச்சி விருது கிடைத்ததுதான். எனக்கு...
read more...

புரியாத புதிர்....

நான் - உன்னைகாதலிப்பதைஇன்னுமா -நீபுரியவில்லை - இல்லைபுரியாததுபோல்நடித்துக்கொண்டு இருக்கிறாயா...காதலித்தால் கவிதைவரும் என்பதுஉண்மைதான் - இன்றுகவிதைகளாகவே எழுதித்தள்ளுகிறேன்என் கவிதைகளை பார்த்தே -என்நண்பர்கள் கேட்கிறார்கள்காதலில் விளுந்துவிட்டாயாஎன்று...
read more...

புதிய வலைப்பதிவர்கள் followers வசதியினைப்பெற மேலும் சில வழிகள்...

புதிய வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவில் followers வசதியை பெறுவது எப்படி. எனும் பதிவின் மூலமாக புதிய பதிவர்கள் எப்படி போல்லோவேர்ஸ் வசதியினைப்பெறலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனை நான் பல மாத இணையத்தேடலின் மூலமாகவே பெற்றுக்கொண்டேன். அதை புதிய பதிவர்களோடு பகிர்ந்து கொண்டேன். பலர் இதனால் நன்மை அடைந்து இருக்கின்றார்கள்.இன்று நண்பர் நட்புடன் ஜமால்...
read more...

Thursday, 16 July 2009

சிந்தனைச் சிதறல்கள்...

கற்பனைஎன்றாலே - என்ன என்று தெரியாமல்இருந்தேன் - இன்றுஎனக்குகற்பனைகளேஅதிகமாகிவிட்டதுஉன்னைப்பற்றிமட்டுமே.....***********************************************உறங்கிக்கிடந்த -என்கற்பனைகளைதட்டி எழுப்பிசிறகடித்துபறக்கவிட்டுசின்னாபின்னமாய்சிதறடித்தாய் -இன்றுஎன்னைப்பற்றிசிந்திக்காமல்...
read more...

Wednesday, 15 July 2009

இப்படியும் நடக்கிறது... இப்படியொரு திருட்டு...

இன்று பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப் படுவது. ஏழை மக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.நேற்று இடம் பெற்ற சம்பவம் ஒன்றிலே பலர் பல இலட்சம் ரூபாய்களை இழந்து நிக்கின்றனர்.இன்று வியாபாரப்போட்டியின்...
read more...

நம் சிறுவர்களின் நிலைதான் என்ன... படங்கள் சொல்லும் கதைகள்

அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே... ????????????இதுதான் வாழ்க்கை என்பதா.....இதுதான்...
read more...

Tuesday, 14 July 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....

இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம்...
read more...

Monday, 13 July 2009

விதியா சதியா

நான்காதலைப்பற்றிஅறியாத போதுகாதலிக்க கற்றுத்தந்தவன் - நீகற்பனை என்பதேஎன்னவென்று தெரியாதபோது -என் கற்பனைகதவுகளைதிர்ரந்துவிட்டுஎன் கற்பனைகளைஅலைமோத விட்டவன் - நீஅன்று - நம்காதல் அரும்பியபோதுசீதனமா -சீ.....என்றவன் -நீஇன்று கரம்பிடிக்கும்நேரம்சீதனமும்சீர்வரிசைகளும்சீக்கிரமேவரவேண்டும்என்கிறாய்....இதை...
read more...

நம்ம உலகத்தில இப்படி எல்லாம் நடக்குதுங்கோ....

இதுதான் எங்கள் நம்பிக்கை.... இப்பவாவது எங்க தும்பிக்கைய நம்புங்க... தத்தித் தாவுது மனமே......... இல்ல........... இல்ல...... மீனே......அட நம்ம மனுசங்க படுற பாட்ட பாருடா மச்சான்... பாவப்பட்ட ஜென்மங்க... என்ன இதுவும் ஒரு நம் நாட்டு யுத்த விமானமா இருக்குமோ.......
read more...