Tuesday, 14 July 2009

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....


இந்தப்பதிவு மூலமாகவும் சிறுவர்கள் பற்றியே பேசப்போகின்றேன். என்னடா இவன் சிறுவர்கள் பற்றியே பேசிக்கொண்டு இருக்கின்றான் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. எமது சிறுவர்கள் பல்வேறு வழிகளிலே பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.அவர்களைப் பற்றிவும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எமது சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுகின்ற வீதம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலேதான் இந்நிலை அதிகமாகக் காணப்படுகின்றது

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம் முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதற்கில்லை. இதைத்தவிர இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.


ஆறாம் ஏழாம் தரங்களிலே கல்வி கற்கின்ற சிறுவர்களே அதிகமாக பாடசாலையை விட்டு இடை விலகிச் செல்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது ஆறாம், ஏழாம் தரங்களுக்கு வருகின்றபோதே அவர்களுக்கு சமுகத்தை பற்றிய உணர்வு தோன்றுகின்றது. அவர்கள் ஆறாம்,ஏழாம் தரங்களை அடையும் வரை அவர்கள் தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே படிக்கவேண்டுமே என்று சிந்திக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்து விடுகின்றனர்.
இவர்கள் சமுகத்தை பற்றிய உணர்வு வருகின்ற போது. தாங்கள் எழுத வாசிக்க தெரியாமல் இருக்கின்றோமே, என்ற ஒரு சிந்தனை தோன்றுகின்றது. இவர்கள் பாடசாலையை விட்டு விலக நினைக்கின்றார்கள். காரணம் வகுப்பிலே இருக்கின்ற சக மாணவர்கள் தங்களை கேலியாக பார்ப்பார்கள், தாங்கள் கேலி நிலைக்கு சென்று விட்டோமே என்ற ஒரு மனப் பாண்மை தோன்றுகின்றது. இதனால் படிப்படியாக பாடசாலையை விட்டு இடை விலகுகின்றனர்.

இவ்வாறு இடை விளகுகின்றவர்களின் நிலை .கேள்விக்குறியாகின்றது இவர்கள் பல்வேறு பட்ட பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இது ஒரு புறமிருக்க. இவர்கள் இவ்வாறு இடை விலகுவதை தவிர்ப்பதற்குரிய வழிகளை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.


இவ்வாறு இடை விளகுபவர்களின் வீதம் கிராமப்புரங்களிலேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. இவர்களை பற்றி ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது. இவர்களது பெற்றோரும் கல்வியிலே பின் தங்கி இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியிலே அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கின்றனர். முதலிலே இப்படியான பெற்றோருக்கு சிறுவர்களின் கல்வியின் அவசியம் பற்றி. பல விழிப்புணர்வுக் கருத்தரங்கு போன்ற பல்வேறு செயற்பாடுகளை செயட்படுத்த வேண்டி இருக்கின்றது.
அத்தோடு நாங்கள் உடனடியாக இடைவிலகிய சிறுவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதனால் அவர்கள் மீண்டும் இடை விலகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுக்கின்றன. முதலிலே இவர்களை தனிப்பட்ட ரீதியிலே அணுகி இவர்களை எழுத வாசிக்க பழக்க வேண்டும். பல சிறுவர்கள் நன்றாக படிக்கக்கூடியவர்கள் இன்று பாடசாலையை விட்டு இடை விலகியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு இன்று கல்வியிலே முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தனிப்பட்ட ரீதியிலே எழுத வாசிக்க பழக்கிய பின்னர் அவர்களை பாடசாலையில் சேர்க்கின்ற போது அவர்களது மனதிலே இருந்த படிக்கத் தெரியாதவர்கள் என்ற குற்ற உணர்வு நீங்குகின்றது. கல்வியிலே முன்னிலைக்கு வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இதில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்கள் தொடர்பாக பல்வேறு செயத் திட்டங்களை மேற்கொண்டு வரும் களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் வெற்றியும் கண்டுள்ளது. பல இடை விலகிய மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை பாடசாலைகளிலே மீண்டும் சேர்த்து இன்று கல்வியிலே நல்ல நிலையில் இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன...."

சப்ராஸ் அபூ பக்கர் said...

///இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.///


இன்னும் நிறைய எழுதுங்க... எல்லாவற்றையும் வாசித்து விட்டு பந்தி பந்தியா கட்டுரை எழுதுறேன்..... சாரி, கருத்து எழுதுறேன்.....

வாழ்த்துக்கள் சந்ரு... தொடருங்கள்.....

Admin said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
///இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.///


இன்னும் நிறைய எழுதுங்க... எல்லாவற்றையும் வாசித்து விட்டு பந்தி பந்தியா கட்டுரை எழுதுறேன்..... சாரி, கருத்து எழுதுறேன்.....

வாழ்த்துக்கள் சந்ரு... தொடருங்கள்.....//


ஆஹா கட்டுரைகூட எழுதுவின்களோ....

விரைவில் எதிர் பாருங்கள்....
வருகைக்கு நன்றி சப்ராஸ்....

Anonymous said...

அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது
அதிலும் கூன் குருடு செவிடு நீக்கிப்
பிறப்பது அரிது......அதிலும்
இலங்கையில்{தமிழ்} சிறுவர்,,சிறுமியராய்
பிறப்பது அரிதிலும் அரிது .

வேறெதைச் சொல்ல.......



நன்றி
ரி.கே

Admin said...

//பெயரில்லா கூறியது...
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது
அதிலும் கூன் குருடு செவிடு நீக்கிப்
பிறப்பது அரிது......அதிலும்
இலங்கையில்{தமிழ்} சிறுவர்,,சிறுமியராய்
பிறப்பது அரிதிலும் அரிது .

வேறெதைச் சொல்ல.......



நன்றி
ரி.கே//

என்ன செய்வது தமிழனாய் பிறந்து விட்டோம். எதற்கும் தலை குனியக்க்கூடாதல்லவா.. உங்கள் வருகைக்கு நன்றி...

Admin said...

// பிரியமுடன்.........வசந்த் கூறியது...
good post continue.....//


எமது சிறுவர்கள் பற்றி நிறையவே எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நிட்சயமாக எதிர் பாருங்கள்....

உங்கள் வருகைக்கு நன்றி வசந்த்...

சுசி said...

கல்வி கற்றுக் கொடுக்கிறவங்க மட்டுமில்லாம, அதுக்கு உதவி செய்றவங்களும் போற்றப்பட வேண்டியவங்கதான். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் சந்ரு.

அப்புறம் ரொம்ப அவசரத்தில எழுதுறீங்களோ? எழுத்துப் பிழை தொடர்ந்தா உங்கள என் கூட முதலாம் வகுப்பில சேத்துக்க மாட்டேன்.

Admin said...

//சுசி கூறியது...
கல்வி கற்றுக் கொடுக்கிறவங்க மட்டுமில்லாம, அதுக்கு உதவி செய்றவங்களும் போற்றப்பட வேண்டியவங்கதான். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் சந்ரு.

அப்புறம் ரொம்ப அவசரத்தில எழுதுறீங்களோ? எழுத்துப் பிழை தொடர்ந்தா உங்கள என் கூட முதலாம் வகுப்பில சேத்துக்க மாட்டேன்.//

நம் சமூகத்துக்காக எம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.... இது எல்லோருக்கும் வர வேண்டும்.

கொஞ்சம் அவசரம் சுசி அதுதான் எழுத்துப்பிழைகள் இப்போது திருத்திவிட்டேன்....
இப்பதான் நீங்க முதலாம் தரமோ...

Post a Comment