Friday 31 July 2009

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. , மற்றும் தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.. எனும் இரு இடுகைகள் மூலமாகவும் பல காத்திரமான கருத்துக்கள் வந்திருந்தன. அந்த இரு இடுகைகளின் பின்னூட்டங்களிலே என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியவனாக இருக்கின்றேன். பின்னூட்டத்திலே எனது விளக்கங்களை வழங்கினால் எல்லோரையும் சென்றடையாமலும் விடலாம் என்பதனால் அதன் தொடர் பதிவாகவே இந்தப் பதிவும் அமைகின்றது.

எனது வலையுலக நண்பர் ஜெகநாதன் நீண்டதொரு பின்னூட்டத்தினை வழங்கி இருந்ததோடு பல கேள்விகளையும் கேட்டு இருந்தார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கமுன்னர் அவரது பின்னூட்டத்தினை தருகிறேன்.


ஜெகநாதன் கூறியது...
அன்பு சந்ரு,சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது,

1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்

2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!

3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)

3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.

4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​

5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது.

5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது..2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்

5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.

5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்

5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க,

இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?(.....)(இங்கு பின்னூட்டம் ​போடாமல் இதன் முந்திய இடுகையில் போட்டுவிட்டேன்)
July 30, 2009 11:09 அம

ஜெகநாதன் கூறியது...



6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள்.

6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே.

7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்

8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?

8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​

8.2. ல - பிரச்சினையில்ல
8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே
.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு
8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை
9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?
July 30, 2009 11:09

ஜெகநாதன் கூறியது...
10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)

10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?

10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)

10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.

10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)

10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)

10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும்.
10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!

10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்

10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.

10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.

10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.
July 30, 2009 11:10



இதுதான் அன்பு நண்பர் ஜெகநாதனின் பின்னூட்டம்.

விடயத்துக்கு வருகிறேன். நான் எப்போதும் வேற்று மொழிகளை வெறுத்தவன் இல்லை, வேற்று மொழிகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அந்த மொழிகள் தமிழோடு கலந்து தமிழை கொலை செய்யக்கூடாது என்றே இரு இடுகைகளிலும் தெளிவாகக் கூறி இருக்கிறேன்.

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிரிஇர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.


அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.


அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொகளைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் மொழியிலே இருக்கின்ற சொற்களை நாம் இன்று மறந்து வருகின்றோம். அவற்றை மீண்டும் மக்கள் மத்தியில் ஊடகங்களால் பிரபல்யப் படுத்த முடியும். உடனடியாக இல்லை என்றாலும் ஊடகங்களில் பயன் படுத்தப் படும்போது மக்களால் காலப்போக்கில் பயன்படுத்தப்படும் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாது.

முன்னைய இடுகையிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் இச் சொற்களை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திய பெருமை என்று வந்திருக்க வேண்டும். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே ஆரம்ப காலங்களில் இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது உண்மையே. காலப்போக்கில் நாகரீகம் என்ற போர்வையில் இந்த சொற்கள் மறக்கப்பட்டு வந்தது என்பது உண்மையே. இச் சொற்களை பாவிப்பது மிகவும் அரிதாக இருந்த வேளை இச் சொற்களை மீண்டும் பாவனைக்கு கொண்டுவர வேண்டும் என்று லோஷன் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலி நிலையத்தின் ஒரு குழுவினரின் முயற்சியின் பயனாக அந்த வானொலியின் செய்திகளில் இந்த சொற்கள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மக்களின் பயன் பாட்டில் இருந்து மருவி வந்த இந்த சொற்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியவர்களுள் லோஷனும் அவர்களது ஒரு குழுவினரும் என்பது மறுக்கமுடியாது.


இச் சொற்களின் பாவனை மிக மிக அரிதாக இருந்தபோது செய்தி அறிக்கைகளிலும் நிகழ்சிகளிலும் அதிகமாக பயன் படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்தப்பட்டது உண்மையே.

இது ஒரு புறமிருக்க எமது ஆரம்ப கால ஒலிபரப்பின் முன்னோடிகளை மறக்கக்கூடாது. எங்களுக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்து தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றிய பல ஒலிபரப்பாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. எதிர் வரும் காலங்களில் அவ்வப்போது அவர்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றேன்


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.

இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் பின்னூட்டமாக.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

16 comments: on "தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா..."

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..

Admin said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

வால்பையன் said...

பதிவு ரொம்ப சிறுசா இருக்குறதால பொறுமையா தான் படிக்கணும்!

சிநேகிதன் அக்பர் said...

முடிந்தவரை பிற மொழி கலப்பில்லாமல் எழுதுவது வரவேற்கத்தக்கது.

ஆனால் தற்போதைய சூழலில் பிற மொழி கலப்பில்லாமல் முழுவதும் தூய தமிழில் எழுத சாத்தியங்கள் குறைவு.

ஜெகநாதன் சொன்ன கருத்துக்களில் சில உண்மையே குறிப்பாக தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழில் குறைவு.

பிற மொழிகளில் அதிகமாக பயன்படுத்துகிற வார்த்தைகளை அல்லது மக்கள் பரவலாக பயன்படுத்துகிற (எ.கா. ஜெய்ஹோ) ஒரு மொழியின் வார்த்தையை ஆங்கில வார்த்தையாக அங்கிகரிப்பது மாதிரி நாமும் தமிழ் மொழியில் புதிய சொற்களை சேர்க்க வேண்டும் (பெயர் சொற்களையாவது) என்பது என் எண்ணம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

மிகவும் அருமை. பயனான இடுகை. தமிழ்மொழியின் தூய்மை காக்கப்பட வேண்டும் என்ற உங்கள் உள்ளத்தை வணங்குகிறேன்.

//தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா. //

இதுவே தமிழர் அனைவருடைய அவாவாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழின் நீடுநிலவல் தொடரும்.

தமிழ் தமிழாக இருந்தால்தான் தமிழன் தமிழனாக இருப்பான்.

Admin said...

//வால்பையன் கூறியது...
பதிவு ரொம்ப சிறுசா இருக்குறதால பொறுமையா தான் படிக்கணும்!//

தமிழ் மொழியினைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அதுதான் இந்த அளவுக்கு சிறிசா இருக்கு என்று நினைத்துக் கொள்ளுங்கள் நண்பா...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

Admin said...

//அக்பர் கூறியது...
முடிந்தவரை பிற மொழி கலப்பில்லாமல் எழுதுவது வரவேற்கத்தக்கது.

ஆனால் தற்போதைய சூழலில் பிற மொழி கலப்பில்லாமல் முழுவதும் தூய தமிழில் எழுத சாத்தியங்கள் குறைவு.

ஜெகநாதன் சொன்ன கருத்துக்களில் சில உண்மையே குறிப்பாக தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழில் குறைவு.

பிற மொழிகளில் அதிகமாக பயன்படுத்துகிற வார்த்தைகளை அல்லது மக்கள் பரவலாக பயன்படுத்துகிற (எ.கா. ஜெய்ஹோ) ஒரு மொழியின் வார்த்தையை ஆங்கில வார்த்தையாக அங்கிகரிப்பது மாதிரி நாமும் தமிழ் மொழியில் புதிய சொற்களை சேர்க்க வேண்டும் (பெயர் சொற்களையாவது) என்பது என் எண்ணம்//


சில தொழில்நுட்ப சொற்களை தமிழ் படுத்த முடியாது என்பதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அதற்காக தேவையற்ற விதத்தில் பல பிறமொழிச் சொற்களை தமிழோடு கலப்பதனை எதிர்க்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

Admin said...

//சுப.நற்குணன் கூறியது...
மிகவும் அருமை. பயனான இடுகை. தமிழ்மொழியின் தூய்மை காக்கப்பட வேண்டும் என்ற உங்கள் உள்ளத்தை வணங்குகிறேன்.

//தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா. //

இதுவே தமிழர் அனைவருடைய அவாவாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழின் நீடுநிலவல் தொடரும்.

தமிழ் தமிழாக இருந்தால்தான் தமிழன் தமிழனாக இருப்பான்.//


உங்கள் கருத்துக்கு உடன் படுகிறேன்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

நட்புடன் ஜமால் said...

சாத்தியங்கள் குறைவு தான் ...

கிருஷ்ணா said...

வணக்கம் சந்ரு...
உங்கள் எண்ணஙகளுக்கு வாழ்த்துக்கள்.
என்னுடைய கருத்துப்படி, மொழிப் பிரயோகத்தில் ஏற்கனவே இருக்கின்ற சொற்களைத் தூக்கியெறிந்துவிட்டு வேற்றுமொழிச் சொற்களைப் பதிலீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான உள்ளீடுகள் உலகளாவிய அளவில் ஆங்கிலத்திலிருந்தும், தனிப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் செல்வாக்குப் பெற்ற மொழியிலிருந்தும் பெறப்படுகின்றன.

இப்படிப்பட்ட செருகலை முழுமையாக எதிர்க்கும் அதேநேரம், தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புக்களுக்கு, இருக்கும் பெயரையே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு புதிய பெயரை மக்களுக்கு அறிமுகப்படுத்தி மனதில் பதியவைக்க, சில வாரங்களுக்காவது தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அப்படியிருக்கும்போது நாளுக்குநாள் கண்டுபிடிப்புக்கள் பெருகிவரும் நிலையில், எத்தனைக்குத் தமிழ்ப்பெயர் வைப்பது என்பது ஒருபக்கச் சிக்கலாக இருந்தாலும், அவையெல்லாம் மக்களுக்கு ஞாபகமிருக்குமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

வெதுப்பி, குளிர்களி என்பவையெல்லாம் அடிக்கடி பயன்படுத்துவதால் ஞாபகமிருக்கும். ஆனால், எல்லோரும் நினைவில் வைத்துப் பயன்படுத்த முடியாத பல்லாயிரம் கண்டுபிடிப்புக்களுக்கு எதற்குத் தமிழில் பெயர்?

ஆ.ஞானசேகரன் said...

///விடயத்துக்கு வருகிறேன். நான் எப்போதும் வேற்று மொழிகளை வெறுத்தவன் இல்லை, வேற்று மொழிகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அந்த மொழிகள் தமிழோடு கலந்து தமிழை கொலை செய்யக்கூடாது என்றே இரு இடுகைகளிலும் தெளிவாகக் கூறி இருக்கிறேன்.///


நானும் அதை வழிமொழிகின்றேன்

Nathanjagk said...

மொழி கலப்புப் பற்றி.. மொழியின் அளப்பெரிய சிற்பம்சம் அது ஒன்றை ஏற்கும் போது ஒன்றை மற்றதுக்கு கொடுத்தும் விடுகிறது.

Cashew nut கதை தெரியும்தானே?

மொழிக்கலப்பு பரஸ்பர கைகுலுக்கல் மாதிரிதான். மொழியை எந்த ஒரு வேற்று மொழியும் ஊருடுவி அழிக்க முடியாது (அல்லது இப்படி​செத்துப்​போன மொழிகளின் பட்டியல் எனக்குத் தெரியாது)

கிரேக்க, லத்தீன் வார்த்தைகளை நீக்கிவிட்டால் ஆங்கில அகராதி பாக்கெட் நாவல் சைஸ்தான் வரும்.

கம்பீரமாக, பெருந்தன்மையாக இந்த வார்த்தையின் மூலம் கிரேக்கம், இது லத்தீன், இது ப்ரெஞ்சில இருந்து வந்ததுன்னு போட்டு ஆங்கில அகராதிகள் வெளியிடப்படுகின்றன. மொழிக்கலப்பு ஆங்கில மொழியை ​கொன்றுவிடும் என்று நினைத்திருந்தால் 'சூரியன் மறையாத தேசத்துக்காரர்கள்' சும்மா இருந்திருப்பார்களா?

உதாரணத்துக்கு ஒரு ஆங்கில வார்த்தை pariah (பறையா) இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் அர்த்தம்: A person who is rejected (from society or home) இப்போது
சொல்லுங்கள் இது தமிழிலிருந்துதானே போயிருக்க வேண்டும்?

இன்னும் நிறைய சொல்லலாம்.. மொழி பற்றிய புத்தகங்களைக் கூட படித்து விட்டு விவாதத்தை ​தொடரலாம் (A History of Language - by Steven Fischer, Race and Language‎ by André Lefèvre, Language and Politics - by Noam Chomsky, மீனாட்சிசுந்தரனார், வையாபுரி பிள்ளை, ஜியு போப், சி. ஜேசுதாசன்....) பட்டியல்
பெருசு.. இந்தப் புத்தங்களை படிக்காமலும் நாம் இதை நகர்த்தி ​செல்லலாம்..

ஆனால் எங்கு? எதற்கு?

நீங்கள் உங்கள் உழைப்பை பணயமாக்கி நிறைய எழுதலாம்.. படிப்பவர்களும்,
அருமை சந்ரு, தமிழ்​மொழி நீங்கள் ​கொண்ட பற்று வியக்க​வைக்கிறது, ஆச்சரிய மூட்டுகிறது, கிச்சுகிச்சு மூட்டுகிறது, நல்ல முயற்சி என்ற ரீதியில் பின்னூட்டம் போட்டுவிட்டு ​வேறு மொக்கைளை படிக்கப் ​போயிடுவாங்க. ​போயி மீ த பர்ஸ்ட்டேய்ய், செம மெர்ஸலாயிட்டேன் கண்ணு, சூப்பர்ப், ரிப்பீட்டேய்... என்று பின்னூட்டங்கள் ​போட்டுத் தள்ளுவாங்க!!
வேற்று​மொழி வார்த்தைகளை ஒரு மொழி​கொண்டிருக்கிறது என்றால், இந்த மொழியிலிருந்தும் சில வார்த்​தைகள் அங்கு​போயிருக்கும்.
நீங்கள் மற்றவர் மீது பன்னீர் தெளிக்கும்​போது உங்கள் மீதும் சில துளிகள் விழுந்து விடுகின்றன! அல்லவா?​

மற்றபடி,​மொழி​கொண்டிருக்கிற அருஞ்சொற்களை இழந்துவிடாமல்,
அழித்துவிடாமல் அவைகளை மீட்​டெடுக்க​வேண்டிய கடமை நமக்கானது (இதில் புது வார்த்தைகள் வேறு சேர்க்கணுமா என்ன?)

பரவலான, உலகத்தரத்திலான, எல்லா தரப்புகளினாலும் (மொழியியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி, ஆட்சியியல், சமூகவியல்...) அங்கீகரிக்கப்பட்ட
ஒரு பொதுவான தமிழ் அகராதி நிறுவப்பட​வேண்டும்.

இது​போன்ற முயற்சிகள்தான் மொழியை செழுமையாக்கும். ஒரு பிரபலமான ஆங்கில அல்லது வேற்று மொழி சார்ந்த புது சொல்லுக்கு இணையான தமிழ் சொல் பொதுமையாக்கப்பட ​வேண்டும். யார் வேண்டுமானாலும் ​வேற்று மொழி வார்த்தைக்கு இணையான​சொல்லை உருவாக்கலாம் (Coinage) என்ற நிலை மாற​வேண்டும்.
மொழியில் coinage (புது வார்த்தைகளை உருவாக்குதல்) மிகவும் முக்கியமானது.

ஆனால் அது தெருவுக்கு தெரு மாறுபடுவதாய் இங்கு இருக்கிறது. internet என்பதுக்கு இணையம், இணையதளம், வலைத்தளம், ஊடுவலை இப்படி நிறைய இணை வார்த்தைகள் காணப்படுகின்றன. இது ஒரு சின்ன உதாரணம். இந்த மாதிரி குழப்பத்தை தவிர்த்து பொதுவான ஒற்றைப் பதம் நிறுவப்பட வேண்டும்.

மருத்துவ துறையில் இந்த மாதிரி மாற்றுப் பதங்கள் இருந்தால் என்னாகும்? ஆபரேஷன் நடக்கும் இடத்தில் மாற்றுப் பதங்கள் விளைவிக்கும் குழப்பத்தால் ​பேஷண்ட் இறந்தே விடக்கூடும்.
பொழுது​போக்கு, இலக்கியம் தொடர்பான துறைகளில் அதிகமாக coinage இருப்பது அதன் வீச்சு, தாக்கம் ஆகியவை சாதாரணமாக இருப்பதால்தான். போர், மருத்துவம், ஆட்சி போன்ற துறைகளில் இது ஆபத்தையே விளைவிக்கும்.

பொதுவான, உலகத்தரத்திலான, நடுமையான தமிழ் சொல்லகராதி நிறுவப்படும் வரை அன்னிய மொழி ஊருடுவலை யாரும் தடுத்த நிறுத்த முடியவே முடியாது. இதனால் மொழி கொலை என்பது சாத்தியமற்றது.

Admin said...

//நட்புடன் ஜமால் கூறியது...
சாத்தியங்கள் குறைவு தான் ...//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..

Nathanjagk said...

அன்பு சந்ருவுக்கு நட்புநாள் நல்வாழ்த்துக்கள்!
என்னங்க என் கருத்தைப் பற்றி ஏதாவது சொல்வீங்கன்னு பாத்தா, பதிலையே காணோம்? ​​கோபமாயிட்டீங்களோ? சரி, விடுங்க, அங்க இலங்கையில் ரத்தினபுரின்னு ஏதாவது ஊரு இருக்கா என்ன?

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கிருஷ்ணா

Admin said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

Post a Comment