Sunday, 26 June 2011

சாரு... சாரு... சாரு.... என்னத்த சாதிச்சாரு இந்த சாரு...

இன்று பரவாலாக பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற விடயம். சாரு பற்றிய விடயம். சாரு ஒரு தமிழ் பெண்ணோடு தகாத முறையில் அரட்டை (சாட்) செய்தார் என்பதுதான்.
யார் இந்த சாரு? எதற்காக இந்த அழவுக்கு நீங்கள் அவருக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறிங்க. இங்கே யார் மீது தவறு இருக்கின்றது. சாரு மீதா... அல்லது அந்த தமிழ் பெண்மீதா? அல்லது போட்டி போட்டுக்கொண்டு இப்பிரச்சினையை எழுதும் எம்மீதா?

நான் சாரு பக்கமும் இல்லை. அந்தப் பெண் பக்கமும் இல்லை. இருவர்மீதும் தவறு இருக்கின்றது. சாருவைப்பற்றிய இந்த விடயத்தை ஏன் இப்படி போட்டி போட்டுக்கொண்டு எழுதுகிறார்களோ தெரியவில்லை. இதேபோல் எத்தனையோ பல விடயங்கள் தினமும் நடந்துகொண்டிருக்கின்றன.

சாரு பற்றிய இந்த அரட்டை விடயம் வெறுமனே சாருவை பழிவாங்கும் நோக்கோடு செய்யப்பட்டதோ. அல்லது உருவாக்கப்பட்டதோ அல்ல. இது சாரு அல்ல அவர் பெயரில் வேண்டுமென்று சாருவின் நற்பெயரை கெடுப்பதற்காக செய்யப்பட்ட ஒரு வேலையும் அல்ல.

சாருவே தன்னுடைய இணையப்பக்கத்தில் அந்தப்பெண்ணைப்பற்றி எழுதி இருப்பதே இதற்கு சான்றாகும்.


பொதுவாகவே சாருவை எனக்கு பிடிக்காது. இவரை ஏன் இந்த அளவிற்கு தூக்கிப்பிடிக்கின்றீர்கள். இவரைவிட சிறந்த எழுத்தாளர்கள்  இருக்கின்றனர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரட்டை விடயத்துக்கு வருகின்றேன். உணர்ச்சிகள் ஆசைகள்  என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. சாருவுக்கு உணர்ச்சிகள் ஆசைகள் இல்லாமல் இல்லை. அவற்றை ஒவ்வொரு மனிதனும் கட்டப்படத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வம்பில் மாட்டியிருக்கின்றனர். அதே போன்றுதான். சாருவும் தன் உணர்ச்சியினையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் வம்பில் மாட்டியிருக்கின்றார்.

இப் பெண்மீது தவறு இல்லை என்று சொல்பவர்களே. இந்தப் பெண் மீது தவறு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கின்றீர்கள். ஒரு பெண் சமூகத்தளங்களில் நண்பர்களுடன் அரட்டையடிப்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.

சாரு அரட்டையில் இப் பெண்ணுடன் ஆரம்பத்தில் சாதாரணமாக அரட்டை அடித்திருக்கின்றார். பின்னர் அவரது கேள்விகள் திசைமாறி இருக்கின்றன. இந்த நேரத்தில் சில விடயங்களை சிந்திக்க வேண்டும்.

என்னுடன் மூஞ்சிப் புத்தகத்தில் நண்பியாக இருக்கின்ற ஒரு தமழ் பெண்ணுடன்  அரட்டை  அடிக்கின்றேன். ஆரம்பத்தில் சாதாரணமாக அரட்டை அடித்த நான் என் கேள்விகளின் போக்கு மாறுகின்றது. அவளின் அவளின் உள் ஆடைகளின் அளவு வேறு விடயங்கள் பற்றி கேட்கின்றேன் என்றால் என் கேள்விக்கான போக்கை அறிந்த உண்மையான தமிழ் பண்பாடுடைய பெண் என்ன செய்வாள்? என்ன செய்ய வேண்டும்.

என்னை விட்டு விலகுவது சரியா? அல்லது என்னோடு அரட்டை அடிப்பது சரியா? உங்கள் மனைவியோ  மகளோ தங்கச்சியோ இப்படிப்பட்ட ஒருவனோடு நண்பனாய் இருப்பதை அரட்டை அடிப்பதை விரும்புவீர்களா?

அவர் எழுத்தாளர் சமூக அந்தஸ்து உள்ளவர் அவர் நட்பை முறித்துக்கொள்ள கூடாது என்பதற்காக அந்தப்பென் தொடர்ந்து அரட்டை அடித்திரக்கலாம் என்று ஒரு நண்பர் கூறினார். நல்ல அந்தஸ்தில் இருப்பவர் என்பதற்காக  நாம் எதனையும் செய்யலாமா. எங்களுக்கென்று ஒரு பண்பாடு இருக்கின்றது.

சாரு தவறான முறையில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததுமே அவரது நட்பை உடனே நிறுத்தி இருப்பார்கள் மரியாதையான பெண்கள். ஒரு தடவை மட்டுமல்ல பல தடவை சாரு தவறாக பேசி இருக்கின்றார். தவறாகப் பேசும் ஒருவருடன் ஏன் மீண்டும் மீண்டும் அரட்டை செய்ய வேண்டும்.

யாதார்த்தத்தை சிந்தியுங்கள் நீங்களும்தான். ஒரு பெண்ணிடம் இவ்வாறு பேசுகின்றபோது. அந்தப் பெண்ணிடமிருந்து சிறிது எதிர்ப்பு வந்து அப்பெண் உங்களுடன் தொடர்ந்து பேசினால் என்ன செய்வீர்கள். அவளுக்கு விருப்பம் இருக்கின்றது பேசத் தயங்குகின்றாள் என்று மீண்டும் மீண்டும் பேச நினைப்பீர்கள். இங்கே அந்தப்பெண் சாருவுடனான அரட்டையை நிறுத்தி இருக்கலாம்.

சாரு தவறாக பேசுகின்றார் என்று தெரிந்தும். எதற்காக அந்தப்பெண் சாருவுடன் அரட்டை  அடிக்க வேண்டும். இந்தப் பெண் செய்ததெல்லாம் சரியா? உங்கள் வீட்டுப்பெண் இப்படி எல்லாம் ஒருவருடன் செய்யப்போகிறேன் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

மொத்ததத்தில் இருவர் மீதும் தவறு இருக்கின்றது. ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி எழுதிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு இன்னும் எழுதவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன அவற்றை எழுதுங்கள்.

இங்கே சாரு யார்? அவரைவிட தரமான எமுத்தாளர்கள் இருக்கின்றனர். இவரது இந்தச் செயல்களை நியாயப்படத்த முயல்பவர்களே உங்கள் வீட்டுப் பெண்ணுடன் சாரு இப்படி நடந்திருந்தால். நீங்கள் சாருவை வாழ்த்துவீர்களா? திட்டித்தீர்ப்பீர்களா?

அவ்வப்போது எத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். சித்தரவதை செய்யப்படுக்ன்றனர். இது சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களினால்கூட மேற்கொள்ளப்படுகின்றன. அவை வெறும் செய்திகளோடு நின்று விடுகின்றன.

இங்கே இந்த அரட்டை விடயத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு எழுதுபவர்களே  இந்த விடயத்துக்கு காட்டும் அக்கறைபோன்று அவைகளைப்பற்றியும் அக்கறையுடன் எழுதி இருக்கின்றீர்களா? (ஒரு சிலர் எழுதி இருக்கின்றீர்கள்)

ஒரு பெண்னுடன் தவறாக அரட்டை அடித்த விடயத்தை சமூக அக்கறையுடன் எழுதும் உங்கள் சமூக அக்கறையினை பாராட்டுகிறேன். இலங்கையில் எண்ணிலடங்கா பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களின் அந்த கொடுரமான கொலையைப்பற்றி இந்த அக்கறையுடன் எழுதி இருக்கின்றீர்களா? ஒருசிலர் எழுதி இருக்கின்றீர்கள்

சாருவின் விடயத்தை இந்தளவிற்கு துருவித் துருவி ஆராய்ந்து எழுதும் நீங்கள் இலங்கை தமிழர்கள் பிரச்சினைபற்றியும். தொடர்ந்து எழுதலாம்தானே?

சாருவை பிரபலமாக்க நினைக்கின்றீர்களா?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

22 comments: on "சாரு... சாரு... சாரு.... என்னத்த சாதிச்சாரு இந்த சாரு..."

குணசேகரன்... said...

பெண், காதல், காமம்.
சாருவின் வயதிற்கு அவர் செய்தது சரியல்ல..அவருக்கு, பெண்கள் விசயம் ஒரு வீக்னஸ் ஆக இருக்கலாம்.

Mathuran said...

உண்மையிலே ஒரு நடுநிலமையான அலசல். பார்கக்ப்போனால் சாருவை விட அந்த பெண்ணில்தான் அதிக பிழை இருக்கிறது. ஒருவர் தவறானவர் என்று அறிந்தபின்பும் அவருடனான தொடர்பை மேலும் தொடர நினைத்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, விளக்கம் சொல்லமுடியாத தவறாகும்

நிரூபன் said...

அதானே பாஸ்,
எழுத எத்தனையோ விடயங்கள் இருக்க, எல்லோரும் சாரு! சாரு என்று துள்ளுவது, அவரை மேலும் மேலும் பிரபலப்படுத்தும் முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது.

சுதா SJ said...

உங்கள் கருத்துத்தான் என் கருத்தும் சகோ
சாருவை பற்றி நானும் எழுத நினைத்தேன் பின் விட்டு விட்டேன் காரணம் தவறுக்கு சாருமட்டும் காரணம் அல்ல அந்த பெண்ணும் காரணம் தான்
அதைவிட சாருவை பற்றி எழுத சாரு ஒண்ணும் அவ்வளவு முக்கியமான ஆளும் இல்லை

சுதா SJ said...

//அவளின் அவளின் உள் ஆடைகளின் அளவு வேறு விடயங்கள் பற்றி கேட்கின்றேன் என்றால் என் கேள்விக்கான போக்கை அறிந்த உண்மையான தமிழ் பண்பாடுடைய பெண் என்ன செய்வாள்? என்ன செய்ய வேண்டும்.//


நிதர்சனமான நிஜக்கேள்வி
இதுதான் என் கேள்வியும்

சுதா SJ said...

//தவறாகப் பேசும் ஒருவருடன் ஏன் மீண்டும் மீண்டும் அரட்டை செய்ய வேண்டும்//

அதே அதே

Unknown said...

எனக்கென்னமோ சாரு மேல தான் டவுட்டு..வினவுவின் விமர்சனம் படித்த பிறகு!!

Anonymous said...

மைனர் குஞ்ச சுட்டுடனும் .........)))

Admin said...

//குணசேகரன்... கூறியது...

பெண், காதல், காமம்.
சாருவின் வயதிற்கு அவர் செய்தது சரியல்ல..அவருக்கு, பெண்கள் விசயம் ஒரு வீக்னஸ் ஆக இருக்கலாம்.//

ம்... பெண்கள் விடயத்தில் எப்படி இருக்கணும் என்று இன்மேலாவது உணர்வாரா?

Admin said...

//மதுரன் கூறியது...

உண்மையிலே ஒரு நடுநிலமையான அலசல். பார்கக்ப்போனால் சாருவை விட அந்த பெண்ணில்தான் அதிக பிழை இருக்கிறது. ஒருவர் தவறானவர் என்று அறிந்தபின்பும் அவருடனான தொடர்பை மேலும் தொடர நினைத்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, விளக்கம் சொல்லமுடியாத தவறாகும்//

உண்மைதான்... அப்பெண் என்ன செய்திருக்க வேண்டும் தவறான முறையிலே ஒரு ஆண் பேசுகிறான் என்றால் அவனை விட்டு விலக வேண்டியதுதானே.

பல தடவைகள் மீண்டும் மீண்டும் பேசுவது சரியா? ஒரு பெண்ணுக்க இது அழகா?

Admin said...

//நிரூபன் கூறியது...

அதானே பாஸ்,
எழுத எத்தனையோ விடயங்கள் இருக்க, எல்லோரும் சாரு! சாரு என்று துள்ளுவது, அவரை மேலும் மேலும் பிரபலப்படுத்தும் முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது.//

உண்மைதான் இதனால்தான் சாரு பெரியாளாகப் போகின்றார்.

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...

உங்கள் கருத்துத்தான் என் கருத்தும் சகோ
சாருவை பற்றி நானும் எழுத நினைத்தேன் பின் விட்டு விட்டேன் காரணம் தவறுக்கு சாருமட்டும் காரணம் அல்ல அந்த பெண்ணும் காரணம் தான்
அதைவிட சாருவை பற்றி எழுத சாரு ஒண்ணும் அவ்வளவு முக்கியமான ஆளும் இல்லை//

பெண்ணிலும் தவறிருக்கின்றது. சாருவை பற்றி எழுதுவதைவிட எத்தனையோ விடயங்களைப்பற்றி நாம் எமுதலாம்

Admin said...

//மைந்தன் சிவா கூறியது...

எனக்கென்னமோ சாரு மேல தான் டவுட்டு..வினவுவின் விமர்சனம் படித்த பிறகு!!//

நானும் வினவுவின் விமர்சனம் ஒரு முறைக்கு பலமுறை படித்தேன். பெண்ணிலம் தவறிருக்கின்றது. சாரு நல்லவரு(னு)ம் இல்லை..

Admin said...

//கந்தசாமி. கூறியது...

மைனர் குஞ்ச சுட்டுடனும் .........)))//

மைனர் குஞ்சு இருக்கிறதாலதானே பிரச்சினை அப்போ குஞ்ச சுட்டுடுங்க...:)

Anonymous said...

எனக்கு இவர் மீது ஒரு போதும் மரியாதை இருந்ததில்லை. சாட் பண்ண போறதே டைம் வேஸ்ட் என்று நினைக்கிறேன். எனக்கு என்று ஒரு நட்பு வட்டம் ( ஆண்கள், பெண்கள் ) இருக்கு. அவர்களை பற்றி அறிந்த பின்னரே சாட் பண்ண போனதுண்டு. சிலரின் பேச்சுகள் திசை மாறினாலே உடனே அந்த நபரை நீக்கி விடுவேன். சாரு மீது தான் தவறு அதிகம் என்பது என் கருத்து.

Anonymous said...

இன்னொரு தொப்பிதொப்பி டைப் பதிவுி. உங்க நடுநிலைமவியாதி தனம் தாங்க முடியலடா சாமீ!

உன் வீட்டில் உள்ளவள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உனக்கு இதன் தர்மம் ஞாயம் புரியுமோ என்னமோ!
:(

Anonymous said...

[[ உன் வீட்டில் உள்ளவள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உனக்கு இதன் தர்மம் ஞாயம் புரியுமோ என்னமோ!]]

என் வீட்டு பெண்ணா இருந்தாலும் சரி உன் வீட்டு பெண்ணா இருந்தாலும் சரி ஆணின் அரிப்புக்கு தேய்கும் சுவரா மாறிவிட கூடாது.

Admin said...

//பெயரில்லா கூறியது...

எனக்கு இவர் மீது ஒரு போதும் மரியாதை இருந்ததில்லை. சாட் பண்ண போறதே டைம் வேஸ்ட் என்று நினைக்கிறேன். எனக்கு என்று ஒரு நட்பு வட்டம் ( ஆண்கள், பெண்கள் ) இருக்கு. அவர்களை பற்றி அறிந்த பின்னரே சாட் பண்ண போனதுண்டு. சிலரின் பேச்சுகள் திசை மாறினாலே உடனே அந்த நபரை நீக்கி விடுவேன். சாரு மீது தான் தவறு அதிகம் என்பது என் கருத்து.//

இருவர் மீதும் தவறு இருக்கின்றது. சாரு தன் வயதுக்கேற்ற வேலை செய்யவில்லை..

Admin said...

//பெயரில்லா கூறியது...

இன்னொரு தொப்பிதொப்பி டைப் பதிவுி. உங்க நடுநிலைமவியாதி தனம் தாங்க முடியலடா சாமீ!

உன் வீட்டில் உள்ளவள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உனக்கு இதன் தர்மம் ஞாயம் புரியுமோ என்னமோ!
:(//

என் வீட்டுக்காரிக்கும் இதே நியாயம்தான். பெண் மீதும் தவறிருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

என் வீட்டுக்காரிக்கு இப்படி நடநடதிருந்தாலும் இதே கருத்துத்தான்.

தாராளமாக உங்கள் பெயரில் கருத்துரையிடலாம். நியாயமான கருத்துக்களை சொல்பவர்கள் பெயரைச் சொல்ல தயங்கமாட்டார்கள்.

Admin said...

//பெயரில்லா கூறியது...

[[ உன் வீட்டில் உள்ளவள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உனக்கு இதன் தர்மம் ஞாயம் புரியுமோ என்னமோ!]]

என் வீட்டு பெண்ணா இருந்தாலும் சரி உன் வீட்டு பெண்ணா இருந்தாலும் சரி ஆணின் அரிப்புக்கு தேய்கும் சுவரா மாறிவிட கூடாது.//

எந்த விட்டுப் பெண்ணாக இருந்தாலும்.... ஆணின் நடவடிக்கையை அறிந்து அவனை விட்டு விலகுவதே மேல்

சிவகுமாரன் said...

\\சாருவை பிரபலமாக்க நினைக்கின்றீர்களா?//

---நீங்கள் தான்.

Admin said...

//சிவகுமாரன் கூறியது...

\\சாருவை பிரபலமாக்க நினைக்கின்றீர்களா?//

---நீங்கள் தான்.//

ம்.. நாங்கள்தான்..

Post a Comment