இலங்கை தமிழ் வலைப்பதிவர்களுக்கு எதற்கு சந்திப்பு என்று என்னை நானே கேட்டேன். அதனை உங்களிடமே கேட்கின்றேன். அவசர அவசியமான விடயத்துக்கு
ஒன்றுபடாத பதிவர்கள் சந்தித்து என்ன பயன். கிழக்கு மாகாணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிழக்கு மாகாண மக்கள் பல கஸ்ரங்களை அனுபவித்தபோது
பதிரர்கள் நிவாரணப் பணிகளில் பங்கெடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில பதிவர்களைத் தவிர எவருமே முன்வரவில்லை.
ஆனாலும் நிவாரணப் பணிகளில் சில பதிவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து உதவிகளைச் செய்தனர் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இது ஒருபுறமிருக்க இந்த சந்திப்புக்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு இருப்பதனைவிட வலைப்பதிவின் மூலம் நாம்
சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றோம் என்று ஒவ்வொருவரும் எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டும்.
இலங்கைப் பதிவர்களைவிட வெளிநாட்டுப் பதிவர்களே அதிகமானவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். பரவலாக இலங்கைப் பதிவர்கள் என்றதுமே
கும்மிப் பதிவர்கள் மொக்கைப் பதிவர்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்கின்ற ஒரு விம்பம் உருவாக்கப்பட்டிரக்கின்றது.
ஒருவர் பதிவிடுதல் என்பது அவரவர் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்தது. நானும் கும்மி அடித்தவன்தான். மொக்கைப் பதிவுகள் எழுதுபவன்தான்.
இப்போது சிந்திக்கின்றேன். எமது சமூகத்தைப் பற்றி எத்தனையோ விடயங்களை எழுதலாம். அவசியம் எழுதவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன.
எமது பதிவுகள் மூலமாக சமூகத்துக்கு சிறிதளவேனும் பயன் சிடைக்கட்டும்.
இலங்கையைப் பொறுத்தவரை புதிய பதிவர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். பலர் திரட்டிகளில்கூட இணைக்காமல் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களையும் இந்தச் சந்திப்பில் இணைத்துக் கொள்வது நல்லது
இலங்கைப் பதிவர்களைப் பார்க்கின்றபோது பல குழுக்கள் இருப்பது போன்ற தோற்றப்பாடு தெரிகின்றது. பலர் என்னிடம் கேட்கின்றனர். உண்மையும் அதுதான்.
ஒரு சாராரை இன்னொரு சாரார் தாக்குவதும் குற்றம் சொல்வதும் பதிவுகள் ஹக் பண்ணப்படுவதும் அப்போது இன்னொருவரை குற்றம் சொல்வதுமாக
இருக்கின்றது.
நாம் ஒன்று படாமல் இருக்கின்றோம் பலர் இலங்கை பதிவர் குழுமத்திலோ அல்லது சந்திப்புக்களிலோ கலந்து கொள்ளாது பதிவர்களாக இருக்கின்றனர்.
இலங்கைப்பதிவர்களில் எத்தனை வீதமானவர்கள் பதிவர் சந்திப்புக்களில் கலந்துகொள்கின்றனர். எத்தனை வீதமானவர்கள் குழுமத்தில் இருக்கின்றனர்.
என்பதனைப் பற்றி பாருங்கள் குழுமத்திலும் பதிவர் சந்திப்புக்களிலும் குறிப்பிட்ட ஒரு சாராரே இருக்கின்றனர்.
இவ்வாறு இருப்பவர்கள் தனியாக ஒரு குழுமமா? தனியாக பதிவர் சந்திப்பக்களை ஏற்படுத்துவதா? சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து ஒன்று படுங்கள். கடந்த சந்திப்புக்களைவிட இந்;த சந்திப்பிலே பலர் சந்திக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
காரணம் கடந்தகால இலங்கை பதிவர்களுக்கிடையே இடம்பெறுகின்ற கருத்து மோதல்களும். கடந்த கால பதிவர் சந்திப்பின் பின்னரான செயற்பாடகளுமே.
எல்லாவற்றிற்கும்மேல் இப்போது நான் கோபப்படுகின்ற விடயம். ஒரு சிலர் அதிகார மையம் அதிகார மையம் என்று பேசிக் கொள்கின்றனர். ஏதோ ஒருவன்
அதிகார மையம் என்று குற்றம்சாட்டிவிட்டான் என்பதற்காக அதனையே சொல்லிக்கொண்டிருப்பது சரிதானா. அல்லது அதிகார மையம் என்பதனை ஏற்றுக் கொள்வதா?
பதிவர் சந்திப்பு பற்றி பேச வந்தாலே அதிகார மையம் பற்றி பேசப்படுகின்றது.
சந்திப்பை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கின்றவருக்கு அதிகார மையப் பொறுப்பு வழங்கப் படுகின்றதா? எதற்காக இந்த அதிகார மையக் கதைகள் எல்லாம்
வழமையாக குரைக்கும் நாய் குரைத்துவிட்டது. என்று அதிகார மையக் கதையை விட்டுவிடுங்கள். குரைக்கும் நாயைக் கணக்கிலெடுத்தோம் என்றால் குரைத்துக் கொண்டே
இருக்கும் நாம் கணக்கிலெடுக்கவில்லை என்றால் தானாக அடங்கிவிடும்.
இவைகளை எல்லாம் பார்க்கின்றபோது இலங்கை தமிழ் வலைப்பதிவர்களை எல்லோரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்..
8 comments: on "இலங்கை வலைப்பதிவர்களும் அதிகார மையத்தின் அதிகாரங்களும்."
:-))))))))
உங்கள் ஆதங்கங்கள் பல இடங்களில் நியாயமானதுதான். ஆனாலும் உங்கள் பதிவில் "பதிவர் சந்திப்பொன்று எப்படி ஆரோக்கியமாக்கப்படலாம்? என்பதைவிட பதிவர் சந்திப்பு நடத்தனுமா?" என்பதுதான் மேலோங்கி இருப்பது போல் உணர்வு. ஆனாலும் யாரும் எதிரானவர்கள் இல்லையே. நல்லதொரு விடயம் நடக்கவிருக்கிறது என்று என்னும் சாதாரண புதியவனான என்னைப்போன்றோருக்கு மாயை தோற்றங்களை கண்முன் விதைக்காதீர். ஆரோக்கியமான சந்திப்புக்கு உதவுங்கள். பதிவர்களுள் இனியும் வேற்றுமை வேண்டாம். இப்போதுதான் சில அலைகள் வீசி ஓய்ந்திருக்கிறது.. மீண்டும் வேண்டாமே அண்ணா.
என்னை பொறுத்தவரையில் "அதிகார மையம்" என்பது ஒரு காமடி வார்த்தை அதாவது "என்ன கொடுமை சார்" என்பதை உங்களால் காமடியாக எடுத்துக்கொள்ள முடிகிறதோ அதேபோலத்தான் இதுவும்...
அதபோல பதிவர்கள் ஆக்கபூர்வமாக எதுவும் செய்வதில்லை கிழக்கு மாகாண வெள்ள அனர்த்தத்தின்போது உதவுவதற்கு பெரிதாக பதிவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மைதான் நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன் பதிவர்கள் சிலவிடயங்களில் தாங்களாகவே உணர்ந்த செயற்பட முன்வரவேண்டும் நாம் யாரையும் வற்புறுத்த முடியாது சந்ரு...
மற்றது இங்கு தனியாக யாரும் பதிவர் சந்திப்புக்களை நடத்துவதற்கு முற்படவில்லையென்று நினைக்கிறேன் குழுமத்தில் அறிவித்து எல்லோருடைய கருத்துக்களையும்கேட்டு அதன்பின் யாரெல்லாம் சந்திப்பை நடத்துவதற்கு முன்வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் இணைந்துதான் சந்திப்புக்களை முன்னர் நடாத்தியிருக்கிறார்கள்...
குழுமத்திலும் பதிவர் சந்திப்புக்களிலும் ஒருசாராரே இருக்கின்றார்கள் என்று எவ்வாறு கூறமுடியும் நீங்கள் கூறியதன் அர்ததம் எனக்கு புரியவில்லை
என்னைப்பொறுத்தவரை கருத்து மோதல்கள் ஆக்கபூர்வமான நட்பிற்கோ அல்லது ஆக்கபூர்வமான விடயங்களுக்கு நல்லது கருத்து மோதல்களை சீரியசாக எடுத்து தலையில தூக்கிவைச்சுக்கொண்டு நிண்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது
___________________________________
awwwwwwwwwwwww
ஆனாலும் நான் புதிதாக தலைவராக பதவிகளை பொறுப்பேற்று இன்னும் ஓரிரு வாரங்களை கடப்பதற்கு முன்னர் இப்படி எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதைப்போல் ஒரு பதிவு போட்டதை நான் என்னுடைய சங்க செயலாளார் பொருளாளர் நாடுகடந்த தலைவர் மற்றும் சங்க உறுப்பினர்கள் சார்பில் வன்மையாக கொடுமையாக கண்டிக்கிறேன் கண்டிக்கின்றேன்
அடுத்த அதிகார மைய தலைவர் யோகா வாழ்க!
இதையும் நீங்க சீரியசாக எடுத்தா சங்கம் பொறுப்பில்லை....Awww :)
சபாஷ் அண்ணே.. கருத்துத்தளம்..
//Ashwin-WIN சொன்னது…
உங்கள் ஆதங்கங்கள் பல இடங்களில் நியாயமானதுதான். ஆனாலும் உங்கள் பதிவில் "பதிவர் சந்திப்பொன்று எப்படி ஆரோக்கியமாக்கப்படலாம்? என்பதைவிட பதிவர் சந்திப்பு நடத்தனுமா?" என்பதுதான் மேலோங்கி இருப்பது போல் உணர்வு. ஆனாலும் யாரும் எதிரானவர்கள் இல்லையே. நல்லதொரு விடயம் நடக்கவிருக்கிறது என்று என்னும் சாதாரண புதியவனான என்னைப்போன்றோருக்கு மாயை தோற்றங்களை கண்முன் விதைக்காதீர். ஆரோக்கியமான சந்திப்புக்கு உதவுங்கள். பதிவர்களுள் இனியும் வேற்றுமை வேண்டாம். இப்போதுதான் சில அலைகள் வீசி ஓய்ந்திருக்கிறது.. மீண்டும் வேண்டாமே அண்ணா.//
நான் பதிவர் சந்திப்புக்கு எதிரானவன் இல்லை. சந்திப்புக்கு என்னால் முடிந்ததை செய்வேன். அண்மைக்காலத்தில் இலங்கைப் பதிவர்களிடையே இடம்பெறுகின்ற கருத்து மோதல்கள் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே என்னுடைய அவா.
பதிவர் சந்திப்பிலே நல்ல விடயங்கள் நடந்தேற வேண்டும். புதியவர்களை முடிந்தவரை இணைத்துக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// ஆதிரை கூறியது...
:-))))))))//
வருகைக்கு நன்றிகள்
// வதீஸ்-Vathees கூறியது...//
அதிகார மையம் எனும் சொற்பதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது என்பதனை சிந்திக்க வேண்டும். முதலில் அதிகார மையம் என்று குற்றம்சாட்டியவர் பதிவர்களை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைப்பவர் என்பது உங்களுக்கு தெரியும். அவரது நடவடிக்கைகள் தெரியும்.
அவர் அதிகார மையம் என்ற சொட்பதத்தினை ஏன் விதித்தார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் நோக்கம்தான். அது அவ்வாறிருக்க நாம் எதற்காக அதனை பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கேள்வி.
பதிவர் குழுமத்தில் நான் இருக்கின்றேன் அதேபோல் சந்திப்புக்களை நடத்துபவர்களுடன் எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கின்றது. குறிப்பிட்ட சிலரே இங்கே இருக்கின்றோம். இலங்கை பதிவர்களுடன் ஒப்பிட்டு பாருங்கள் புதிய புதிய பதிவர்களையும் சேர்த்து. அத்தோடு போல பதிவர்கள் 2 3 வருடங்களாக பதிவெழுதி வருகின்றனர் அவர்கள் குழுமத்திலோ சந்திப்புக்கழிலோ கலந்து கொள்வதில்லை.
இவர்கள் இணைந்து கொள்ளவேண்டும் அல்லது இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதே என்னுடைய அவா. அப்போதுதான் இலங்கையில் ஆரோக்கியமான ஒரு பதிவுலகம் இலங்கையில் இருக்கும்.
இன்று நேற்றல்ல நான் பதிவுலகிற்கு வந்ததில் இருந்து பதிவுலக சண்டைகளை பார்த்து வருகின்றேன். கருத்து மோதல்கள் இடம்பெற வேண்டும் அதனையே நானும் விரும்புகின்றேன். ஆனால் இலங்கைப் பதிவுலகில் நடப்பது என்ன நாகரிகமற்ற வேலைகள் இடம்பெறுகின்றன.
எத்தனை பதிவர்களின் பதிவுகள் ஹக் பண்ணப்பட்டிருக்கின்றன. என்னுடைய வலைப்பதிவு பல தடவை ஹக் பண்ணப்பட்டது. ஏன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனா அண்ணாவின் வலைப்பதிவும் ஹக் பண்ணப்பட்டது. இவ்வாறு எத்தனை தடவை எத்தனை பேருக்கு நடந்திருக்கின்றது.
இதற்காக நாம் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இந்த நிலை தொடரத்தான் வேண்டுமா?
கிழக்கு மாகாண மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நீங்கள் நேரடியாக வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டமைக்கு நன்றிகள்.
சிறப்பாக பதிவர் சந்திப்பு நடைபெற வாழ்த்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
// றமேஸ்-Ramesh கூறியது...
சபாஷ் அண்ணே.. கருத்துத்தளம்..//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment