Wednesday 15 July 2009

இப்படியும் நடக்கிறது... இப்படியொரு திருட்டு...




இன்று பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப் படுவது. ஏழை மக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று இடம் பெற்ற சம்பவம் ஒன்றிலே பலர் பல இலட்சம் ரூபாய்களை இழந்து நிக்கின்றனர்.

இன்று வியாபாரப்போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் தமது பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்துவிட்டது.

நேற்று ஒரு கிராமத்திலே வருகை தந்த சிலர் தாங்கள் கொழும்பிலே ஒரு கம்பனியிலே இருந்து வருவதாகவும், இன்று கல்முனையிலே தமது கிளையினை திறக்க இருப்பதாகவும், மிகவும் குறைந்த விலையிலே மின் உபகரணங்களை விற்பனை செய்ய இருப்பதோடு. அவர்களிடம் உடனடியாக முற்பணம் செலுத்துபவர்களுக்கு விசேட விலைக்கழிவில் பொருட்கள் வழங்கப்படுவதோடு. அப்பொருட்கள் இன்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த விலையில் பொருட்கள் என்றால் வாங்குவதற்கு ஆசை வரும்தானே. அதுவும் இவர்கள் சற்று பின்தங்கிய மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சென்று பல ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை நம்பவைத்து இருக்கின்றார்கள். இவர்கள் தவனைக்கட்டன முறையிலே மின்சார உபகரணங்களை வழங்கப்போவதாகவும் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை உடனடியாக செலுத்தும் படியும் கூறி இருக்கின்றனர்.

அவர்கள் சந்தேகப்படும் அளவிலும் இருக்கவில்லை. இதனால் பலர் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை அவர்களிடம் கொடுத்துவிட்டனர். ஒவ்வொருவரும் பல மின்சாரப்போருட்களை பெறுவதற்கு. விண்ணப்பித்து இருந்தனர்.

இன்று காலை ஒன்பது மணிக்கு பொருட்கள் கொண்டு வருவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் பிற்பகல் இரண்டு மணியாகியும் பொருட்கள் வரவில்லை. அவர்களால் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டால் அந்த இலக்கம் போலியான இலக்கம்.

பலர் தமது நகைகளை அடகு வைத்துக்கூட காசு கொடுத்திருக்கின்றார்கள். (திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது) திருந்துவார்களா இவர்கள்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "இப்படியும் நடக்கிறது... இப்படியொரு திருட்டு..."

biskothupayal said...

(திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது)


இந்த மாதிரி சம்பவங்கள் இங்கு நிறைய நடந்து கொண்டே இருக்கிறது

Admin said...

//biskothupayal கூறியது...
(திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது)


இந்த மாதிரி சம்பவங்கள் இங்கு நிறைய நடந்து கொண்டே இருக்கிறது//

எங்கும் இதுதான் பிரட்சினையோ....

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி biskothupayal

தொடருங்கள்...

Anonymous said...

பொன்னாசை,பொருளாசை, பெண்ணாசை.
நாட்டாசை,நிலஆசை.......பேராசைகள
யாரை விட்டது,,,...
‘’பட்டால் தானே புரிகிறது
பேராசை என்னவென்று...கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

ரி.கே

dondu(#11168674346665545885) said...

நமது மக்களையும் குறைகூறித்தான் ஆகவேண்டும். மிகக்குறைந்த விலைக்கு எது வந்தாலும் - அதுவும் இம்மாதிரியான பெரிய அளவில்- முதலில் சந்தேகப்படத்தான் வேண்டும்.

படித்தவர்களும் இதற்கு விலக்கல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Admin said...

//பெயரில்லா கூறியது...
பொன்னாசை,பொருளாசை, பெண்ணாசை.
நாட்டாசை,நிலஆசை.......பேராசைகள
யாரை விட்டது,,,...
‘’பட்டால் தானே புரிகிறது
பேராசை என்னவென்று...கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

ரி.கே//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. எல்லாவற்றுக்கும் ஆசையே காரணம்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

Admin said...

//dondu(#11168674346665545885) கூறியது...
நமது மக்களையும் குறைகூறித்தான் ஆகவேண்டும். மிகக்குறைந்த விலைக்கு எது வந்தாலும் - அதுவும் இம்மாதிரியான பெரிய அளவில்- முதலில் சந்தேகப்படத்தான் வேண்டும்.

படித்தவர்களும் இதற்கு விலக்கல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நீங்கள் சொல்வதைப்போல் எமது மக்களிலும் தப்பு இருக்கிறது. இது என் கிராமத்திலேதான் இடம் பெற்றது. நேற்று இது நடை பெறுவதை அறிந்து நான் பலரிடம் இதை நம்ப வேண்டாம் என்று கூறினேன் சிலர் என் கதை கேட்டார்கள். பலர் கேட்கவில்லை. என்கதை கேட்டவர்கள் இன்று எனக்கு நன்றி சொல்லிவிட்டு போகிறார்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

தொடருங்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

ஏமாறுறவங்க இருக்குற வரைக்கும் ஏமாத்துறவங்க இருக்குறததுதான உலக நியதி ச ந் ரு

Admin said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
ஏமாறுறவங்க இருக்குற வரைக்கும் ஏமாத்துறவங்க இருக்குறததுதான உலக நியதி ச ந் ரு//


உண்மைதான் வசந்த்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். நன்றி வசந்த்...

sakthi said...

கஷ்டம் தான்

Admin said...

//sakthi கூறியது...
கஷ்டம் தான்//

நன்றி sakthi உங்கள் வருகைக்கும். கருத்துக்களுக்கும்..

முனைவர் இரா.குணசீலன் said...

ஆம்
ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்....

Admin said...

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
ஆம்
ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வார்கள்....//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..

Subankan said...

இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாதா?

Admin said...

//Subankan கூறியது...
இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாதா?//


திருத்துவதென்பது முடியாத காரியமே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுபாங்கன்...

சுசி said...

முள்ள முள்ளாலதான் எடுக்கணுமாம் சந்ரு. நாமளும் திருடராகி அவங்க கிட்டயே ஆட்டைய போட்ற வேண்டியதுதான்.
இங்கும் சேம் பிளட். ஜாஸ்தி இன்டர்நெட் மூலயுமா.

Admin said...

//சுசி கூறியது...
முள்ள முள்ளாலதான் எடுக்கணுமாம் சந்ரு. நாமளும் திருடராகி அவங்க கிட்டயே ஆட்டைய போட்ற வேண்டியதுதான்.
இங்கும் சேம் பிளட். ஜாஸ்தி இன்டர்நெட் மூலயுமா.//


ஆஹா நல்லதொரு ஐடியாதான்..

கவனமா இருந்து கொள்ளுங்க திருடர்கள்...... திருடிடுவாங்க உங்க வீட்டிலையும்.... ஆமா திருடங்க என்னா திருடுவாங்க தானே என்று சொல்றிங்க...

சிநேகிதன் அக்பர் said...

மலிவு விலை என்றாலே பிரச்சனைதான்.

Admin said...

//அக்பர் கூறியது...
மலிவு விலை என்றாலே பிரச்சனைதான்.//


ஆமாங்க சரியா சொன்னிங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஓந்தாச்சிமடம் பப்பன் said...

வணக்கம் சந்துரு .!
நல்ல விடயம், நன்றாக எழுதுகிறீகள்.
வாழ்த்துக்கள்.

//நேற்று ஒரு கிராமத்திலே வருகை தந்த சிலர் தாங்கள் கொழும்பிலே ஒரு கம்பனியிலே இருந்து வருவதாகவும், //

- இப்படி வேண்டாமே

//இன்று வியாபாரப்போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் தமது பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்துவிட்டது. //

- இப்படி எழுதினால் நன்றாக இருக்கிறது இல்லையா..?

இந்திய தமிழ் எழுத்து நடையை இயலுமானவரை தவிர்த்து இலங்கை தமிழ் எழுத்து நடையை காப்பாற்றவேண்டிய கட்டாயம் இலங்கை தமிழர் எல்லோருக்கும் காலக் கட்டாயம் என்பது என் தாழ்மையான கருத்து.

தயவுசெய்து நான் சுட்டியிருப்பதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
நம் இலக்கியம்,நம் படைப்புக்கள்,நம் கலைகளை நாம் காப்பாற்றவேண்டும்.ஏனெனில் ஈழத்திற்கென பல தனித்துவங்கள் இன்னும் இருக்கிறன சந்துரு.

யாருடைய மதையும் புண்படுத்துவதல்ல என் நோக்கம்.

நட்புடன்
ஓந்தாச்சிமடம் பப்பன்

Admin said...

//ஓந்தாச்சிமடம் பப்பன் கூறியது...
வணக்கம் சந்துரு .!
நல்ல விடயம், நன்றாக எழுதுகிறீகள்.
வாழ்த்துக்கள்.

//நேற்று ஒரு கிராமத்திலே வருகை தந்த சிலர் தாங்கள் கொழும்பிலே ஒரு கம்பனியிலே இருந்து வருவதாகவும், //

- இப்படி வேண்டாமே

//இன்று வியாபாரப்போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் தமது பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்துவிட்டது. //

- இப்படி எழுதினால் நன்றாக இருக்கிறது இல்லையா..?

இந்திய தமிழ் எழுத்து நடையை இயலுமானவரை தவிர்த்து இலங்கை தமிழ் எழுத்து நடையை காப்பாற்றவேண்டிய கட்டாயம் இலங்கை தமிழர் எல்லோருக்கும் காலக் கட்டாயம் என்பது என் தாழ்மையான கருத்து.

தயவுசெய்து நான் சுட்டியிருப்பதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
நம் இலக்கியம்,நம் படைப்புக்கள்,நம் கலைகளை நாம் காப்பாற்றவேண்டும்.ஏனெனில் ஈழத்திற்கென பல தனித்துவங்கள் இன்னும் இருக்கிறன சந்துரு.

யாருடைய மதையும் புண்படுத்துவதல்ல என் நோக்கம்.//



இந்தச் செய்தியின் நண்பகத்தன்மயினை உறுதிப்படுத்தவே இடங்களை குறிப்பிட்டேன். நண்பரே..

நண்பரே உங்கள் வருகையால் மகிழ்வடைகிறேன். நான் தமிழ் மீதும் தமிழர் நம் கலைகள் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவன். நான் எமது பாரம்பரிய தமிழை வளர்க்க விரும்புபவன். நீங்கள் கூறியிருந்தீர்கள் நான் இந்தியத்தமிழ் பயன் படுத்தி இருப்பதாக அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் பல தடவை யோசித்து இருக்கிறேன்.

நான் கருத்துறைகளில் மட்டுமே இந்தியத்தமிழை பயன் படுத்துகிறேன். காரணம் எனக்கு கருத்துரை இடுகின்ற பல நண்பர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். நான் கருத்துரை இடுகின்றபோது அவர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்திய தமிழை சேர்த்து பயன் படுத்துவது...

நீங்கள் சுட்டிக்காட்டியதையும் உங்கள் தமிழ் பற்றினையும் பாராட்டுகிறேன். இனிமேல் உங்கள் கருத்தினை ஏற்று செயற்படுகிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்..

Post a Comment