இந்தப்பதிவினை எனது கடந்த பதிவின் தொடராகவே தருகின்றேன். இலங்கையின் கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற களுதாவளை கிராமம் ஒரு விவசாயக்கிராமமாகும் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பெரிய கிராமம் என்று சொல்லலாம். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரை தீர்மானிக்கும் ஒரு கிராமம் என்று சொல்வார்கள் அதுதான் உண்மையும் கூட. அப்படி பெரிய ஒரு கிராமம்.
இக்கிராமத்திலே பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்ற அதே வேளை விவசாயம் முக்கிய இடத்தினை பெறுகின்றது. இங்கு உயர் பதவிகளிலே இருப்பவர்கள் கூட விவசாயத்திலே ஈடு படுவது ஒரு சிறப்பு அம்சமாகும். விவசாயம் என்கின்றபோது களுதாவளை என்றால் வெற்றிலை என்பார்கள் அந்த அளவிற்கு வெற்றிலை செய்கைக்கு பேர் பெற்ற ஒரு இடமாகும். அத்தோடு மிளகாய் செய்கை, வெங்காயம், கத்தரி, வேண்டி போன்ற பயிர் செய்கைகளில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு பத்தாயிரம் கிலோவிட்குமேல் மிளகாய் பறிக்கப்படுகின்றது. அந்த அளவிற்கு பெரிய ஒரு பெரிய விவசாயக் கிராமமாகும்.
இன்று இக்கிராமத்தின் எதிர்கால நிலை எவராலும் தீர்மானிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இன்று இக்கிராமத்தினுடைய நீர்வளத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கின்றது. இவ் விவசாய கிராமத்தினுடைய நீர் உவர் நீராக மாறி வருகின்றது. இதனால் இன்று விவசாயச் செய்கை வெகுவாக குறைவடைந்து உள்ளதோடு விவசாயிகள் பல பிரட்சனைகளை எதிர் நோக்கயுள்ளனர்.
இதட்குரிய காரணத்தை பார்க்கின்றபோது இந்த நீர் பிரட்சனைக்கு அக்கிராம மக்களும் முக்கிய காரணமாக இருக்கின்றார்கள். இக்கிராமத்திலே ஒவ்வொரு விவசாயியும் 4 5 ஏக்கர் நிலப்பரப்பிலே பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக நீரை விரைவாகவும் தொடர்த்சியாகவும் பெற வேண்டும் என்ற நோக்கோடு குழாக்கினறுகளை 40, 50 அடி ஆழத்துக்கு அமைத்து இருக்கின்றனர் இதனால் நிலக்கீழ் நீர் தொடர்த்சியாக உறிஞ்சப்படுவதனால் நீர் உவர் நீராக மாறுகின்றது.
மற்றுமோர் காரணம் இருக்கின்றது. இந்தப்பிரதேசத்திலே மக்கள் குளங்களை பிடித்து. அவற்றி நிரப்பி குளம் இருந்த இடம் இல்லாமல் செய்து தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். இதை செய்வது வேறு யாருமல்ல இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினருமே. இதனை மக்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோது. அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தோடு வந்து பார்த்து இருக்கின்றார்கள். நிலைமையை உணர்ந்து விட்டார்கள். வந்த அதிகாரிகள் எதுவும் பேசாமல் பொய்விட்டனராம். ஏதாவது பேசி இருந்தால் தமது வேலையும் போய் இருக்கும் என்பதனால். இப்படி எல்லாம் நடக்கிறது இதனால் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகள்தான்.
இது தொடர்பான படங்கள் விரிவான விபரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் எதிர் பாருங்கள் இன்றுதான் இவர்கள் திருந்துவார்களோ??????????
என் பார்வைகள் தொடரும்....
5 comments: on "திருந்துவார்களா இவர்கள் - களுதாவளைக்கிராமத்தின் நாளைய நிலை என்ன?"
உங்கள் சமூக அக்கறைக்கு என் தாழ்மையான வணக்கங்கள். அதிகார வர்க்கத்துடன் மோதி ஜெயிப்பது என்பது முடியாத காரியம். அப்டி முன்பு ஒரு காலத்தில நடந்திச்சாம்னு நம்ம பசங்களுக்கு கதை தான் சொல்ல முடியும். குறிப்பா இலங்கைய பொறுத்த வரைக்கும் வேர் வரை அழிச்சிடுவாங்க.
வாழ்த்துக்கள் சந்ரு.....
தொடர் பதிவு????? மறந்து விட்டீங்களா சந்ரு??? ..... விட மாட்டோம்.......
சுசி கூறியது...
//உங்கள் சமூக அக்கறைக்கு என் தாழ்மையான வணக்கங்கள். அதிகார வர்க்கத்துடன் மோதி ஜெயிப்பது என்பது முடியாத காரியம். அப்டி முன்பு ஒரு காலத்தில நடந்திச்சாம்னு நம்ம பசங்களுக்கு கதை தான் சொல்ல முடியும். குறிப்பா இலங்கைய பொறுத்த வரைக்கும் வேர் வரை அழிச்சிடுவாங்க//
உங்கள் வருகைக்கயு நன்றி சுசி.....
எல்லாவறையும் பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடியுமா. எங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டுமல்லவா. எப்படியோ பாதிக்கப்படுவது எமது சமுகமல்லவா. நாம் நாம் சொன்னால்தான் திருந்த போகிறார்களா. எங்கள் மன திருப்திக்காகவாவது எங்களால் முடிந்ததை செய்யலாமே....
சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
//வாழ்த்துக்கள் சந்ரு.....
தொடர் பதிவு????? மறந்து விட்டீங்களா சந்ரு??? ..... விட மாட்டோம்.......//
உங்கள் வருகைக்கு நன்றி சப்ராஸ்....
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்...
விரைவில் தொடர் பதிவை எதிர் பாருங்கள்....
சப்ராஸ்....நீங்க எங்கள விடமாட்டிங்க என்பது தெரியும். நினைவுகளை மீட்டிக்கொண்டு இருக்கின்றேன். மீண்டும் சிறுவனாக மாறிவிட்டேன் நண்பா.
Post a Comment