எனது நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறுகின்றது. எமது கலை, கலாச்சாரங்கள் இன்று பல்வேறு பட்ட காரணங்களினால் மறைந்துகொண்டு வரும் இந்த நிலையில் இன்றும் எமது கலைகளை வளர்ப்பதிலே பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பல கலைஞர்கள் பாடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சிலரே வெளி உலகிற்கு அறிமுகமாகி அல்லது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். பலர் இலைமறை காயாகவே இன்றும் எமது கலைகளை வளர்ப்பதிலே ஈடுபட்டு வருகின்றனர்.
இலை மறை காயாக இருக்கின்ற எமது கலைஞர்களையும், அவர்களது கலைத்துறைப்பணி பற்றியும் வெளி உலகிற்கு எப்படி என்னால் அறிமுகப்படுத்த முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான். நான் வலையுலகுக்குள் பிரவேசித்தேன். இன்றுதான் எனது ஆசை நிறைவேறுகின்றது. இந்தத் தொடர் பதிவிலே இலங்கயைச் சேர்ந்த எந்த ஒரு கலைஞரும் கலந்துகொள்ள முடியும். என்னால் எல்லோரையும் அறிந்து கொள்ள முடியாதல்லவா முடிந்தவரை தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த தொடர் பதிவில் பங்குபற்ற விரும்புகின்ற கலைஞர்கள் shanthruslbc@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகொண்டால் அவர்களையும் இணைத்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். அத்தோடு இத்தொடர் வெறுமனே கலைஞர்களை பற்றி மேலோட்டமாக பார்ப்பதை விடுத்து முற்று முழுதான தகவல்களையும் தர இருக்கின்றது. இலங்கயைச் சேர்ந்த எந்த ஒரு கலஞருக்கும் இங்கே இடம் கொடுக்கப்படும்.
இந்த முதலாவது தொடரிலே நான் தமிழ் இலக்கியத்தை கற்கவேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு காரணமாக இருந்தவரும் ஒரு சிறந்த கலைஞருமான கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களைப்பற்றியும் அவரது கலைத்துறைப்பயணம் பற்றியும் பார்க்க இருக்கின்றேன்.
இவரைப்பொறுத்தவரை ஒரு பல்துறை சார்ந்த கலைஞன் என்றுதான் சொல்லவேண்டும். இவருக்கு இலக்கியத்துறையிலே கலாபூசனம் விருது கிடைத்திருந்தாலும். தமிழர் கலைகளை வளர்ப்பதிலே அயராது பாடுபட்டு வரும் ஒருவர்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைக்கிராமத்தை சேர்ந்தவர். இவரது பாடசாலைக் காலத்திலேயே கலைகளிலே அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டவர் என்பது அவரிடம் இருக்கின்ற பல நினைவுச் சின்னங்கள் சான்றாகின்றன. பாடசாலைக்காலத்திலே விவாத அரங்குகளை நடாத்துவதிலேதான் தனது கலைத்துரைப்பயணம் ஆரம்பித்ததாகச் சொல்கிறார். .
இவர் இப்பிரதேசத்திலே இருக்கின்ற கலைஞர்களை ஒன்று திரட்டி களுதாவளைக் கலைக்கழகம் எனும் பேரிலே ஒரு கலைக்கழகத்தினையும், திருவருள் நூல் வெளியீட்டுக்குழு என்ற ஒரு அமைப்பினையும் உருவாக்கி பல நூல்களையும் வெளியிட்டு வருகின்றார். களுதாவளை கலைக்கழகம் மூலமாக பல கலைஞர்களை ஒன்று திரட்டி தமிழர்களுக்கே உரித்தான கரகம், கூத்து, வில்லிசை, போன்றவற்றை அரங்கேற்றி வருகின்றார்.
இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இவரது பேச்சினை எவரும் விரும்பி ரசிப்பார்கள். இவர் ஆலயங்களிலே சமய சம்மந்தமான பேச்சுகளை வழங்குவதில் வல்லவர், அதேபோல் இலக்கியப பேச்சுக்களிலே சளைத்தவரல்ல. இதனால்தான் இவருக்கு வெண்கலம் என்கின்ற பெயரும் வரக் காரணமாகிவிட்டது.
அதே போன்று இவர் பாடல்கள் எழுதிவருகின்றார் அதிலும் குறிப்பாக பக்திப்பாடல்களை எழுதுவதிலே சிறப்பானவர். இப்பிரதேச ஆலயங்கள் பலவற்றினைப் பற்றிய பல பாடல்களை இயற்றி இருக்கின்றார். அத்தோடு பல பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களையும் வெளியிட்டு இருக்கின்றார். இவரது திருவருள் நூல் வெளியீட்டுக்குழவின் மூலமாக பல புத்தகங்கள் இதுவரை வெளிவந்தது இருக்கின்றன.
இவரைப்பற்றிய இன்னும் பல விடயங்களும் இவரது கலைத்துறைப் பயணம் தொடர்பான பல விடயங்களையும். அவருக்கு கிடைத்த விருதுகள் பரிசுகள் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் அடுத்த பதிவிலே பார்க்கலாம்.
தொடரும்....
18 comments: on "தமிழர் நம் கலைஞர்கள் தொடர் 1"
துடிப்பான தேடுதல்
அறிமுகப்படுத்தும் முயற்ச்சி
ஆர்வமான கட்டுரை
தொடரட்டும்...........
மனங்களைத் தொடட்டும்.
வாழ்த்துகள் சந்ரு.
ரி.கே
//பெயரில்லா கூறியது...
துடிப்பான தேடுதல்
அறிமுகப்படுத்தும் முயற்ச்சி
ஆர்வமான கட்டுரை
தொடரட்டும்...........
மனங்களைத் தொடட்டும்.
வாழ்த்துகள் சந்ரு.
ரி.கே//
நம் கலைகளை வளர்க்கவேண்டியது நம் கடமை. அந்தக்கலையினை வளர்ப்பவர்களை கொவ்ரவப்படுத்த வேண்டியது நம் கடமை அல்லவா. என்னால் முடிந்தவரை நம் கலைஞர்கள் பற்றிய தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறேன். அனைத்து கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். கலைஞர்கள் என்னோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே
சந்ரு,அருமையான தேடல்.நம் கலைகள் ஆவணப் பதிவுகளாவது சந்தோஷம்.
//ஹேமா கூறியது...
சந்ரு,அருமையான தேடல்.நம் கலைகள் ஆவணப் பதிவுகளாவது சந்தோஷம்.//
நமது கலை மற்றும் கலைஞர்களை மதிக்கவேன்டியது எம் கடமையல்லவா....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா
கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களைப் பற்றிச் சொல்லம் போது எங்களுக்கு ஹாட்லியில் தமிழ் கற்பித்த, அதில் ஆர்வம் ஊட்டிய, எழுத ஊக்குவித்த வேலன் மர்ஸடர் நினைவு வருகிறார்
நல்ல விஷயம்
தொடருங்கள்
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களைப் பற்றிச் சொல்லம் போது எங்களுக்கு ஹாட்லியில் தமிழ் கற்பித்த, அதில் ஆர்வம் ஊட்டிய, எழுத ஊக்குவித்த வேலன் மர்ஸடர் நினைவு வருகிறார்//
உங்களுக்கு தெரிந்த கலைஞர்கள் பற்றியும் அறியத்தரலாம் டொக்டர்.எம்.கே.முருகானந்தம் அவர்களே...
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
//sakthi கூறியது...
நல்ல விஷயம்
தொடருங்கள்//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி sakthi...
வாழ்த்துக்கள் சந்ரு நல்ல பதிவு
கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்
//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு நல்ல பதிவு
கலைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வசந்த்...
நல்லதொரு முயற்ச்சி சந்ரு தொடருங்கள்...
நல்ல முயற்சி சந்ரு. ஏற்கனவே மாயா நம் நாட்டுக் கலைஞர்களுக்கென ஒரு வலை வைத்த்திருந்தார். அதனைக் காணவில்லை. சந்திரவதனா அக்காவின் இந்த வலையில் சில கலைஞர்களின் விபரங்கள் இருக்கின்றது.
http://kalaignarkal.blogspot.com/
உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றித் தொடருங்கள் காத்திருக்கின்றோம்.
அருமையான முயற்சி. தொடருங்கள்.
//யாழினி கூறியது...
நல்லதொரு முயற்ச்சி சந்ரு தொடருங்கள்...//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி யாழினி
// வந்தியத்தேவன் கூறியது...
நல்ல முயற்சி சந்ரு. ஏற்கனவே மாயா நம் நாட்டுக் கலைஞர்களுக்கென ஒரு வலை வைத்த்திருந்தார். அதனைக் காணவில்லை. சந்திரவதனா அக்காவின் இந்த வலையில் சில கலைஞர்களின் விபரங்கள் இருக்கின்றது.
http://kalaignarkal.blogspot.com/
உங்களுக்குத் தெரிந்தவர்கள் பற்றித் தொடருங்கள் காத்திருக்கின்றோம்.
காத்திருங்கள் பல கலைஞர்களை அறிமுகம் செய்ய இருக்கின்றேன். கலைஞர்களின் விபரங்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் தகவல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்
Subankan கூறியது...
அருமையான முயற்சி. தொடருங்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி சுபாங்கன்..
நல்ல முயற்சி சந்ரு. உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துக்கள்.
//சுசி கூறியது...
நல்ல முயற்சி சந்ரு. உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துக்கள்.//
உங்கள் கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி சுசி
Post a Comment