சரி ஒரு வழியாக என்னை முதலாம் தரத்துக்கு சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். ஆனால் நடந்தது வேறு. நான் எடுத்த முடிவை எவராலும் மாற்ற முடியாது அன்று மட்டுமல்ல இன்றும்தான். எனது பாடசாலை எனது வீட்டிலிருந்து அதிக தூரம் இதனால் நான் பாடசாலை செல்ல மறுத்துவிட்டேன். எனது பெற்றோரும் முயன்றும் பலனில்லை இப்படி ஒரு வருடத்தை கடத்திவிட்டேன். பின்னர் ஒரு வாராக பாடசாலை போக சம்மதித்தேன். அப்பொழுதுதான் என் அட்டகாசம் ஆரம்பமானதுங்க...
முதலாம் தரத்துக்கு போனதும் அங்கே எனக்கு ஆசிரியராக பார்வதி ஆசிரியர் சிறப்பாக எங்களின் முன்னேற்றத்திலே தன்னை அர்ப்பணித்தார். என்னோடு யாராவது சண்டை போட்டால் அவ்வளவுதான். நடப்பது வேறு. நான் எது செய்வதானாலும் என் பெற்றோரிடம் கேட்டுத்தான் செய்வேன் கேட்டு என்பதைவிட சொல்லித்தான் என்று சொல்லலாம். என்னோடு யாராவது சண்டை பிடித்தால் அன்று அவருக்கு நான் எதுவும் செய்யமாட்டேன். அன்று நான் நல்லபிள்ளை. வீட்டுக்கு வந்து சொல்வேன் என்னோட இவர் சண்டை பிடித்தார் நாளை நான் அடிப்பேன் என்று. வீட்டிலே என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன். மறுநாள் அடிதான்...
அன்றைய நாளை மீட்கும் போது பல கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம். படிப்பும் படிப்பாக இருக்க. விளையாட்டிலும் நாம் விட்டு வைக்கவில்லை. விளையாட்டு என்றால் பெரிதாக கிரிக்கெட் என்று நினைக்கவேண்டாம். கிராமப்புறங்களிலே விளையாடும் விளையாட்டுக்கள்தான் வேறென்ன. வட்டக்காவடி, தூத்தி, கிட்டிப்புள்..... வட்டக்காவடி எமது அபிமான விளையாட்டு. இடைவேளை நேரத்திலும் பாடசாலை விட்டதும் நாங்கள் விளையாடும் விளையாட்டு வட்டக்காவடிதான். நாங்கள் அணிந்திருக்கும் ஆடை காலையில் வெண்ணிறமாகவும் வீட்டுக்கு போகும் போது வேற நிறமாகவும் இருக்கும். ஒரு நாள் வட்டக்காவடி விளையாடும் போது நான் நண்பன் ஒருவனின் செட்டை பிடித்து இலுத்ததும் சேட்டு கிழிந்ததும் எனது சேட்டை கொடுதததும் என்றும் மறக்கமுடியவில்லை.
மதிய உணவு வழங்கப்படுவதுண்டு குறிப்பாக அதிகமாக பிஸ்கட் வழங்கப்படும். இவற்றை நாம் சீட்டுக்கட்டுவதும் உண்டு.
ஐந்தாம் ஆண்டு வரைக்கும் பார்வதி ஆசிரியை, செல்வராஜா, இராசேஸ்வரன், நவமணி ஆசிரியை போன்றோரிடம் மாறிமாறி எமது அறிவுத்தேடலை பெருக்கிக்கொண்டோம். செல்வராஜா, இராசேஸ்வரன், இருவருக்குமே அதிகமாக நான் பயப்பட்டதுண்டு. படிப்பும் படிப்புத்தான் இவர்களிடம் அடியும் அடிதான்.
அது ஒரு புறமிருக்க நாங்கள் நான்காம் ஆண்டு படிக்கும் போது எமது வகுப்பு நண்பர்கள் இரு குழுக்களாக பிரிந்து விட்டார்கள். இரு குழுவுக்கும் தினமும் சண்டைதான் இது எவருக்குமே தெரியாது எங்களைத்தவிர. இது அன்று எங்களுக்குள்ளே பாரதூரமான பிரட்சனயாக இருந்தது. யாரையாவது எங்கேயாவது கண்டால் அவருக்கு அடிப்பது. இது பாரிய பிரட்சனை எங்கு செல்வதானாலும் தனியாக போக முடியாது. தற்செயலாக எதிரணி நண்பர்கள் (எதிரிகள்) கண்ணில் மாட்டினால் அவ்வளவுதான். தினமும் பாடசாலை விட்டதும் எதிரணி நண்பர் ஒருவரோடு சண்டை போட வேண்டும். நீயா நானா இதிலே எனது அணியிலே தினமும் எல்லோருடனும் சண்டை போடுவது நான்தான். இந்த இரண்டு அணிகளும் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் வரைக்கும் இருந்தது பின்னர் நாங்களாகவே எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டோம்.
எனக்கு நான் பிழை செய்யாமல் யாராவது என்னை பிழை என்று சொன்னால் பிடிக்காது யாராக இருந்தாலும் சரி சண்டை பிடித்துவிடுவேன். என்னில் பிழை இல்லை என்று நிருபித்து விடுவேன். நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும்போது வகுப்பிலே சமய பாடம் நடந்து கொண்டு இருந்தது. வேதநாயகி ஆசிரியை சிறப்பான முறையிலே பாடங்களை விளங்கப்படுத்திக்கொண்டு இருந்தார். அப்போது எனக்கு பக்கத்திலே இருந்தவன் என்னிடம் எதோ கேட்டுவிட்டான். வேதநாயகி ஆசிரியை இருவருக்கும் அடித்துவிட்டார். அப்போது எனக்கு கோபம் வந்து விட்டது உடனே கேட்டேன் என்ன பகிடி பன்றாயா உனக்கு கண் இல்லையா அவன்தானே கதைத்தான் ஏன் எனக்கு அடிக்கிறாய் என்று. அப்புறம் சொல்லவா வேண்டும்.
இப்படித்தான் எனது இளமைக்காலம் போனதுங்க. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..... இதோட விடுடா என்று நீங்க சொல்றது புரியிது.. உங்கட பொறுமைய நான் சோதிக்க விருபல.
இத்தோட நான் முடிக்கிறான் நான் அழைப்பது யாரை என்று நீங்க கேட்பது புரியிது அவங்க தானுங்க இவங்க....
ஒன்று....
இரண்டு.....
மூன்று.....
முனைவர்.இரா.குணசீலன்
சுசி
சுபாங்கன்
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்
17 comments: on "இளமைக் காலங்கள்...."
ரொம்ப நல்லா இருந்துது உங்க பால பருவம். அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க நாட்டாமைய? நான் என்ன எழுதப் போறேன்னு தெரியல. எழுதிருவேன் சிம்பிள் மாட்டர். நீங்க படிக்கணுமே. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா எழுதப் பாக்கிறேன்.
//சுசி கூறியது...
ரொம்ப நல்லா இருந்துது உங்க பால பருவம். அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க நாட்டாமைய? நான் என்ன எழுதப் போறேன்னு தெரியல. எழுதிருவேன் சிம்பிள் மாட்டர். நீங்க படிக்கணுமே. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா எழுதப் பாக்கிறேன்.//
நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....
அப்படி எல்லாம் சொல்லப்படாது....
உங்களாலா எழுத முடியாது...
சிரிப்பு சிரிப்பா வருது......
நான் பாலர் பாடசாலைக்கு ஒரு நாள்கூட போகாமல் விடவில்லை. காரணம் தினமும் இலைக்கஞ்சி, இன்னும் பல உணவுகள் வழங்கப்படுவதுதான் இலைக்கஞ்சி என்பது ஒரு சுவை மிக்க உணவு மட்டுமல்ல. நல்ல சத்துணவும்கூட.
அப்பவே உங்களுக்கு அதை பற்றி தெரியுமே???
வீட்டுக்கு வந்து சொல்வேன் என்னோட இவர் சண்டை பிடித்தார் நாளை நான் அடிப்பேன் என்று. வீட்டிலே என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன். மறுநாள் அடிதான்...
ada kadavule enna ithu
அப்போது எனக்கு கோபம் வந்து விட்டது உடனே கேட்டேன் என்ன பகிடி பன்றாயா உனக்கு கண் இல்லையா அவன்தானே கதைத்தான் ஏன் எனக்கு அடிக்கிறாய் என்று. அப்புறம் சொல்லவா வேண்டும்
unga tamiloru differenta iruku pa
mmmmmm apparam teacher ungala enna pannaga atha sollave illaye
சந்ரு கூறியது...
//சுசி கூறியது...
ரொம்ப நல்லா இருந்துது உங்க பால பருவம். அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க நாட்டாமைய? நான் என்ன எழுதப் போறேன்னு தெரியல. எழுதிருவேன் சிம்பிள் மாட்டர். நீங்க படிக்கணுமே. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா எழுதப் பாக்கிறேன்.//
நன்றி சுசி உங்கள் வருகைக்கு.....
அப்படி எல்லாம் சொல்லப்படாது....
உங்களாலா எழுத முடியாது...
சிரிப்பு சிரிப்பா வருது......
enakum than susi neenga poi sekarama ezuthurenu solli comedy panrengale pa
//sakthi கூறியது...
நான் பாலர் பாடசாலைக்கு ஒரு நாள்கூட போகாமல் விடவில்லை. காரணம் தினமும் இலைக்கஞ்சி, இன்னும் பல உணவுகள் வழங்கப்படுவதுதான் இலைக்கஞ்சி என்பது ஒரு சுவை மிக்க உணவு மட்டுமல்ல. நல்ல சத்துணவும்கூட.
அப்பவே உங்களுக்கு அதை பற்றி தெரியுமே???//
நன்றி shakthi உங்கள் வருகைக்கு....
. அப்பொழுது சுவையாக இருக்கும் என்று மட்டுமே தெரியும். இப்பதான் சத்துணவு என்று தெரியும்...
//gayathri கூறியது...
வீட்டுக்கு வந்து சொல்வேன் என்னோட இவர் சண்டை பிடித்தார் நாளை நான் அடிப்பேன் என்று. வீட்டிலே என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன். மறுநாள் அடிதான்...
ada kadavule enna ithu//
அதத்தான் சொல்லிட்டமில்ல அம்மா அப்பாவுக்கு தெரியாம எதையும் செய்ய மாட்டமென்னு...
//gayathri கூறியது...
அப்போது எனக்கு கோபம் வந்து விட்டது உடனே கேட்டேன் என்ன பகிடி பன்றாயா உனக்கு கண் இல்லையா அவன்தானே கதைத்தான் ஏன் எனக்கு அடிக்கிறாய் என்று. அப்புறம் சொல்லவா வேண்டும்
unga tamiloru differenta iruku pa
mmmmmm apparam teacher ungala enna pannaga atha sollave illaye//
நிறைய ஜாபகங்கள் இருக்கு கொஞ்சம் சுருக்கமா இருக்கனுமே என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் இப்படி இருக்கு.... அதெல்லாம் கண்டுக்கப்படாது....
//mmmmmm apparam teacher ungala enna pannaga atha sollave illaye//
அப்புறம் என்ன எல்லா ஆசிரியர்களிடமு திட்டு வாங்கியதுதான்.
//gayathri கூறியது...
//enakum than susi neenga poi sekarama ezuthurenu solli comedy panrengale pa//
என்ன வைத்து நீங்க ஏதும் காமடி கீமடி பண்ணலையே.... (சும்மா லொள்ளு)..
ரொம்ப அழகா நேர்த்தியா எழுது இருக்கீங்க சந்த்ரு..
நானும் உங்களை போல் எழுத பழக வேண்டும்..
//Ranjitha கூறியது...
ரொம்ப அழகா நேர்த்தியா எழுது இருக்கீங்க சந்த்ரு..
நானும் உங்களை போல் எழுத பழக வேண்டும்..//
உங்கள் முதல் வருகைக்கு நன்றி ranjitha.....
ஆஹா வந்ததுமே இப்படியா..... பொய் ஏதும் சொல்லலையே.....
தொடருங்கள்.....
கொஞ்சம் லேட் பண்ணிட்டேன் பின்னூட்டல் இடுவதற்கு.....
(இருந்தாலும் பரவா இல்லைன்னு நீங்க சொல்லிக்கொள்கிறது எனக்குத் தெரியாமலா போகும் என்ன?...)
அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி சந்ரு....
அப்போதே சாப்பாட்டு விசயத்துல முன்னிலைல இருந்திருக்கிறீங்க... சந்தோஷம்...
அதே ஆவேசத்துடன் "எங்கேயும் எப்போதும் " நிகழ்ச்சிளையும் முன்னேற்றம் பெற்றிருக்கீங்க... அது double சந்தோஷம்க...
தொடருங்கள் சந்ரு உங்கள் பயணத்தை.....
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
கொஞ்சம் லேட் பண்ணிட்டேன் பின்னூட்டல் இடுவதற்கு.....
(இருந்தாலும் பரவா இல்லைன்னு நீங்க சொல்லிக்கொள்கிறது எனக்குத் தெரியாமலா போகும் என்ன?...)
அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி சந்ரு....//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா...... என்று ஆரம் பிக்காதது நல்லதா போச்சு....
அழைச்சுத்திங்கல்ல விடுவமா.......
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
அப்போதே சாப்பாட்டு விசயத்துல முன்னிலைல இருந்திருக்கிறீங்க... சந்தோஷம்...
அதே ஆவேசத்துடன் "எங்கேயும் எப்போதும் " நிகழ்ச்சிளையும் முன்னேற்றம் பெற்றிருக்கீங்க... அது double சந்தோஷம்க...
தொடருங்கள் சந்ரு உங்கள் பயணத்தை.....//
சாப்பாடுன்னா யார்தான் பின் வாங்குவாங்க நீங்க சும்மாவா.....
பயணத்தை தொடருரமில்ல விடுவோமா....
நன்றி சப்ராஸ்...
நன்றி, எழுதிட்டாப் போச்சு..
Post a Comment