காதலிப்பதை
இன்னுமா -நீ
புரியவில்லை - இல்லை
புரியாததுபோல்
நடித்துக்கொண்டு
இருக்கிறாயா...
காதலித்தால்
கவிதை
வரும் என்பது
உண்மைதான் - இன்று
கவிதைகளாகவே
எழுதித்தள்ளுகிறேன்
என் கவிதைகளை
பார்த்தே -என்
நண்பர்கள்
கேட்கிறார்கள்
காதலில்
விளுந்துவிட்டாயா
என்று - நீ
மட்டும் - என்
என் காதலை
உணர்ந்து
கொள்ளவில்லை
நான் உன்னிடம்
உன் இதயத்தில்
ஓரிடம்தானே
கேட்டேன்....
12 comments: on "புரியாத புதிர்...."
\\விளுந்துவிட்டாயா\\
விழுந்துவிட்டாயா..?
பிளீஸ்.
:)
கடைசியில "கேட்டேன்" என்பதற்கு பதில் "கேட்கிறேன்" வந்திருந்தால் நல்லாருக்கும் நண்பா..
கவிதை நல்லா இருக்கு சந்ரு.
இத அந்த பொண்ணு கிட்ட சொல்லிடுங்க.. ஒரு இடம்தானே கேக்கறாரு, முழு இதயத்தையும் கிடையாதே. குடுத்திரேம்மா.
// டக்ளஸ்... கூறியது...
\\விளுந்துவிட்டாயா\\
விழுந்துவிட்டாயா..?
பிளீஸ்.
:)
கடைசியில "கேட்டேன்" என்பதற்கு பதில் "கேட்கிறேன்" வந்திருந்தால் நல்லாருக்கும் நண்பா..//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்..
அப்படி நினைக்கவேண்டாம் வெறும் கற்பனையே...
உண்மையாக கேட்கிறேன் என்றுதான் வந்திருக்க வேண்டும். அது என் அவசரத்தில் ஏற்பட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
காதல் கவிதையா? கலக்குங்க கலக்குங்க...
//சுசி கூறியது...
கவிதை நல்லா இருக்கு சந்ரு.
இத அந்த பொண்ணு கிட்ட சொல்லிடுங்க.. ஒரு இடம்தானே கேக்கறாரு, முழு இதயத்தையும் கிடையாதே. குடுத்திரேம்மா.//
ஆமா சுசி அந்த பெண்ணிடம் சொல்வதுதானே பிரட்சனையே...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சுசி...
//கலை - இராகலை கூறியது...
காதல் கவிதையா? கலக்குங்க கலக்குங்க...//
காதால் வந்த கவிதை கலை. நீண்ட இடைவேளைக்கு பின்னர் வந்து இருக்கிங்க நிறையவே எதிர்பார்க்கின்றோம் கலை...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கலை.
முதலில் ‘இதயம்’ காலியாக உள்ளதா? என்று அறிய
வேண்டாமா?அதன் பின் கவிதை கவிதையாய் எழுதினால்
ஏதாவது தென்பட்டாலும் படலாம்....
விழாமலே இருக்க முடியுமா?ஐயா விழுந்து விட்டார்
காதல் வலையிலே
ரி.கே
//பெயரில்லா கூறியது...
முதலில் ‘இதயம்’ காலியாக உள்ளதா? என்று அறிய
வேண்டாமா?அதன் பின் கவிதை கவிதையாய் எழுதினால்
ஏதாவது தென்பட்டாலும் படலாம்....
விழாமலே இருக்க முடியுமா?ஐயா விழுந்து விட்டார்
காதல் வலையிலே
ரி.கே//
என்னை விடுவதாக இல்லை நீங்கள். இன்று நம் கவிஞர்கள் எல்லாம் எவ்வளவோ எழுதுகிறார்கள். அவர்கள் தமது அனுபவத்தையா எழுதுகிறார்கள்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே
சந்ரு கவிதை...அப்பிடியே அருவியாக் கொட்டுது.
//ஹேமா கூறியது...
சந்ரு கவிதை...அப்பிடியே அருவியாக் கொட்டுது.//
கவிதையா கிறுக்கலா எனக்கே தெரியவில்லை...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா...
//காதலித்தால்
கவிதை
வரும் என்பது
உண்மைதான்//
உண்மையா?...ஆ...ஆ... இருக்கட்டும் இருக்கட்டும்.கவிதை மட்டும் எழுதிக்கிட்டிருந்தால் கடைசியாய் அழுதுக் கொண்டிருக்கும்படி ஆகிவிடும்.எடு ஓலையை.பிடி அவள் தோழியை.உரியவருக்கு அனுப்புங்கள் தூதை.
gud:)
Post a Comment