Saturday, 4 July 2009

போக்குவரத்து சேவையில் புறக்கணிக்கப்படும் முதியவர்கள்....

முதியவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய சேவைகளை செய்து கொடுக்க வேண்டியது எமது கடமை ஆகும். ஆனால் இன்று முதியவர்கள் பல வகையிலும் பல்வேறு கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றனர். இன்று தமது பெற்றோரை அனாதைகளாக்குகின்ற பல பிள்ளைகளை நாம் கண்டிருக்கின்றோம். அது ஒரு புறம் இருகட்டும்.


இன்று இலங்கையின் பயணிகள் போக்குவரத்தை பொறுத்தவரை முதியவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையின் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் முதியவர்களை கண்டால் நிறுத்தாமல் செல்வது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் முதியவர்கள் போக்குவரத்திலே பல்வேறு பிரட்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.


அரச போக்குவரத்தாக இருந்தாலும் சரி தனியார் போக்குவரத்தாக இருந்தாலும் சரி முதியவர்களை ஏற்றுவதை முற்றாக புறக்கணித்து வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


அவர்கள் எதற்கு சொல்லும் காரணம் முதியவர்களை ஏற்றுவது கஷ்டமான விடயம் அவர்கள் வாகனங்களிலே ஏறுவதற்கு கச்டப்புவர்கள் என்று. வயது போன முதியவர்கள் பிரயாணம் செய்யகூடாதா? அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது நம் காடமை அல்லவா.


இன்று நான் கண்ட ஒரு சம்பவமே இந்த பதிவு இன்று காலை முதல் மாலை வரை வாகனத்துக்காக ஒரு வயதான அம்மா காத்து நின்றதன் எதிரொலிதான் இந்தப்பதிவு...

பல வயோதிபர்கள் நீண்ட துரத்தை கூட நடந்து செல்லும் நிலை தொன்றியுள்ளது. திருந்துவார்களா இவர்கள்.....??????

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "போக்குவரத்து சேவையில் புறக்கணிக்கப்படும் முதியவர்கள்...."

மயாதி said...

அட நீ நம்ம ஊரா?

Unknown said...

தாங்களும் அந்த வயதை அடையவிருக்கிறோம் என்பதை சாரதிகள் மறந்து விட்டார்கள் போலும்....

தொடருங்கள் சந்ரு....

Muruganandan M.K. said...

உங்கள் சமூக அக்கறை மகிழ்ச்சியளிக்கிறது. போக்குவரத்தில் மட்டுமின்றி வேறு பல பொது இடங்களிலும் அவ்வாறே. ஏன் பல வீடுகளிலும் கூட அலட்சியப்படுத்தப்படுகிறார்களே.

Admin said...

// மயாதி கூறியது...
அட நீ நம்ம ஊரா?//



ஆமாங்க நான் உங்க ஊருதான்....

Admin said...

// Aboobakker கூறியது...
தாங்களும் அந்த வயதை அடையவிருக்கிறோம் என்பதை சாரதிகள் மறந்து விட்டார்கள் போலும்....//


என்றோ ஒருநாள் உணர்வார்கள்......

வருகைக்கு நன்றி

Admin said...

// டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
உங்கள் சமூக அக்கறை மகிழ்ச்சியளிக்கிறது. போக்குவரத்தில் மட்டுமின்றி வேறு பல பொது இடங்களிலும் அவ்வாறே. ஏன் பல வீடுகளிலும் கூட அலட்சியப்படுத்தப்படுகிறார்களே.//


எல்லோரும் சமுக அக்கறை கொள்ள வேண்டும்......

உங்கள் வருகைக்கு நன்றி

தொடருங்கள்...

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி சப்ராஸ்...

தொடருங்கள்...

Post a Comment