Friday 3 July 2009

மறைந்து வரும் தமிழர் கலைகள்...

இந்தக்காலப்பகுதியை பொறுத்தவரை ஆலயங்களிலே திருவிழாக்கள் நடை பெறும் காலம். ஆலயங்களிலே திருவிழா கிராமப்புறங்கள் என்று சொன்னால் கேட்கவே வேண்டுமா விழாக்கோலம் பூண்டு இருப்பதோடு, தமிழருக்கே தனித்துவமான் கலை, கலச்சாரங்களை பிரதி பலிக்கின்ற பலகலை நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

தமிழருக்கென்றே பல கலை, கலாச்சாரங்கள் இருக்கின்றன, கரகம்,கூத்து, கும்மி....... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் புத்துணர்ச்சி பெறுவது இந்தக்காலப்பகுதி என்றே சொல்லலாம். முன்னர் திருவிழாக்கள் என்றால் ஆலயங்களிலே கூத்து, கரகம், கும்மி என்று எமது பாரம்பரியங்களை பிரதி பலிக்கும் பல நிகழ்வுகள் இடம் பெறும். இன்று அவற்றை காண்பதென்பது அரிதாகவே இருக்கின்றது.

ஆரம்ப காலங்களிலே தமிழருக்கென்றே இருந்த பல கலை கலாச்சாரங்கள் இன்று இருந்த இடம் இல்லாமல் எங்கோ ஓடி மறைந்து விட்டன.
உதாரணமாக நான் பிறந்த ஊரிலே கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாக இருக்கின்றது. இங்கே கொம்பு சந்தி என்று கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் இப்பவும் அழைக் சந்திகப்படுகின்றது. ஆனால் எனக்கு கொம்புமுரி விளையாட்டு என்றால் என்ன என்று தெரியாது எனக்கு கொம்புமுறி விளையாட்டு என்று ஒன்று இருந்தது என்பது மட்டுமே தெரியும். இனிவரும் சந்ததிக்கு எமது கலைகள் என்ன என்ன இருந்தது என்பது தெரியாமலே போகும் காலம் தொலைவில் இல்லை.

இக்கலைகலுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு இடமாக ஆலயங்கள் இருந்து வந்தன ஆனால் எப்பொழுது ஆலய திருவிழாக்களில் கூட இவற்றை காணமுடியாதுள்ளது. இன்று திருவிலாக்கலிலே கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு பதிலாக வேறு பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன (களியாட்ட நிகழ்ச்சிகள் என்றும் சொல்லலாம்) எமது கலைகளை வழக்கவேன்டியவர்கள் நாங்களேதான் இவற்றை வளர்க்கவேண்டிய பங்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அதிலும் எமது சமயத்தோடு பின்னிப்பிணைந்த கலைகளை வளர்க்கவேண்டிய பங்கு ஆலய அறங்காவலர் சபைக்கும் உண்டு. உரியவர்கள் அக்கறை காட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பை பொறுத்தவரை ஆலயங்களிலே திருவிழாக்கள் நடை பெறும்போது ஒவ்வொரு திருவிழாவும் குடி அல்லது குடும்பம் என்று சொல்லப்படுகின்ற ஒரு சந்ததியினருக்கு ஒவ்வொரு திருவிழா வாங்கப்படும் அவர்களுக்கு வழங்கப்பட்ட திருவிழாவை அவர்கள் மக்குடும்பங்களோடு போட்டி போட்டுக்கொண்டு மிகவும் சிறப்பான முறையிலே செய்வார்கள். இவற்றை சிறப்பிக்கும் முகமாக முன்னர் பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இன்று வேறு விதமாகிவிட்டது

அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் இது. திருவிழாக்கலயே கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுவது வேற விடயம். அது களியாட்ட நிகழ்ச்சியாக மாறலாமோ. நாதஸ்வரக் கசேசரிகள் இடம்பெறுவது வழமை அதற்குமேல் ஏதாவது செய்ய வெண்டும் என்று மேல்நாட்டு இசைக்ருவிகளை பயன்படுத்தும் நிலைகூட இன்று ஆலயங்களிலே உருவாகி விட்டது.

அண்மையில் ஒரு ஆலயத்திலே இடம் பெற்ற ஒரு நிகழ்வு எல்லோரது விமர்சனத்துக்கும் உள்ளாகியது. திருவிலாவிட்காக இரண்டு யானைகள் கொண்டு வரப்பட்டன. கொண்டு வந்ததன் நோக்கம் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

இரண்டு யானைகள் கொண்டு வரப்பட்டு திருவிழா இடம்பெற்ற கிராமத்திலே இருக்கின்ற வேறொரு ஆலயத்திலிருந்து திருவிழா நடைபெற்ற ஆலயத்துக்கு வீதி வழியாக கொண்டு செல்லப்பட்டது. ஆனால் யானை மீது சுவாமி கொண்டு செல்லப்படவில்லை யானை மட்டும் வீதிவழியாக கொண்டு செல்லப்பட்டது. எதற்கு ஏற்பட்ட செலவு ஒன்றரை இலட்சம் ரூபாய். இப்படி ஒன்று தேவையா இதனால் என்ன பயன் கிடைத்தது என்று எல்லோரும் சொல்லிக்கொள்கின்றனர். இந்த ஒன்றரை இலட்சம் பணத்தை எமது கலைஜர்களை ஊக்கப்படுத்தி பல கலை நிகழ்த்சிகளை செய்த்திருக்கலாம் என்று சொல்கின்றனர் எல்லோரும்.

எது எப்படி இருப்பினும் எமது கலைகளை வளர்க்க வேண்டியது எமது ஒவ்வொருவரது கடமையாகும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "மறைந்து வரும் தமிழர் கலைகள்..."

Sinthu said...

நீங்க சொல்வது முற்றிலும் உண்மை தான்

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி சிந்து..

இப்படியே போனால் நம் கலைகளின் நிலை என்ன என்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம்....

யாழினி said...

அமாம் இவ்வாறான கலைகளையெல்லாம் இப்பொழுது காண்பதே அரிதாகிவிட்டது கோயில் திருவிழாக்களில். கவலையான விடயம். சாமி கும்பிட்டால் மட்டும் போதுமென்று நினைக்கிறார்களோ என்னவோ...?

Admin said...

நன்றி யாழினி உங்கள் வருகைக்கு...
தொடருங்கள்....
நீங்கள் சொல்வதும் சரிதான்....

Post a Comment