இலங்கை கலைஞர்கள் பற்றிய தொடர்பதிவிலே முதலாவது பதிவிலே கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களை பற்றி சொல்லி இருந்தேன். அதன் தொடர் பதிவாகவே இந்தப்பதிவு.
முதலாவது பதிவுக்கு செல்ல இங்கே கிளிக் பண்ணவும்.
இவர் அண்மையில் தனது பத்தாவது புத்தகத்தினை வெளியிட்டதோடு.இப்பொழுது ஒரு பக்திப்பாடல் இறுவட்டினை வெளியிடுவதட்குரிய ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறார். இவரது முதலாவது இறுவட்டு என்னால் வெளியிடப்பட்ட கேதார கெளரி விரதப்பாடல்களடங்கிய இறுவட்டுக்கான பாடல்களை எழுதி இருந்தார்.
அவர் பற்றிய விபரங்கள சுருக்கமாக தருகின்றேன்...
1. முழுப் பெயர் - ஆறுமுகம் அரசரெத்தினம்
2. தொலைபேசி இல - 094652250306
3. உயர் கல்வி - யாழ்ப்பாண பல்கலைக் கழகம் - தமிழ் (சிறப்பு)
4. பதவிகள் -
* மட்டக்களப்பு கச்சேரியில் எழுது வினஞர்* மட்- மாங்கேணி வாகரைப்பகுதி காணி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்.
* வவுனியா முத்தையன் கட்டு படித்த வாலிபர் குடியேற்றத் திட்டத்தின் போறுப்பதிகாரி.
* மட்டக்களப்பு, கொக்கட்டிச் சோலைப் பகுதியில் விவசாயப் போதனாசிரியர்.
* மட்- சிசிலியா மகளிர் கல்லூரியில் விவசாயம், தமிழ் பாட ஆசிரியர்.
* மட்-பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் தமிழ் பாட ஆசிரியர்.
* தமிழ் மொழி பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்.
* உதவிக் கல்விப் பணிப்பாளர்.
பொதுப் பணிகள் -
1. மட்- களுதாவளை சைவ மகா சபைத் தலைவர்.
2. மட்-களுதாவளை இளம் விவசாயிகள் கழகச் செயலாளர், தலைவர்.
3. மட்- களுதாவளை கெனடி விளையாட்டுக்கலகத் தலைவர்.
4. மட்- களுதாவளை முதலாம், இரண்டாம் குறிச்சி கிராம் முன்னேற்றச சங்க செயலாளர், தலைவர், கணக்காய்வாளர்.
5. மட்- செட்டிபாளையம் கண்ணகை அம்மன் கோவில் வண்ணக்கர்,பரிபாலன சபைத் தலைவர்.
6. மட்-களுதாவளை சுயம்புளிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்.
7. மட்- களுதாவளை சிவசக்தி சிறி முருகன் ஆலய பரிபாலன சபை ஆலோசகர்.
8. பஜனாவளி இசை மன்ற உறுப்பினர், போசகர்.
9. மட்- களுதாவளை கிராமிய கலைக்கழக போசகர். கட்டுரைகள் -
பத்திரிகைகளில் எழுதிய சிறப்புமிக்க கட்டுரைகள்...
1. தினகரன்- சுவாமி விபுலானந்தரும் 7 ம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகமும்.
2. வீரகேசரி - ஈச்சுரமா? ஈச்சரமா? - ஆய்வுகளும் ஐதீகங்களும்.
3. வீரகேசரி - களுதாவளைப் பிள்ளையார் கும்பாபிசேகம்.
4. நாவலர் குரல் - நாவலர் ஐயாவின் சங்கீத பிரேமை.
5. நாவலர் குரல் - "குயின்" என்கிளவி.
சஞ்சிகைகளில் வெளிவந்த சிறப்புமிக்க கட்டுரைகள்...
1. சிசிலியராகம் - நீங்காத நினைவுகள்.
2. கமத்தொழில் விளக்கம் - விவசாயமும் விஞ்ஞானமும்.
3. கமத்தொழில் விளக்கம் - சுதந்திர இலங்கையின் பொருளியல் வளர்ச்சிக்கு விவசாயக் கல்வியின் முக்கியத்துவம்.
4. கமத்தொழில் விளக்கம் - தாவரங்களின் மாறல்கள்.
5. நிழல் - சிலம்பு எங்கே
6. நிழல் - கண்ணகை இடது தனத்தை திருகி எறிந்தது ஏன்.
7. பேழை - கவிதைக்கு நயம் எழுதுதல்.
8. மலரும் வாழ்வு - சிறப்பு மலர் - தனியார் கல்வி நிறுவனங்கள்.
9. ஞானக்கதிர் - ஈச்சுரமா? ஈச்சரமா?.
10. மலறும் வாழ்வு - இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கையும் வளமும்.
11. மலரும் வாழ்வு - வாலியைக் கொன்றது நீதியா.
12. தொண்டன் - யாரைத்தான் நம்புவதோ.
13. காரை நகர் தமிழ் வளர்ச்சிக்கழக சிறப்பு மலர் - கார்த்திகேயப் புலவரும் விதான மாலையும்.
14. கூர்மதி - கனவு
15. கூர்மதி - மருந்தா? மந்திரமா? யந்திரமா?
16. எழுவான் - மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலில் கண்ணகை அம்மன் காவியங்கள்.
17. வாழட்டும் விபுலன் பணி - சுவாமி விபுலானந்தர் நினைவி தின விழா.
இதுவரை பத்து நூல்கள் பத்தாயிரம் பிரதிகளுக்குமேல் விநியோகிக்கப் பட்டுள்ளது.
தனித்துவம் - 50 வருடங்களாக வெண்கலமான குரலில் இலக்கிய, சமய பேச்சுக்கள். எழுத்தாளர், கவிஞர், நடிகர். இறுவட்டுக்கள் இதுவரை நான்கு வெளியிட்டுள்ளமை.
மீண்டும் மற்றுமோர் கலைஞர் அறிமுகத்திலே இளம் கலைஞர் வேலாயுதபிள்ளை ஜனனி அவர்களை சந்திப்போம்...
10 comments: on "தமிழர் நம் கலைஞர்கள் தொடர் பதிவு 02"
தகவல்களுக்கு நன்றி..
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
தகவல்களுக்கு நன்றி..//
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
இவ்விபரங்கள் தெரியாது எனக்கு
அதனால்
ஒரு உள்ளேன் ஐயா!
//நட்புடன் ஜமால் கூறியது...
இவ்விபரங்கள் தெரியாது எனக்கு
அதனால்
ஒரு உள்ளேன் ஐயா!//
உண்மைதான் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...
இது கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு இடம் பெறும் ஒரு தொடர் பதிவு. இதன் மூலம் பல கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்வதே நோக்கம். வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா..
நல்ல தகவல்கள் சந்ரு.
ஆனால் போறுப்பதிகாரியா பொறுப்பதிகாரியா???
//சுசி கூறியது...
நல்ல தகவல்கள் சந்ரு.
ஆனால் போறுப்பதிகாரியா பொறுப்பதிகாரியா???//
ஆஹா அது பொறுப்பதிகாரிதான் சுசி நம்ம அவசரத்துல அதெல்லாம் தெரிய மாட்டேங்குது.. சும்மாவா இன்று ஓடி ஓடி மூன்று இடுகை போட்டேன் அதன் அவசரம்தான்.....
வருகைக்கும்கருத்துக்களுக்கும் நன்றி சுசி...
நல்ல பயனுள்ள பதிவு.
நல்ல முயற்சி சந்ரு, தொடருங்கள், நம் கலைஞர்கள் குறித்த பகிர்வுகள் விரிவாக பதிவாக்கப்படவேண்டும்,
//முனைவர் சே.கல்பனா கூறியது...
நல்ல பயனுள்ள பதிவு.//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி முனைவர் சே.கல்பனா அவர்களே...
//கானா பிரபா கூறியது...
நல்ல முயற்சி சந்ரு, தொடருங்கள், நம் கலைஞர்கள் குறித்த பகிர்வுகள் விரிவாக பதிவாக்கப்படவேண்டும்,//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா...
Post a Comment