தற்போது திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான களுதாவளைப் பிள்ளையார். ஆலயத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொள்ளும்படி பலர் வேண்டிக் கொண்டார்.
http://ghaditham.com/varalaaru/kaluthaavalai/index.html
எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை ஏராளமாக எழுதிக் கொண்டே போகலாம். இவ் ஆலயம் தானாகத் தோன்றிய லிங்கத்தை உடைய ஆலயம். கிக்கு மாகாணத்தில் இரு ஆலயங்களிலே சிவலிங்கம் கருவறையில் இருக்க பிள்ளையாராக வழிபடும் ஆலயங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஒன்று. மற்றும் களுதாவளைப்பிள்ளையார் ஆலயம்.
இவ் ஆலயத்தில் இருக்கின்ற லிங்கம் ஆரம்பத்தில் சிவனாகவும் முருகனாகவும். இப்போது பிள்ளையாராகவும் வழிபடப்பட்டு வருகின்றது.
களுதாவளை சுயப்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தைப் பொறுத்தவரை பன்னெடுங்கால வரலாற்றினைக் கொண்ட ஆலயம். மூவின மக்களும் வந்து செல்லும் ஆலயம். இவ் ஆலயத்தின் வரலாற்றினை களுதேவாலய கல்வெட்டு விரிவாகச் சொல்கின்றன.
பல அற்புதங்கள் நடந்து வருவது பலரும் அறிந்தது. குறிப்பாக வாய் பேசாத பிள்ளைகளை பிள்ளைகளை பேச வைக்கின்ற பிள்ளையார் எனும் பெருமைக்குரியவர். இப் பிள்ளையார்.
வாய் பேசாத பிள்ளைகள் பேச வேண்டும் என்று நேர்கடன் வைத்து சில தினங்களிலே அந்தப் பிள்ளை பேசுகின்ற அதிசய சம்பவங்கள் நடந்து வருகின்றன.
நான் பல வருடங்களாக ஆலய நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்து வருபவன். அவ் வேளையில் ஒரு திருவிழாவின்போது ஒரு பெண்ணை எதேற்சையாக சந்தித்து வானொலியில் பிள்ளையாரின் பெருமைகளை சொல்லுங்கள் ஏன் இந்த ஆலயத்துக்கு வருகிறீர்கள் என்று கேட்டேன்.
அவர் சொன்ன கதைகளை என்னால் நம்ப முடியவில்லை. தன்னுடைய மூத்த மகள் 10 வயது வரைக்கும் வாய் பேசவில்லை என்றும் களுதாவளைப் பிள்ளையாருக்கு நேர்கடன் வைத்து சில தினங்களில் பிள்ளை பேசியதாகவும் குறிப்பிட்டதுடன். தனது இன்னொரு மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டு இனிமேல் உயிரோடு இருக்கமாட்டார் என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட பிள்ளை நெர்கடன் வைத்ததும் நோய் தீர்ந்ததாகக கூறினார்.
இதே போல் பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது ஆலயத் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஆலயம் பற்றிய மேலதிக விடயங்களையும் பெருமைகளையும் அறிய..
9 comments: on "களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் சந்நிதியில்..."
/// இவ் ஆலயத்தில் இருக்கின்ற லிங்கம் ஆரம்பத்தில் சிவனாகவும் முருகனாகவும். இப்போது பிள்ளையாராகவும் வழிபடப்பட்டு வருகின்றது.////
புதிய செய்தி இதுவரை கேட்டிராத செய்தி
நல்ல ஆன்மீகப் பதிவு
நம்பிக்கைதான் வாழ்க்கை அதுதான் கடவுள் இதற்கு இணையானது உலகில் வேறு எதுவுமே
கிடையாது.உங்கள் தகவல் மனநிறைவை தந்தது
வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் இதுபோன்ற நல்ல
ஆக்கங்களை வெளியிடுங்கள்.நன்றி சகோதரரே இப்பகிர்வுக்கு.
அருமையான தகவல்.
இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
useful info.
//A.R.ராஜகோபாலன் கூறியது...
/// இவ் ஆலயத்தில் இருக்கின்ற லிங்கம் ஆரம்பத்தில் சிவனாகவும் முருகனாகவும். இப்போது பிள்ளையாராகவும் வழிபடப்பட்டு வருகின்றது.////
புதிய செய்தி இதுவரை கேட்டிராத செய்தி
நல்ல ஆன்மீகப் பதிவு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//அம்பாளடியாள் கூறியது...
நம்பிக்கைதான் வாழ்க்கை அதுதான் கடவுள் இதற்கு இணையானது உலகில் வேறு எதுவுமே
கிடையாது.உங்கள் தகவல் மனநிறைவை தந்தது
வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் இதுபோன்ற நல்ல
ஆக்கங்களை வெளியிடுங்கள்.நன்றி சகோதரரே இப்பகிர்வுக்கு.//
அவ்வப்போது வெளியிடுவேன்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Nice post.,
நம்பிக்கைதான் வாழ்க்கை
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
Post a Comment