சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா எனம் பாடல்தான் இப்போது என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இன்று நான் கட்டாரில் வேலையற்ற பட்டதாரியாக திண்டாடிக் கொண்டிருக்கின்றேன். சிறு வயதுமுதல் ஏதேதோ எல்லாம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து எதனையும் சாதிக்க முடியவில்லை.
காரணம் குடும்ப சூழல். சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது 10 வயதிலே தந்தை இறந்ததும் குடும்பசுமை என்னிடமே. அன்று முதல் பணத்தின் அருமையும் கஸ்ரம் என்றால் என்ன என்பதனையும் உணர்ந்து கொண்டேன். இதனால் இழந்தவை ஏராளம் கல்வி உட்பட.
முடிந்தவரை படித்து பட்டம் பெற்றால் நாட்டிலே வேலையில்லா திண்டாட்டம். வயிற்றுப் பிழைப்பக்காய் வெளிநாடு செல்வோம் என்று வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வந்தால் இங்கே எனக்கு முன் வந்துவிட்டது என்னைப்பிடித்த ஏழரைச் சனியன்.
கட்டாருக்கு வந்து எதிர்வரும் 1 ம் திகதி 4 மாதமாகிறது. எதிர்வரும் 27ம் திகதி மீண்டும் இலங்கைக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கட்டாருக்கு வந்து 4 மாதங்களிலும் என்ன நடந்தது என்று விரிவாக இங்கே இருக்கின்றது. சென்று பாருங்கள்.
கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்
நாம் எல்லோரும் நாட்டில் இருந்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்ன நல்லா உழைத்துக் கொண்டிருக்கின்றனர். என்று நினைக்கின்றோம். அனால் அவர்கள் படும் வேதனைகளும் கஸ்ரங்களும் எண்ணிலடங்கா. அவற்றைப்பற்றியெல்லாம் விரிவாக பதிவிட இருக்கின்றேன். இப்போது பதிவிடும் மனநிலையிலும் நான் இல்லை.
இன்று காலையில் நாம் வேலைவாய்ப்புக்காக வந்த அரச நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அலுவலக உயரதிகாரிகள் வேலை வழங்கப்படாது நாட்டுக்கு செல்லுங்கள். என்று சொல்லிவிட்டனர்.
எங்களுக்கு குறிப்பிட் நிறுவனத்தினால் நேர்முகப்பரிட்சை வைக்கப்பட்டு வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டைகூட வழங்கியிருக்கின்றனர்.
நேர்முகப் பரிட்சைகூட எங்களை கேலி செய்வதுபோன்றுதான் அமைந்திருந்தது. எங்கள் தகைமைக்குரிய ஆவணங்கள்கூட பார்க்கப்படவில்லை.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி நாட்டில் என்ன வேலை செய்தாய். நான் ஊடகத்தில் வேலை செய்தேன் என்றேன். அப்போ இங்கே எதற்காக வந்தாய் அந்த வேலையை செய்திருக்கலாம்தானே என்றார்.
இன்னும் ஒருவரிடம் தகைமைக்குரிய ஆவணங்களை பார்க்கவோ அல்லது கேள்விகளோ இன்றி 24 + 13 = ? இதுதான் அவருக்கு எழுதிக் கொடுத்து விடை காணச் சொல்லப்பட்டது. அவர் 37 என்று எழுதிக் கொடுத்ததும் ஓகே... குட்.. குட்... போகலாம் என்று அனுப்பிவிட்டார்.
இது ஒருபுறமிருக்க இன்னொருவர் சாரதியாக வந்து கட்டாரில் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று (சாரதி பயிற்சிப்பாடசாலையில் கற்று) குறித்த நிறுவனத்துக்கு சாரதியாக வேலையில் சேர்ந்து ஒன்றரை மாதமாகிவிட்டது. அவரை இன்னொரு வேறு நாட்டுக்காரரிடம் ஒப்படைத்து இவருக்கு குறிப்பிட்ட வாகனத்தை ஒட்டுவதற்கு பயிற்சி வழங்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் இவர் ஒழுங்காக வாகணம் ஓட்டவில்லை என்று பலமுறை மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார். ஒன்றரை மாதத்தின் பின் இவர் சரியாக வாகனம் ஓட்டவில்லை என்று கூறி. அவர் கட்டாருக்கு வந்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் ஒப்படைத்த இருக்கின்றனர் நாட்டுக்கு அனுப்ப சொல்லி. ஒன்றரை மாதங்கள் வேலை செய்ததற்கு எந்தவித கொடுப்பனவுகளும் இல்லை.
இவர் சாரதி பயிற்சி பாடசாலையில் சாரதி பயிற்சி பெற்றவர். இவருக்கு மீண்டும் பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இத்தனைக்கும்மேல் நாங்கள் வந்த வேலை என்னவென்றால் கழிவுப் பொருட்களைக் கொண்டு பசளை தயாரிக்கும் ஒரு திட்டத்துக்கு. முன்னர் கழிவுப்பொருட்களை பசளை தயாரிக்கும் திட்டம் இங்கே இருந்தாலும். எங்களை புதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற திட்டத்துக்கே எடுத்திருந்தனர்.
இப்புதிய திட்டத்தக்குரிய ஆரம்ப வேலைகள் இந்த வருடத்தில் நிறைவடையாது என்பதனை அறியக்கூடியதாக இரக்கின்றது.
எது எப்படி இருப்பினும் இங்கு வேலைக்கு வந்தவர்கள் அனைவரம் மிகவும் கஸ்ரப்பட்டவர்கள். தங்கள் குடும்ப கூழ்நிலை காரணமாக வந்தவர்கள். பல இலட்சங்களை வட்டிக்கு வாங்கி வந்தவர்கள். அவர்கள் நாட்டுக்கு சென்றால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டிவரும்.
மிக விரைவில் சொந்த நாட்டிலிருந்து பதிவிடலாம். சொந்தங்களோடு சேரப்போகின்றோம் என்கின்ற நிம்மதிப் பெருமூச்சு ஒருபுறமிருக்க பல இலட்சங்களை இழந்து கடனாளியாக நாட்டக்கு சேல்கின்றோமே என்பதனை நினைக்கும்போது...........................
18 comments: on "வெளிநாடுவரைக்கும் துரத்தி வந்த ஏழரைச் சனியன்."
கேட்க கஷ்டமாக இருக்கிறது சந்ரு...மோசமான அனுபவங்கள். சீக்கிரம் நல்ல காலம் பிறக்கட்டும்.
மிகவும் வருத்தமான விஷயம்தான் ....
சந்த்ரு,
மனம் தளராதீர்கள். இந்த பாதை அடைப்பட்டிருப்பது இதை விடவும் சிறந்த ஒன்றுக்கென நம்புங்கள்.
(அறிவுரை, ஆறுதல் சொல்வது எளிது.. பாதிப்பில் உள்ளவர்களுக்கு அது பெருஞ்சுமைதான். ஆனாலும், நிச்சயம் இதுவும் கடந்து போய் இதைவிடச் சிறந்ததொன்றின் பக்கம் உங்களை இட்டுச் செல்லும். - என் சொந்த அனுபத்தில் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.)
நிஜமாகவே பாவம் அவர்கள்..
பாஸ் இதுதான் பாஸ் நம்ம வாழ்க்கை.
//ஸ்ரீராம். கூறியது...
கேட்க கஷ்டமாக இருக்கிறது சந்ரு...மோசமான அனுபவங்கள். சீக்கிரம் நல்ல காலம் பிறக்கட்டும்.//
ம்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//koodal bala கூறியது...
மிகவும் வருத்தமான விஷயம்தான் ....//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சத்ரியன் கூறியது...
சந்த்ரு,
மனம் தளராதீர்கள். இந்த பாதை அடைப்பட்டிருப்பது இதை விடவும் சிறந்த ஒன்றுக்கென நம்புங்கள்.
(அறிவுரை, ஆறுதல் சொல்வது எளிது.. பாதிப்பில் உள்ளவர்களுக்கு அது பெருஞ்சுமைதான். ஆனாலும், நிச்சயம் இதுவும் கடந்து போய் இதைவிடச் சிறந்ததொன்றின் பக்கம் உங்களை இட்டுச் செல்லும். - என் சொந்த அனுபத்தில் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.)
உங்கள் ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
நிஜமாகவே பாவம் அவர்கள்..//
ம்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//SShathiesh-சதீஷ். கூறியது...
பாஸ் இதுதான் பாஸ் நம்ம வாழ்க்கை.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சந்ரு...விரைவில் நல்வழி பிறக்கும்.நடப்பது அனைத்தும் நன்மைக்கே...
//S.Menaga கூறியது...
படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சந்ரு...விரைவில் நல்வழி பிறக்கும்.நடப்பது அனைத்தும் நன்மைக்கே...//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
எங்க வெளி நாடு வாழ்கையில் நாங்களும் கண்கூடாக பார்த்தது தான் .
எப்பவும் நம்பிகையை கைவிடாதீங்க .ஊருக்கு சென்றாலும் பதிவுகளை
தொடருங்க .நல்லதே நடக்கும் .
மனத்தை தளரவிடாதீர்கள். சத்ரியன் சொன்னது போல் இதைவிட சிறந்தது உங்களுக்கு கிடைக்கும். எனக்கு இது போல வாழ்வில் இருமுறை நடந்திருக்கிறது. எங்கோ படித்தது.. கடவுளிடம் நமக்கென்ன தேவை என்று நாம் நினைப்பதை வேண்டுகிறோம். அவரோ, நமக்கென்ன தேவை என்று அவர் நினைக்கிறாரோ அதையே கொடுப்பார்.
//angelin கூறியது...
எங்க வெளி நாடு வாழ்கையில் நாங்களும் கண்கூடாக பார்த்தது தான் .
எப்பவும் நம்பிகையை கைவிடாதீங்க .ஊருக்கு சென்றாலும் பதிவுகளை
தொடருங்க .நல்லதே நடக்கும் .//
வருகைக்கும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கும் நன்றிகள்.
//bandhu கூறியது...
மனத்தை தளரவிடாதீர்கள். சத்ரியன் சொன்னது போல் இதைவிட சிறந்தது உங்களுக்கு கிடைக்கும். எனக்கு இது போல வாழ்வில் இருமுறை நடந்திருக்கிறது. எங்கோ படித்தது.. கடவுளிடம் நமக்கென்ன தேவை என்று நாம் நினைப்பதை வேண்டுகிறோம். அவரோ, நமக்கென்ன தேவை என்று அவர் நினைக்கிறாரோ அதையே கொடுப்பார்.//
உண்மைதான்... வருகைக்கும் உங்கள் ஆறுதல் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
உங்களின் cv யை sollacholla@gmail.com மில் அனுப்புங்கள். கட்டாரில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டுப்பார்க்கிறேன். பாஸ்போர்ட் உங்கள் கையில் தான் உள்ளதா என்பதையும் தெரியப்படுத்துங்கள்
//சொல்லச் சொல்ல கூறியது...
உங்களின் cv யை sollacholla@gmail.com மில் அனுப்புங்கள். கட்டாரில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டுப்பார்க்கிறேன். பாஸ்போர்ட் உங்கள் கையில் தான் உள்ளதா என்பதையும் தெரியப்படுத்துங்கள்//
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்.
Post a Comment