இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்பிற்காக வந்த இலங்கைப்பட்டதாரிகள் வேலையற்று கட்டாரில் பல மாதங்களாக திண்டாடுவதாக முன்னர் பதிவிட்டிருந்தேன்.
முன்னைய பதிவு
கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்
பட்டதாரிகள் மட்டுமல்ல பல தொழிலாளர்கள் பல மாதங்களாக கட்டாருக்கு வேலைக்கு வந்து தங்குவதற்கு இடமோ உணவோ இன்றி பல கஸ்ரங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
பட்டதாரிகள் போன்றுதான் இவர்களுக்கும் வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டைகள் என்பன வழங்கப் பட்டுள்ளன.ஆனால் தங்குவதற்கு இடமோ உணவோ வழங்கப்படவில்லை.
இதே நிலைதான் பட்டதாரிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. 4 5 மாதங்களாக உணவின்றி தங்க இடமின்றி பல அவலங்களை சந்தித்த தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
நாட்டுக்கு அனுப்புவதற்கான காரணம் வயது அதிகம் 30 வயதுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்லப் படுகின்றது. அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தினால்
வந்தவர்கள் முகவர் நிலையத்தால் வயதுக் கட்டுப்பாடுகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
சரி முகவர் நிலையம் தவற விட்டுவிட்டதென்றால். அவர்களை 4 5 மாதங்கள் எதற்காக உணவின்றி தங்குவதற்கு இடமின்றி வைத்திருக்க வேண்டும். வீசா அடையாள அட்டைகளை வழங்கும்போது
அவர்களின் வயதை அறியாமல் கண்ணை முடிக்கொண்டா செய்தார்கள். இவர்களின் வயது கண்ணுக்குத் தெரியவில்லையா? இவை அனைத்துக்கும் மேல் இது ஒரு கட்டார் அரசாங்க நிறுவனம்.
இது ஒருபுறமிருக்க உயர் பதவிகளுக்காக வந்த இலங்கைப் பட்டதாரிகளையும் விரைவில் நாட்டுக்கு அனுப்பப்படப் போவதாக பேசப்படுகின்றது. இங்கு வேலைவாய்ப்பிற்காக வந்தவர்கள்
பணக்காரர்களல்ல பல இலட்சங்களை முகவர் நிலையங்களுக்கு வழங்கி வந்தவர்கள். அதிகமானவர்கள் வட்டிக்கு கடடி;வாங்கி வந்தவர்கள். அவர்களின் நிலை மிக மோசமானது.
வேலை வாய்ப்பிற்காக வந்த அனைவரையும் குறிப்பிட்ட அரச நிறுவனத்தினால் உடனடியாக பொறுப்பேற்கப்பட்டு வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. ஆனால்
வேலையோ உணவோ தங்குமிடமோ எதுவும் வழங்கப்படவில்லை இன்று 4 5 மாதங்கள் சென்றபின் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் என்ன நியாயம் இருக்கின்றது.
நாட்டுக்கு திருப்பி அனுப்புபவர்கள் எதற்காக தொழிலாளர்களை பொறுப்பேற்று அடையாள அட்டை வழங்க வேண்டும் இத்தனை மாதங்கள் கஸ்ரப்பட வைத்திருக்க வேண்டும்.
பல தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இன்னும் பலர் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர்.
நானும் அவர்களில் ஒருவன்
15 comments: on "நாடு கடந்தும் நடுத்தெருவில்"
மனசுக்கு வேதனை தரும் விடயம்
மனசுக்கு வேதனை தரும் விடயம்
வேதனையான விசயம்தான்.
இதற்கு வேறு வழியே இல்லையா?
//கவி அழகன் கூறியது...
மனசுக்கு வேதனை தரும் விடயம்//
ம்....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சிநேகிதன் அக்பர் கூறியது...
வேதனையான விசயம்தான்.
இதற்கு வேறு வழியே இல்லையா?//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
என்ன பாஸ் பீதிய கெளப்புறீங்க?நானும் ஒரு காலம் உங்க வரலாம்னு ப்ளானோட இருக்கேன்...எல்லார் நிலைமையும் அப்பிடியா??
//மைந்தன் சிவா கூறியது...
என்ன பாஸ் பீதிய கெளப்புறீங்க?நானும் ஒரு காலம் உங்க வரலாம்னு ப்ளானோட இருக்கேன்...எல்லார் நிலைமையும் அப்பிடியா??//
எல்லோருக்கும் அல்ல சிலரின் நிலை இப்படி இருக்கிறது.
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரப் போல வருமா????
அதுவும் சரி தான் பாஸ்!
இதுக்குத்தான் நான் எப்பவோ யோசித்தேன் படிக்காமல் இருந்திருக்கவேணும் எண்டு.
இப்படியெல்லாம் நடக்கிறதா என அறிய ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
தமிழனாய் அதுவும் ஈழத்தமிழனாய்ப் பிறந்திருக்கவேண்ட்டம் சந்ரு.இங்கே இலண்டனிலும் 300 பேர்வரை அனுப்ப இருந்தவர்களை நிறையப் போராடி முந்தைநாள் 40 பேர் வரையில் அனுப்பப்பட்டார்கள்.
மிகுதிப் பேர்களும் கேள்விக் குறியில்தான் !
என்ன பாஸ்! பீதிய கிளப்புறீங்க? நானும் வருவதற்காக சந்தர்ப்பம் பாத்துட்டிருக்கேன்!
வேலை வழங்கும் நிறுவனங்கள் சார்ந்தே அப்படி ஒரு பிரச்சினை இருக்குனு நினைக்கிறேன்!
றமேஸ்-Ramesh கூறியது...
இதுக்குத்தான் நான் எப்பவோ யோசித்தேன் படிக்காமல் இருந்திருக்கவேணும் எண்டு.
படித்தும் வேலை கிடைப்பதாக இல்லையே இப்போ படிப்பிருந்தால் வேலை இல்லை பணமிருந்தால்தான் வேலை...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
இப்படியெல்லாம் நடக்கிறதா என அறிய ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.//
நடக்கிறது.. எனக்கும் நடந்திருக்கிறதே..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//பிளாகர் ஜீ... கூறியது...
என்ன பாஸ்! பீதிய கிளப்புறீங்க? நானும் வருவதற்காக சந்தர்ப்பம் பாத்துட்டிருக்கேன்!
வேலை வழங்கும் நிறுவனங்கள் சார்ந்தே அப்படி ஒரு பிரச்சினை இருக்குனு நினைக்கிறேன்!//
வேலை வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்து இருக்கின்றது.
ஆனால் எங்களுக்கு அரச நிறுவனத்தினால் இந்த நிலை
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment