Thursday 16 June 2011

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்



எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 




பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை
ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக்
இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

 
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு
நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம்
பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு
திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை

இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு
மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்

அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்தக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

தமது காம உணர்ச்சிகளை திர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்

இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின்
இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை
தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்



தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

21 comments: on "ஒரு பெண் வேசியாகிறாள். 18 +"

Anonymous said...

//அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?//

இப்படி பேசுவதால் தான் அதற்கு பெயர் சமூகம்..அடுத்தவருக்கு நேர்ந்தால் தவறு தனக்கு நடந்தால் சூழ்நிலை இப்படி பலவாறு சப்பை கட்டு கட்டும் மனிதர்கள்

குணசேகரன்... said...

இதற்கு பதில் சொல்லவேண்டுமானால் வரலாற்றை படிக்க வேண்டும்

Anonymous said...

ஒரு பெண் வேசி ஆவதற்கு முழுக் காரணமும் ஆண்கள் தான் .... !!! சந்தேகமே இல்லை !

ஹேமா said...

உண்மைதான் சந்ரு யாரும் பிறப்பில் நிலை தவறுபவர்கள் இல்லை.
சந்தர்ப்பங்கள்தான் மாற்றி வைக்கிறது !

Admin said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

ரைட்டு,,//

முற்றிலும் உண்மை

வருகைக்கு நன்றிகள்.

Admin said...

//பிளாகர் தமிழரசி கூறியது...

//அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?//

இப்படி பேசுவதால் தான் அதற்கு பெயர் சமூகம்..அடுத்தவருக்கு நேர்ந்தால் தவறு தனக்கு நடந்தால் சூழ்நிலை இப்படி பலவாறு சப்பை கட்டு கட்டும் மனிதர்கள்//


நம் சமுகம் சந்தர்ப்பவாத சமுகமாகிவிட்டது.. என்ன செய்வது..

வருகைக்கு நன்றிகள்..

Admin said...

//குணசேகரன்... கூறியது...

இதற்கு பதில் சொல்லவேண்டுமானால் வரலாற்றை படிக்க வேண்டும்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//இக்பால் செல்வன் கூறியது...

ஒரு பெண் வேசி ஆவதற்கு முழுக் காரணமும் ஆண்கள் தான் .... !!! சந்தேகமே இல்லை !//


எல்லா பெண்களும் வேசியாவதற்கு ஆண்காரணமல்ல... பெண்களும்தான்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...

உண்மைதான் சந்ரு யாரும் பிறப்பில் நிலை தவறுபவர்கள் இல்லை.
சந்தர்ப்பங்கள்தான் மாற்றி வைக்கிறது !//


நிட்சயமாக நல்லவர்களாக இருந்த பல பெண்கள் சந்தர்ப்பசூழ்நிலைகளால் வேசியாகிய பலரைப் பார்த்திருக்கின்றோம்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Anonymous said...

கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?
நியாயமான கேள்வி.

ஷர்மிளா said...

'ஒரு பெண் வேசி ஆவதற்கு முழுக் காரணமும் ஆண்கள் தான் .... !!! சந்தேகமே இல்லை !

வடலியூரான் said...

உங்கள் கருத்தோடு நான் அப்படியே ஒத்துப் போகின்றேன்

ஸ்ரீராம். said...

சுகத்துக்காக தவறுவது என்பதைவிட, சர்வைவலுக்காக தவறுவதே அதிகம்.

நிரூபன் said...

மாப்ளே, சமுதாய மேம்பாட்டிற்குரிய பதிவினை எழுதியிருக்காரு,
பதிவே புரியாமல் இதற்உ மைனஸ் ஓட்டுப் போட்டது யாரு;-))

நிரூபன் said...

எமது சமூகத்தின் பழமைவாதிகளால் விதைக்கப்பட்ட சிந்தனையின் இக் கால நிலமையினை அழகாக அலசியிருக்கிறீர்கள்.
அருமையான பதிவு,

ஆணை இலக்கிய காலத்திலிருந்து பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்தால் வீரத்தில் உயர்ந்தவானாகக் காட்டி மகிழ்வடைந்திருக்கிறது எமது சமூகம், இதே வழியினைத் தான் இன்று எம்முள் வாழும் படித்த புத்தி ஜீவிகளும் பின்பற்றுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால், துஷ்பிரயோகமேதுமற்ற
சுதந்திரமான பாலியல் கொள்கை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டுவரப் பட வேண்டும்.


ஒரு பெண்ணின் வாழ்வினை மாற்றி, அவளை வேசியாக்குவதற்கு முழுக் காரணம் ஆண்கள் என்பதற்கு அப்பால், ச்ந்தர்ப்ப சூழ் நிலைகளும்(குடும்ப வறுமை/ பொருளாதாரப் பின்ணனி)காரணமாகின்றன,

உங்களது இக் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.

selva said...

namathu samuthaaya amaippu aanai maiyamaga kondu ullathu! pennai veetil adaithu vaikka enna enna kattu kadhaigal allathu sambrathaayangal padaithu pennin arivai samuga munnetrathukku payanpadutha mudiyamal seithu vittanar. karpu endra vishayam pennitku mattum thaana aanitku illaiya endtral poosi meluguvargal. thanakentru varadha varai ellarum penniyam pesum ganniyavangale!

கதிரவன் said...

ஒரு மனிதன் குற்றம் செய்யும் அளவிற்கு துணிகிறான் என்றால்,குறைபாடு என ஒன்று அங்கே காணப் படுகிறது.தேவை என்று வரும் போது.தேவைக்கேற்ப நிலை அங்கே மறுக்கப் படுகிறது.எல்லாமே கிடைக்கப் பட்டும்,கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகின்ற நிலை இலங்கையில் சாதரணமாக நிகழ்கிறது.உனக்கு அது வேண்டும் என்றால்,எனக்கு நீ அடிப் பணிய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தள்ளப் படும் நிலையே,அப்பெண் தகாத உறவிற்கு அடிமை படுத்தப் படுகிறாள்.

Unknown said...

இப்போ இதுக்கு மட்டும் பஞ்சம் இல்ல

Unknown said...

பெண் வேசி ஆவதற்கு பெண்கள் தான் காரணம் அவர்களின் ஆதரவுடன்தான் எல்லாமே

Unknown said...

பெண்களும் காரணம் மறந்திடாதிங்க

Post a Comment