கடந்த 5 திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலே பல மாணவிகள் கடத்தப் பட்டதாக செய்தி பரவி இருந்தது இதனால் பல பாடசாலைகள் இடை நடுவில் மூடப்பட்டதும் பெற்றோரால் மாணவர்கள் அலைத்துஸ் செல்லப்பட்டதும் ஒருபுறமிருக்க. நிமிடத்துக்கொரு கதை, செய்தி என்று வதந்திகள் பரப்பப் பட்டுக் கொண்டிருந்தன. இதனால் மக்கள் குழப்பமடைந்திருந்தனர்.
இதன் உண்மை நிலை அறியாமல் சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டமையும்.சில அரசியல்வாதிகள் இதனை அரசியல் துருப்பு சீட்டாகப் பயன்படுத்த நினைத்ததையும் பார்க்கும்போது சிரிக்கத் தோன்றுகின்றது.
கடத்தப் பட்டு தப்பி வந்து போலிஷ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டதாக சொல்லப்படும் மாணவி சொன்னதாக சொல்லப்படுகின்ற கருத்துக்களை பார்த்தால் நேரடியாகவே உண்மை விளங்கும்.
காலை 7 .30 மணியளவில் பாடசாலைக்கு செல்லும்போது கடத்தப்பட்டதாக அந்த பிள்ளை சொல்கிறது. இந்த நேரம் வீதியில் சன நடமாட்டம் அதிகமான நேரம். கடத்தப்பட சாத்தியங்கள் குறைவே.
தன்னுடன் 6 ,7 மாணவர்கள் கடத்தப்பட்ட வாகனத்திலே இருந்ததாக அந்த மாணவி சொல்கின்றார். ஆனால் இதுவரை எந்த மாணவர்களும் கடத்தப் பட்டதாக எங்கேயும் பதிவாகவில்லை. தன்னுடன் கடத்தப் பட்டதாக சொல்லப்படுகின்ற மாணவர்கள் யார்? இது முற்று முழுதான பொய் அல்லவா?
கடத்தியவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு சாப்பிடப் போகும்போது தான் தப்பி ஓடியதாக சொல்லி இருக்கின்றார் இது சாத்தியமா? கடத்தியவர்கள் இவாறு தனியே விட்டுவிட்டு சாப்பிட செல்வார்களா?
இது போன்ற நம்ப முடியாத முன்னுக்குப் பின் முரணான பல கதைகள் கடத்தப் பட்டு தப்பியதாக சொல்லப்படுகின்ற மாணவியால் சொல்லப்படுகின்றன. உண்மை இதுவல்ல என்பது புலனாகின்றதல்லவா? பிள்ளையின் வேறு ஒரு தனிப்பட்ட சம்பவத்தை மூடி மறைப்பதற்காக சொல்லப்பட்ட கட்டுக்கதைகளே இவைகள் என்பது புலனாகின்றது.
உண்மை நிலையை அறியாது எழுதுகின்ற, சொல்லுகின்ற ஊடகங்கள் உண்மைகளை அறிந்து செயற்படுவது நல்லது.
இதன் உண்மை நிலை அறியாது அரசியலாக்க நினைக்கின்ற அரசியல்வாதிகளும் திருந்தப் பார்க்கணும்.
4 comments: on "மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகள் கடத்தப் பட்டதாக சொல்லப்படுவதன் உண்மை என்ன?"
ஒருவரைக் கொலை செய்துவிட்டு அந்த இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராக வந்து அரசியல் நடாத்தியதுமல்லாமல் இதனையும் அரசியலாக்க நினைத்த அரியநேத்திரன் போன்றவர்கள்தான் திருந்தப் பார்க்கணும்.
அப்ப.....அமைதி பூமியா இருக்குன்னு சொல்ல வர்றீங்க.
சரியாக சொல்லியிருந்தீர்கள்.. எதையும் தீரவிசாரிக்கவேண்டும்..
//////தன்னுடன் 6 ,7 மாணவர்கள் கடத்தப்பட்ட வாகனத்திலே இருந்ததாக அந்த மாணவி சொல்கின்றார். ஆனால் இதுவரை எந்த மாணவர்களும் கடத்தப் பட்டதாக எங்கேயும் பதிவாகவில்லை. தன்னுடன் கடத்தப் பட்டதாக சொல்லப்படுகின்ற மாணவர்கள் யார்? இது முற்று முழுதான பொய் அல்லவா?
கடத்தியவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு சாப்பிடப் போகும்போது தான் தப்பி ஓடியதாக சொல்லி இருக்கின்றார் இது சாத்தியமா? கடத்தியவர்கள் இவாறு தனியே விட்டுவிட்டு சாப்பிட செல்வார்களா? ////////////
சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் . . மிகவும் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி
Post a Comment