Wednesday 26 October 2011

பிச்சையும் அரசியல்வாதிகளும்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு மக்களைச் சந்தித்து அவர்களின் பிசச்சினைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல்க் கூட்டம் 23.10.2011 புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில் உண்ணாவிரதம் தமிழர் பிரதேசங்கள் பறிபோகின்றதென்றெல்லாம் மக்கள் மத்தியிலே பூதாகரமான பிரச்சினையாக தோற்றுவித்து தமிழ் மக்களை தூண்டிவிட்டு அரசியல் நடாத்த நினைக்கின்னர். குhணிப்பதிவு என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சொல்வதுபொல் பூதாகரமான பிரச்சினை இல்லை. மக்கள் உண்மைத்தன்மையினை புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்கள் முன்னேற்றமடைய வேண்டும் எமது பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அண்மையில் ஒரு பத்திரிகையில் பிள்ளையானுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்ட பிச்சைதான் முதலமைச்சர் பதவி என்று ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் முதலமைச்சர் பதவி எனக்கு வாக்குப் போட்ட மக்கள் போட்டபிச்சைதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சைதான் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் என்பதை கூட்டமைப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடாது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகரித்திருக்கும் கூட்டமைப்பினருக்கு ஆசனங்கள் குறைந்திருக்கும். நாம் போட்ட பிச்சைதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டார்.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உரையாற்றுகையில்… எமது மக்கள் தொடர்ந்தும் பின்தங்கிய மக்களாக இருக்க கூடாது அதற்காக நாம் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம். எமது மக்களும் பிரதேசமும் அபிவிருத்தி அடைவதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவில்லை அதுதான் துரிதமாக கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் மக்களை உசுப்பேற்றி குழப்பத்தை ஏற்படுத்தி அபிவிருத்தியினை தடுக்கும் முயற்சியை செய்து வருகின்றனர்.
துமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 60 வருடங்களாக மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர். வெறுமனே எமது பிரதேசங்கள் அழிவடைந்தமைதான் மிச்சம். இனியும் எமது மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழக்கூடாது என்று நாம் நினைக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "பிச்சையும் அரசியல்வாதிகளும்"

வவ்வால் said...

ஹி ஹி... என்னைய்யா சொல்ல வறீர்ர, ஒரு மண்ணும் புரியல, இல்ல உங்கட மக்ளுக்காகனா அதையாவது சொல்லி தொலைய்யா!

ஏன்னா இங்கேயும் அரசியல்,பிச்சைலாம் உண்டு(நான் வேற ரொம்ப நாளா வராம வாறேன் ஒண்ணியுமே பிரியல)

(இன்னும் ஒரு கமெண்ட் கூட வரலை ஒரு +, ஒரு - ஓட்டு விழுதே எப்படி)

தனிமரம் said...

அரசியலில் மக்கள் பிளவு பட்டுவிட்டார்களா இல்லைத்தானே அரசியல் வாதிகள் பதவிக்காக எல்லாம் பேசுவார்கள்.

Post a Comment