அன்றில் இருந்து இன்றுவரை உரிமை உரிமை என்று உரத்துக் குரல் கொடுத்து உரிமை போதைக்கு தமிழ் மக்களை அடிமையாக்கிய வரலாறுகள் இன்று மெல்ல மெல்ல அஸ்தனமாகிறது? வட்டுக் கோட்டை தீர்மானத்தில் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தி உரிமை அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ் அரசுக் கட்சி அதன் பின் ஈழத்திற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் பல போராட்டக் குழுக்களை பிரசவம் செய்தது. அன்றில் இருந்து ஆரம்பமாகிய போராட்டம் ஈழத்தின் விடுதலை காணாமல் தொடர்ந்து வந்தது இதில் கைகோர்த்த ; சில குழந்தைகள் அரசுடன் அங்கமாகியதும் இறுதிவரை விடுதலைப் புலிகள் மட்டுமே பலமான அமைப்பாகவும் கொள்கையில் போராடினர். அப்போது அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக்கூறி அதில் அரசியல் குளிர் காய்ந்தனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இன்று இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றாக தோல்வியடைய செய்யப்பட்டதன் பின் தாம்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. போராட்ட வேளையிலும்; கூட்டமைப்பும் சுகபோகமாக வாழ்ந்தவர்களே தவிர போராட்டத்தில் தாமே தம்மை சார்ந்தவர்களோ ஈடுபடவில்லை.
இது ஒரு பக்கம் இருப்பினும் இன்று கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளை விமர்சித்துள்ளனர் அல்லது ஒதுங்குகின்றனர் என்பதை அண்மையில் கல்முனை மாநகரசபைத் தேர்தல் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களை பெற்றது. ஆனால் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் 04 ஆசனங்கள் பெற்றுள்ளது. இது ஒரு பாரிய பின்னடைவு என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இது பற்றி ஊடகங்களுக்கு கருத்துக் கூறிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பின்னடைவு ஏற்பட்டதனை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பார்க்க இங்கு செல்க
1 comments: on "கிழக்கில் அஸ்தமனமாகிறதா? தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம்"
தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களிடம் வந்து ஒற்றுமை, தேசியம் எனும் வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து வாக்கு வேட்டை நடத்துபவர்களே த.தே. கூட்டமைப்பினர்!
இவர்களின் பின்னடைவு பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலித்தது.
Post a Comment