Sunday, 9 October 2011

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இந்து மதம் வீணடிக்கிறதா?


என்னுடைய இந்த பதிவைப்பார்த்து இந்து தீவிரவாதிகள் என்னை திட்டித் தீர்க்கலாம். நானும் ஒரு இந்து தீவிரவாதிதான். அளவு கடந்த கடவுள் நம்பிக்கை உடையவன்.

இருந்தபோதும் இந்துக்களின் மூட நம்பிக்கைகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவன்.

இந்துக்களின் சமய சம்பிரதாயங்கள் அர்த்தம் மிக்கவை ஆனாலும் சில விடயங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

அண்மையில் எனது கிராமத்திலே ஆலய திருவிழா ஒன்று நடைபெற்றது. ஒரு நாள் சுவாமி கிராமத்தின் அத்தனை வீதிகளிலும் வீதி உலா வருகின்ற நிகழ்வு இடம் பெற்றது.

கிராமத்தில் இருக்கின்ற அத்தனை வீடுகளுக்கு முன்னாலும் நிறைகுடங்கள் வைக்கப்பட்டிருந்தன. நிறைகுடம் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் தகர்த்து எறியப்பட்டன. எமது கிராமத்திலே 2500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. ஆனைத்து குடும்பங்களும் நிறைகுடம் வைத்திருந்தனர்.
2000 குடும்பங்கள்தான் நிறைகுடம் வைத்திருந்தாலும் 2000 தேங்காய்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தேங்காய் 30 ரூபாய் படி பார்த்தாலும் 60000 ரூபாய் வீணடிக்கப்பட்டிருக்கின்றது. எத்தனையோ பேர் ஒருவேளை உணவின்றி கஸ்ரப்படுகின்றனர்.

இது ஒரு புறுமிருக்க எமது கிராமத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாழ்த்தப்பட் சாதியினர் இருக்கின்றனர். அவர்களின் வீதிகளுக்கு சுவாமி வீதிவலம் வருவதற்கு கொண்டு செல்லப்படவில்லை. இங்கே கடவுளும் சாதி பார்க்கின்றாரா? அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கடவுள் தரிசனம் கொடுக்கக் கூடாதா?

இன்று இந்து ஆலயங்கள் வியாபார நிலையங்களாக மாறிவிட்டன. இங்கு கற்பூரம் எரிக்க கூடாது என்று எழுதி வைத்திருக்கின்றனர். கற்பூரத்தை வைப்பதற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கற்பூரம் மீண்டும் மீண்டும் விற்பனை செய்யப்படுகின்றன.

வுpரதம் பிடித்து காப்பு கட்டுவதாக இருந்தாலும் சரி தீ மிதிப்பதாக இருந்தாலும் சரி பணம் கட்ட வேண்டும். பணம் கட்ட முடியாமல் கஸ்ரத்தின் மத்தியிலும் இருக்கின்றவர்களுக்கு தெய்வம் இல்லையா?

ஒரு கோவில் கட்டவேண்டும் என்றால் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் பணம் அறவிட்டு ஏனைய கோவில்களைவிட பெரிதாக கோவில் கட்டவேண்டும் என்று போட்டிபோட்டுக்கொண்டு கோவில் கட்டுகின்றனர்.

கோவில்களை அமைப்பதற்காக இந்துக்கள் எவ்வளவு பணத்தினை செலவு செய்கின்றனர் என்பதனை சிந்தித்து பாருங்கள். பெரிதாக பிரமாண்டமாக கோவில்களை அமைத்தால்தான் கடவுள் அந்த கோவிலில் இருப்பாரா? இந்த பணம் முழுவதும் முடக்கப்படுகின்றதல்லவா?

இவ்வாறெல்லாம் செலவு செய்யும் இந்து ஆலயங்கள் கஸ்ரப்படும் மக்களுக்காக எத்தனை இந்து ஆலயங்கள் உதவி செய்கின்றன?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இந்து மதம் வீணடிக்கிறதா?"

Anonymous said...

இந்துக்களின் சமய சம்பிரதாயங்கள் அர்த்தம் மிக்கவை ஆனாலும் சில விடயங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. /// உண்மை தான் பாஸ் ..மதங்களில் மூட நம்பிக்கை புகுத்தியதும் மனிதர்களே ((

Anonymous said...

Boss your village coconut traders had 60000 rupee sale.
these festivals really boost the economy...
you can be a stupid, don't open your mouth and prove it.

Anonymous said...

சந்துரு உங்களைப்போல ஊருக்கு நாலு இளசுகள் வெளிக்கிடவேணும் தம்பி வாழ்த்துக்கள்

Post a Comment