பல்வேறு உட்கட்டமைப்புக்களுடன் கூடிய
வகையில் கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. இந்
நிலையினைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மற்றும் தமிழ் பழம் பெருங் கட்சி என இனங்காட்டும் த.வி.கூட்டணி போன்ற
கட்சிகளை ஏவி விட்டு வெளிநாட்டிலுள்ள சில சக்திகள் கிழக்கின் இயல்பு நிலையை
குழப்ப முயற்சிகள் பல எடுத்த வண்ணமே உள்ளார்கள். இவர்களை மக்களே இனங்கண்டு
அவர்களுக்கு சரியான பாடத்தினை எமது மக்களே புகட்ட வேண்டும் என
கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்
தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
(19.10.2011) மட்டக்களப்பு
ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வை
உத்தியோகபூர்வமாக நாட்டின் ஜனாதிபதி அதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள்
ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்
கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், எமது நாட்டின்
ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரராக இருக்கின்ற பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரினது வழிகாட்டலின் கீழ் மிகவும் பாரிய
அபிவிருத்திகள் கிழக்கு மாகாணத்திலே மேற்கொள்ப்பட்டு வருகின்றன.
விவசாயத்தில் தொடங்கி பாதை அபிவிருத்தி வரை சகலதுறை சார்ந்த
அபிவிருத்திகளிலும் அதிக அக்கறை கிழக்கு மாகாணத்தில் காட்டப்படுகின்றமை
விடேச அம்சமாகும்.
கடந்த 30ஆண்டுகளில் நாம் இழந்தவைகளை மீளப்
பெறுவதற்கான ஓர் வழி தற்போது எம் அனைவருக்கும் திறந்துள்ளன. இதனை
பயன்படுத்தி எமது மாகாண மக்கள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத வடபுலத்தை தலைமையாகக் கொண்டமைந்த தமிழ்
தேசியக் கூட்டமைப்பானது எமது மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களை
உசுப்பேற்றி கிழக்கின் நிலையை குழப்ப முயற்சிக்கிறார்கள் அதற்கு எமது மாகாண
மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.
அண்மையில் வடக்கில் தமிழ்த் தேசிய
கட்சிகளால் பேசப்பட்டு வருகின்ற காணி அளவீடு தொடர்பான பிரச்சினையை
கிழக்கிலும் ஓர் பூதாகரப் பிரச்சினையாக தோற்றுவித்து அதில் குளிர் காய
நினைக்கின்றார்கள். இன்றைய நிகழ்விற்கு எமது நாட்டின் ஜனாதிபதி வருவதனை
அறிந்து ஒரு சிலரை கல்லடி பாலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு ஏவிவிட
அவர்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை.
மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள்.
கடந்த காலங்களில் விடுதலைக்காக கூட்டம் கூட்டமாக ஆட்களைச் சேர்த்து கொலைக்
களத்திற்கு அனுப்பினார்கள் அது பயனளிக்கவில்லை. இன்று அகிம்சை என்ற
போர்வையில் எமது மக்களின் நிம்மதியை குழப்ப இந்த தீய சக்திகள்
முயற்சிக்கின்றன. இவர்களின் கதைகளையும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களையும்
நம்பி நாம் அனுபவித்த வேதனைகள் போதும். இனியாவது எமது எதிர்கால இளைய சந்ததி
இரத்தக்கறை படியாத ஓர் நிம்மதியான வாழ்வை தேடிக் கொள்ளட்டும்;;. அதற்கு
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். இதனை பெறுவதற்கு தடையாக இருக்கும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் கிழக்கு மக்கள் ஓரங்கட்டுவோம் எனவும்
முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பிட்டார்.
இத்திட்டமானது
மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலக்கீழ் நீரானது மாசடைந்தும் உவர்ப்புத் தன்மை கொண்டதாகவும் மாறி வருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் எதிர் கொள்கின்றார்கள். இதனை நிவர்த்திக்கும் முகமாகவே இன்று இப் பாரிய குடி நீhத் திட்டம் எமது நாட்டின் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் மக்களின் பாவனைக்காக கைளிக்கப்பட்டது.
இத்திட்டமானது
மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலக்கீழ் நீரானது மாசடைந்தும் உவர்ப்புத் தன்மை கொண்டதாகவும் மாறி வருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் எதிர் கொள்கின்றார்கள். இதனை நிவர்த்திக்கும் முகமாகவே இன்று இப் பாரிய குடி நீhத் திட்டம் எமது நாட்டின் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் மக்களின் பாவனைக்காக கைளிக்கப்பட்டது.
சுமார் 11000 மில்லியன் ரூபாய் செலவில்
நிர்மாணிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டமானது 106 கிராம சேவகர் பிரிவுகளைக்
கொண்ட சுமார் 246000 மக்களுக்கான குடிநீரை வழங்குகின்றது. அதே வேளை 40000கன
மீற்றர் நீர் கொள்ளளவுடைய சுத்திகரிப்பு நிலையம் அமையப் பெற்றிருக்கின்றது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகால்
அமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர்
நிருபமா ராஜபக்ஸ மற்றும் பிரதி அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
1 comments: on "சங்கரியும் சம்பந்தனும் தமிழர்களை மீண்டும் பலிக்கடாவாக்கும் சதி முயற்சியில்"
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
Post a Comment