ஞாபகங்களை மீட்டுப்பார்க்கும்போது ஏன் அன்று போல் இன்று எதுவும் இல்லையே என்று தோன்றுகின்றது. இந்த நவின உலகில் எல்லாமே மாறிவருகின்றது. எல்லாமே மாறி வருகின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் இழக்கமுடியாது எமது கலை, கலாச்சார, பாராம் பரியங்களை மறக்க முடியாது.
என்னடா இவன் கலை, கலை என்றே பேசிக்கொண்டு இருக்கிறான் இன்று நினைக்கிறீங்களா. கலைகளில் அதிக நாட்டம் அத்தோடு கலைகளோடு பின்னிப்பிணைந்த கிராமிய சூழலில் வளர்ந்தவன். அதனால் கலைகளில் அதிக நாட்டம். மறைந்து வரும் கலைகள் பற்றி சிந்தித்தபோது எனது கடந்தகால நினைவுகள் என் கண்முன்னே வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே இன்று நினைக்கிறேன்....
அன்று கலைகளோடு மக்கள் பின்னிப்பிணைந்து வாழ்ந்தார்கள் இன்று நிலை என்ன? இவற்றுக்கு பல காரணங்கள் இருந்தாலும். நம் கலைகளை வளர்க்கவேண்டியது நம்ம கடமை அல்லவா.
எனக்கு வயது 5 இருக்கும் அன்று நடந்த அந்த பசுமையான நினைவுகளை இன்று மீட்டு பார்க்கும் பொது எத்தனையோ நினைவுகள் கண் முன்னே. என் தந்தை கலைகளிலே ஆர்வம் மிக்கவர். தமிழர்களோடு பின்னிப்பினைந்திருந்த கலைகளில் ஒன்றான கூத்து ஆடுவதிலே அதித ஈடுபாடு கொண்டவர். பல கூத்துக்களை ஆடி இருக்கிறார்.
கூத்து ஆரம்பித்தாலே கிராமப்புறங்களே விழாக்கோலம் பூண்டு இருக்கும். கூத்து பழகி சதங்கை கட்டி அரங்கேற்றம் செய்யும் வரை, இரண்டு, மூன்று மாதங்கள் செல்லும் தினமும் மாலை நேரத்தில் ஆரம்பித்து இரவு 11,12 மணிக்கே நிறைவு பெறும் கூத்து பழகுவதை பார்ப்பதற்கு கிராமத்தில் இருக்கின்ற எல்லோரும் கூத்து இடம் பெறும் இடத்துக்கு வந்து விடுவார்கள். வட்டமான ஒரு களரியிலே கூத்து இடம் பெறும் மின்சார வசதி இருந்தாலும் மின்னொளி பயன் படுத்தமாட்டார்கள் மரபினை மாற்ற விரும்பமாட்டார்கள்.
நெறியாள்கை செய்பவர், அண்ணாவியார் பக்கப்பாட்டு படிப்பவர்கள் இப்படி ஒரு பட்டாளமே களரியை சுற்றி இருப்பார்கள். கிராமத்திலே இருக்கின்ற மக்கள் அனைவரும் ஆவலோடு கூத்தினை கண்டு கழித்து கொண்டு இருப்பார்கள். எமது புராண இதிகாசங்களை பற்றிய கதைகளை மையமாக வைத்து கூத்துக்கள் ஆடப்படும். கூத்திலே வடமோடி, தென்மோடி என்று இரு வகை உள்ள போதிலும் மட்டக்களப்பை பொறுத்தவரை தென்மோடி நாட்டுக்குத்தே பிரசித்தி பெற்றது.
இப்பொழுது கூத்துக்களை காண முடியாமல் இருக்கின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன் எனது நண்பர்கள் கூத்தினை புத்துயிர் ஊட்ட வேண்டும் என்று நினைத்து முன்று நான்கு கூத்துக்களை அரங் கேற்றினார்கள். அதிலே பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றன. அவற்றையும் தர இருக்கின்றேன். இன்று அவர்களும் கை விட்டு விட்டார்கள் இன்றைய அவசர யுகத்தில் அவர்களாலும் அவற்றை முன்னெடுக்க முடியவில்லை. எது இப்படி இருந்தாலும் இரண்டு , முன்று வருடத்தில் ஒரு தடவையாவது ஒரு கூத்தினை அரங்கேற்றினால் எமது எதிர்கால சந்ததி இதுதான் கூத்து என்பதை அறிவார்கள் அல்லவா. என்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும்
கூத்து ஆடுபவர்களுக்கு அவர்களின் பெயர் மருவி அவர்கள் ஏற்று நடித்த கதா பாத்திரத்தின் பெயர் இன்று வழங்கப்பட்டு வருகின்றது.
கூத்து ஆடுவதாக இருந்தால் ஆட, பாட தெரிய வேண்டும், எனது நண்பர்கள் பல்ர் கூத்து ஆட ஆசை பட்டு ஆட, பாட முடியாமல் போனது. நான் ஒதுங்கி இருந்துவிட்டேன் கூத்து ஆடும் ஆசையை விட்டு. ஆட, பாட தெரியும் இருந்தும்.... சில நண்பர்கள் இந்த ஆசையால் முக்குடை பட்டதும் உண்டு. ஒரு நண்பர் எங்களுடன் கதைப்பதே எங்களுக்கு விளங்குவதில்லை அவருக்கும் ஆசை வந்துவிட்டது. அவரிடம் பல தடவை சொல்லியும் கேட்கவில்லை. சரி என்று விட்டு விட்டோம். ஊர் மக்களே திரண்டு இருக்கின்றனர். அவரோ கலரிக்கு வருகின்றார். எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக்காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இவருக்கு வழங்கப்பட்ட பாடல் "கரடிகள் கூட்டமே கதறிக்கொண்டு ஓடுதே" அவரோ பாடினார் கதடிகள் கூத்தமே கததிக்கொண்டு ஓதுதே. எல்லோரும் சிரித்து விட்டார்கள் பல தடவை சொல்லிப்பார்த்தார்கள் அவரால் முடியவில்லை மூக்குடை பட்டதுதான் மிச்சம்.
பக்கப்பாட்டு பாடுபவர்களோ சற்று உற்சாகமாகவே இருப்பார்கள் அவர்களுக்கு ஆரம்பத்திலே உற்சாக பானம் வழங்கப்பட்டு இருக்கும் உற்சாக பானம் வழங்கினால்தான் அன்று கூத்து களை கட்டும்.
எல்லோரும் கூத்து பார்க்க வருவார்கள் எங்களை போன்ற சில நண்பர்கள் வருவது கூத்து பார்க்க அல்ல அங்கெ வருகின்ற இளம் பெண்களை பார்ப்பதற்குத்தான். இளம் பெண்கள் மட்டும் சும்மாவா. இருப்பாங்க அவங்க கண்ணாலேயே நம்ம பசங்கள கவிள்கிரவங்க இல்லையா.
இந்த நாட்கள் பல காதலர்களை சேர்த்து வைத்து இருக்கின்றது. நம்ம நண்பர்கள் பல பெண்களிடம் திட்டு வாங்கியதும் உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நம்ம தெரு நாய்களுக்கும் நித்திரை இல்லை எல்லோரையும் வெருட்டுவதிலே பொழுது போய்விடும்.
என்னும் பல நினைவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். நம் கலைகள் புத்துயிர் ஊட்டப்பட வேண்டும் என்பதே உண்மை.
3 comments: on "காலம் மாறிப் போச்சு"
இப்பவும் கூத்து இருக்கா சந்ரு ?
அஹா சுவாரஸ்யமாக இருக்கும் போலவே. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
விஞ்ஞான முன்னேற்றங்கள், ஊடகங்கள் இல்லாத காலத்தில் இருந்த கூத்தை இப்போது இந்த நாளிலும் எதிர்பாப்பது நியாயமா சந்ரு..?
Post a Comment