Wednesday 19 May 2010

யாழ்தேவி இலங்கைப் பதிவர்களுக்கான திரட்டி அல்ல

இலங்கை வலைப்பதிவர்களின் பதிவுகளின் திரட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற யாழ்தேவி திரட்டி உண்மையாகவே இலங்கைப் பதிவர்களின் திரட்டியா? சில நடவடிக்கைகளைப் பார்க்கின்றபோது அது ஒரு சிலரின் நலனுக்காக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது.

இந்தத் திரட்ட்டியானது வாரம் ஒரு பதிவரை நட்சத்திரப்பதிவராக அறிமுகம் செய்து அடைத்த வாரத்தில் தினக்குரல் பத்திரிகையில் அப்பதிவர் தோழர்பாக அறிமுகம் செய்கின்றார்கள் இது வரவேற்கத்தக்க விடயமே.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பல பதிவர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் எந்தத் திரட்டிகளிலுமே இணைப்பதில்லை அது வேறு விடயம். ஆனால் யாழ்தேவியில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே நட்சத்திரமாக தெரிவு செய்யப்படுகின்றனர்.

யாழ்தேவியில் பதிவு செய்யப்பட்ட பதிவர்கள் அனைவரும் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டுவிட்டனரா? இன்னும் எத்தனையோ பதிவர்கள் நட்சத்திரமாக பதிவு செய்யப் படாமல் இருக்கின்றனர்.

அது ஒரு புறமிருக்க சில பதிவர்கள் இரண்டு, மூன்று வாரங்கள் நட்சத்திரப் பதிவராக அறிமுகம் செய்யப்படுகின்றனர். இதற்கான காரணம் என்ன? பல பதிவர்கள்  இதுவரை தெரிவு செய்யப்படாமல் இருக்கின்றபோது ஒரு சிலருக்கு மாத்திரம் ஏன் இரண்டு ,மூன்று வாரங்கள் நட்சத்திரப் பதிவராக இருக்க வேண்டும்.

நான் நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் தினக்குரலில் அறிமுகம் செய்யப்படாமைக்கான காரணம் என்ன? இன்று எனது பதிவுகளை யாழ் தேவியில் இணைக்க முடியாமல் இருக்கின்றது ஏன் இந்த பாகுபாடு?  எனது பிரட்சினைகள் இங்கே

எனக்கு மட்டுமல் சிதறல்கள் ரமேஸ்க்கும் இதே நிலைதான அவரது வலைப்பதிவையும் யாழ்தேவியில் இணைக்க முடியாதுள்ளது. அவர் சில காலம் அரசியல் சார்ந்த பதிவுகளை இட்டார்.  அதன் பின்புதான் அவரால் பதிவுகளை இணைத்துக் கொள்ள முடியவில்லை.

யாழ்தேவியில் அரசியல் சார்ந்த பதிவர்களை இணைத்துக் கொள்வதில்லையா? அப்படியானால்  எத்தனையோ அரசியல் சார்ந்த பதிவர்கள் யாழ்தேவியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்களே?

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "யாழ்தேவி இலங்கைப் பதிவர்களுக்கான திரட்டி அல்ல"

கோபி said...

யாழ் தேவியின் ஏமாற்று வேலைகளை வெளிப்படுத்தும் துணிவு உங்களுக்கு மட்டுமே இருக்கிறது

சரவணன் said...

இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கிறதா யாழ்தேவி

ரவி said...

இவ்வாறான திரட்டிகளை புறக்கணிக்க வேண்டும்

Anonymous said...

உங்களுக்கு வேறு திரட்டியே இல்லையா

vaamanan said...

யாழ்தேவியின் மானம்கெட்ட பிழைப்பு

Ezil said...

யாழ்தேவி என்ற பெயரிலேயே அதன் சுயரூபம் தெரிகிறது என்று முதல் சந்திப்பிலேயே மூத்தவர்கள் கூறும்போது யாரும் கேக்கவில்லை

Anonymous said...

உண்மையை வெளிக்கொண்டுவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

Ramesh said...

உண்மையில் நான் யாழ்தேவியில் இணைக்கும் போது wait என்றுதான் தொடர்ந்து வந்தது. எனது நேரத்தை வீணடிப்பதாக நினைத்தேன். அதால அந்த கருவிப்பட்டையை நீக்கி விட்டேன் பல நண்பர்கள் கேட்டார்கள் நான் சொன்ன பதில் இதுவே. இதினால் இந்தகருவிப்பட்டைமேல் கருதிக்கொள்ள தேவையில்ல என நினைக்கிறேன் இதுபற்றி ஆதிரையும் பதிவிட்டிருக்கிறார். ஆக வேறு திரட்டிகளில் நீங்கள் இணைக்க முடிந்தால் நல்லது அலட்டிக்கொள்ளத்தேவையில்ல

தமிழன் தாயகத்திலிருந்து said...

உங்களின் கருத்து வரவேற்கத்தக்கது. நானும் அந்த திரட்டியில் இணைவற்காக எனது தகவல்களை கொடுத்தேன், அப்போது அவர்கள் எனது தொலைபேசி இலக்கங்களைக்கேட்டார்கள். அதனால் நான் பின்வாங்கிவிட்டேன். ஏனெனில் நான் தமிழர்கள் சார்ந்த விடயங்களை எனது பதிவில் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றேன், மற்றும் சில வி.பு களைப்பற்றிய பதிவுகளையும் எழுதுவதால் எனக்கு சிலவேளை பிரச்சினைகள் வரலாம் என்பதால் நான் பிறகு முயற்சி செய்யவில்லை.

Anonymous said...

உண்மைதான் நண்பா ....அதில் இணைவதற்கு பலர் வேண்டுகோள் விடுத்தும் இணைக்கவில்லை ஆனால் தமக்கு முக்கியமான நெருக்கமானவர்களை மட்டும் உடனே இணைத்து நட்சத்திர பதிவரும் ஆக்குவார்கள் ..விடுங்க ..எல்லாம் தமிழ்ருக்கே உரித்தான நாய்க்குணங்கள்....

Post a Comment