Friday 7 May 2010

ஊதுகுழலாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள்

இன்று இலங்கையிலே இருக்கின்ற பல தமிழ் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான பக்க சார்பான  விடயங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலை அச்சு, இலத்திரனியல் இரு ஊடகங்களிலும் இருக்கின்றது. ஒரு ஊடக நிறுவனமோ,  ஊடகவியலாளனோ  நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால் இன்று பக்க சார்பின்றி எத்தனை ஊடக நிறுவனகள், ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள்?

ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு தலைவரை சார்ந்து செயட்படுகின்ற பலர் இருக்கின்றனர். இது ஊடக தர்மமல்ல. ஒரு கட்சியை அல்லது ஒரு தலைமைத்துவத்தை சார்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காக உண்மைகளை மறைத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற அல்லது உண்மைகளை வெளியிடத் தயங்குகின்ற பல ஊடகங்கள் இருக்கின்றன.

சின்ன, சின்ன விடயங்களுக்கெல்லாம் பக்கம், பக்கமாக எழுதுகின்ற, பல தடவை ஒளி, ஒலிபரப்பு செய்கின்ற சில ஊடக நிறுவனங்கள் சில முக்கிய விடயங்களை வெளியிடுவதிலே தயக்கம் காட்டுகின்றன. ஏன் இந்த நிலை?

சில தமிழ் ஊடகங்கள் பக்கம் சார்ந்து செயத்படுகின்றன என்பதனை எவராலும்  மறுக்க முடியாது. இன்று நடைபெறுகின்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது இது புலனாகின்றது.

இன்று கிழக்கு மாகாண சபை மூலம் பல்வேறு பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டு  வருகின்றது. மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், உதவிகள் என்று நாள்தோறும் பல்வேறுபட்ட சேவைகள் மக்கள் நலனுக்காக செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவைகளைப் பற்றி பேசாத பல ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான நடைபெறாத  விடயங்களையும். பொய் பிரசாரங்களையும் மேட்கொள்வது ஏன்? மாகாண சபை மூலமாக, அல்லது முதலமைச்சரால்   மக்களின் நன்மை கருதி ஒரு வைத்திய முகாம் செய்தால் கூட அதனை மக்களுக்கு தெரியப்படுத்துவதட்கு கூட சில ஊடக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

இன்று கிழக்கு மாகாணத்திலே பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேட் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த அபிவிருத்தித் திட்டங்களைக் கூட பொய்யான தகவல்களாக வெளியிடுகின்ற பல ஊடகங்கள் இருக்கின்றன, பல இணையத் தளங்கள் இருக்கின்றன.

அந்த ஊடக நிறுவனங்களிடமும், இணையத்தள உரிமையாளர்களிடமும் கேட்கின்றேன் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைவது பிடிக்கவில்லையா? இன்று தமிழர்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரேயொரு உரிமை கிழக்கு மாகாண சபை மட்டுமே. கிழக்கு மாகாண சபை மூலமாக எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் செய்யப்படுகின்றன என்பதனை நேரில் வந்து பார்த்துவிட்டு பேசுங்கள். உண்மைகளை மறைக்காதீர்கள்.

பல காலமாக அபிவிருத்தி இன்றி இருக்கின்ற எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு செயட்பட்டுக்கொண்டிருக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். ஆனால் ஊடகங்கள் என்ன சொல்கின்றன உண்மைக்கு புறம்பான பொய்களை  எழுதிக் கொண்டிருக்கின்றன.

இன்று சில விடயங்களுக்கு அரசாங்கத்தோடு சேர்ந்துதான் போகவேண்டி இருக்கின்றது. அப்போதுதான் கிழக்கு மாகாணசபை மூலமாக எமது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதற்காக ஊடகங்கள் எதனையும் எழுதிவிட முடியாது. தமிழீழம், தமிழீழம் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியே இன்று அரசாங்கத்தோடு சேர்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்று தொட்டு இன்றுவரை எத்தனை வட பகுதி தமிழர்கள் ஆளும் கட்சியோடு இருந்திருக்கின்றார்கள். அப்போது அவர்களை தமிழின துரோகி என்று யாராவது சொன்னார்களா? அல்லது இன்று அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்தவும் தயாராக இருக்கின்ற தமிழரசுக் கட்சியினருக்கு தமிழினத் துரோகி பட்டம் யாராவது வழங்கினார்களா?

உண்மைகளை உண்மையாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் உண்டு. அதனைவிடுத்து ஒரு கட்சி சார்ந்தோ, ஒரு தலைவர் சார்ந்தோ செயற்படுவதை தவிர்ப்பது நல்ல விடயமே.

நான் இதனை எழுதியதனால் நீங்கள் தமிழின துரோகி பட்டம் வழங்குவீர்கள். பிரதேச வாதம் பேசுகின்றான் என்பீர்கள். உண்மைகளை எழுத வேண்டும் உண்மைகளை எழுத நான் ஒருபோதும் தயங்கியவன் அல்ல.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "ஊதுகுழலாக செயற்படும் சில தமிழ் ஊடகங்கள்"

Anonymous said...

Ha Ha You are a traitor

என்.கே.அஷோக்பரன் said...

போற்றுவார் போற்றற்றும்.... புழுதி வாரித் தூற்றுவார் தூற்றற்றும்... உங்களுக்குச் சரியெனத் தெரிவதைத் தயங்காமல் சொல்லுங்கள்! நீங்கள் சொல்வதில் யாரும் பிழை கண்டால் அவர்களும் தங்கள் கருத்தினைச் சொல்லட்டும்! கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம்!

தமிழன் said...

பிள்ளையானின் கொ.ப.சே?

இனி முழு நேர அரசியல் பதிவரா மாறுங்கோ.

அதுசரி அப்ப கருணா,பிள்ளையான் எல்லாம் தமிழினப் பற்றாளர்கள்?
வன்னி,வடக்கு,கொழும்பு எல்லாத்தையும் விட்டிட்டு நீங்கள் தனியாத் தான் நிற்கப் போறீங்கள்?

பிள்ளையான் பெரிய சேவை செய்யிறவர் என்றால் ஏன் இந்த முறை பொதுத் தேர்தலில் மக்கள் ஒட்டுமொத்தமா மக்கள் அவரை நிராகரித்தார்கள்?

சும்மா போய் உமது வேலையைப் பாரும்..

-தமிழன்-

இன்னொரு தமிழன் said...

//கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம்//

ஹீ.... ஹா.... ஹூ...
எந்த உலகத்திலே இருக்கிறீங்கள்.

இவர் சார்ந்த கட்சியின் கொள்கை
கருத்துக்களை கடத்தல்களால் எதிர்கொள்வோம்.

tharshan said...

// தமிழன் கூறியது...//


முதலில் தமிழரசுக் கட்சியினருக்கே தமிழின துரோகி பட்டம் வழங்க வேண்டும்.

தமிழீழம், தமிழீழம், தேசியத் தலைவர் என்றெல்லாம் வீர வசனம்பேசி எமது மக்களை அழித்தவர்களுக்கே வழங்க வேண்டும்.

கடந்த கால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனை தமிழ் தலைவர்கள் அழித்தொழிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகும்.

எனது வலைப் பதிவிலே எழுதப் படுகின்ற மறைக்கப் பட்ட துரோகங்கள் எனும் தொடரை வாசித்துப் பாருங்கள் யார் துரோகி என்பது தெரியும்.
www.muthalvarone.blogspot.com

tharshan said...

தமிழினப் பற்றாளர்கள் யார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். கடந்த கால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள் யார் பற்றாளர்கள் யார் துரோகிகள் என்பது புரியும்.

கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, எமது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்று இன்று ஒரு அரசியல் கட்சியாக மக்களின் நலனுக்காக உழைக்கின்ற ஒருவராக பிள்ளையான் இருக்கின்றார்.

கிழக்கு மக்கள் ஒரு போதும் வடக்கு தலைமைகளால் புறக்கணிக்கப்படவில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். தேர்தல் தவிர்ந்த எப்போதாவது தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் மட்டக்களப்புக்கு வந்திருக்கின்றார்களா?

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்றார் என்பதற்காக நாம் எதனையும் சொல்லிவிட முடியாது துரோகி பட்டம் வழங்கி விடவும் முடியாது. அப்படியானால் முதலில் தமிழரசுக் கட்சியினருக்கே தமிழின துரோகி பட்டம் வழங்க வேண்டும்.

தமிழீழம், தமிழீழம், தேசியத் தலைவர் என்றெல்லாம் வீர வசனம்பேசி எமது மக்களை அழித்தவர்களுக்கே வழங்க வேண்டும்.

கடந்த கால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனை தமிழ் தலைவர்கள் அழித்தொழிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகும்.

எனது வலைப் பதிவிலே எழுதப் படுகின்ற மறைக்கப் பட்ட துரோகங்கள் எனும் தொடரை வாசித்துப் பாருங்கள் யார் துரோகி

tharshan said...

www.muthalvarone.blogspot.com

Anonymous said...

தமிழன் என்று போலியாய் கூறிக் கொண்டு கருத்துரைத்த அன்பரே பிள்ளையானை மக்கள் ஒதுக்கியுள்ளனர் என்று கூறுவது உன் மனதுக்கு சரியான விடையமாக படுமானால் நீர் ஒரு அரசியல் பகுத்தறிவு இல்லாத ஜென்மமடா. 60 வருடங்களாக தேசிய உணர்வுகளை கொட்டி தேய்வடைய வைத்த மக்களில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் 60 வீதத்தக்கு அதிகமான மக்கள் 2வருட காலத்தில் மாற்றமடைந்தது உன் அரசியல் ஞானத்தில் படவில்லை பேலும் குறிப்பாக கல்குடா தொகுதி வாக்களிப்பு விபரம் உன் கையில் இருப்பின் மாற்றத்தை நன்கு உற்றுப்பார்.
-நானும் தமிழன்-

நானும் தமிழன். said...

தமிழன் என்று போலியாய் கூறிக் கொண்டு கருத்துதரைத்த அன்பரே பிள்ளையானை மக்கள் ஒதுக்கியுள்ளனர் என்று கூறுவது உன் மனதுக்கு சரியான விடையமாக படுமானால் நீர் ஒரு அரசியல் பகுத்தறிவு இல்லாத ஜென்மமடா. 60 வருடங்களாக தேசிய உணர்வுகளை கொட்டி தேய்வடைய வைத்த மக்களில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் 60 வீதத்தக்கு அதிகமான மக்கள் 2வருட காலத்தில் மாற்றமடைந்தது உன் அரசியல் ஞானத்தில் படவில்லை பேலும் குறிப்பாக கல்குடா தொகுதி வாக்களிப்பு விபரம் உன் கையில் இருப்பின் மாற்றத்தை நன்கு உற்றுப்பார்.
நானும் தமிழன்.

Anonymous said...

தமிழன் என்று போலியாய் கூறிக் கொண்டு கருத்துதரைத்த அன்பரே பிள்ளையானை மக்கள் ஒதுக்கியுள்ளனர் என்று கூறுவது உன் மனதுக்கு சரியான விடையமாக படுமானால் நீர் ஒரு அரசியல் பகுத்தறிவு இல்லாத ஜென்மமடா. 60 வருடங்களாக தேசிய உணர்வுகளை கொட்டி தேய்வடைய வைத்த மக்களில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் 60 வீதத்தக்கு அதிகமான மக்கள் 2வருட காலத்தில் மாற்றமடைந்தது உன் அரசியல் ஞானத்தில் படவில்லை பேலும் குறிப்பாக கல்குடா தொகுதி வாக்களிப்பு விபரம் உன் கையில் இருப்பின் மாற்றத்தை நன்கு உற்றுப்பார்.
நானும் தமிழன்.

இன்னொரு தமிழன் said...

//கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, எமது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்று இன்று ஒரு அரசியல் கட்சியாக மக்களின் நலனுக்காக உழைக்கின்ற ஒருவராக பிள்ளையான் இருக்கின்றார்.//

கருணாவும் உதைத்தானே சொல்லி வந்தவர். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் என்ன பிரச்சினை???


//எனது வலைப் பதிவிலே எழுதப் படுகின்ற மறைக்கப் பட்ட துரோகங்கள் எனும் தொடரை வாசித்துப் பாருங்கள் யார் துரோகி//

நல்லது.... மட்டக்களப்பில் கடத்திக் கொலை செய்யப்பட்ட மாணவியின் கதையையும் எழுதுவீர்களா??

//கடந்த கால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனை தமிழ் தலைவர்கள் அழித்தொழிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகும்.//

மட்டக்களப்பு பல்க்லைக்கழகத் துணைவேந்தர் எங்கு போனார்?

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியாகவும் ,வெளிப்படையாகவும் சொல்லி இருக்கிறீர்கள் . சிறப்பான பதிவு தொடருங்கள் . பகிர்வுக்கு நன்றி !

விருத்தி said...

தமிழன் என்று கூறி கருத்தச் சுதந்திரத்தை பிழையாக பயன்படத்தியுள்ள அன்பரே உங்கள் கருத்தை சற்று திருத்தி கொள்ளவும். பிள்ளையானை மக்கள் ஒதக்கிவிட்டது என்றால் உனக்கு பூரண அரசியல் தெரியாமல் வாய்க்கு வந்தபடி கருத்தக்களை பரிமாறவேண்டாம். 60 வருடமாக தேசியம் பேசி அழிவடைய வைக்கப்பட்ட மக்களில் இன்று 60 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் தமக்கு தேவை தேசியம் அல்ல நிம்மதியும் அபிவிருத்தியுமே என்பதை வெளிப்படத்தியுள்ளமை உமக்கு புரியவில்லையோ குறிப்பாக மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதி உமக்கு இந்த கருத்தை உதாரணப்படத்தும்.

tharshan said...

////இன்னொரு தமிழன் கூறியது...
//கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் புறக்கணிக்கப்பட்டபோது, எமது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் என்று இன்று ஒரு அரசியல் கட்சியாக மக்களின் நலனுக்காக உழைக்கின்ற ஒருவராக பிள்ளையான் இருக்கின்றார்.//

கருணாவும் உதைத்தானே சொல்லி வந்தவர். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் என்ன பிரச்சினை???////

இங்கே கருணாவைப் பற்றி இந்த பதிவிலே குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் உங்கள் கேள்விக்கான பதில் தருகிறேன். கருணாவின் நோக்கம், கொள்கை வேறு, பிள்ளையானின் நோக்கம் கொள்கை வேறு.

விடுதலைப் புலிகள் அமைப்பிலே இருந்து கருணாவோ, பிள்ளையானோ பிரிந்து வந்ததற்கான காரணம் வடக்கு தலைமைகளால் கிழக்கு மாகாண மக்கள் புறக்கணிக்கப் பட்டதே.

வடக்கு தலைமைகளால் கிழக்கு மாகாண மக்கள் புறக்கணிக்கப்பட்டபோது. கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தனியான அரசியல் கட்சி வேண்டும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் வேண்டும் என்று பிரிந்து வந்தவர்கள்தான் கருணாவும், பிள்ளையானும்.



ஆனால் என்ன நடந்தது தான் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்ததன் நோக்கத்தை மறந்து கருணா செயற்பட ஆரம்பித்தார். அதனால்தான் பிள்ளையான் கருணாவில் இருந்து பிரிந்து. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒரு கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் மக்களுக்காக சேவையாற்றுகின்றார்.

இன்னொரு தமிழன் said...

மட்டக்களப்பில் கல்குடா தொகுதி மட்டும்தானா தேர்தல் தொகுதி?

கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒருவரையேனும் மக்கள் பிரதிநிதிகளாக பெற வக்கற்றவர்கள் தூக்கிக் கொண்டு வருகினம். பேசாமல் போய் வேலையைப் பாருங்கையா.

மக்கள் பிள்ளையானின் கட்சியை புறக்கணித்து விட்டதை தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

Anonymous said...

http://www.dailymirror.lk/index.php/news/3635-epc-rejects-fraud-claims.html

aaka makkalukku sevai seiraangappa

Anonymous said...

சிங்களனுக்கு அடிபனிவதில் இவ்வளவு போட்டியா? குலத்தளவே ஆகுமாம் குணம் என்று பெரியோர்கள் தெரியாமலா சொல்லிவைத்தார்கள். காட்டிக் கொடுத்த துரோகிகள்.

Post a Comment