Monday 17 October 2011

சிறப்பான முறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் தமிழ் இலக்கிய விழா கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவானது இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கல் நிகழ்வு நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு மட்/மகாஜனக் கல்லூரியின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார்;. அத்ஆதாடு இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்களை கொளரவிக்கும் நிகழ்வும் இவ் அரங்கில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு உரையாற்றும் போது,.



கிழக்கு மாகாணத்திற்கென்று தனித்துவமான கலை, பண்பாடு, இலக்கியம்சங்கள் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் எமது பண்பாட்டுடன் பின்;னி பிணைந்து இருக்கின்ற கலை இலக்கிய அம்சங்களை பேணி பாதுகாப்பதற்கு இது போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகள் ஓர் ஆரம்பமாகும். கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் பண்பாட்டு கலை சார்ந்த விரும்பிகளையும் இவ்வாறான நிகழ்வின் ஊடாக நாம் முன்னிலைப்படுத்தி கௌரவிப்பது கிழக்குமாகாணத்தில் பிறந்த ஒவ்வொருவருக்குமுரிய கடமையாகும்.




பண்பாட்டுடன் கூடிய கலையம்சங்களை பேணி பாதுகாப்பதென்பது இலக்கிய படைப்பாளிகளின் பொறுப்பு மாத்திரம் அல்ல. அவ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை, இலக்கிய துறையில் ஆர்வம் காட்டுகின்ற ஒவ்வொருவரினது தேவையாகும். காலத்தின் கட்டாய தேவை உணர்ந்தும் தமிழருக்கான இலக்கிய பாரம்பரியம், கலாச்சார விழுமியங்கள் என்பது தொன்றுதொட்டு வளர்க்கப்பட்டதொன்றாகும். இவ்வாறாக வளர்க்கப்பட்டு வந்த எமது மக்களின் அரும்பெரும் பொக்கிசமாக விளங்குகின்ற இக் கலையம்சங்களை தொடர்ந்தும் நாம் பேணி பாதுகாப்பதற்கு களம் அமைக்க வேண்டும். 

பாரம்பரிய உள்ளுர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதனூடாக மறைந்த எமது கலையம்சங்களை இளம் தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கோடிட்டுக்காட்ட முடியும். எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சமாதான சூழலிலே கிழக்கு மாகாணத்திலே பிறந்த ஒவ்வொரு இலக்கிய துறையினருக்கும் எம்மாலான இயன்ற பணிகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும். எனவும் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கே.பத்மராஜா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இலக்கிய திறனாய்வாளர்கள், பண்பாட்டலுவல் திணைக்கள பணிப்பாளர், மற்றும் கலாசார உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.



 இலக்கிய விழாவில் இறுதி நாளான நேற்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கலையரங்கில் 3இனங்களின் கலாச்சாரத்தை  பிரதிபலிக்கின்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சர் விருதுபெற்ற கலைஞர்களின் விபரம் 


திருகோணமலை மாவட்டம்:

1. அபுசாலி மீராமுகைதீன் - பல்துறை
2. தேவசகாயம் நந்தினி சேவியர் - ஆக்க இலக்கியம்
3. மு.பத்மநாத சர்மா - சிற்பம்
4. ஆ.அரசரெத்தினம் - பல்துறை


மட்டக்களப்பு மாவட்டம்:

1. அசோகாதேவி யோகராசா - கவிதை
2. அ.அரசரெத்தினம் - ஆக்க இலக்கியம்
3. உமாதேவி கனகசுந்தரம் - சாஸ்திரீய நடனம்
4. எஸ்.பி. பொன்னம்பலம் - ஆக்க இலக்கியம்


அம்பாறை மாவட்டம்:
1. திருமதி யோ.யோகேந்திரன் - சிறுகதை
2. அலியார் பீர்முகமது - கவிதை
3. எஸ்.அப்துல் ஜலீல் - ஓவியம்
4. க.யோன்ராஜன் - ஊடகம்


2010 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நூல் பரிசுப் போட்டியில் பரிசுபெற்ற நூல்கள்

1. எஸ் ..அரசரத்தினம் - "சாம்பல் பறவைகள்" -நாவல்
2. திருமதி ஆ.சின்னத்துரை - "நீலாவணன் காவியங்கள்"- காவியம்
3. செல்லில்லிதாசன் - "செம்மாதுழம்பூ"- கவிதை
4. அ.தி.மு.வேலழகன் "செங்கமலம்"- கவிதை
5. ச.அருளானந்தம் – "இசையோடு அசைபோடுவோம்"- சிறுவர் பாடல்கள்
6. ச.அருளானந்தம் –"சின்னஞ்சிறு கதை" -சிறுவர் சிறுகதை
7. ஓ.கே.குணநாதன் – "பறக்கும் ஆமை"- சிறுவர் நாவல்

8. பால.சுகுமார் – "கொட்டியாரம்"- இலக்கிய ஆய்வு










Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "சிறப்பான முறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா"

ம.தி.சுதா said...

சிறப்பான நிகழ்வுத் தொகுப்பு ஒன்று..

நன்றி சகோதரா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

மாலதி said...

ஓர் சிறந்த படைப்பு தமிழர்களின் பண்பாட்டில் இருந்துதான் விடியலுக்கான தேடலை தொடங்க வேண்டும் என்பது எமது எண்ணம் காரணம் பண்பாட்டை மீட்டெடுப்பது என்பது தமிழரின் வழ்வதரன்களை மீட்பது இரண்டும் ஒன்றில் அடங்கி இருக்கிறது என சிந்திறேன் இது தமிழக சூழலில் ஏற்புடையதாக இருக்கலாம் இலங்கை சூழல் வேறு என்பதை அறியமுடிகிறது இருந்தாலும் பண்பாடு படைப்பு பாரட்டுகள் . தொடர்க ....

Neelaavanan- நீலாவணன் said...

சந்ரு, என் தாயாரின் விருதுபெறும் படங்கள் (திருமதி நீலாவணன்) தங்கள் வசம் இருப்பின் எனக்கு மின்னஞ்சலிடுங்களேன்.

Unknown said...

கடந்த மாதம் செப்டம்பர் 28 இல் "கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதில் தில்லுமுல்லு!" எனும் தலைப்பில் ஒரு பத்தி எழுதியிருந்தேன், முடிந்தால் ஒரு தடவை வாசியுங்கள்.
http://kalamm.blogspot.com/2011/09/blog-post_28.html

Post a Comment