தமிழர் நம் வரலாறு கூறும் கதைகள் எனும் இந்த தொடர் மூலம் நமது வரலாறுகளைக் கூறுகின்ற ஒரு தொடராகவே அமைய இருக்கின்றது. என் கருத்துக்களோடு நீங்கள் உடன்படவில்லையாயின் தாரளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.
வேறொரு வலைப் பதிவிலே எழுதப்படுகின்ற விடயங்களை நான் தொகுத்துத் தருகிறேன் தமிழர் நம் வரலாறுகளின் உண்மைத் தன்மை வெளி வர வேண்டும் என்பதற்காக. உங்களது மாற்றுக் கருத்துக்களையும் எதிர் பார்க்கின்றேன். மாற்றுக் கருத்துக்களும் முட்டி மோதுகின்ற போதுதான் உண்மைகள் வெளிவரும்.
1) அறிமுகம்
அரசியல் சூழல் பற்றிய பொதுநோக்கு பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்காகவே பிறக்கின்றான். ஆனால் இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழமுடிகிறதா? வாழுகின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான போராட்டங்களிலேயே அவனது காலம் கழிகின்றதே? அதனால்தான் இந்த மனித குலத்தின் வரலாறு என்பதே போராட்டங்களின் வரலாறாக……. புரட்சிகளின் வரலாறாக…… நிரம்பிக் கிடக்கிறது.
உலகின் வரலாற்றினுடைய ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் தமக்கான சுதந்திரத்தை கொண்டுவரும் என்று எல்லா மனிதர்களும் காலம் காலமாக நம்பிக்கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றப்படுவது மட்டுமே நடந்துவருகிறது.
அதேவேளை விடுதலையை கொண்டுவருவதாக வீறு கொண்டு எழுபவர்கள் அதிகாரங்கள் தம்மிடம் வந்ததும் அவரவர்களே புதிய எசமானர்களாகவும் வலம் வரத் தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்களின் புதிய அரியாசனங்களும் மக்களின் கோபகனலிலிருந்து தப்பமுடியாது போகும் என்பதையும் வரலாறுகள் நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன.
நமது நாட்டின் கடந்த நூற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன. இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன.பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன.
இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அன்று ஆரம்பித்த இழப்பு ஆனது ஏறக்குறைய போராளிகளாக 27000 இளம் உயிர்களையும் பொதுமக்கள் 70000 பேருமாக தமிழர் தரப்பில் மட்டும் மொத்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோரை பலிகொண்டுள்ளது.கிட்டத்தட்ட 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் மிக முக்கியமான இராணுவ பலம் வாய்ந்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலை புலிகள். இந்த இயக்கத்தினது இராணுவ தந்திரோபாயங்களின் முதுகெலும்பாகவும் அமைப்பின் இரண்டாம் தலைமையாகவும் இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும்.இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்கியது.
ஐம்பது வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த “வட-கிழக்கு இணைந்த தாயகம்” என்கின்ற தமிழ் அரசியலின் உயிர் மூச்சு கோஷம் தகர்த்தெறியப்பட்டது. இதுவே எதிர்கால இலங்கையின் அரசியல் போக்கிலும் பென்னம் பெரிய மாறுதல் ஒன்றிற்கு வழிகோலியுள்ளது.மட்டக்களப்பு-அம்பாறை பிரதேசங்கள் இனிமேல் வடக்கு தலைமைக்கு கட்டுப்படாது என்று அதுவரை தன்மூச்சையே தமிழீழத்திற்கு அர்ப்பணித்து வாழ்நாள் முழுக்க உழைத்த ஒரு மூத்ததளபதி விசுவாசமான தளபதி அறிவிப்பதென்பது பலருக்கும் அதிர்ச்சியானதொன்று தான்.
அதேநேரம் கிழக்குவாழ் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அது அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும்சேர்த்தே கொடுத்திருந்ததென்பதும் நாம் கண்ணால் கண்டதே.ஏன் இப்படி நடந்தது? இது சரியானதா? எப்படி இப்படியொரு வெடிப்புக்கான நியாயங்கள் கவனிக்கப்படாமல் போனது? வெடிப்பின் பின் இதை எப்படி அணுகியிருக்க வேண்டும்? இதன் தொடர்ச்சி எங்கேபோய் முடியும்? என்கின்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதுள்ளும் மட்டுமல்ல இந்த அரசியலின் போக்கில் அகப்பட்டு தவிக்கின்ற பலரது மனதிலும் எழுந்துள்ள கேள்விகள் தான். ஆனால் இதுபோன்ற அரசியல் மாற்றங்களால் விரும்பியோ விரும்பாமலோ பாதிக்கப்படுகின்ற சாதாரண வட, கிழக்கு பிரஜைகளிடம் இவற்றுக்கான பதில்கள் கதைகதையாய் உள்ளன. ஆனால் அதற்காக வாய் திறத்தல்கள் என்பது எழுதாத சட்டங்களாக தடைசெய்யப்பட்டுள்ளன.
3 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 1"
இந்தப்பதிவின்மூலம் நிறைய எதிர்ப்புகளை சம்பாதிக்கவேண்டிவரும். அதன்மூலம் வடக்கை சார்ந்த கருத்துக்களே பிரபலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் வடக்கு கிழக்கு இருவேறு மாகாணங்கள் என்பதும் இன்னும் ஊர்ஜிதமாகும்.
இந்தப்பதிவின்மூலம் நிறைய எதிர்ப்புகளை சம்பாதிக்கவேண்டிவரும். அதன்மூலம் வடக்கை சார்ந்த கருத்துக்களே பிரபலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் வடக்கு கிழக்கு இருவேறு மாகாணங்கள் என்பதும் இன்னும் ஊர்ஜிதமாகும்.
//EKSAAR கூறியது...
இந்தப்பதிவின்மூலம் நிறைய எதிர்ப்புகளை சம்பாதிக்கவேண்டிவரும். அதன்மூலம் வடக்கை சார்ந்த கருத்துக்களே பிரபலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் வடக்கு கிழக்கு இருவேறு மாகாணங்கள் என்பதும் இன்னும் ஊர்ஜிதமாகும்.//
இந்தப் பதிவின் மூலம் பல வரலாற்று உண்மைகள் வெளிவரும் என்பது என் எண்ணம். நேர்மையான முறையிலே வருகின்ற மாற்றுக் கருத்துக்கள் தொடரிலே நான் விவாதிப்பதுக்கும் தயார்.
பலரும் வெவ்வேறு விதமான வரலாறுகளையும் ஒருவர் மெது ஒருவரும் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து உண்மை எது என்பதை அரிய வேண்டும் என்பதே எனது அவா.
மாற்றுக்கருத்துக்கள் வருகின்றபோதுதான் உண்மைகள் கருத்து மோதல்கள் மூலம் வெளிவரும்.
Post a Comment