Thursday 27 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 5

ஊ) காலனித்துவரின் வருகை

1505 ல் முதன் முதல் இலங்கையில் காலடி எடுத்து வைத்த போத்துகேயர் 1597ல் தான் கோட்டை ராச்சியத்தை தமது முழுக்கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து 1619ல் யாழ்ப்பாண ராச்சியமும் போத்துகீசர் வசம் வீழ்ந்தது.


 அதன் பின்பும் கண்டி ராச்சியம் மிகவும் பலம் பொருந்தியதாகவும் இயற்கை அரண்களான மலை, காடு போன்றவற்றால் பாதுகாக்கப்பட்டதாகவும் சுதந்திரமாக நீடித்தது. இவ்வேளைகளிலும் கிழக்கு ஆனது கண்டிராச்சியத்தின் ஒருபகுதியாகவே இருந்து வந்துள்ளது.

இவ்வேளைகளில் கண்டி ராச்சியத்தின் கிழக்கு கரையோரங்களிலிருந்த துறைமுகங்களையாவது தம்வசப்படுத்தும் முயற்சியில் போத்துகேயர் இடையறாது ஈடுபட்டனர். அவ்வேளை திருகோணமலை மட்டக்களப்பு என்பன போத்துகேயரின் ஆளுகைக்குட்பட்டனவாம். 1622ல் மட்டக்களப்பை போத்துகீசர் கைப்பற்றியுள்ளனர்.

எனினும் “விமலதருமன் மலாய் வீரர்களை அழைத்து மட்டக்களப்பால் துரத்திவிட்டு காவல்வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பை இருத்தினன்” என்கிறார் மகாவித்துவான் எவ்.எஸ்.சி.நடராஜா. 1626ல் இது நடைபெற்றிருக்கிறது எனினும் இந்த விமலதருமன் அவ்வேளை கண்டியை ஆண்டவனாயிருக்க மத்திய நகரமென்பது கண்டியை குறிக்கிறது. ஆனபோதும் தொடர்ந்தும் 1639ல் கண்டியரசனுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நிமித்தம் மட்டக்களப்பு உட்பட்ட கண்டிராச்சியத்தின் கரையோர பிரதேசங்களில் போத்துகேசர் இருந்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது. எனினும் கோட்டை ராச்சியப் பகுதியான தென், மேல் இலங்கையில் ஆளுமை செலுத்தியதைப் போன்றோ யாழ்ப்பாண ராச்சியத்தில் ஆளுமை செலுத்தியதைப் போன்றோ கிழக்குக் கரைகளில் ஆளுமை செலுத்தும் அதிகாரத்தை போர்த்துக்கேயர் பெற்று இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தகாலகட்டத்தில் ஐரோப்பா துருக்கியருடன் கொண்டிருந்த தீராப்பகை காரணமாக போத்துகீசர் இலங்கையிலிருந்த முஸ்லிம்களிடமும் வெறுப்பை கொட்டினர். தங்களது முழுமையான ஆட்சி அதிகாரம் செயற்பட்ட பகுதிகளில் முஸ்லிம்களது வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல வாழ்விடங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த முனைந்தனர். குறிப்பாக இலங்கையில் தென்மேற்கு ஊர்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இவர்களின் இன்னலுக்குள்ளாகினர். அவர்களுக்கு அபயமளித்த கண்டி மன்னன் செனரத்தன் என்பான் ஏறக்குறைய நாலாயிரம் முஸ்லிம்களை தனது ஆட்சிக்குட்பட்ட கிழக்கிலங்கையில் குடியேற்றினான். மட்டக்களப்பின் கரையோரங்களிலும் பொலநறுவை பகுதிகளிலும் இக்குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. இது1605 – 1635ம் ஆண்டுகளிற்கிடையில் நடந்திருக்கிறது. (கல்முனை) கரவாகு இராசதானி இந்த காலகட்டத்தில் அகமது மாமுன்ராசா என்பவன் ஆண்டு கொண்டிருந்தான் மட்டக்களப்பில் அப்போது நாலு குறுநில மன்னர்கள் இருந்தனர்.

1672ல் இந்த செனரதன் மன்னன் நடாத்திய ஒரு அரச நிகழ்வு முக்கியமானதொன்றாகும். அதாவது தனது மகனான குமாரசிங்க அஸ்தானாவிற்கு அரசு உரிமையை வழங்கும் வண்ணம் தனது ஆள்புல எல்லைக்குள் இருந்து அரசோற்றும் வன்னிமை தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் கண்டிக்கு அழைத்திருந்தான். இதில் கலந்து கொள்வதற்காக கொட்டியாரம் (திருகோணமலை)இ மட்டக்களப்புஇ பழுகாமம்இ பாணம ஆகிய கிழக்கு பிராந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

1762 ல் சென்னைப்பட்டினத்தில் இருந்து கண்டி மன்னனை காணவந்த பைபஸ் எனும் து}துவன் மூது}ருக்கு அண்மையிலுள்ள கொட்டியார துறைமுகத்தில் இறங்கிய போது கண்டி மன்னனின் அதிகாரிகள் அவரை வரவேற்று திருகோணமலை பொலநறுவை மாத்தளை வழியாக மன்னனின் இராஜசபைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் என்பதை பைபாஸ் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு விபரிக்கின்றான். “மூது}ர் மாவட்டத்தில் 64 கிராமங்கள் உண்டு இவையனைத்தும் 3கிராம தலைவர்களின் கீழ் இயங்கிவருகிறது. இத்தலைவர்கள் கண்டி நகரில் வதியும் (திஸாவ) தளபதியின் கீழ் இயங்குகிறார்கள்.” மேற்படி வரலாற்றுக் குறிப்புகளினு}டு இலங்கையை தனது ஆட்சிக்குட்படுத்திய போர்த்துக்கீசர்இ

ஒல்லாந்தர் காலகட்டங்களில் இன்று அமுலில் உள்ள அல்லது நாம் உபயோகத்தில் கொண்டிருக்கின்ற மாகாணம் என்கின்ற முறையமைப்புகள் இருந்திருக்கவில்லை. அவ்வேளை இருந்ததெல்லாம் ராச்சியங்களே. இதில் கிழக்கின் பகுதிகள் எல்லாம் கண்டிராச்சியத்துக்கு உட்பட்டே இருந்துள்ளது என்பதை தெளிவுபெற நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய புதிய நிர்வாக அலகுகள்1796 ல் இலங்கையின் பல பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றிய போதும் நீண்டகாலத்திற்கு கண்டி ராச்சியத்தை அவர்களால் வீழ்த்திவிட முடியவில்லை. கண்டி இராச்சியத்தை 1815ல்தான் கைப்பற்றி முடித்த ஆங்கிலேயர் அங்கு அப்போதிருந்த நிர்வாக பிரிப்புகளினு}டே தமது ஆட்சியை தொடர்ந்தனர். அதாவது இருவித நிர்வாக அலகுகள் கண்டி இராசதானியில் வகுக்கப்பட்டிருந்தன. தலைநகரோடு சேர்ந்திருந்த பகுதிகள் 9 ‘ரட்ட’ களாவும் வெளிபிரதேசங்கள் 12 திசாவனியாகவும் ஆங்கிலேயரால் கண்டி ராச்சியம் நிர்வகிக்கப்பட்டது.

ஆயினும் 1818ல் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் ஏற்பட்ட கிளர்ச்சியானது ஆங்கிலேயர் தமது ஆட்சியமைப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு உணர்த்தியது. கண்டி பிரசைகளின் தேசிய உணர்வானது ஆங்கிலேயருக்கு அச்சமூட்டியது. எனவேதான் எதிர்கால பாதுகாப்பினை உறுதிபடுத்தி கொள்வதற்காக கண்டி ராச்சியத்தை கூறு போடும் முயற்சியில் ஆங்கிலேயர் இறங்கினர்.

இதன்படி கண்டிராச்சியத்தின் து}ரப்பகுதிகளான (திசாவைகள்) அனுராதபுரத்தின் வடக்கேயிருந்த சில பகுதிகள் மற்றும் மன்னார்இ காளிதேசம் என்று அழைக்கப்பட்டு நீண்டதொரு வரலாற்று காலத்தில் தனியரசாய் திகழ்ந்த முல்லைத்தீவு போன்றவற்றை யாழ்ப்பாணத்துடன் இணைத்து வடமாகாணமாகவும்இ கண்டிராச்சியத்தின் தீகவாவி அடங்கிய மட்டக்களப்பு திருகோணமலை பகுதிகளை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணமாகவும் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு ஆங்கிலேயர் கண்டியை பலமற்றதாக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் இவ்விரு (வடக்குஇ கிழக்கு) மாகாணங்களையும் தமிழ் மாகாணமாக அடையாளப்படுத்தினர். இதுதான் வரலாற்றில் முதற்தடவையாக (தமிழ் மாகாணங்கள் என்றவகையில்) வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாய் இருந்தபோதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அதன் தனித்துவங்கள் பேணப்பட்டன என்பதையும் இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே பெயரிடல் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

அதன்பின்பும் கூட 1848 ல் மற்றுமொரு கலகம் ஆங்கிலேயருக்கு எதிராக கண்டியில் உருக்கொண்டது. அதன்பின்பே இன்று கண்டியரசை (மத்தியமாகாணத்தை) சிதைக்கும் நோக்கில் ஊவாமாகாணம், சப்ரகமூக மாகாணம் என்பனவெல்லாம் உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும் கண்டி ராச்சிய பிரசைகளின் தேசிய உணர்வு குறித்து வெள்ளையர் கொண்டிருந்த அச்சம் போன்ற விபரங்களும் 1852 இங்கிலாந்து பாராளுமன்ற ஆவணத்தின் 26 ம் பிரிவில் விரிவாக கூறப்பட்டுள்ளன.இப்படி காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய எல்லைகளும் 9 வகை மாகாணபிரிப்புகளுமான இலங்கையைத்தான் சுதந்திரமடைந்த 1948ம் ஆண்டு நாம் கையேற்று கொண்டோம் என்பதை பலவித மீளாய்வுகளுடனும் நாம் நோக்க வேண்டியுள்ளது

தொடரும்...

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 5"

RJ Dyena said...

innum ethirpaarkirom....

vaazhthukkal

Post a Comment