Tuesday 25 May 2010

தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 3


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கிழக்கிலங்கை தனது பூர்வீக குடிகளை கொண்டிருக்கிறது. இங்கு இன்றுவரை காணப்படும் புராண இதிகாசங்களில் விபரிக்கப்படுகின்ற இராவணனாட்சியின் தடயங்கள் அதற்கு சான்று பகர்கின்றன. இராவணனது இரு முக்கிய வணக்கஸ்தலங்களான உகந்தமலையிலும், திருகோணமலையிலும் உள்ள ஆலயங்கள் இக்கிழக்கு மாகாணத்தின் இரு முனைகளிலும் காணப்படுபவை. இராவணன் கோட்டையின் இடிபாடுகளை கொண்ட எச்சங்கள்கூட திருக்கோயிலை அண்டியுள்ள வங்க கடலினுள் காணப்படுகிறது.உலகின் எப்பகுதியாய் இருந்த போதிலும் நதிக்கரையோரங்களே மனித இனம் தோன்றி வளர்வதற்கு வாய்ப்பான இடங்களாகவும், நாகரிகங்களின் தோற்றுவாய் ஆகவும் இருந்து வந்துள்ளது. இலங்கையை பொறுத்தவரை கதம்மைநதி, களனிகங்கை, மாணிக்ககங்கை போன்றவையே ஆதிக்குடிகளின் முக்கிய தோற்றுவாய்களாகும்.

எழுத்துருவில் நாம் காணக்கிடைக்கின்ற இலங்கையின் வரலாறு கூறும் முதன்மை நு}ல் மகாவம்சம் ஆகும். பாளியை மூலமொழியாக கொண்ட இந்நு}ல் கி.பி. 5ம் நு}ற்றாண்டில் தான் எழுதப்பட்டுள்ளது. இது கூறும் வரலாறு கூட கி.மு.543ம் ஆண்டு விஜயனின் வருகையுடனே ஆரம்பிக்கின்றது. அவனது வருகையின்போது இலங்கையில் இயக்கர் நாகர் எனும் இருவகை பழங்குடிகள் இருந்ததாகவும் அதில் இயக்க குலதலைவியான குவேனியை விஜயன் மணந்ததாகவும் மகாவம்சம் கூறுகின்றது. இந்த மணவாழ்வின் பரம்பரையினர்தான் இன்றைய சிங்களவர்களாகும். நாகர்களின் வழித்தோன்றல்களே தமிழர்களாகவும் அறிகின்றோம். ஆனாலும் இரவணனாட்சி ஆரிய ராமனின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட பின்பு இராவணனின் தம்பி விபீடணன் இலங்கையை ஆண்டபோதும் அதன்பின்பான நீண்டதொரு காலத்தின் வரலாறு குறித்த புராணங்களோ இதிகாசங்களோ எம்மிடமில்லை. சிலவேளை “கடல்கொண்ட லெமூரியா”எனும் பேரழிவின் அனத்தம் அதிலிருந்து கடல்கொள்ளாது தப்பிக்கிடந்த இலங்கைத் தீவினை வரலாறு அற்ற வெற்றுத்தரையாய் மாற்றியிருக்கலாம். ஏனெனில் இன்று நமக்கு கிடைக்கும் வரலாறுகள் எல்லாம் சொல்லும் இலங்கையின் ஆதிகுடிகளான இயக்கர் நாகர் என்போரும் இந்தியாவிலிருந்து தான் வந்ததான ஒருபாடல் மட்டக்களப்பு மான்;மீக கல்வெட்டில் கீழ்வருமாறு காணப்படுகின்றது.


‘அன்னிய நாகர் கூடி அத்தி நாடதனால் மீண்டு வன்றிற விலங்கை சேர்ந்து வாழ்ந்தனர் கலி எண்ணு}றில்’கலியாண்டு 800 என்பது கிட்டத்தட்ட கி.மு. 2389 ஆகும். இதன்பிறகு “நாகரே ஆயிரத்து நானு}று ஆண்டு மட்டும் பாகமா யிலங்கையாள பரு நேர்குலச்துச் சிங்க வாகுவிதவத் தாயீன்ற மகவெனும் விசயன் தந்தை வேகமேகண்டு நொந்து விறல் நகர் மறைந் தொழித்தான்’ என விஜயன் வரவுவரை நாகர் ஆட்சியை விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீகம் எனும் பழம்பெரும் நூல். அதேபோன்று திமிலர் எனப்படும் இயக்கர்களைப் பற்றி கூட கீழ்வருமாறு அந்நூலில் அறியமுடிகிறது. “ஆதியிலேயே தென் இந்தியாவில் திமிலர் எனும் ஒரு சாதியினர் வாழ்ந்து வந்தனர்.

அவர்தம் தொழில் மீன்பிடித்தலாகும். அவர் இலங்கையில் குடியேறி மட்டக்களப்பை அடைந்த போது அஃது தம் தொழிலுக்கு வாய்ப்புடையதெனக் கண்டு அரண்செய்து தம் தொழிலை செவ்வனே புரிந்து வந்தனர்.” என்கிறார் மூதறிஞர் எவ்.எக்ஸ்.நடராஜா அவர்கள். இந்த இயக்க குலப் பரம்பரையில் வந்த குவேனியையே விஜயன் மணம் புரிந்தான்.

குவேனிக்கு அடுத்ததாக தனது இரண்டாவது மனைவியை பாண்டி நாட்டிலிருந்து அழைத்து கொண்ட விஜயன் தனது 700 தோழர்களுக்குமான மணப்பெண்களையும் அங்கிருந்தே தருவித்திருக்கின்றான். இந்த பாண்டியர்குல பெண்களையெல்லாம் இந்த கிழக்கு பகுதியிலேயே குடியேற்றியதாக மகாவம்சம் கூறுகிறது. அதாவது பாண்டிநாட்டிலிருந்து விஜயன் தனது குடிகளை இலங்கையிலுள்ள ‘கதிரகல’ மலைச்சரிவில் குடியேற்றினான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. இக்குடியேற்றம் கிறிஸ்துவுக்கு முன் 483ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கிறது.

இந்த மலைச்சாரல் கதிரகல எனும் பெயருடன் இன்றுவரை மட்டக்களப்பிலிருந்து தென்மேற்கே சுமார் 27 கி.மீ தொலைவில் காணப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.இந்த விஜயனின் வாரிசுகள் மேற்கொண்ட தொடர்ச்சியான அரசோற்றும் மையங்களும் கிழக்கிலங்கையை அடிப்படையாகக் கொண்டே இருந்து வந்திருக்கிறது. என்பதற்கான பலமான ஆதாரங்களும் எமது வரலாறுகளில் நிறையவே உண்டு. இவற்றினு}டாக பார்க்கின்ற போது கிழக்கு என்கின்ற வரலாற்று பெருமைமிகு தேசம் சுமார் 2550 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது என்பது நிரூபணமாகின்றது. இதை யாரும் மறுக்க முடியாதவாறு எமக்கு எழுத்துரு வரலாறுகள் இன்றும் காணக்கிடைக்கின்றது.

ஈ) துட்டகைமுணு – எல்லாள யுத்தம்இலங்கையின் வரலாற்றின் துட்டகைமுணு – எல்லாள யுத்தம் என்பது ஒரு பெரிய இனமுரண்பாட்டு யுத்தமாகவே நமக்கு கற்றுத்தரப்பட்டிருந்தது. இன்றைய நிலையிலும் சிறிலங்கா இராணுவத் தரப்பில் கெமுணு படைப்பிரிவு ஒன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் எல்லாளன்படை என்கின்ற ஒரு பிரிவுமாக பெயரிடப்பட்டிருப்பதன் ரிஷிமூலம் இந்த வரலாறேயாகும். ஆகவே இந்த வரலாற்றின் உண்மைத் தன்மையையிட்டு நாம் கவனம் கொள்ளுதல் அவசியமாகும்.

இலங்கையின் மிக பழமையான வரலாற்றுத் தடயங்களை கொண்ட இராசதானி ‘தீகவாவி’ ஆகும். இதுவும் கிழக்கிலங்கையில்தான் அமைந்துள்ளதென்பது கிழக்கின் வரலாற்று பெருமையை மேலும் உறுதி செய்கிறது. இந்த தீகவாவியானது கிழக்கினது பழம் பெரும் வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாதது ஆகும். தமிழர்கள் இதனை மகாகந்த குளம் என்கின்றனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைபற்றுக்கு மேற்கே 22 கி.மீ து}ரத்தில் உள்ள கல்லோயா பள்ளதாக்கில் காணப்படுகிறது இந்த மாகாகந்தகுளம்.கிழக்கிலங்கையின் ஆட்சியதிகாரம் முன்னெடுங்காலத்தில் இந்த தீகவாவியினையே மையமாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க கங்கையின் கரையோர நகரான “மாகம” எனுமிடத்திலிருந்து உருகுணை ராச்சியத்தை காவந்ததீசன் (துட்டகைமுணுவின் தந்தை) என்பவன் ஆண்டிருக்கிறான்.

இந்த உருகுணை ராச்சியம் என்பதன் வடபுலம்தான் கிழக்கிலங்கை ஆகும். இந்த காவந்த தீசனின் வாரிசான சதாதீசன் தனது தலைநகராக தீகவாவியை கொண்டிருந்திருக்கின்றான். இவனது சகோதரனே இலங்கை வரலாறுகளில் அதிகம் உச்சரிக்கப்படும் துட்டகைமுணு ஆகும். கேளதம புத்தரும் தனது இலங்கை தரிசனங்களின் போது இந்த தீகவாவிக்கு வருகை தந்துள்ளதாக கூறுகின்றது மகாவம்சம்.
கி.மு.145 ல் இலங்கைமீது படையெடுத்து இந்தியாவிலிருந்து வந்த எல்லாளன் என்பவன் பெரும் சேனையோடு திருகோணமலையில் வந்திறங்கி இலங்கையின் பல பகுதிகளை கைப்பற்றினான். தனது தலைநகராக அனுராதபுரத்தை ஆக்கிக் கொண்ட இவன் சுமார் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

இவ்வேளை உருகுணரட்டையின் பல பகுதிகளும் எல்லாம் இவனது ஆளுகைக்குட்பட்டிருந்தன. அவன் இலங்கையின் முக்கியமானவிடங்களிலெல்லாம் 32 கோட்டைகளை கட்டினான். யாழ்பாணமென்றொரு ராச்சியம் அக்காலை இருந்திருக்கவில்லை. அப்பிரதேசம் மானிடமில்லா வெறும் மணற்றிடராயிருந்தது.
“மணற்றி என்பது அதன் ப10ர்வ நாமம் பின்னாளில் அது மணற்றிடல் எனவும் வழங்கிற்று” என்று யாழ்ப்பாண சரித்திரத்தை 1915இல் எழுதிய ஆ.முத்துதம்பிபிள்ளை என்பார் குறிப்பிடுகிறார் (பக்-01).
யாருமில்லா வெறும்தரையாய் உப்பு கரித்துகிடந்தமையாற்றான் யாழ்பாடிய பாணனுக்கு அது பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது போலும் இந்த பரிசளித்தவன் தான் மேற்கூறிய எல்லாளன்.இதனை முத்துதம்பிபிள்ளை இப்படிக்கூறுகிறார். ‘யாழில் வல்ல ஒரு பாணனுக்கு பரிசாக கொடுக்கப்பட்டமையின் யாழ்பாணமாயிற்று’ அதன் பின்புதான் இந்த பாணன் தன் ப10ர்வீகமான தொண்டைநாடு திரும்பி அங்கிருந்து மக்களை குடியேற்றியதே வரலாறு. இலங்கையை தனது ஆளுகைக்குட்படுத்தி இருந்த எல்லாளன் தன் சொந்த நாட்டிலிருந்து வந்த யாழ்பாடி குருடனுக்கும் தனக்கு வேண்டப்படாத பகுதியேயாயினும் அதை பரிசாக கொடுத்து தானும்
சுமார் 44 ஆண்டுகள்
கோலோச்சினான். இந்த எல்லாளனது ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டியவன்தான் நமது துட்டகைமுணு. கி.மு.101ல் அவன் எல்லாளனை கொன்று இலங்கையை மீட்டான். அனுராதபுரத்தில் இருந்து அரசோற்றிய எல்லாளனுடன் பொருத மாகமயிலிருந்து துட்டகைமுணு திட்டம் தீட்டினான். அப்போது அம்பாறையின் (தீகவாவி) உறுகுணை ராச்சியத்தின் மன்னராக விளங்கிய சதாதீசனது தம்பியாகவும் படைத்தளபதியாகவும் செயற்பட்டவனே இந்த துட்டகைமுணு. பெரும்பாலும் இவனது படைகளில் மட்டக்களப்பு தமிழர்களே நிரம்பி காணப்பட்டிருக்கின்றனர்.
இவன் தமிழனாய் இருந்தபோதும் அன்னியனாகவும் ஒரு ஆக்கிரமிப்பாளனாகவுமே சுதேச மக்களால் எல்லாளன் உணரப்பட்டான். எனவேதான் தமிழ்இ சிங்கள வேறுபாடுகளின்றி துட்டகைமுணு படைநகர்த்த மாகம தொடங்கி மையங்கனை ஊடாக மட்டக்களப்புவரை சிங்கள தமிழ் மக்கள் ஒன்று திரண்டு எதிரியை துரத்தியடித்தனர். இதனை மட்டக்களப்பு தமிழகம் எனும் நு}லை 1964ல் எழுதிய வீ.சி.கந்தையா பின்வருமாறு குறிப்பிடுகிறார். “ஒரு தமிழனாகவே இருந்தபோதிலும் ஈழநாட்டை கைப்பற்ற வந்த ஒரு அன்னியனேன்றே கொண்டு அவனை எதிர்த்து துரத்துவதே முறையானது. என்ற தாய்நாட்டு பற்றோடு சதாதீசனது ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் கைமுணுவின் படையில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை கைமுணுவின் படைவீரரில் தமிழரும் பலர் இருந்தார்கள் என்ற வரலாற்று குறிப்பு உறுதிப்படுத்துகிறது.”

மாகமம் எனுமிடத்திலிருந்து எல்லாளனுக்கெதிராக கைமுணுவின் தலைமையில் புறப்பட்ட பெரும்படை வடக்கு நோக்கி மகாவலி கங்கையின் கிழக்குகரை வழியே சென்றது” என்கிறார் இந்த வரலாற்றாய்வாளர்.
அதாவது இன்று நாம் வெருகல் ஆறு என்றழைக்கும் மகாவலி கங்கையின் கிளைக்குரிய உண்மைப் பெயர் பேரிகையாறு ஆகும். காரணம் கிழக்கு படைகள் அன்னியனுக்கு எதிராக பாசறை கொண்டு போர் பேரிகை முழக்கிய இடம் என்பதனால் அன்றிலிருந்து வெருகலாறு பேரிகையாறு எனும் காரணப்பெயர் பெற்றது. இங்கேதான் தனிசமரில் கைமுணுவிடம் எல்லாளன் வீழ்ந்தான். வடக்கேயிருந்து வந்த அன்னியனாகிய எல்லாளன் படை இலங்கையை விட்டு ஓட கிழக்கு ராச்சியம் விடுதலை பெற்றது. அது மட்டுமல்ல முழு இலங்கையும் விடுதலையானது.

அந்தக் காலத்தில் கிழக்கில் நிலவிய சாதாரணமான சுதேச மக்களின் இயல்பான உணர்வுகள் மறைக்கப்பட்டு சிங்கள வரலாற்றாளர்கள் துட்டகைமுணுவின் படைகளிலிருந்து அவனை மட்டுமே தனித்தெடுத்து தேசிய வீரனாக்கி இறுதியில் சிங்களக் குறியீடாகவும் ஆக்கிக் கொண்டனர்.
போதாகுறைக்கு தமிழ் இனவரலாற்றாளர்களும் துட்டகைமுணுவிற்கு எதிராக எங்கிருந்தோ வந்த ஆக்கிரமிப்பாளனான அன்னியனை தமிழ் மன்னனாகவும் தமிழ் முது அடையாளமாகவும் உருவகித்தனர். இப்படி சிங்கள வரலாற்றாளர்களுடன் தமிழ் வரலாற்றாளர்களும் சேர்ந்து இலங்கை மக்களின் வரலாற்றை எழுதுவதை விடுத்து சிங்கள வரலாறு என்றும் தமிழ் வரலாறு என்றும் எழுதினர். இனங்களின் வரலாறாகஇ இனப்பெருமைகளின் வரலாறாகஇ இன இழிவுபடுத்தல்களின் வரலாறாக எழுதிவிட்டமையே இன்று ஈழம் சிவந்து கிடப்பதற்கான ஆதார ஊற்றாகும்.

தொடராகும்…..

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 3"

EKSAAR said...

சில சந்தேகங்கள்
தீகவாபி கல்லோயா திட்டத்திற்குப்பின் வந்த சிங்களவர்களையே கொண்டுள்ளது. அது ஒரு வரலாற்று திரிப்பு என்றுகூட கருத்துக்கள் நிலவுகின்றன. இப்பிரதேசத்தில் பரம்பரையாக வாழும் சிங்களவர்கள் மிகக்குறைவே.

அத்துடன் சில முக்கிய நகரங்கள் தவிர்ந்த ஏனைய கிழக்குப்பிரதேசங்கள் மக்கள் அடர்த்தி குறைவானதாகும். அன்று அரசொன்று அங்கிருந்து தலைநகரமும் இருந்திருந்தால் கிழக்கின் சனத்தொகை இதைவிட கூடிதலாக இருந்திருக்கமாட்டாதா?

கலா said...

சந்ரு மிக அருமையான இடுகை
அனைவரும் இதைப் படித்து உணர்வார்கள்
உன் திரட்டல்களுக்கு மிக்க நன்றி

Anonymous said...

santhuru..
thangkal karuththukku udan padukiren ,aanal oru santhekam ellalanpadaiyil singkalavarkal niraya irunththirikkiraarkal appadiyaanaal.avarkal sampalaththrkku velai seypavarkal enraal. ithu tharpothaya ezayuththaththrkum porunththum.thane karaqnam kizakkumakana karunaa thane kaddik koduththar,apapdi enraal kizakku thamilarkalukku anru thoddu inruvarai ithuthaan thozilaa.

Post a Comment