Sunday 8 November 2009

தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்

இன்று தமிழர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன, பறிக்கப்படுகின்றன, இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த நிலைக்கு தமிழர்கள் சென்றமைக்கு தமிழர்களும் முக்கிய காரணம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

தமிழர்கள் பற்றி பல வரலாறுகளைப் பார்த்திருக்கின்றோம். அன்றுமுதல் இன்றுவரை நடப்பதென்ன? தமிழருக்கான தீர்வுகள் கிடைக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வகையில் ஒரு சிலரின் சூழ்சிகளால் எல்லாவற்றையும் இழக்கின்றோம்.

இதற்கு முக்கிய காரணம் என்ன. தமிழர்களிடையே ஒற்றுமையில்லை. நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் என்றோ எமது உரிமைகளைப் பெற்றிருக்க முடியும். எப்பொழுதாவது நம் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனரா? சிலவேளைகளில் ஒன்று படுகின்றனர் தேர்தல்கள் வரும்பொழுது மட்டுமே. அதுவும் ஒருசிலர் ஒதுங்கிக் கொள்வர்.

தேர்தல்கள் வரும்பொழுது மட்டும் சிலர் ஒற்றுமை பற்றிப் பேசுவர். ஒன்றுபடுவர். தேர்தல் முடிந்ததும் எல்லாமே முடிந்துவிடும். சரியான கொள்கை இருக்கின்றதா? இன்றொரு கொள்கை நாளை ஒரு கொள்கை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கொள்கை. எல்லாமே தாம் அரசியலிலே நிலைத்திருப்பதட்கான கொள்கைகள்தான். இவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழர்களுக்கென ஒரு கொள்கையை வகுத்தால் என்ன?

இன்று நேற்றல்ல அன்றுமுதல் பலர் தமிழர்களை பல கூறுகளாக பிரித்து அதிலே அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு நம்மவர்களும் இடம்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.

காலம், காலமாக நடந்து வருகின்ற விடயம்தான் நாம் எல்லோரும் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கப்போகிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்போம். ஆனால் வேறு விதத்திலே சூழ்சிகள் நடைபெற்று நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.

என்றாவது நம் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனரா? ஒருவர் கொள்கைக்கு எதிராக இன்னொருவர் கொள்கை. எப்போது மற்றவரை வீழ்த்தலாம் என்று பல சதித்திட்டங்கள். நாம் எத்தனை கல்விமான்களை, புத்திஜீவிகளை இழந்திருக்கின்றோம். ஒரு தலைவருக்கு ஆதரவாக இருக்கின்ற ஒருவரை மற்றவர் கொலை செய்வது, மிரட்டுவது என்று சந்தர்ப்பவாத அரசியல் நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.

இன்று தமிழர்கள் பற்றியும், தமிழர் உரிமைகள் பற்றிபேசுவோரை ஒரு சிலர் புலி எனும் போர்வைக்குள் அடக்கி மாட்டிவிட்டு புதினம் பார்த்துக்கொண்டிருக்கிறது. மற்றும் சிலரோ தங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோரை "போட்டுத்தள்ளுவோம்" என்று செயலில் இருக்கின்றனர். இதனால் எத்தனை புத்திஜீவிகளை, உறவுகளை இழந்திருக்கின்றோம்.

இன்று தவறுகளைச் சுட்டிக்காட்டிய எத்தனை ஊடகவியலாளர்களை இழந்திருக்கின்றோம். சிலர் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர், தமிழர் உரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். பலர் ஏன் வம்பில் மாட்டிக்கொள்ள என்று ஒதுங்கிவிடுகின்றனர்.

இன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இன்று இந்த அச்சுறுத்தல்களை செய்துகொண்டிருப்பவர்களில் பலர் தமிழர்களே ஏன் இந்த நிலை இதனால் பாதிக்கப்படப் போவது எமது சமுகமே. சந்தர்ப்பவாத அரசியலைவிடுங்கள் எமது சமூகத்துக்காக குரல் கொடுங்கள்.

இன்று பலரும் தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பல தமிழ் அரசியல் தலைவர்களுட்பட புதியவர்கள் பலரு அரசியலிலே குதிப்பதற்கு இப்போது ஆயத்தங்களைச் செய்து வருகின்றனர். முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா?

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

12 comments: on "தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்"

ilangan said...

ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஃஃ

???ஃஃ??

ஜோதிஜி said...

வணக்கம் நண்பரே

உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங்கள், உண்மை எது, பொய்மை எது என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் ஒரு கலக்கத்துடன் நிறைய உறுத்தல்களும் வாழும் என்னால் செய்ய முடிந்த ஒன்று நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள மேம்போக்கான விசயங்களை தமிழர்களின் மொத்த வாழ்வியல் அவலங்களை மூலம் முதல் முள்கம்பி வரை தொடர் இடுகையின் வாயிலாக படைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களைப் போன்றவர்கள் வாசித்தால் என்னுடைய பெருமை அல்ல. தமிழனாக பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகள் என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல இதயங்களுக்கு உணர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com

ஆ.ஞானசேகரன் said...

//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

ஆம் நானும் வழிமொழிகின்றேன்..

தங்க முகுந்தன் said...

இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும் தலைவர்களாயிருந்தவர்களால் தானே மக்கள் இதுவரை வந்து நிற்கிறார்கள்?

என்னிடம் என்ன சுதந்திரம் இருக்கிறது? நானே வெளிப்படையாகப் பேச எழுத யோசிக்கிறேனல்லவா? சொந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருக்கிறதா? யார் எப்போது ஏன் எதற்காக வருவார்களோ என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா? சுதந்திரமாக நடமாடும் உரிமை இருக்கிறதா? பின்னர் ஏன் எமக்கு இந்த........?

சிநேகிதன் அக்பர் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_08.html

சுசி said...

//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

தலைவர்கள் இருக்கட்டும். முதலில் தமிழர்கள் ஒன்றுபடுவார்களா???

Admin said...

//ilangan கூறியது...
ஃஃஇன்று வலைப்பதிவர்களுக்கும் அதே நிலைதான். தமிழர்கள் பற்றியோ தமிழர் உரிமைகள் பற்றியோ பதிவிடுகின்றபோது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை தமிழர்கள் தமது பிரச்சனைகள் பற்றிப் பேசவே உரிமையில்லையா? இன்று வலைப்பதிவர்களுக்கு தமிழர்கள் பற்றியோ தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை பதிவிடத் தெரியாமல் இல்லை. அவர்கள் தானாகவே வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஃஃ

???ஃஃ??//

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//ஜோதிஜி. தேவியர் இல்லம். கூறியது...
வணக்கம் நண்பரே

உங்கள் வாழ்க்கை, உள்ளே நடந்த விசயங்கள், உண்மை எது, பொய்மை எது என்று தெரியாமல் என்னைப் போன்றவர்கள் ஒரு கலக்கத்துடன் நிறைய உறுத்தல்களும் வாழும் என்னால் செய்ய முடிந்த ஒன்று நீங்கள் இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள மேம்போக்கான விசயங்களை தமிழர்களின் மொத்த வாழ்வியல் அவலங்களை மூலம் முதல் முள்கம்பி வரை தொடர் இடுகையின் வாயிலாக படைத்துக்கொண்டு இருக்கின்றேன். உங்களைப் போன்றவர்கள் வாசித்தால் என்னுடைய பெருமை அல்ல. தமிழனாக பிறந்தவன் செய்ய வேண்டிய கடமைகள் என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். நல்ல இதயங்களுக்கு உணர்வாளர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம் திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com//

உங்களைப் போன்றவர்கள் தமிழுக்காக நல்ல விடயங்களைச் செய்வது பாராட்டத்தக்கது.... உங்கள் வலைப்பதிவை தெரியப் படுத்தியமைக்கு நன்றிகள்

Admin said...

//.ஞானசேகரன் கூறியது...
//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

ஆம் நானும் வழிமொழிகின்றேன்..//

கேள்விக்குறிதான் நண்பா...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//தங்க முகுந்தன் கூறியது...
இனிவரும் தலைவர்கள்? யார்? நீங்களா? இதுவரை எல்லோரும் தலைவர்களாயிருந்தவர்களால் தானே மக்கள் இதுவரை வந்து நிற்கிறார்கள்?

என்னிடம் என்ன சுதந்திரம் இருக்கிறது? நானே வெளிப்படையாகப் பேச எழுத யோசிக்கிறேனல்லவா? சொந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் உரிமை இருக்கிறதா? யார் எப்போது ஏன் எதற்காக வருவார்களோ என்ற ஏக்கம் இருக்கிறதல்லவா? சுதந்திரமாக நடமாடும் உரிமை இருக்கிறதா? பின்னர் ஏன் எமக்கு இந்த........?//

இனிவருகின்ற அரசியல் தலைவர்களைத்தான் குறிப்பிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//அக்பர் கூறியது...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2009/11/blog-post_08.html//

உங்கள் அழைப்புக்கு நன்றிகள் நண்பா

Admin said...

//சுசி கூறியது...
//முன்னைய எமது தலைவர்கள் விட்ட தவறுகளை இனிவருகின்ற இளம் அரசியல் தலைவர்களாவது செய்யாது தமிழ் மக்களுக்காக ஒன்று படுவார்களா? //

தலைவர்கள் இருக்கட்டும். முதலில் தமிழர்கள் ஒன்றுபடுவார்களா???//

தமிழர்கள் ஒன்றுபட்டதாக நானறியவில்லை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Post a Comment