இன்று இலங்கையில் யுத்தம் ஓய்ந்திருக்கின்றது. நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம் என்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் பல காலமாக பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கி வருவருகின்றனர் அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இன்று அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிப் பேசுகின்றவர்கள். தமிழ் மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனைகள் பற்றி ஏன் பேசாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.
கடந்த காலத்திலேயே இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக எமது சிறுவர்கள் பலர் தாய், தந்தையர்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே சொந்தங்கள், நிம்மதி, மற்றும் அத்தனையையும் இழந்து. பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்கின்றார்களா?
இன்று ஊருக்கு ஒன்று என்று சொல்லுமளவுக்கு சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற சொந்தங்களை இழந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம் தொடர்பில் மட்டுமாவது சிந்திக்கின்றார்களா? அந்த பெண் பிள்ளைகளின் எதிர் காலம்தான் என்ன?. அவர்களின் எதிர் காலம் தொடர்பில் நாம் அனைவரும் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவது எமது தமிழினத்தின் பாரிய வீழ்ச்சியல்லவா? நாளை தமிழினத்தின் சரித்திரம் படைக்கவேன்டியவர்கள் அனாதைகளாக்கப்பட விடுவதா?
இன்று பலர் அரசியல் இலாபம் தேட நினைக்கின்றனர். பலர் அரசியலிலே ஈடுபடும் நோக்கோடு இந்த அபிவிருத்தித் திட்டங்களிலே பங்கெடுக்கின்றனர். எதிர்காலத்திலே புதிதாக பலர் அரசியலிலே குதிக்க திட்டமிட்டுள்ளதை அறிய முடிகின்றது. அரசியல் எதிர்காலம் தேடும் புதியவர்களாவது எமது சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கும் சிறுவர்கள் தொடர்பில் நல்ல திட்டங்களை முன்னெடுப்பார்களா?
இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் மீது எந்த நம்பிக்கையும் அற்றவனாகவே இருக்கின்றேன். எனக்கு சிறு வயதிலே இருந்த இருந்த ஆசைகள் இரண்டு. ஒரு அறிவிப்பாளனாக வரவேண்டும், ஒரு அரசியல்வாதியாக வரவேண்டும். (காரணம் பல கஸ்ரங்களுக்கு மத்தியிலே வாழ்ந்தவன் என்பதனால் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கம்)
சிறு வயதிலே அரசியல் கட்சிகளின் பின்னாலும் ஈடுபட ஆரம்பித்தேன். என் அரசியல் பேச்சிலே எதிர்த்து வாக்களிக்க இருப்போரும் தங்களுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று சில அரசியல்வாதிகளே சொல்லி இருக்கின்றனர். தேர்தல் வந்தால் என்னை யார் பிரச்சாரத்துக்கு பிடிப்பது என்ற போட்டி வேறு.
இன்றுதான் நான் யோசிக்கின்றேன் நான் எந்தளவுக்கு தவறு செய்திருக்கின்றேனென்று. இப்படிப்பட்டவர்களுக்கா உதவி செய்தேன் என்று. இன்று உணர்கின்றேன் அரசியல் என்பது என்ன என்று. எப்படி நல்லவர்களாக இருந்தவர்கள் இன்று எப்படி இருக்கின்றார்கள். இன்று யோசிக்கின்றேன் அன்று மக்களுக்காக வாழ்ந்தவர்களா இன்று மக்களுக்காக அரசியலுக்கு வந்து மக்களை சுரண்டி வாழ்கின்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை.
இன்று அரசியல் எதிர்காலம் தேடுவோர் இவர்கள்போலல்லாமல், இவர்கள்வளி செல்லாமல் நம் எதிர்கால சந்ததி தொடர்பில் நல்ல திட்டங்களை முன்னெடுப்பார்களா?
என்னடா இவன் திடிரென அரசியல் பேசுகின்றான் என்று நினைக்கின்றீர்களா. அரசியல் எதிர்காலம் தேடும் சிலர் அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு எனது உதவி தேவைப்படுவதாக சொன்னார்கள். அவர்களில் சிலரிடம் நான் நேரடியாக சொன்னேன் நீங்கள் அரசியலில் இறங்கினால் நான் உங்களுக்கு எதிராக இறங்குவேன் என்று.
சிறு வயதில் ஏன் இந்த அரசியல் சாக்கடை பற்றி யோசித்தேன் என்று இப்போது கவலைப் படுகின்றேன். கஷ்டப்படும் மக்களின் வயிற்றிலடித்து பிழைப்பு நடத்துபவன் மனிதனா?

5 comments: on "நானும் அரசியலுக்கு வரப்போகின்றேன்."
அரசியலில் குதிக்கும்போது பார்த்து அடிபடாம குதிக்கவும்.
அரசியலில் யாரமே புனிதனாக இருக்க முடியாது. அது ஒரு சாக்கடை..
சத்ரு நலமா?மீண்டும்.......நான்.
எனக்கும் உங்களைப் போல் கடவுள் நம்பிக்கை
மட்டும் தான் நூறு வீதம் .ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம். எல்லா நாடுகளிலும்,
ஊர்களிலும்,கிராமங்களிலும் நம்பி ஏமாறுபவர்கள் மிக அதிகம்
அதிலும் மிகமிகப் படித்தவர்கள் கூட அவர்கள் ஊதும் மகுடிக்கு
ஆடுவதை எங்கு போய்ச் சொல்ல?....
அரசியலில் சேர்ந்தால்தான் ஏழைகளுக்கு உதவி செய்ய முடியுமா சந்துரு? விளம்பரம் கிடைக்கும். அவ்வளவுதான். நல்ல அரசியல்வாதி -- Oxymoron.
அரசியல்ல குதிக்குறது சரி பாத்து கல் கசடு இல்லாத இடமா குதிங்க..
:))
Post a Comment