Tuesday 1 February 2011

இலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.

இன்று இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் தமிழக மீனவர்களின் கொலை பற்றிய விடயமாகவே இருக்கின்றன.

இந்தப் பிரச்சினை தொடர்பிலே சில வலைப்பதிவுகளிலும் சமூகத் தளங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இலங்கை வலைப்பதிவர்கள் பலர்; இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர்களால் பல்வேறு வழிகளிலே பாதிப்புக்குட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கின்ற இலங்கையின் கடலெல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து இலங்கை மீனவர்களின் வலைகள் என்பவற்றை சேதப்படுத்தி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி இலங்கை மீனவர்களின் வயிற்றிலடித்துச் செல்லும் செயல் அன்று தொட்டு இன்றுவரை நடந்து வருகின்றது. இது யாவரும் அறிந்த விடயம்.

தமிழக  மீனவர்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதி மீனவர்கள் பலர் இருக்கின்றனர்.

தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதுபோல் அன்றுதொட்டு இன்றுவரை இலங்கை கடற்படையினரால் பல தமிழக மீனவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பலைகள் அதிகமாகி இருக்கின்றன.

உலகத்தில் எந்த ஒரு மூலையிலாவது ஒரு தமிழனுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அவன் இலங்கைத் தமிழனாக இருந்தால் என்ன இந்தியத் தமிழனாக இருந்தால் என்ன. இன்று தாக்கப்பட்டிருப்பவன் தமிழன். ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.

பல காலமாக தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் தமிழக மீனவர்களின் படுகொலை தொடர்பாக பரவலாக எதிர்ப்பலைகள் வந்துகொண்டிருக்கின்றபோது. அவர்களுக்காக பலரும் குரல் கொடுத்துக் கொண்டீருக்கும்போது நாமும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்.

அதைவிடுத்து தமிழக மீனவர்கள் என்றும் இலங்கை மீனவர்கள் என்றும் பிரித்து பேசாதீர்கள். இங்கே இரு பக்கமும் பாதிக்கப்படுவது எம் உறவுகள் அப்பாவித் தமிழர்கள்.

இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்கும் நேரத்தில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்.

இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் இல்லை என்று சொல்லவில்லை. இந்த நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தேவையானதா?

இலங்கை மீனவர்களின் வலைகள் வெட்டப்படுகின்றன இதனை தமிழகத்திலே இருக்கின்ற அனைத்து மீனவர்களும் செய்கின்றனரா? இல்லையே. இன்று உயிரிழந்திருக்கின்ற இந்திய மீனவன்தான் இலங்கை தமிழர்களின் வலையை வெட்டினானா?

எவனோ ஒருவன் செய்திருக்கலாம் அதற்காக இன்று அப்பாவியாக உயிரிழந்திருக்கின்ற தமிழக மீனவனை குற்றம் சொல்லலாமா? அவனுக்காக குரல் கொடுக்காமல் விடலாமா?

இலங்கை பதிவர்கள் சிலர் தமிழக மீனவர்களினால் இலங்கை மினவர்கள் வெகுவாகப் பாதிக்கின்றனர் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றேன். நானும் குற்றம்சாட்டுகின்றேன். ஆனாலும் குற்றம்சாட்டுவதற்குரிய நேரம் இதுவல்ல.

இலங்கையிலே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது. எதுவுமே அறியாதவர்கள்போன்று தமிழக அரசியல்வாதிகள் மௌனம் சாதித்தபோது (தமிழக அரசியல் வாதிகளென்ன உலகமே மௌனம் சாதித்தபோது) இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லையா? உயிரைக்கூட கொடுத்தார்கள்.

இந்திய தமிழன் இலங்கை தமிழன் என்பதனை மறந்து தமிழன் என்று சிந்திப்போம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காகக் குரல்கொடுப்போம்.

தலைப்பை பார்த்தே பலர் என்னைத் திட்டியிருப்பீர்கள். திட்டிய அனைவருக்கும் நன்றிகள்.

இன்று பதிவிட முடியாதபோதும் பதிவிட வேண்டும் என்பதற்காக பதிவிட்டேன்.

ஒரு கையினால் Type பண்ணிய பதிவு இது.  ஒரு கை அசைக்க முடியாத நிலை நல்ல மனிதன் ஒருவன் கையை வெட்டிவிட்டான்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

18 comments: on "இலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு."

Vathees Varunan said...

வணக்கம் சந்ரு, இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் இலங்கை பதிவராக நானும் இருக்கின்றபடியால் இங்கு சில விடயங்களை சுட்டிக்காட்ட அல்லது பதிலளிக்க விரும்புகின்றேன்

முதலாவது தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது கொல்லப்படுவதும் கண்டிக்கவேண்டியவிடயம் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.
தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதன் காரணமாகவே இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள் சுடப்படுகின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை இங்கு நான் ஆணித்தரமாக கூறவிரும்புகின்றேன். அதற்காக கடற்படை செய்வதை நியாயப்படுத்துவதாக யாரும் கருதவேண்டாம்.

இரண்டாவது நாங்கள் பிரித்துப்பார்ப்பதாக நீஙக்ள் குற்றம்சாட்டுகின்றீர்கள் அதற்கான நேரம் இதுவல்லவென்றும் குறிப்பிருகின்றீர்கள் ஆனால் எந்தவொரு இடத்திலும் நான் பிரித்தப்பார்க்கவில்லை என்னுடைய பக்க நியாயத்தைத்தான் நானும் கூறினேன் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்றால் மீன்பிடித்தடைகள் அவற்றப்பட்டு வங்கிகளில் கடன்வாங்கி தொழில் செய்யும் அவர்களது ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதும் கண்டிக்கவேண்டிய ஒன்றுதான் என்பதுதான் என்னுடைய கருத்து என்னவென்றால் இலங்கை மீனவர்களுடைய பிரச்சனைகளையும் எடுத்தச்சொல்ல சரியான நேரம் இதுவெனத்தான் நான் நினைக்கின்றேன்


இந்திய மீனவர்களுக்காக தற்போது நடாத்தப்படும் போராட்டம் காலம் பிந்திய போராட்டம் எனினும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் எனபதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தம் கிடையாது


மீண்டும் சொல்கிறேன் மீனவர்கள் தாக்கப்படவதும் கொலைசெய்யப்படுவதும் கண்டிக்கவேண்டிய ஒன்று அதேபோல பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்காகவும் யாருமே குரல்கொடுக்கமுன்வராதபோது நாம்தான் குரல்கொடுக்க வேண்டும்

இன்று நாங்கள் பலவிடயங்களை சுட்டிக்காட்டும்வரை தமிழ்நாட்டில் பலருக்கு ஏன்மீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள் என்று தெரியாமல் இருந்திரக்கின்றது ஏன் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் அவரவர் தங்களது பிழைகளை திருத்திக்கொண்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் எந்தவித உயிரிழப்புக்களும் இன்றி அவரவர் தங்களது ஜீவனோபாயத்தினை மேற்கொள்ளலாம் என்பதுதான் என்னுடைய கருத்து

Vathees Varunan said...

உங்களுடைய காயம் விரைவில் குணமாக வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்

Anonymous said...

உங்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.
மற்றும் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக மீனவர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல, மீனவர்கள் கொல்லபட்டதை வைத்து தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்.

இக்பால் செல்வன் said...

//உங்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.
மற்றும் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக மீனவர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல, மீனவர்கள் கொல்லபட்டதை வைத்து தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்.//

முட்டாள் மாதிரி பேசாதீர்கள் ! தமிழகத்தில் இதுவரை எந்த வொரு கட்சியும் வாய் திறந்து இலங்கை அரசைக் கண்டிக்கவும் இல்லை ! மத்திய அரசையும் கண்டிக்கவும் இல்லை ! ஜெயலலிதாவை தவிர ! திருமாவளவன், ராம்தாஸ், வைக்கோ, விஜயகாந்த என அனைவரும் தேர்தல் சீட்டுக்கு நாக்கை தொங்கப் போட்டு அலைகின்றனர். மீனவர் பிரச்சனையை இம்முறை கையில் எடுத்திருப்பது தமிழ் மக்கள் தான் ! தமிழ் இணையத்திலும், வலைப்பதிவர்களாலும், தமிழ் அமைப்புகள் மட்டுமே இதுவரை பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு தமிழ் மீனவர் பிரச்சனையை வெளிக்கொண்டு வருகிறார்கள் ! இதில் உண்மை என்னவென்றால் நாகரிக மோகத்தால் சிக்கி சீரழிந்தப் போனதாக பொது ஊடகம் கொக்கரித்த இளைய தலைமுறையினர் தான் இதனை முன் நின்று நடத்துகிறார்கள் ! இலங்கையில் இப்போதைய நிலையில் அங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாக போராடவோ ! தமிழக மீனவருக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் சூழல் இல்லை ! அதனை தமிழ்நாட்டில் நாம் எதிர்ப்பார்க்கவும் இல்லை ! இருந்தாலும் சில யாழ்ப்பாணப் பதிவர்களின் பதிவு விஷமத்தனமாக இருப்பதை சந்துரு எடுத்துரைப்பது உண்மை தான். தமிழ்நாட்டு மீனவரால் தமது மீன்வளம் பாதிக்கப்படுவதாக ஒரு மாயையை சிங்கள் அரசும் ! இந்திய அரசும் நன்றாகவே இலங்கைத் தமிழர் மத்தியில் உலாவ விட்டு இருக்க வேண்டும் ! இதனால் இரு பகுதி மீனவரும் அடித்துக் கொண்டிருந்தால் பயனடையப் போவது இந்திய அரசியல் வாதிகளின் பெரும் மீன்பிடி நிறுவனங்களும், இலங்கை அரசால் வெளிநாட்டுக்கு குத்தகை விடப்படும் கடல் வளத்தை சுரண்ட வரும் நிறுவனங்களே ! இதை உணராமல் பேசுவது அபத்தம்.

இறுதியில் ஒன்றைக் கூறுகிறேன் ! எமது முன்னோர் இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதால் ஒன்றைக் கூறுகிறேன் ! மலையகத் தமிழனை சிங்களவன் விரட்டும் போதும் ! இந்திய மீனவனை சிங்களவன் சுடும் போதும் தீக்குளித்தது உண்டா யாழ்ப்பாணத் தமிழர்கள் யாரேனும் ! ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உயிரை விட்டவரும் ! விடும் அளவுக்கும் ஈழத்தமிழர் மீது பாசம் கொண்டோர் ஏராளமானோர் உண்டு ! அதனை மறந்துவிடக் கூடாது. நான் அனைத்து ஈழத்தமிழரையும் கூறவில்லை. ஈழத்தமிழர் மத்தியில் சிங்களாபிமானமும், சாதிய வெறி /இந்திய தமிழர் எதிர்ப்புணர்வு கொண்டோருக்கு கூறிக் கொள்கிறேன் !

ஆகுலன் said...

மிகவும் சிறந்த தலைப்பு.................
ஏன் இப்படி சொல்லுறன் எண்டால் எனக்கும் இதை முதலில் பார்த்தவுடன் கோபம் வந்தது.

Anonymous said...

இங்கு சிலர் குட்டையைக் குழப்ப முயற்சிக்கின்றார்கள் என்றெ எண்ணுகின்றேன். எம் எல்லோருக்கும் பொது எதிரி சிங்களவன். அவனது அட்டூழியங்களால் மரணித்தவர்கள் தமிழர்கள். அது ஈழத்தமினோ தமிழகத்து தமிழனோ. எம் மீனவர்கள் தமிழக மீனவர்களால் துன்பப்படுகின்றார்கள் உண்மை. எனினும் இன்றைய பொழுதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கள வெறி நாய்களின் கொலை வெறியை கண்டிக்க கடமைப்பட்டள்ளோம். அதன் பின் நாம் எம் பிரச்சனைகளைப் பற்றி பேசித் தீர்த்துக் கொள்வோம். அதை விடுத்த சிங்களவனின் சதிகளுக்குள் வீழ்ந்து நாம் பகைமை வளர்த்துக கொள்ள வேண்டுமா?

Anonymous said...

காயம் குணமாக வாழ்த்துக்கள்..

உயிர்வலி எல்லாருக்கும் ஒன்றுதான்..

Admin said...

//வதீஸ்-Vathees//

நீங்கள் இலங்கை மீனவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒருவர் என்பது எனக்கு நன்கு தெரியும். இலங்கை மீனவர்கள் எதிர் நோக்குவதாகச் சொல்லப்படுகின்ற விடயங்கள் முற்றிலும் உண்மை. நானும் குற்றம்சாட்டுகின்றேன்.

ஆனாலும் தமிழக மீனவர்களுக்காக பலரும் குரல் கொடுத்து வருகின்ற இந்த நேரத்தில் நாமும் அவர்களுக்கு குரல் கொடுத்தால் இன்னும் வலுச் சேர்க்கும்.

அதனைவிடுத்து நாமும் இத் தருணத்தில் தமிழக மீனவர்களை குற்றம் சாட்டிக்கொண்டிருந்தால் தமிழக மீனவர்களின் கொலைக்கான எதிர்ப்பலைகள் வலுக் குன்றுவதாகவே நான் உணர்கின்றேன்.

இலங்கை மீனவர்களுக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். இன்று தமிழக மீனவர்களுக்காக எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம்வரை இலங்கை மீனவர்கள் பற்றி பேசுகின்றவர்கள் எங்கே போனார்கள். ( உங்களைச் சொல்லவில்லை) முன்னர் குரல் கொடுத்திருக்கலாம்.

உண்மையாகவே நான் கவலைப்பட்டதுண்டு தமிழக மீனவர்களுக்காக எல்லோரும் குரல் கொடுக்கும் நேரத்தில் தமிழக மீனவர்கள் என்றும் இலங்கை மீனவர்கள் என்றும் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றோம்.

தமிழக மீனவன் என்றால் என்ன இலங்கை மீனவன் என்றால் என்ன இரு பக்கமும் பாதிக்கப் படுவது தமிழனே குற்றச் சாட்டுக்களை விடுத்து எல்லோரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும்.

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பது காலம் பிந்தியதாக இருப்பினும் வரவேற்கத் தக்கது. இலங்கை மீனவர்களுக்காக குரல் கொடுக்க பலர் வந்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயம்.

ஆணாலும் இந்த நேரத்தில் முன்வந்திருப்பது தமிழக மீனவர்களின் படுகொலைக்கான எதிர்ப்பலைகளை வலுவிழக்கச் செய்யலாம் என்பதே என் கருத்து.

Admin said...

// வதீஸ்-Vathees கூறியது...
உங்களுடைய காயம் விரைவில் குணமாக வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்//

நன்றிகள் வதீஸ்

Admin said...

// பெயரில்லா கூறியது...
உங்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.
மற்றும் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக மீனவர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல, மீனவர்கள் கொல்லபட்டதை வைத்து தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுகிறார்கள்.//


உங்கள் கருத்த்தினை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் அல்லது இந்தியாவில் எப்போது தமிழர்கள் இறக்கின்றார்கள் இல்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்.

தமிழர்களின் இறப்பை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தமிழர்கள் செத்து மடிகின்றபோது தமிழர்களை சாக வைத்தவனைவிட அதிகம் சந்தோசப்படுபவர்கள் இந்திய அரசியல்வாதிகளே.

இந்த பிரச்சினை தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனரா?

உங்களுக்கான பதிலை இக்பால் செல்வன் சொல்லி இருக்கின்றார்.

Admin said...

// இக்பால் செல்வன் கூறியது...//

உண்மையான நல்ல கருத்துக்கள்…
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் இக்பால் செல்வன்.

Admin said...

//akulan கூறியது...
மிகவும் சிறந்த தலைப்பு.................
ஏன் இப்படி சொல்லுறன் எண்டால் எனக்கும் இதை முதலில் பார்த்தவுடன் கோபம் வந்தது.//


உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் கோபம் வந்திருக்கும்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள

Anonymous said...

தமிழக் மீனவர் பிரச்சினையை சிலர் குறுகிய நோக்கோடு பார்ப்பது கவலையாக இருக்கிறது. எல்லோரும் தமிழர்கள்தான்.

Anonymous said...

//இந்த பிரச்சினை தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனரா?//
சீமான், ஜெயலலிதா, வைகோ இவர்கள் எல்லாம் யார்? தமிழகத்து நகைசுவையாளர்களா?
//உங்களுக்கான பதிலை இக்பால் செல்வன் சொல்லி இருக்கின்றார்.//
அவரும் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் அதே ஆட்களின் தீவிர ஆதரவாளர்.

Anonymous said...

@ இக்பால் செல்வன்:
// ஈழத்தமிழர் மத்தியில் சிங்களாபிமானமும், சாதிய வெறி /இந்திய தமிழர் எதிர்ப்புணர்வு கொண்டோருக்கு கூறிக் கொள்கிறேன் !//

நீங்கள் சொல்வது உண்மைதான் இக்பால் செல்வன் . இப்படியும் சில எட்டப்பன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை நினைத்தால் உண்மையில் ஆத்திரம் தான் வருகின்றது.

Admin said...

// பெயரில்லா கூறியது...
இங்கு சிலர் குட்டையைக் குழப்ப முயற்சிக்கின்றார்கள் என்றெ எண்ணுகின்றேன். எம் எல்லோருக்கும் பொது எதிரி சிங்களவன். அவனது அட்டூழியங்களால் மரணித்தவர்கள் தமிழர்கள். அது ஈழத்தமினோ தமிழகத்து தமிழனோ. எம் மீனவர்கள் தமிழக மீனவர்களால் துன்பப்படுகின்றார்கள் உண்மை. எனினும் இன்றைய பொழுதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிங்கள வெறி நாய்களின் கொலை வெறியை கண்டிக்க கடமைப்பட்டள்ளோம். அதன் பின் நாம் எம் பிரச்சனைகளைப் பற்றி பேசித் தீர்த்துக் கொள்வோம். அதை விடுத்த சிங்களவனின் சதிகளுக்குள் வீழ்ந்து நாம் பகைமை வளர்த்துக கொள்ள வேண்டுமா?//

நானும் உங்கள் கருத்தைத்தான் சொல்கின்றேன்.

Admin said...

// தமிழரசி கூறியது...
காயம் குணமாக வாழ்த்துக்கள்..

உயிர்வலி எல்லாருக்கும் ஒன்றுதான்..//

விரைவில் குணமாகும். இரு பக்கமும் பாதிக்கப்படுவது தமிழன் என்பதனை எல்லோரும் உணர வேண்டும்.

Admin said...

////பெயரில்லா சொன்னது…
//இந்த பிரச்சினை தொடர்பில் இந்திய அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனரா?//
சீமான், ஜெயலலிதா, வைகோ இவர்கள் எல்லாம் யார்? தமிழகத்து நகைசுவையாளர்களா? ////

இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் குறிப்பாக சமூகத் தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் எதிர்ப்பலைகளை உருவாக்கியவர்கள் யார்? அரசியல்வாதிகளா? இன்று அதனை வைத்து அரசியல் நடாத்த சீமான் போன்றவர்கள் வரலாம். ஆனால் எதிர்ப்பலைகளை உருவாக்கியவர்கள் யார்

////உங்களுக்கான பதிலை இக்பால் செல்வன் சொல்லி இருக்கின்றார்.//
அவரும் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் அதே ஆட்களின் தீவிர ஆதரவாளர்.////

அவர் எப்படியோ உண்மையை சொல்லி இருக்கின்றார்

Post a Comment