இணையத்தில் அண்மைக் காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட விடயம் தமிழக மீனவர் பிரச்சினை. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் உறவனர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்ற நிலையில் எதிர்வரும் 22ம் திகதி நம்ம இளைய தளபதி விஜய் ஜெயக்குமாரின் உறவினர்களைச் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சந்திப்பதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தனது இரசிகர்களுடன் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டதன் பின்னர் விஜய் மேற்கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டமாகும்.
தளபதியின் அரசியல் பிரவேசம் பிற்போடப்பட்டிருந்தாலும். அவரின் அரசியல் பிரவேசத்துக்கான முன்னேற்பாடுகளாகக்கூட இது அமையலாம்.
எது எவ்வாறு இருப்பினும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு எதிராக நம்ம தளபதியும் அவர் இரசிகர்களும் குரல் கொடுக்க முன்வந்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனாலும் தமிழக அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தங்கள் அரசியல் இருப்புக்காக தமிழ் மக்களை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் தமிழர்கள் கொல்லப்படுவதையும் தாம் அரசியலில் நிலைத்து நிற்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தி இருக்கின்றனர்.
இலங்கைத் தமிழனோ தமிழகத் தமிழனோ கொலை செய்யப்படுகின்றபோது கவலைப்படுவதைவிட சந்தோசப்படும் தமிழக அரசியல்வாதிகள்தான் அதிகம் என்று சொல்ல வேண்டும். தமிழனின் மரணத்தை வைத்தே அரசியல் நடாத்துபவர்கள் அவர்கள்.
இலங்கைத் தமிழர்கள் மீதும் தமிழகத் தமிழர்கள் மீதும் விஜய் வைத்திருக்கின்ற பற்று உண்மையானதா? அல்லது ஏனைய அரசியல்வாதிகள்போல் தானும் எதிர்கால அரசியலில் நிலைத்து நிற்பதற்கான துருப்புச் சீட்டாக தமிழர்களை பயன்படுத்தப் போகின்றாரா?
2 comments: on "மீனவர் பிரச்சினையில் களம் புகுந்து அரசியலை நகர்த்த நினைக்கும் விஜய்"
You must ask Asin who had dinner with Srilankan president, about Vije politics.
ம்ம் இதைப் பற்றி நானும் பதிவிட இருக்கிறேன்.பார்ப்போம்..
Post a Comment