Friday 4 February 2011

வலைப்பதிவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவசியமான அழைப்பு

கிழக்கு மாகாணத்திலே மீண்டும் தொடர் மழை பெய்துகொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை பல பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பல பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியிருப்பதுடன் பல இடங்களுக்கான தரைவழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னரும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருருந்தன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

விவசாயம் மீன்பிடி உட்பட பல துறைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.

அது ஒரு புறமிருக்க மீண்டும் பேரவலத்தை இந்த சந்தித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு எந்தவிதமான உதவிகளும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. சில பிரதேசங்களிலே மக்களை முகாம்களை அமைக்க வேண்டாம் என்று உயரதிகாரிகள் சொல்கின்றனர்.

முன்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த மக்கள் இந்த வேளையில் சொல்லொண்ணா துயரத்தை எதிர்நோக்குகின்றனர்.

பல மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இது நான் நேரடியாக கண்ட உண்மை இன்று ஒரு வீட்டுக்கு சென்றேன் நேற்றும் இன்றும் உணவில்லாமல் பட்டினியில் இருந்தனர். இவ்வாறு பல குடும்பங்கள் இருக்கின்றனர்.

அரசாங்கமோ உதவி செய்வதாக சொல்கின்றது எமது தமிழ் உறவுகள் பட்டினியால் வாடுகின்றனர்.

நான் தொடர்ந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

உலகெங்கும் இருக்கின்ற தமிழர்களிடம் அன்பான வேண்டுதல் ஒன்றை விடுக்கின்றேன். எமது தமிழ் உறவுகள் பல அவலங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் இதனை அலட்சியம் செய்ய வேண்டாம்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "வலைப்பதிவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவசியமான அழைப்பு"

Anonymous said...

paathikkappaduvathu nam thamilarkal. thamilanukku pala valikalilum thollaithaan ellorum mudinthathai seivom.

Post a Comment