Thursday, 3 February 2011

ஏன்?.. ஏன்?.. ஏன்?.. இப்படி எல்லாம் நடக்கிறது?..

 கிழக்கில் மீண்டும் பேரவலம்.

5vellamகிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிரான், மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது

சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு.

grandcouleespill_dam_11இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02) திறந்துவிடப்பட்டன.
இங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால்இ அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்துஇ அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனைஇ அக்கரைப்பற்றுஇ சம்மாந்துறைஇ இங்கினியாகலஇ தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.
வான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும்இ பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள்இ அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையேஇ மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது

மட்டு ரயில் சேவை பாதிப்பு.

train_2005_10231 கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மன்னம்பிட்டியில் வைத்து நேற்று முன்தினம் தடம்புரண்டது. இதனால்இ மட்டக்களப்புக்கான சேவை நேற்றும் தடைப்பட்டது. மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்படுகிறது

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஏன்?.. ஏன்?.. ஏன்?.. இப்படி எல்லாம் நடக்கிறது?.."

Post a Comment