Friday 18 September 2009

இதுவும் பெண்ணடிமைத் தனமல்லவா?

நீண்ட நாட்களாக எனக்குள்ளே நான் கேட்ட கேள்விகளை இன்று உங்களிடம் கேட்கின்றேன். வலையுலக நண்பி சிந்து தனது பதிவிலே பெண்கள் ஆண்களுடன் கதைப்பது தவறா? என்று கேட்டிருக்கின்றார். இதுவே என் கேள்வியும் சிந்துவின் பதிவிலே சிந்துவின் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை.

இன்று இந்த நாக உலகிலே நாகரிகத்துக்கீர்ற மாதிரி நாமும் மாறிக்கொண்டு இருக்கின்றோம் ஆனால் எமது மனங்களிலே சில தவறான எண்ணங்கள், சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன. அவை களையப்பட வேண்டும். எமது மூதாதயர்கள் செய்தார்கள் நாமும் செய்கின்றோம் என்று இதற்கு காரணத்தையும் சொல்லி விடுவார்கள். மூதாதயரால் ஏன் செய்யப்பட்டது என்பதனை சிந்தித்துப்பார்க்க வேண்டி இருக்கின்றது. அவர்களால் செய்யப்பட்ட சில செயற்பாடுகள் மூட நம்பிக்கையாக இருக்கின்றன. (பல விடயங்கள் நல்ல விடயங்களே) சில அவர்களின் காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கின்றன ஆனால் இன்று அவர்கள் காலம் போல் இல்லை உலகமே மாறிவிட்டன.

சரி விடயத்துக்கு வருகின்றேன் . இன்று ஒரு ஆணும் பெண்ணும் கதைக்கின்றபோது எத்தனை கட்டுகதைகள் கட்டப்படுகின்றன. ஆண்கள் பெண்களோடு கதைப்பது தவறா? ஆண் பெண் வேறுபாடு ஏன் பார்க்கப்படுகின்றது. ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதோ. இன்று ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக பழகுகின்றபோது எத்தனை கட்டுக்கதைகள் கட்டப்படுகின்றது. ஏன் இந்த நிலை.

பெண்ணடிமை பற்றிப்பேசுகின்றபோது ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கின்றோம் அப்படி என்றால் ஆண்கள் எத்தனை பெண்களுடன் எப்படிப் பேசினாலும் அதனை நாம் பொருட்படுத்துவதில்லை. ஏன் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும்போது அந்தப்பெண்ணை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றோம். பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா. இது பெண்ணடிமைத்தனம் இல்லையா?

இன்று எல்லாவிதத்திலும் ஆண்களுக்கு பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பல பெண்கள் சரித்திரம் படைத்துவரும் நிலையில் ஏன் நாம் இன்னும் பெண்களை குட்டிச் சுவராக்க நினைக்கின்றோம்.

ஒரு ஆணும் பெண்ணு நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டு இருக்கும்போது அந்தப்பெண்ணுக்கு திருமணம் என்று வருகின்றபோது இருவரது நட்பும் முறிவடைகின்றன. ஏன் இந்த நிலை.

அந்தப்பெண்ணின் கணவன் அந்தப்பெண் மீது நம்பிக்கை இல்லாமலா திருமணம் செய்கின்றார். நம்பிக்கை இருந்தால் அவளது நண்பர்களோடு பேச விடலாமல்லவா? இது பெண்களை அடிமைப்படுத்தும் செயலல்லவா? (எல்லா கணவன்மாரும் இப்படி இல்லைதான் சில நல்ல கணவன்மாரும் இருக்கின்றனர்) சரி திருமணத்தின் பின் பெண்களோ தமது ஆண் நண்பர்களை பிரிய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் ஆண்களுக்கு இந்த நிலை இருக்கின்றதா? இல்லையே யாருடனும் எப்போதும் பேசும் சுதந்திரம் இருக்கின்றதே. இது பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு செயலாகும்.

ஒரு பெண் ஒரு ஆணுடன் கதைக்கும்போது நாம் ஏன் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றோம். நல்ல மனதோடு பார்க்கலாமல்லவா? பெண்களும் ஆண்களைப்போன்றவர்கள்தான். ஆண்களுக்கு என்ன உரிமை இருக்கின்றதோ அந்த உரிமை பெண்களுக்கும் இருக்கின்றது என்பதனை மறந்துவிடக்கூடாது.

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

22 comments: on "இதுவும் பெண்ணடிமைத் தனமல்லவா?"

க.பாலாசி said...

//ஒரு ஆணும் பெண்ணு நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டு இருக்கும்போது அந்தப்பெண்ணுக்கு திருமணம் என்று வருகின்றபோது இருவரது நட்பும் முறிவடைகின்றன. ஏன் இந்த நிலை.//

காரணம் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு...

ஆணாதிக்கவாதிகள் சிந்தித்து செயல்படவேண்டிய பதிவு...பகிர்வு...

க.பாலாசி said...
This comment has been removed by the author.
கவிக்கிழவன் said...

திருமணத்துக்கு பின் கணவனே உலகமாக மனைவேயே உலகமாக மாறுவதால் நட்புகள் தூரத்துக்கு செல்கின்றன
4 5 வருடம் கழித்து மீண்டும் நட்புகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தி குடும்ப நண்பர்கள் ஆகும் தன்மை பலரிடம் உண்டு

ப்ரியமுடன் வசந்த் said...

//சரி விடயத்துக்கு வருகின்றேன் . இன்று ஒரு ஆணும் பெண்ணும் கதைக்கின்றபோது எத்தனை கட்டுகதைகள் கட்டப்படுகின்றன//

கண்டிப்பா அதனாலதான் அவங்க அதை உண்மையாகிடலாம்முன்னு நடந்துக்குறாங்களோ என்னவொ!!

வால்பையன் said...

இது சந்ரு ப்ளாக் தானா?

சரி மேட்டருக்கு வருவோம்!

யார் சார் பெண்கள் பேசுவதை கூட தப்பா சொல்றது!

பெண்கள் ஹைஹீல்ஸ் போட்டா தப்புன்னு சொல்றவங்க!
பொண்ணுங்க மாடர்ன் ட்ரெஸ் போட்டா தப்புன்னு சொல்றவங்க!

ஆண்களுக்கு மாதிரி அவுங்களுக்கும் சுதந்திரம் இருக்குன்னு இப்ப தான் தெரிஞ்சதா?

Admin said...

//வால்பையன் கூறியது...
இது சந்ரு ப்ளாக் தானா?

சரி மேட்டருக்கு வருவோம்!

யார் சார் பெண்கள் பேசுவதை கூட தப்பா சொல்றது!

பெண்கள் ஹைஹீல்ஸ் போட்டா தப்புன்னு சொல்றவங்க!
பொண்ணுங்க மாடர்ன் ட்ரெஸ் போட்டா தப்புன்னு சொல்றவங்க!

ஆண்களுக்கு மாதிரி அவுங்களுக்கும் சுதந்திரம் இருக்குன்னு இப்ப தான் தெரிஞ்சதா?//

நான் அன்று பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லவில்லை பெண்கள் அடிமைப்படுத்தப்படக்கூடாது என்றும். பெண்கள் நாகரிகமெனும் போர்வையில் குட்டைப்பாவாடை அணிந்து தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கக்கூடாது என்றுமே சொல்லி இருந்தேன். நான் என்றும் பெண்ணடிமையினை வெறுப்பவன்.

http://shanthru.blogspot.com/2009/08/blog-post_12.html

http://shanthru.blogspot.com/2009/08/blog-post_14.html

மேல் நாட்டு நாகரிகம் பற்றிப்பேசிய எனது இரு இடுகைகளையும் மீண்டும் பாருங்கள். என்ன சொல்லி இருக்கின்றேன் என்று.

நந்தா said...

//வால்பையன் கூறியது...
இது சந்ரு ப்ளாக் தானா?//

வால்ஸ் அடங்க மாட்டீங்களா? :)

சந்ரு விடுங்க. அந்த விஷயத்தை பத்தி நாம ஏற்கனவே அநியாயத்துக்கு அலசிட்டோம். மறுபடியும் ஆரம்பிக்க வேணாம். :)

Subankan said...

இந்தப் பிரச்சினையை ஒவ்வொருவரும் பார்க்கும் விதம் வித்தியாசப்படும். இதற்கு generation gap என ஒருசாராரும், அனுபவம் பற்றி மற்றொருவரும் கூறினாலும், அடிப்படையில் இருக்கின்ற ஆணாதிக்க மனப்பாண்மை இன்னமும் அனைவரிடமும் அடிமனதில் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. என்னதான் அப்படி இல்லை என வாதிட்டாலும் அதுதான் உண்மை. இந்த மனப்பாண்மைதான் இவ்வாறான பிரச்சினைகளுக்கும் காரணம்.

சுசி said...

சபாஷ்... நல்ல பதிவு சந்ரு...

வந்தியத்தேவன் said...

ஏற்கனவே என்ரை பெயர் பெண்கள் விடயத்தில் நாறிப்போய்கிடக்கு பிறகு இதிலை கருத்துச் சொன்னால் இன்னும் மணக்கும் கருத்துகளை வாசிக்க ஆவலுடன் இருக்கின்றேன். சந்ருவிடம் நம்ம புல்லட் கேட்ட் கேள்வி இதற்கான பதிலையும் தேடித்தாருங்கள்.

யாரிடமிருந்தாவது எதிர்பார்க்கும் பதிவு: திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)

{நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்..}

வால்பையன் said...

//திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)//

திருமணத்திற்கு பிறகு மனைவிக்கும் அலுப்படிக்காமல் இருக்கனும்னா, நாமளும் அமுக்கிகிட்டு இருக்கணும்!

இந்த நினைப்பு இருந்தாலே அலுப்படிக்காது!

ஹேமா said...

சந்ரு ,நான் சொல்லமாட்டேன் பெண்கள் அடிமைத்தனத்துக்குள்தான் கிடக்கிறார்கள் என்று.
சொல்லப்போனால் எங்களுக்குண்டான சுதந்திரம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அதைச் சரியாகப் பயன்படுத்தினால் யாருமே எதுவுமே சொல்வதற்கில்லை.
படைப்பாலேயே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில பலயீனங்களை நாங்கள் கொண்டுள்ளதால் பயத்தால் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.அப்படி இருந்ததாலேயே இன்றும் வெளிநாடுகளில் எங்களை எங்கள் பண்பாட்டை மெய்ச்சுகிறார்கள்.
நாங்கள் பண்பாட்டோடு வாழ்வதால் நிறையவே பலனடைகிறோம்.நோய் நொடிகள் கூட இதற்குள் அடக்கம்.

உண்மையில் பெண்களிற்கு பெண்களில் இருந்துதான் விடுதலை கிடைக்கவில்லை.இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம்.அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஒன்று.

பி.கு - இதற்காக ஆண்கள் எதையும் செய்யலாம் என்று சொல்ல வரவில்லை.அவர்களுக்கும் சுய கட்டுப்பாடு தேவை.

Admin said...

//க.பாலாஜி கூறியது...
//ஒரு ஆணும் பெண்ணு நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டு இருக்கும்போது அந்தப்பெண்ணுக்கு திருமணம் என்று வருகின்றபோது இருவரது நட்பும் முறிவடைகின்றன. ஏன் இந்த நிலை.//

காரணம் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு...

ஆணாதிக்கவாதிகள் சிந்தித்து செயல்படவேண்டிய பதிவு...பகிர்வு..//.

உண்மையான கருத்துக்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கவிக்கிழவன் கூறியது...
திருமணத்துக்கு பின் கணவனே உலகமாக மனைவேயே உலகமாக மாறுவதால் நட்புகள் தூரத்துக்கு செல்கின்றன
4 5 வருடம் கழித்து மீண்டும் நட்புகளுடன் தொடர்புகள் ஏற்படுத்தி குடும்ப நண்பர்கள் ஆகும் தன்மை பலரிடம் உண்டு//

இப்படிப்பட்ட நல்ல கணவன்மாரும் இருக்கின்றனர். ஆனால் இதற்கு எதிர், மாறான கணவன்மாரும் இருக்கின்றனர்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...
//சரி விடயத்துக்கு வருகின்றேன் . இன்று ஒரு ஆணும் பெண்ணும் கதைக்கின்றபோது எத்தனை கட்டுகதைகள் கட்டப்படுகின்றன//

கண்டிப்பா அதனாலதான் அவங்க அதை உண்மையாகிடலாம்முன்னு நடந்துக்குறாங்களோ என்னவொ!!//

ஒருசிலர் அப்படி இருக்கலாம் ஆனால் எல்லோரும் அப்படி இல்லையே வசந்த்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//நந்தா கூறியது...
//வால்பையன் கூறியது...
இது சந்ரு ப்ளாக் தானா?//

வால்ஸ் அடங்க மாட்டீங்களா? :)

சந்ரு விடுங்க. அந்த விஷயத்தை பத்தி நாம ஏற்கனவே அநியாயத்துக்கு அலசிட்டோம். மறுபடியும் ஆரம்பிக்க வேணாம். :)//

வங்க நந்தா நீண்ட நாளைக்கப்புறம் உங்க வரவைப்பதிவு செய்திருக்கிங்க.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Subankan கூறியது...
இந்தப் பிரச்சினையை ஒவ்வொருவரும் பார்க்கும் விதம் வித்தியாசப்படும். இதற்கு generation gap என ஒருசாராரும், அனுபவம் பற்றி மற்றொருவரும் கூறினாலும், அடிப்படையில் இருக்கின்ற ஆணாதிக்க மனப்பாண்மை இன்னமும் அனைவரிடமும் அடிமனதில் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. என்னதான் அப்படி இல்லை என வாதிட்டாலும் அதுதான் உண்மை. இந்த மனப்பாண்மைதான் இவ்வாறான பிரச்சினைகளுக்கும் காரணம்.//

இன்று பெண்ணடிமை இல்லை என்று கூறப்பட்டாலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//சுசி கூறியது...
சபாஷ்... நல்ல பதிவு சந்ரு...//

சுசி அக்கா நீங்க குணாவப்பத்தி அடிக்கடி பதிவிடும்போதே நினைத்தேன். ஏதோ ஒன்று இருக்கு என்று...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
ஏற்கனவே என்ரை பெயர் பெண்கள் விடயத்தில் நாறிப்போய்கிடக்கு பிறகு இதிலை கருத்துச் சொன்னால் இன்னும் மணக்கும் கருத்துகளை வாசிக்க ஆவலுடன் இருக்கின்றேன். சந்ருவிடம் நம்ம புல்லட் கேட்ட் கேள்வி இதற்கான பதிலையும் தேடித்தாருங்கள்.

யாரிடமிருந்தாவது எதிர்பார்க்கும் பதிவு: திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)

{நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்..}//

நல்ல பிள்ளையா இருந்த நீங்க பலான படங்களைப்பார்த்து கேட்டுப்போய்திங்க என்று பேசிக்கொள்ராங்க. உண்மையா வந்தி...

புல்லட்டின் பிரச்சனை தொடர்பில் நம்ம சந்கத்தக்குஉட்டி சில ஆராச்சிகள் பண்ணிக்கிட்டிருக்கோம் விரைவில் அவருக்கான தீர்வுகள் வெளியிடப்படும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...
சந்ரு ,நான் சொல்லமாட்டேன் பெண்கள் அடிமைத்தனத்துக்குள்தான் கிடக்கிறார்கள் என்று.
சொல்லப்போனால் எங்களுக்குண்டான சுதந்திரம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறது.
அதைச் சரியாகப் பயன்படுத்தினால் யாருமே எதுவுமே சொல்வதற்கில்லை.
படைப்பாலேயே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சில பலயீனங்களை நாங்கள் கொண்டுள்ளதால் பயத்தால் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.அப்படி இருந்ததாலேயே இன்றும் வெளிநாடுகளில் எங்களை எங்கள் பண்பாட்டை மெய்ச்சுகிறார்கள்.
நாங்கள் பண்பாட்டோடு வாழ்வதால் நிறையவே பலனடைகிறோம்.நோய் நொடிகள் கூட இதற்குள் அடக்கம்.

உண்மையில் பெண்களிற்கு பெண்களில் இருந்துதான் விடுதலை கிடைக்கவில்லை.இன்று எத்தனையோ பெண்கள் மிகப்பெரிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் அவ்வாறு இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பின்புலத்தில் கணவனோ தந்தையோ வழங்கிய சுதந்திரம்.அதை கவனத்தில் எடுத்துக்கொண்டால் பெண்ணடிமை ஆணாதிக்கம் என்ற பதங்கள் தேவையில்லாத ஒன்று.

பி.கு - இதற்காக ஆண்கள் எதையும் செய்யலாம் என்று சொல்ல வரவில்லை.அவர்களுக்கும் சுய கட்டுப்பாடு தேவை.//

இன்று பெண்களின் முன்னேற்றத்திலே பங்கெடுக்கின்ற பெண்களுக்கு சுதந்திரம் வழங்குகின்ற பல கணவன்மார் இருக்கும்போது. பெண்களை அடிமைகளாகப் பார்க்கின்ற, அடிமைப்படுத்துகின்ற பல கணவன்மாரும் இருக்கின்றார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Unknown said...

ஆனால் ஒருவிடயம்...
இன்று எத்தனை ஆண்கள் தங்கள் மனதில் சிறுசஞ்சலமும் இல்லாமல் ஒரு பெண்ணோடு தோழமையுடன் பழகுகிறார்கள்.
திருமணம் முடிக்கும் போது கணவனுக்கு தான் பெண்களுடன் எப்படி பழகினேன் என்று ஞாபகம் வர தன் மனைவியோடு மற்ற ஆண்களும் இப்படித் தான் பழகுவார்கள் என்ற பயம்...
குற்ற உணர்வு...

ஆண்கள் தமது ஆரம்ப மனநிலையை, பெண்களை போகப் பொருளாக பார்க்கும் மனநிலையை மாற்றினால் ஆண் பெண் சமவுரிமை தானாக வந்துவிடும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆண்கள் பெண்கள் என பார்க்காமல் நட்பை நட்பாக பார்ப்போமே..

Post a Comment