Tuesday 15 September 2009

இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன...

இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று காலை ஒன்பது மணியளவில் மறைவான, ஒதுக்குப்புறமான ஒரு இடத்திலே இடம் பெற்றன. இந்தச் சந்திப்பிலே சில அனானிகள் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவுகளையும், வலைப்பதிவர்களையும் எப்படி தாக்குவது என்று பல்வேறுபட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்தச் சந்திப்பிலே தலைமை தாங்கும் அனானி தனது தலைமை உரையிலே. நாம் ஆரம்பகாலங்களைவிட தப்போது தொழினுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வருகின்றோம். அன்று ஒருசில வலைப்பதிவர்களையும் வலைப்பதிவுகளையும் தாக்கி வந்த நாம் இன்று எமது சேவையினை வியாபித்திருக்கின்றோம். எமது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து ஒரு அனானியினால் கடந்தகால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதிலே எந்தெந்த வலைப்பதிவுகள் எப்படி எப்படித்தாக்கப்பட்டன போன்ற விடயங்கள் அலசி ஆராயப்பட்டிருந்தது.

ஒரு அனானி எழுந்து தான் சில வலைப்பதிவுகளிலே மோசமான வசனங்களினால் பின்னூட்டமிட்டும் அந்த வலைப்பதிவர்கள் அதனை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்றும். கொபப்படுவதாகத் தெரிவதில்லை என்றும் இவர்களைக் கோபப்படவைக்க அல்லது இவர்களைத்தாக்க வேறு ஏதாவது வழியினைச் சொல்லுங்கள் என்றார்.

மற்றுமோர் அனானி எழுந்து சில வலைப்பதிவுகளிலே கருத்துரை மட்டுறுத்தல் இருப்பதனால் கஷ்டமாக இருக்கின்றது என்றார்.


தலைமைதாங்கும் அநாநி௮ மீண்டும் எழுந்து வலைப்பதிவுகளில் மாற்றங்களைச் செய்யும். பதிவர்களின் பெயரிலே பின்னூட்டமிடும் முறைகளை தான் பல வருட முயற்சியின் பின் பெற்றிருப்பதாகவும் பரிச்சார்த்தமாக சில வலைப்பதிவுகளை மாற்றி அமைத்து பார்த்ததாகவும் எதிர்காலத்திலே கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தது என்றும் இப்போது அந்த நம்பிக்கை வீண் போய் விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்று இப்படியான வேலைகளைச் செய்பவர்களை பிடிக்க முடியும் என்றும் தான்தான் இந்த வேலைகளைச் செய்கின்ற அனானி என்றும் சிலருக்கு தெரியவந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இன்னுமொருவர் எழுந்தார் பார்த்தால் அவர் ஒரு பதிவர் தான் பதிவராக இருந்தாலும் அனானியாகவே அதிக பின்னூட்டங்களை இட்டு பல பதிவர்களை திக்குமுக்காட செய்து கொண்டிருக்கின்றேன். நான் வலைப்பதிவர் சந்திப்புக்கு போகவில்லை வலைப்பதிவர் சந்திப்பை நேரடி ஒலிபரப்பு மூலம் பார்த்து என்னால் முடிந்த சில வேலைகளைச் செய்திருக்கின்றேன் என்றார்.

அடுத்து அனானிகள் ஒன்று சேர்ந்து இலங்கை பதிவர்களுக்கான திரட்டி ஒன்றை ஆரம்பித்தால் அதன் மூலம் பதிவர்கள் தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்து கொள்வதோடு நமது எதிர்காலச் செயற்பாடுகளுக்கு இலகுவாக இருக்கும் என்றார். யார் அந்த திரட்டியை நிர்வகிப்பது என்பது எவருக்கும் தெரியக்குடாது என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து கடந்த காலங்களில் அதிகம் தாக்கப்பட்ட பதிவர்களின் பெயர்களும் தாக்கப்பட்ட விதங்களும் ஏனைய புதிய அனானிகளுக்காக தெரியப்படுத்தப்பட்டது.

அப்பொழுது ஒரு அனானி அடிக்கடி சந்திப்புக்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும். இலங்கையில் இருக்கின்ற முக்கிய பதிவர்களை அடிக்கடி தாக்கிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் கூறினார்.

அடுத்து புதிய திட்டங்கள் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று தலைமைதாங்கும் அனானி சொன்னார். எல்லோரும் மெளனமானார்கள். சரி சிந்தித்து சொல்லுங்கள் என்று சொன்னார் தலைமை அனானி. இரண்டு மணித்தியாலங்களாகியும் எவரும் வாய் திறக்கவில்லை. எவருமே சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்கள் என்பதனை உணர்ந்து கொண்ட தலைமை அனானி ஒரு மாதத்தின்பின் மீண்டும் சந்திப்பதாகவும் அதுவரைக்கும் யோசித்து நல்ல திட்டங்களோடு வாருங்கள் என்றார். (எவருக்குமே மூளை இல்லை என்பது தலைமை அனானிக்கு மூளை இருந்தால்தானே புரியும்)

இந்து மணித்தியால சந்திப்பிலே எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மையான விடயம்.

இந்த சந்திப்பு இடம்பெற்ற மண்டபத்துக்கு அருகிலே இருக்கும் வீதியால் நான் சென்ருகொண்டிருன்தேன். அப்போது அந்த மண்டபத்தின் காவலாளி என்னைப்பார்த்து என்ன கொடுமை சார் என்றான் என்ன என்று கேட்டேன் அவர்தான் இந்த விடயங்களை என்னிடம் கூறினார். நானும் எல்லா விடயங்களையும் கேட்டுவிட்டு என்ன கொடுமை சார் இது என்று போய்விட்டேன்.

அனானிகள் ஒழிக....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

13 comments: on "இலங்கை அனானிகள் சந்திப்பு இன்று பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன..."

வந்தியத்தேவன் said...

கலக்கல் பதிவு சந்ரு நிறைய உள்குத்து வெளிக்குத்து கும்மாம்குத்து எனப் பல விடயங்களை எழுதிவைத்திருக்கின்றீர்கள்.

வேந்தன் said...

உள்குத்து நிறைய இருக்கு போல....
பார்த்து இந்த சந்திப்பை அம்பலப்படுத்தியதற்காக இலங்கை அனானிகளுக்கு ஆதரவாக சர்வதேச அனானிகள் சங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கப் போகுது..!

SShathiesh-சதீஷ். said...

சூப்பர் பதிவு வாழ்த்துக்கள். சாடை மாடையாக சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். இப்படி ஒரு வம்பு தான் (புல்லட்டின் பதிவு ) பதிவர் சந்திப்பை கொண்டுவந்தது. உங்கள் பதிவை பார்த்து அனானிகள் சந்திப்பு உண்மையில் நடந்தாலும் ஆச்சரியமில்லை.

வால்பையன் said...

என்னெமோ நடக்குது,
மர்மமா இருக்குது!

ஹேமா said...

யாருக்கோ இருட்டடி விழுது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சந்ரு உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

சந்ரு உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

சினேகிதி said...

பாவம் அவைக்கும் பிழைப்புத்தேவை தானே:)

ஆதிரை said...

எங்கே ஒரு அனானிகளையும் இந்தப் பக்கம் காணவில்லை... :)

Unknown said...

//ஒரு அனானி எழுந்து தான் சில வலைப்பதிவுகளிலே மோசமான வசனங்களினால் பின்னூட்டமிட்டும் அந்த வலைப்பதிவர்கள் அதனை கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்றும். கொபப்படுவதாகத் தெரிவதில்லை என்றும் இவர்களைக் கோபப்படவைக்க அல்லது இவர்களைத்தாக்க வேறு ஏதாவது வழியினைச் சொல்லுங்கள் என்றார். //

ஆகா...
நேற்று இரண்டாவது நாளாக அனானியிடமிருந்து கெட்டட வார்த்தைகளால் திட்டு வாங்கியிருக்கிறேன்...
படுபாவிங்களா...

//இலங்கையில் இருக்கின்ற முக்கிய பதிவர்களை அடிக்கடி தாக்கிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் கூறினார். //
நான் அந்தளவுக்கு முக்கிறதில்ல...
தயவுசெய்து எந்தப் பதிவரும் இனி முக்க வேணாம்...

அசத்தல் பதிவு...

யோ வொய்ஸ் (யோகா) said...

அனானிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கு தாக்கென்று தாக்கியிருக்கிறீர்கள் சந்ரு.

இனிமேல் அந்த மூளை இல்லாத பசங்கள் ஒன்னும் பண்ண முடியாது.

இந்த பதிவு நான் முன்னமே எதிர்பார்த்தது. கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

maruthamooran said...

சந்ரூ………..
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் வந்து எழுதுங்கோ…….

http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_16.html

Anonymous said...

இலங்கை மையமாக வைத்து எழுதப்பட்டது என்றாலும் சிலபொதுவுண்மைகள் தெளிவுபடுத்த இப்பதிவைப் பயன்படுத்தலாம்.

முதன்முதலாக, பெயரில்லா என்பதைவிட பெயர்சொல்ல விரும்பா’ என்றே இருக்கவேண்டும்.

இணையதளம் ஒரு தனிமனித சுதந்திரத்தை அள்ளிவழங்கும் ஒரு நவீன கண்டுபிடிப்பு. வாழ்க்கையில் நேரடியாக வலியசக்திகளோடு மோதவியலாதவர்களின் ஒரு wish fulfilment or fantasy என எடுத்துக்கொள்ளலாம். fantasy என்றால் எப்போது அசிங்கமல்ல. ஒருவன் ஓட்டப்பந்த்யத்தில் ஓடிவெற்றிபெறவியலாத முடவன். அவன் வெற்றிபெருவதாக கற்பனை செய்வது ஒரு அசிங்கமான விஷயமல்ல.

சிலர், தங்கள் தொழில் நிமித்தம் காரணமாக தாங்கள் யார் எனக்காட்டிக்கொள்ளல் அவர்களுக்கு எதிராக முடியும். அவர்களும் தம் கருத்துகளையிடவேண்டும். எப்படிச்செய்வது?

அனைவருக்கும் சுதந்திரம். அது, பெயரில்லா அல்லது, பெயர்வெளிக்காட்டிகொள்ள விரும்பா - என்ற கருவியின் மூலம் முடியும்.

இணைதளம் என்பது, தங்கள் யார் எனவெளிக்காட்டிக்கொள்பவருக்குத்தான் என யாரும் சொல்லவில்லை. அப்படியிருந்திருந்தால், ‘பெயரில்லா’ என உங்கள் பின்னூட்டம் போடுமிடத்தில் வைத்திருக்கமாட்டார்கள்.

பெயரில்லாப்பேர்வழிகளிலான் சிக்கல்கள் உண்டாக ஏதுவாகும் என்பது உண்மைதான். அதற்கா, அவர்கள் அனைவரும் கோழைகள் இழிந்தவர்கள், நாங்களே வீரர்கள் என் தமபட்டம் அடிப்பது சிறுபிள்ளைத்தனமானது.

நான், ‘பெயரில்லா’ என்ற பின்னூட்ட வழியைப் பய்ன்படுத்தியே இதை எழுதிகிறேன்.

நான் என்னை யார் எனக்காட்டிக்கொள்ளவில்லை, அதனால் நீங்கள் என்னைவிட உய்ர்வு என இறுமாப்பு அடைவீர்களா?

இல்லை, நாந்தான், உங்களை விட தாழ்ந்தவன் என நினைத்துக்கொள்வேனா? நல்ல நகைச்சுவை.

நான் யார் எனக்காட்டிகொள்வது உங்களுக்கு எந்தவகையில் உதவும்?

The great beauty of modern life is choices. We should have choices to exercise. We should have freewill to choose and pick up that choice which suits us well.

Why do you impose your will on others, and poke fun at those who dont accept your choice?

Be modern. Be open. Be fair to all.

I look forward to reading your reply.

Post a Comment