எங்கும் கொடுமைகள்
என்றிருந்தேன் - அந்த
கொடுமைகளை
மறக்கச் செய்தவள் நீ....
உன் ஒரு வார்த்தைக்காய்
தவமிருந்தேன் பலகாலம்
அந்த வார்த்தைகளால்
கட்டப்பட்ட கற்பனைக்
கோட்டை - இன்று
உன் ஒரு வார்த்தையால்
தகர்க்கப்பட்டன....
என் கனவுகளுக்கும்
கற்பனைகளுக்கும்
சிறகு தந்தவள் நீ - அன்று
என் கண் கலங்கினாலே
கண்ணீர் விட்டவள் நீ - இன்று
என் கண்ணீருக்கே
காரணமானாய்...
அன்று நீ என்னோடு
பழகிய நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
நினைவுகள் கண்ணீராக
பல கதைகள் சொல்கின்றன....
அன்று கதை கதையாய்
சொன்னவள் நீ - இன்று
என் கதையையே
முடிக்க நினைப்பது
நியாயமா?
நான் பணமில்லாதவன்
என்பதால் இன்று
உன்னால் தூக்கி
வீசப்பட்டபோது
சும்மா பகவானிடம்
சென்றேன் வரம் பெற.....
சும்மா பகவானோ
என்னிடம் சும்மா
வரவேண்டாம்
பணமிருந்தால் வா
என்று சொல்லிவிட்டார்...
பகவானே பணம்
கேட்கும்போது - நீ
பணம் கேட்பதில்
தவறில்லை என்னிடம்
பணமில்லை என்பதுதான்
தப்பு....
நாளை நானும் பகவானாகி
பணம் உழைத்துவிட்டு
மீண்டும் உன்னோடு
வருகின்றேன் - என்னிடம்
இருக்கும் பணத்துக்காய்
என்னை அரவணைப்பாய்
என்ற நம்பிக்கையில்....
26 comments: on "உன் காதலுக்காய் பகவானாகிறேன்"
காதல் கனவு கற்பனை அழகு
கடைசி கருத்து பலருக்கு வாய்த்த ஆப்பு
உண்மை உண்மை உண்மை
அட ...பணதுக்காக் பகவானாய் போகிறீர்களா...கற்பனை நன்று . பணம் பந்தியிலே குணம் குப்பையிலே ......இதை பார்த்து அறியாதவன் மனிதனல்ல ...பணம் பணம் ..
//நான் பணமில்லாதவன்
என்பதால் இன்று
உன்னால் தூக்கி
வீசப்பட்டபோது
சும்மா பகவானிடம்
சென்றேன் வரம் பெற.....
சும்மா பகவானோ
என்னிடம் சும்மா
வரவேண்டாம்
பணமிருந்தால் வா
என்று சொல்லிவிட்டார்... //
ஆஹா ரகம் நிஜமும்...
//நாளை நானும் பகவானாகி
பணம் உழைத்துவிட்டு
மீண்டும் உன்னோடு
வருகின்றேன் - என்னிடம்
இருக்கும் பணத்துக்காய்
என்னை அரவணைப்பாய்
என்ற நம்பிக்கையில்.... //
இத மட்டும் செய்யாதீங்க. நானும் இப்போ பணக்காரன்னு காட்டிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்குங்க.
நல்லா இருக்கு உங்க கவிதையும் காதலும் !!
ஆனா கான்செப்ட் தான் கொஞ்சம் இடிக்குது.
ஆனா பிறகு நான் உங்கள எதிர்த்து பதிவு போடுவன்...
சம்மதமா?
//அன்று நீ என்னோடு
பழகிய நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
நினைவுகள் கண்ணீராக
பல கதைகள் சொல்கின்றன//
பல கதைகள் சொல்லும் வரிகள். அனுபவமாக இருந்தால் வலிக்க கூடியது.
கவிதையாக இருந்தால் இருந்தால் அழகான வர்ணிப்பு
சும்மா பகவான் பற்றி கூறியது ஏதாவது உள்குத்து இருக்கிறதோ?
கவிதை நல்லா இருக்கு சந்ரு
ஓ..சந்ரு பார்த்தவுடன் வரும் காதல் எல்லாம் போய்
இப்போது பணத்துக்கா எல்லாம் காதல் வருகின்றதா?
இது பற்றி எங்கிட்ட சொல்லவே இல்லையே!
அந்தப் பொண்ணு பணத்துக்காக நீங்கதான்
கை விட்டதாக எங்கிட்ட புகார் சொல்லிடிச்சி
என்ன?என்ன?? இது
கவிதை நன்றாயிருக்கிறது.
சும்மா பகவானுக்கு அடிமேல் அடி
பாத்து வேறொரு பணக் காரன் தட்டிட்டுப் போகப் போறான்...
லொள்ளு...........
வரிகள் யாவுமே இக்கால கட்டத்துக்குப் பொருத்தமானவை..
நல்லாயிருக்கு உங்க காதல் கவிதை சந்ரு!!
//கவிக்கிழவன் கூறியது...
காதல் கனவு கற்பனை அழகு
கடைசி கருத்து பலருக்கு வாய்த்த ஆப்பு
உண்மை உண்மை உண்மை//
ஆப்பேதான்....
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//நிலாமதி கூறியது...
அட ...பணதுக்காக் பகவானாய் போகிறீர்களா...கற்பனை நன்று . பணம் பந்தியிலே குணம் குப்பையிலே ......இதை பார்த்து அறியாதவன் மனிதனல்ல ...பணம் பணம் ..//
இன்று இலகுவாய் உழைக்கும் வழி பகவானை மாறுவதுதான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//பிரியமுடன்...வசந்த் கூறியது...
//நான் பணமில்லாதவன்
என்பதால் இன்று
உன்னால் தூக்கி
வீசப்பட்டபோது
சும்மா பகவானிடம்
சென்றேன் வரம் பெற.....
சும்மா பகவானோ
என்னிடம் சும்மா
வரவேண்டாம்
பணமிருந்தால் வா
என்று சொல்லிவிட்டார்... //
ஆஹா ரகம் நிஜமும்...//
நியமேதான் வசந்த்..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//சுசி கூறியது...
//நாளை நானும் பகவானாகி
பணம் உழைத்துவிட்டு
மீண்டும் உன்னோடு
வருகின்றேன் - என்னிடம்
இருக்கும் பணத்துக்காய்
என்னை அரவணைப்பாய்
என்ற நம்பிக்கையில்.... //
இத மட்டும் செய்யாதீங்க. நானும் இப்போ பணக்காரன்னு காட்டிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்குங்க.//
இதுவும் நல்ல ஐடியாதான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//அ.மு.செய்யது கூறியது...
நல்லா இருக்கு உங்க கவிதையும் காதலும் !!
ஆனா கான்செப்ட் தான் கொஞ்சம் இடிக்குது.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//கனககோபி கூறியது...
ஆனா பிறகு நான் உங்கள எதிர்த்து பதிவு போடுவன்...
சம்மதமா?//
நமக்குள் எதிர்ப்பு வேண்டாம். எனது வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தருகிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
//அன்று நீ என்னோடு
பழகிய நாட்களை
திரும்பிப் பார்க்கிறேன்
நினைவுகள் கண்ணீராக
பல கதைகள் சொல்கின்றன//
பல கதைகள் சொல்லும் வரிகள். அனுபவமாக இருந்தால் வலிக்க கூடியது.
கவிதையாக இருந்தால் இருந்தால் அழகான வர்ணிப்பு//
அனுபவத்தில் கவிதை என்றால்?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
சும்மா பகவான் பற்றி கூறியது ஏதாவது உள்குத்து இருக்கிறதோ?//
இந்தக் கவிதை உருவானதே சும்மா பகவானை பற்றி உள் குத்துக் குத்தவேதான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//S.A. நவாஸுதீன் கூறியது...
கவிதை நல்லா இருக்கு சந்ரு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Kala கூறியது...
ஓ..சந்ரு பார்த்தவுடன் வரும் காதல் எல்லாம் போய்
இப்போது பணத்துக்கா எல்லாம் காதல் வருகின்றதா?
இது பற்றி எங்கிட்ட சொல்லவே இல்லையே!
அந்தப் பொண்ணு பணத்துக்காக நீங்கதான்
கை விட்டதாக எங்கிட்ட புகார் சொல்லிடிச்சி
என்ன?என்ன?? இது//
நான் அவள்மீது பழி போடலாம் என்று பார்த்தால் அவள் என்னை முந்திவிட்டாளா? (லொள்ளு)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
கவிதை நன்றாயிருக்கிறது.
சும்மா பகவானுக்கு அடிமேல் அடி//
அடிமேல் அடிமட்டுமல்ல... இடிமேல் இடியும் விழும்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Sinthu கூறியது...
பாத்து வேறொரு பணக் காரன் தட்டிட்டுப் போகப் போறான்...
லொள்ளு...........
வரிகள் யாவுமே இக்கால கட்டத்துக்குப் பொருத்தமானவை..//
அதுதான் சிந்து விரைவில சும்மா பகவானாகப் போகிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Mrs.Menagasathia கூறியது...
நல்லாயிருக்கு உங்க காதல் கவிதை சந்ரு!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment