சிறப்பு வாய்ந்த விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதம் நாளை ஆரம்பிக்கின்றது. அதனால் என்னால் முன்னர் இடுகையிட்ட இடுகையினை மீண்டும் இடுகையிடுகின்றேன்.
கேதார கெளரி விரதக்கதையினையும், கேதார கௌரி விரதத்தின் மகிமையினையும் கூறும் பல பாடல்களை இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு ஒரு இறுவட்டாக வெளியிட்டிருந்தேன். அந்தப்பாடல்களை எல்லோரும் பதிவிறக்கிக் கொள்ள முடியும்.
பாடல் வரிகள் - கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம்
இசை - மட்டுநகர் ஜனனி
பாடியவர்கள் - மா.பாக்கியராஜா, வே.ஜனனி, சித்தீசன்
இசை - மட்டுநகர் ஜனனி
பாடியவர்கள் - மா.பாக்கியராஜா, வே.ஜனனி, சித்தீசன்
இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்
கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
4 comments: on "கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்."
சந்ரு,இன்றைய நாட்களில் தேவையான நல்ல விஷய.சந்ரு வேற இடத்தில் இருப்பதால் vote போட முடியவில்லை.பாஸ்வேட் மறந்திட்டேன்.
விஜயதசமி வாழ்த்துக்கள்
thxs a lot shantru!!
வணக்கம் சந்ரு
கேதார கெளரி விரதப்பதிவைச் சிறப்பாக அளித்தமைக்கு மிக்க நன்றிகள்,
Post a Comment