Wednesday, 16 September 2009

என்னவென்று சொல்வேன்...

என்ன இந்த வாரம் தொடர் பதிவாகவே இருக்கின்றது. நண்பர்கள் விடுவதாக இல்லை. நண்பர் யோகா மற்றும் மருதமூரான் ஆகியோர் என்னை “காதல்-அழகு-கடவுள்-பணம்” எனும் தொடர் பதிவிற்கு அழைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

“காதல்-அழகு-கடவுள்-பணம்” நான்குக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகவே உணர்கின்றேன்.

காதல்


காதலில்லாமல் உலகமில்லை. காதல் என்பது அன்பு . ஒருவர் தன் தாய் மீது வைக்கின்ற அன்பும் காதலே. காதலிமீது வைக்கின்ற அன்பும் காதலே. காதலால் சரித்திரம் படைத்தவர்க்களுமுண்டு. காதலால் காணாமல் போனவர்களுமுண்டு.
காதல் புனிதமானது. இன்று காதலின் புனிததைக் கெடுப்போருமுண்டு. காதலை வாழவைப்போருமுண்டு.

காதலை நான் அமுதென்பதா?
விசமென்பதா? - அன்று
காதலித்தேன்...
ஒவ்வொரு நிமிடங்களிலும்
சொர்க்கத்தின் வாசற்படிகள்
என்னை வரவேற்றன. - இன்று
அவளால் கைவிடப்பட்டேன்
மரண வேதனை உணர்கின்றேன்.
சொல்லுங்கள் காதலைப்பற்றி
நான் என்ன சொல்ல.


அழகு

ஒருத்தியிடம் என் காதலைச் சொன்னேன். நான் அழகில்லை என்றாள் .இன்னொருத்தி என்னை காதலிப்பதாய் சொன்னாள்.
எதனால் வந்த காதல் என்றேன். என் அழகைப்பார்த்து வந்தது என்றாள். சொல்லுங்கள் நான் அழகா? அழகில்லையா?

அழகு அவரவர் இரசனையைப் பொறுத்தது. ஒருவருக்கு அழகாகத் தெரிவது இன்னொருவருக்கு அழகில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் எல்லோருக்கும் அழகாகவே தெரிகின்றேன்.

கடவுள்
கடவுள் இருக்கின்றார் என்று சொல்பவனுக்கு அவனுள்ளே இருக்கின்றார். கடவுள் இல்லை என்று சொல்பவனையும் கைவிடமாட்டார்.

இன்று கடவுளின் தொழில்களை மனிதன் கையிலெடுத்துவிட்டதனால். அமைதியாக அவதானித்துக்கொண்டிருக்கின்றார். ஆடும்வரை ஆடட்டுமே என்று.

பணம்

பணம் பத்தும் செய்யும் என்பது அந்தக்காலம். எதையும் செய்யும் என்பது இந்தக்காலம். இன்று பணமிருந்தால் எல்லாமே நம் காலடியைத் தேடி வருகின்றன. பணம் இல்லை என்றாள் உற்ற நண்பனே நீயாரடா என்று கேட்பான். நான் அனுபவ ரீதியாக நான் அறிந்திருக்கின்றேன். பணம் இல்லாதபோது சொந்தங்களே நம்மைவிட்டு விலகும். பணமிருந்தால் அயலவரே சொந்தம் கொண்டாடுவார்கள்.

பணம் ஒருசிலரின் உற்ற நண்பன்.

ஏழைகளின் எதிரி.

சரி எப்படி “காதல்-அழகு-கடவுள்-பணம்” நான்குக்கும் தொடர்பு இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா? ஏதோ ஒரு வகையில் அழகைப்பார்த்து காதல் வருகின்றது. காதலர்கள் ஏழை பணக்காரன் பார்க்கவில்லை என்றாலும் காதல் திருமணம் வரைக்கும் செல்ல வேண்டுமென்றால் பெற்றோர் பணத்துக்கே முதலிடம் கொடுப்பார். எத்தனை காதலர்கள் பணத்தினால் உயிரை விட்டிருக்கின்றனர். இவை அனைத்துக்கும் துணை இருக்க கடவுள் நம்பிக்கை வேண்டும். நம்பினால் கடவுள் கைவிடார்.



சில நாட்களுக்கு முன் என் வலைப்பதிவு திருடப்பட்டு மீட்டெடுத்தேன். எனது கூகுள் விளம்பரக்கணக்கும் (google adsense)முடக்கப்பட்டது ஏனென்று தெரியவில்லை. இரு நாட்கள் முயற்சி செய்தும் கணக்கினை மீளப்பெறுவதிலே சிக்கல் இருக்கின்றது . இரு நாட்கள் அதனால் நண்பர்களின் பதிவுகளுக்கு வரமுடியவில்லை.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "என்னவென்று சொல்வேன்..."

யோ வொய்ஸ் (யோகா) said...

பதிவை தொடர்ந்ததுக்கு நன்றிகள் சந்ரு. அழகாக உங்கள் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்

மேலும் காதல் பணம் கடவுள் அழகு நான்கையும் கோர்த்துள்ளது நன்றாக இருந்தது.

மாயா said...

அழைத்தமைக்கு நன்றிகள் ! விரைவில் எழுதுகிறேன்...

மாயா said...

இன்னுமொன்றையும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை உறவுகளை மனதில் கொண்டு எழுதுகிற உங்களிடம் கேட்கிறேன்... அதாவது இலங்கைப்பதிவர்களிடைய உதயமாகிய "வலை பதிய வந்த கதை" மற்றும் "பள்ளிக்கால நினைவுகள்" போன்ற தொடர்பதிவுகள் குறிப்பிட்ட வட்டத்திற்க்குள்ளேயே நிற்பதாக நான் உணர்கிறேன்(அனேக பதிவுகள் இலங்கைப்பதிவர்களது பதிவுகளாகவே இருக்கின்றன)அதைவிடுத்து கொஞ்சம் வெளியே இழுத்துவருவீர்களா ? ? ?

Admin said...

//மாயா கூறியது...
இன்னுமொன்றையும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை உறவுகளை மனதில் கொண்டு எழுதுகிற உங்களிடம் கேட்கிறேன்... அதாவது இலங்கைப்பதிவர்களிடைய உதயமாகிய "வலை பதிய வந்த கதை" மற்றும் "பள்ளிக்கால நினைவுகள்" போன்ற தொடர்பதிவுகள் குறிப்பிட்ட வட்டத்திற்க்குள்ளேயே நிற்பதாக நான் உணர்கிறேன்(அனேக பதிவுகள் இலங்கைப்பதிவர்களது பதிவுகளாகவே இருக்கின்றன)அதைவிடுத்து கொஞ்சம் வெளியே இழுத்துவருவீர்களா ? ? ?//


இன்று இலங்கைப்பதிவர்களிடையே ஒரு எண்ணம் இருக்கின்றது. இலங்கையிலே இருக்கின்ற புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.அவர்களது பதிவுகளை உலகளாவிய ரீதியில் இருக்கின்ற பதிவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே.


ஆனாலும் இலங்கையிலே இருக்கின்ற பதிவர்களுக்கும். புலம் பெயர்ந்திருக்கின்ர பதிவர்களுக்குமிடையில் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சுசி said...

நாலையும் சேர்த்து ஒரு மாலை தொடுத்திட்டீங்க சந்ரு.

Menaga Sathia said...

காதல் பத்திய கவிதை சூப்பர்.மற்ற அனைத்தையும் நல்லா பதில் சொல்லிருக்கிங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான காதல் கவிதை !

அழகான கவிதை !

பணமில்லாமல் திறந்த மனதோடு எழுதிய கவிதை !

வரம் தந்த கடவுளுக்கு நன்றிகள் !

ஹேமா said...

சந்ரு,கவிதை நல்லாயிருக்கு.நாலு விஷயத்தையும் உங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கீங்க.நல்லது.

ilangan said...

கடவுளை நம்பினார் (கடவுள்)கைவிட, படார்!.

காதல், அழகு, பணம். இத்தனையும் என்னிட்த்தில் இருந்தால் நானும் கடவுள் தான்.... எப்புடி....

Unknown said...

//ஒருத்தியிடம் என் காதலைச் சொன்னேன். நான் அழகில்லை என்றாள் .இன்னொருத்தி என்னை காதலிப்பதாய் சொன்னாள்.
எதனால் வந்த காதல் என்றேன். என் அழகைப்பார்த்து வந்தது என்றாள். சொல்லுங்கள் நான் அழகா? அழகில்லையா? //

ஒரு நகைச்சுவை ஞாபகம் வருகிறது.
Kamala: Hey kumar! Raja says i'm pretty, siva says i'm ugly. What do say?
Kumar: Both... U r pretty ugly...

காதல் பற்றி சொன்னது நன்றாக இருந்தது....

ARV Loshan said...

அருமை சந்த்ரு.. சுருக்கம் தெளிவு.. நல்ல கோர்வை. இன்னும் கொஞ்சம் நீங்கள் எழுதி இருக்கலாமோ என்று எண்ண வைத்துள்ளது பதிவு..

Post a Comment