Wednesday 2 September 2009

மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்

நான் வலைப்பதிவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்ட மலையக நாட்டுப்புற பாட்டு... எனும் மீண்டும் இடுகையிடுகிறேன். நான் வலைப்பதிவுக்கு பிரவேசித்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்டதனால் இந்த மலையக நாட்டுப்புறப் பாடல்கள் பலரைச் சென்றடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதனாலே மீண்டும் பதிவிடுகிறேன்.

தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாசார, பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை ,கிராமத்து மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக கிராமியக்கலைகள் விளங்குகின்றன.நான் அடிக்கடி கவலைப்படுவதுண்டு இப்போது கிராமப்புறங்களில்கூட கலைகளை காணமுடியாது தமிழர்களின் தனித்துவமான கலைகள் மறைந்து கொண்டு வருகின்றன். இவற்றுக்கான காரணம்தான் என்னவோ? தமிழர் கலைகளுக்கு ஒரு தனித்துவம் இருக்கின்றது அவை கட்டிக்காக்கப்பட வேண்டும்.


ஆரம்பத்திலே இருந்த தமிழர் கலைகள் எமக்குத் தெரியாது அம்மா அப்பா பாட்டன், பாட்டி சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம். எமது எதிர்கால சந்ததி நாம் அறிந்த அளவுக்குக்கூட அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் போல் இருக்கிறது... இன்று மலையக மக்களோடும் அவர்களது வாழ்வோடும் பின்னிப்பினந்த மலையகப் பாடல்களிலே எனக்குப்பிடித்த சில வரிகளை தரலாம் என்று நினைக்கிறேன் மலையாக மக்களின் நேரடி அனுபவங்களை இப்பாடல்களிலே காணக்கூடியதாக இருக்கிறது.

"கண்காணி காட்டுமேலே
கண்டக்கையா றோட்டுமேலே
பொடியன் பழமெடுக்க
பொல்லாப்பு நேர்ந்ததையா"

" காலையிலே நேரா புடிச்சு
காட்டுத்தொங்க போய் முடிச்ச
கூட நேரயலையே இந்த
குணப்பய தோட்டத்திலே"

அந்தணா தோட்டமெண்ணு
ஆசையா நானிருந்தேன்.
ஓர மூட்ட தூக்கச் சொல்லி
ஒதைக்கிறாரே கண்டாக்கையா"


"கல்லாறு தோட்டத்திலே
கண்டக்கையா பொல்லாதவன்
மொட்டே புடுங்குதேன்னு
மூணாளு விடட்டியவன். "


"ஓடி நேரா போகிறது
ஒருகூட கொளுந்தெடுக்க
பாவி கணக்குப் புள்ளே
பத்து ராத்து போடுறானே"



"எண்ணிக்குளி வெட்டி

இடுப்பொடிஞ்சு நிற்கையிலே
வெட்டுவெட்டு என்கிறானே
வேலையத்த கண்காணி"



"தோட்டம் புறலியிலே
தொரமேல குத்தமில்லே
கண்காணி மாராலே
கன பிரளி யாகுதையா"


இப்படி தமது தொழிலும், தொழில் சார்ந்த வாழ்க்கையும் அவர்களுக்கு ஏற்படும் பிரட்சனைகளும் இப்பாடல் தொட்டுக்காட்டுகின்றன.


வறுமை, வரட்சி என்பவற்றினாலும் பண்ணையாளர்களின் அடக்கு முறையாலும்,சாதிக்கொடுமயாலும் இவர்கள் புலம் பெயர்ந்து இருந்தாலும். பிழைப்புத்தேடி வந்த ஒரு இடமாகத்தான் கண்டியை [இலஙகையை] பார்த்தார்கள்.அவர்கள் தாயக நினைவிலிருந்து விடுபடாதவர்களாகவும் மீண்டும் தாயகம் நோக்கி போக வேண்டும் என்ற எதிர் பார்ப்புடனேயே வாழ்ந்தார்கள் என்பதற்கு பல பாடல்கள் சான்று பகர்கின்றன.


"ஆளு கட்டும் நம்ம சீமை
அரிசி போடும் நம்ம சீமை
சோறு போடும் நம்ம சீமை
சொந்தமெண்ணு எண்ணாதிங்க"



புலம் பெயரும் எவரும் தமது தாயகத்தை மறக்க மாட்டார்கள் தங்களது தாயக நினைவுகளை சொல்லும் இவர்கள்...



" ஊரான உரிழந்தேன்
ஒத்தப்பன தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நாமறந்தேன்"



"பாதையிலே வீடிருக்க
பழனிச்சம்பா சோறிருக்க
எரும தயிருரிக்க
ஏனடி வந்த கண்டிசீமை "



என்ற வரிகள் தாயக நினைவுகளை மட்டுமல்லாமல் தாம் வாழ்ந்த வாழ்க்கையும் தமது தாய் மண்ணின் பிடிப்பினையும் கோடிட்டுக் காட்டுகின்றன...


மலையக தொழிலாளர்கள் தாங்கள் தொழில் செய்கின்றபோது பாடப்படுகின்ற பாடல்கள் வேடிக்கையாகவும் நகைசுவை நிறைந்ததாகவும் காணப்படும். இப்பாடல்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் தங்களை வேலை வாங்குகின்ற முதலாளிமாரை பற்றிய பாடல்களே அதிகம் என்று சொல்லலாம்.


இருப்பினும் காதல்பாடல்களும் இடம் பெற்று இருக்கிறன. தோட்டப்புறங்களிலே சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாளர்களிடையே காதல் ஏற்பட்டமைக்கான பதிவுகள் மலையக நாட்டுப்புறப் பாடல்களிலே காணப்படுகின்றன.


தாழ்நிலை, இடைநிலை,பெருந்தோட்டங்களில் சிங்கள-தமிழ் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவர்களிடையே இன ,மொழிமத, சாதிபேதங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் என்ற உணர்வின் மேலோக்கங்களே காதல் மலர்வதற்கு காரணமாகலாம்.



சிங்களக்குட்டி அடி செவத்தக்குட்டி ரன்மேனிகே
ஒன்னாலே என் உசிரு என் தங்க ரேத்தினமே
வீணாகப் போகுதடி என் தங்க ரத்தினமே"



எனும் இப்பாடல் இன முரண்பாடுகளுக்கு அப்பால் மலர்ந்த காதலுக்கு ஆவணமாகின்றது.


எனும் இப்பாடல் இன முரண்பாடுகளுக்கு அப்பால் மலர்ந்த காதலுக்கு ஆவணமாகின்றது.


"அப்பு குசினி மெட்டி
ஆயம்மா சிங்களத்தி
வான்கோழி ரெண்டு காணோம்
வாங்க மச்சான் தேடிப்போகலாம்"


"சிங்களவா சிங்களவா
தவறண சிங்களவா
நாலு பணத்துக்கு
நீ கொடுத்த சாராயம்
ஆள மயக்குது
அல்லோல கல்லோல"என்ற பாடல்களோடு



"அப்பத்தோடு சுட்டுவச்சு
அது நடுவே மருந்து வச்சு
கோப்பி பிடிக்கச் சொல்லி
கொல்லுறாளே சிங்களத்தி"


போன்ற பாடல்களும் மலையக சூழலில் இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டும் பாடல்களாகும் பாடல்களாகும்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

19 comments: on "மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்"

அகநாழிகை said...

அருமையான பதிவு நண்பரே.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.ஞானசேகரன் said...

இது போன்ற நாட்டுபுற கலைகளும், பாடல்களு அழிந்துகொண்டு வருகின்றது. வரும் தலைமுறைகள் அறிந்துக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை... நல்ல பகிர்வு நண்பா... பாராட்டுகள்

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்பவே அருமையான பதிவு சந்ரு. நானும் கூட மலையகத்தை பற்றி சில பதிவுகள் போட எண்ணியுள்ளேன், ஆனால் அதன் வீச்சு எவ்வாறு இருக்குமென தான் இன்னும் போடவில்லை. ஏனெனில் மலையகத்தில் இந்த பதிவுகளை வாசிப்பது ரொம்ப குறைவு, மற்றைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது...

அனுபவ ரீதியில் மலையகத்து பிரச்சினைகள், சந்தோஷங்கள், வாழ்வியல்கள் என பல விடயங்கள் எனக்கு மலையகத்தை பற்றி தெரியும்.

இவ்வாறானவற்றை தொடர்ந்து எழுதுங்கள் சந்ரு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தமிழின்பால் தமிழ் கலாச்சாரம் பற்று கலை இலக்கியம் மரபு வாழ்வியல் என உங்கள் ஆர்வம் உங்கள் பல பதிவுகளில் நன்கு புலப்படுகிறது..வாழ்த்துக்கள்

அ. நம்பி said...

இத்தகைய நாட்டுப்பாடல்கள் இங்கு (மலேசியா) ஏராளமாக உள்ளன.

இரு நாடுகளின் தோட்டங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையும் தொழில்முறையும் ஏறத்தாழ ஒன்றுதான்.

தேயிலை அங்கு; ரப்பர் இங்கு. (ரப்பருடன் இப்போது எண்ணெய்ப்பனையும்)

எனவே பாடல்களும் ஏறத்தாழ ஒத்திருக்கும்.

கட்டுரை நன்று.

Vidhoosh said...

ரொம்ப நல்ல அருமையான பதிவுங்க. :) மகிழ்ச்சியாக இருக்கிறது.

--வித்யா

கிருஷ்ண மூர்த்தி S said...

மண்மணம் வீசினால் தமிழும் மணக்கும்! மனிதத்தைப் போற்றினால் இந்த உலகும் செழிக்கும்!

சுசி said...

அருமையான பதிவு சந்ரு.

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு சந்ரு.

ஹேமா said...

சந்ரு,நான் மலையகப் பகுதியில் வசித்தபோது இதுபோல நிறையப் பாடல்கள் கேட்டிருக்கிறேன்.மெல்லிய ஓசை மாத்திரம் கேட்கிறது.பாடல்கள் ஞாபகத்தில் இல்லை.தேடலுக்கு நன்றி.

வால்பையன் said...

மலையக தமிழ்ர்களின் வாழ்க்கை முறையை கூறிய நீங்கள், அவர்களை யாழ்ப்பான தமிழ்ர்கள் இரண்டாம் தர தமிழர்களாக பார்த்து விரட்டியடித்ததை ஏன் குறிப்பிடவில்லை!?

Admin said...

//வால்பையன் கூறியது...
மலையக தமிழ்ர்களின் வாழ்க்கை முறையை கூறிய நீங்கள், அவர்களை யாழ்ப்பான தமிழ்ர்கள் இரண்டாம் தர தமிழர்களாக பார்த்து விரட்டியடித்ததை ஏன் குறிப்பிடவில்லை!?//


எப்போ விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்ற விடயங்களையும் தரலாமே. விரட்டி அடிக்கப் பட்டதாக நான் அறியவில்லை. சிலர் தமது சுய இலாப நோக்கில் பிரதேச வாதம் பேசுவதை அறிந்து இருக்கிறேன். இன்றைய தமிழர்களின் நிலைக்கு ஒரு சிலரின் சுய லாப நோக்கமான பிரதேசவாதமே காரணம். இப்படியானவர்களால் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளாக இருக்கலாம்.

Beski said...

அருமையா இருக்கு.

நான் கூட எங்க கிராமத்துக்குப் போகும்போது, அங்க படிக்கிற தாலாட்டுப் பாடல்களைப் பாட வைத்து பதிவு செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். இப்போது உங்க பதிவு அந்த எண்ணங்களை மீண்டும் தூண்டுகிறது. இன்னும் ஒரு தலைமுறை விட்டால், அந்த தாலாட்டுப் பாடல்களெல்லாம் அழிந்தே போய்விடும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

நண்பரே,

//இத்தகைய நாட்டுப்பாடல்கள் இங்கு (மலேசியா) ஏராளமாக உள்ளன.//

சான்றுக்கு:-

1.பகடியான வார்த்தையிலே
பால்மரத்தில் பணம் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிர்ஸ்டமும் தானேவரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க

2.பொய்சொல்லிக் கப்பலேட்த்திப்
பொழப்பெல்லாம் போச்சுங்க
கருங்கடல் தாண்டிவந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டின்னு
ககயேந்தி ஊமையானோம்

எங்கள் முன்னோர்கள் இப்படித்தான் ஏமாற்றப்பட்டு இங்கே சஞ்சிக்(ஒப்பந்த)கூலிகளாகக் பிரிட்டிசாரால் கொண்டுவரப்பட்டனர்.

இங்கு வந்த பின்பு என்ன கதி தெரியுமா?

3.காடுமலை மேடுபள்ளம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
மாடுபோல உழைக்கணும்
மலையேறிப் பாடுபட்டு
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
ஓடிவர்றார் பூட்ஸ்காலால் உதைக்க..

4.சசலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வெச்ச மரம்
ஓங்கி வளர்ந்த மரம்
என் தங்க ரத்தினமே
அது எனக்குத் தூக்குமரம்..

இப்படியாக எங்கள் மலைகய (மலேசிய) நாட்டுப்புறப் பாடல்களிலும் எங்கள் முன்னோர்களின் காயங்களும் கண்ணீரும் நிறைந்திருக்கின்றன.

நல்ல பகிர்வு நண்பரே!

Admin said...

வருகை தந்து கருத்துக்களை சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

Arun said...

இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

சந்ரு,
உங்கள் கலையார்வம் கண்டு பெருமைகொள்கிறேன். நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை.

விரைவில் "காமன் கூத்து" என்ற பாரம்பரிய கூத்தினை எமது மாணவர்களைக் கொண்டு கொழும்பில் மேடையேற்றவுள்ளேன்.

உங்களுக்கும் அறியத்தருகிறேன்.

Post a Comment